🏠 வணக்கம் காப்பகம் நன்றி

தேடல் 🔎



புதிய பதிவுகளை பெற ✉



நல்லவர் யார்...? கெட்டவர் யார்...?

முந்தைய பதிவின் இணைப்பு இங்கே சொடுக்கவும்

திருவள்ளுவருடன் உரையாடல் தொடர்கிறது... குறளின் குரலாக...
(முடிவில் அடியேன் கேட்ட கேள்விற்கு இவ்வளவு கோபமா...?)

பொருட்பால் - அங்கவியல் - 64. அமைச்சு

கலர் கலரா... கனவா வருது வள்ளுவரே...! சரி, இப்படிப்பட்ட அமைச்சரவையைக் கெடுக்கவே சூழ்ச்சி நடக்குமே...?

நடக்காது... ஏன்னா நல்லது கெட்டதைப் பிரித்துப் பார்க்கிற இயல்பான நுண்ணறிவும், அதோடு சேர்ந்த நூலறிவும் இருக்கிற அமைச்சர்களுக்கு எதிராக, எந்த நுட்பமான சூழ்ச்சிகளும் நிற்க முடியாம ஓடிப் போய்டும்...


மதிநுட்பம் நூலோடு உடையார்க்கு அதிநுட்பம்
யாவுள முன்நிற் பவை (636)


சத்தியம் தவறாத உத்தமன் போலவே நடிக்கிறார்2 சமயம் பார்த்துப் பல வகையிலும் கொள்ளை அடிக்கிறார்2 பக்தனைப் போலவே பகல் வேசம் காட்டி - பாமர மக்களை வலையினில் மாட்டி... எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே...? சொந்த நாட்டிலே... நம் நாட்டிலே...© மலைக்கள்ளன் தஞ்சை ராமையா தாஸ் S.M.சுப்பையா நாயுடு T.M.சௌந்தரராஜன் @ 1954 ⟫



அப்படியாச் சொல்றீங்க...! ம்... சரி, இந்த "தனக்குத்தானே சூன்யம்" வச்சிக்கிறது - அதாவது வெறும் நூலறிவு...! ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவுமா...?

பல நாடுகளோட புதுமைகளைப் புத்தகங்கள் மூலம் அறிஞ்சி, செயல்படுத்தும் திறமை இருக்க வேண்டியது அவசியம் தான்... ஆனா, அது நம்ம நாட்டின் இயற்கைக்கு, நாட்டு மக்களுக்கு ஒத்து வருமான்னு பலமுறை யோசித்து, அந்தப் புதுமையான செயல்களை நிறைவேற்ற வேண்டும்...


செயற்கை அறிந்தக் கடைத்தும் உலகத்து
இயற்கை அறிந்து செயல் (637)


ஹேய்.....ய்யா... டிங்கிரி டிங்காலே மீனாட்சி டிங்கிரி டிங்காலே... உலகம் போற போக்கைப் பாரு தங்கமே தில்லாலே2 அதிகமாகப் படிச்சி படிச்சி மூளை கலங்கிப் போச்சி, அணுக்குண்டைத் தான் போட்டுக்கிட்டு அழிஞ்சு போகலாச்சி2 அறிவில்லாம படைச்சிப்புட்டா மிருகமென்னு சொன்னோம் - அந்த மிருகமெல்லாம் நம்மைப் பார்த்து சிரிக்குதுன்னா செய்வோம்...?© அன்பு எங்கே V.சீதாராமன் வேதா T.M.சௌந்தரராஜன் @ 1958 ⟫



ஐயோ... இன்றைக்கு நாடு சுடுகாடு ஆகுறதுக்கு சங்கு ஊதுறாங்களே வள்ளுவரே... சொல்புத்தியும் கேட்காம, சுயபுத்தியும் இல்லாம செயல்பட்டா...?

அப்படி எந்த வேலையையும் தொடங்கினா ஆபத்து தான்... எந்த வேலையிலும் அனுபவப்பட்ட திறமைசாலி அமைச்சர்களா கூட இருக்கணும்... அதே சமயம் நல்லது கெட்டதைச் சம்பந்தப்பட்டவர்கிட்டே தைரியமா சொல்றது ஒரு அமைச்சரோட கடமையாகும்...! அப்படி இருந்தா எந்த வேலையும் திறம்படச் சாதிக்க முடியும்...!


அறிகொன்று அறியான் எனினும் உறுதி
உழையிருந்தான் கூறல் கடன் (638)


குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும் குருட்டு உலகமடா... இது கொள்ளையடிப்பதில் வல்லமை காட்டும் திருட்டு உலகமடா - தம்பி தெரிந்து நடந்து கொள்ளடா, இதயம் திருந்த மருந்து சொல்லடா... இருக்கும் அறிவை மடமை மூடிய இருட்டு உலகமடா, வாழ்வில் எந்த நேரமும் சண்டை ஓயாத முரட்டு உலகமடா - தம்பி தெரிந்து நடந்து கொள்ளடா, இதயம் திருந்த மருந்து சொல்லடா // விளையும் பயிரை வளரும் கொடியை வேருடன் அறுத்து விளையாடும்2 - மனம் வெந்திடும் தோட்டக்காரனிடம்... மிரட்டல் வார்த்தைகள் ஆடும், பல வரட்டு கீதமும் பாடும்... வித விதமான பொய்களை வைத்துப் புரட்டும் உலகமடா - தம்பி தெரிந்து நடந்து கொள்ளடா... இதயம் திருந்த மருந்து சொல்லடா... © மகாதேவி பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் விஸ்வநாதன்-ராமமூர்த்தி T.M.சௌந்தரராஜன் @ 1957 ⟫



"இந்த நாடும் நாட்டு மக்களும் நாசமாகப் போகட்டும்"-ன்னு தன்னோட நன்மையே பிரதானம்ன்னு இருக்கிறவங்க அமைச்சரவையிலே இருந்தா...?

நமக்கும் மட்டும் இல்லே... நாட்டோட தலைவிதி மாத்துறதே, கூடவே இருக்கிறவங்க தான்... மக்களை நினைக்காம, சுயநலம் இருக்கிற ஒரே ஒரு ஆளை வைச்சிக்கிறதும் ஒன்னு தான்... எழுபது கோடி எதிரிகளை வைச்சிக்கிறதும் ஒன்னு தான்...


பழுதெண்ணும் மந்திரியின் பக்கததுள் தெவ்வோர்
எழுபது கோடி உறும் (639)


ஊருக்கு உழைப்பவன்டி, ஒரு குற்றம் அறியானடி, உதை பட்டு சாவானடி2 எருமைக் கன்னுக்குட்டி - என்னெருமைக் கன்னுக்குட்டி என்எருமைக் கன்னுக்குட்டி.. எருமை-கன்னு-குட்டி... என்னெருமைக் கன்னுக்குட்டி... நல்லதுக்குக் காலமில்லை, நடப்பதெல்லாம் வெளிப்பகட்டு2 சொல்லப்போனா வெட்கக்கேடு2 // ஏய்ச்சுப் பொழைக்கிறவன் ஏழடுக்கு மாளிகையில் எகத்தாளம் போடுறானே... அவன் பேச்சை மறுக்கிறவன் பிச்சை எடுக்கிறானே.... // நாட்டுக்குத் தலைவனென்று நம்பும்படி பேசிவிட்டு வேணுசெல்வம் வாரியே போவாரடி... நாடு செழிக்க எண்ணி நாளெல்லாம் வேலை செய்யும், ஏழைக்குக் காலமில்லே, எவன் எவனோ வாழுகின்றான்... : ⟪ © மந்திரி குமாரி மு.கருணாநிதி G.ராமநாதன் அறிவன் @ 1950 ⟫



சரியாச் சொன்னீங்க ஐயனே... வாயிலே வடை சுட்ற ஆட்கள் தான் இப்போ பெருகிகிட்டு வர்றாங்க... என்ன செய்றது...?

முதல் கேள்விக்குச் சொன்ன பதில் தான் என்றாலும், இதை இதைச் செய்யணும், எந்த நேரத்தில் செய்யணும், எப்போ முடிக்கணும், இதுக்கெல்லாம் என்னென்ன தேவை, எத்தனை பேர் தேவை - இப்படி ஏகப்பட்ட திட்டங்களோட இருக்கிறவங்ககிட்டே, செயல்திறன் இல்லேன்னா, ஒன்னும் வேலைக்கு ஆகாது...! அந்த வேலை முழுசா முடியாம அரைகுறையா தான் இருக்கும்...! இறங்கி வேலை செய்றது தான் தீர்வு...!


முறைப்படச் சூழ்ந்தும் முடிவிலவே செய்வர்
திறப்பாடு இலாஅ தவர் (640)


படிப்பு தேவை - அதோடு - உழைப்பும் தேவை - முன்னேறப் படிப்புத் தேவை, அதோடு உழைப்பும் தேவை... உண்மை தெரியும் உலகம் தெரியும் படிப்பாலே - நம் உடலும் வளரும் தொழிலும் வளரும் - உழைப்பாலே... // பாடுபட்டதால் உயர்ந்த நாடுகள் பலபல உண்டு2 மனப் பக்குவம் கொண்டு மக்கள் முன்னேறக் காரணம் ரெண்டு... // வீரத்தலைவன் நெப்போலியனும் - வீடு கட்டும் தொழிலாளி...! ரஷ்யா தேசத்தலைவன் மார்சல் ஸ்டாலின் - செருப்புத் தைக்கும் தொழிலாளி...! விஞ்ஞான மேதை ஜி.டி.நாயுடு - காரு ஓட்டும் தொழிலாளி...! விண்ணொளிக் கதிர் விவரம் கண்ட சர் சி.வி.ராமனும் தொழிலாளி...! - எதற்கும்...?© சங்கிலித் தேவன் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் T.G.லிங்கப்பா T.M.சௌந்தரராஜன் & குழுவினர் @ 1960 ⟫



அமைச்சர்களுக்குச் சரி... நாட்டு மக்களுக்கு...? அதாவது ஓட்டு போடுவதற்கு முன், நல்லவர் யார்...? கெட்டவர் யார்...? என்று எவ்வாறு அறிந்து தெரிந்து புரிந்து கொண்டு தேர்ந்தெடுப்பது...? கோவிச்சுக்காதீங்க வள்ளுவரே...!

நம்ம தாத்தா என்ன சொல்லி இருப்பார்...? அடுத்த பதிவில் பார்ப்போம்...

பெருமூச்சு விடாதீங்க, கொஞ்சம் பொறுங்க... "ஹேஹே... இப்படியெல்லாம் அமைச்சர்கள், இனிமேல்...?" என்று எனக்கும் உங்களைப் போல் தோன்றியது... நொந்துபோன மனதிற்குப் பாடல்களே சிறு மருந்து...! எடுத்துக்காட்டு வேண்டுமா ? இதோ :-

உலகின் மிக உயரமான பிரம்மாண்ட வல்லபாய் பட்டேல் சிலையைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்...? உங்களுடன் சேர்த்துப் பெருமைப்படுகிறேன்... ஆனால் எனக்கு உடனே ஞாபகம் வந்தது → அண்ணாந்து பார்க்கின்ற மாளிகை கட்டி... அதன் அருகினில் ஓலை குடிசை கட்டி... பொன்னான உலகு என்று பெயரும் இட்டால் - இந்த பூமி சிரிக்கும், அந்த சாமி சிரிக்கும்... (படம் : என் அண்ணன் / இயற்றியவர் : கவிஞர் கண்ணதாசன்) சிரித்தாலும் சிந்திப்போம்... இப்படிப் பாடல் வரிகள் நடுவிலிருந்தால், பதிலுக்கும் அடுத்த கேள்விற்கும் தொடர்பு இல்லாமல், சிந்தனை மாறக்கூடும்... அதனால் அதை மறைத்துள்ளேன்...

இப்படி தாத்தாவின் ஒவ்வொரு பதிலுக்குப் பின்னால் சுத்திக்கிட்டு இருப்பதைச் சுட்டியாலே (Mouse) சொடுக்கினால், குறளும், பாடலும் வரும்...! கைப்பேசியில் வாசிப்பவர்களும் விரலால் கொடுக்கலாம்...! கேட்க நிறுத்த பட்டனையும் சொடுக்குங்க... பாடலில் இருக்கிற சில வரிகளையும் கொடுத்துள்ளேன்... அதை படிச்சிட்டா, குறள் விளக்கத்தையும் மீண்டும் படிப்பீர்கள்...! உங்க முகபாவனைகளும் மாறலாம்...! சில பாடல்களைக் கேட்டால், இன்றைய உண்மை நிலைமைக்குச் சிந்தனையும் வரும்... நொந்துபோய் சிரிப்பும் வரும்...!

தாத்தா என்ன சொல்லி இருப்பார்...? இங்கே சொடுக்கித் தொடரவும்... அதற்கு முன் இந்தப் பதிவைப் பற்றித் தங்களின் கருத்து என்ன...?

புதிய பதிவுகளை பெறுதல் :


தொடர்புடைய எண்ணங்களின் வண்ணங்கள் சில :


முகநூல் மூலம் கருத்துக்களை பகிர :

கருத்துகள்

  1. அருமையான பாடல் வரிகள் வழக்கம்போல் ஸூப்பர் ஜி

    மந்திரி குமாரி படத்தில் கருணாநிதி எழுதிய பாடல் வரிகள் சிரிப்புதான் வருகிறது.

    தாத்தா சொன்ன இறுதி பதிலை கேட்கும் ஆவலுடன் நானும்...

    பதிலளிநீக்கு
  2. மலைக்கள்ளன் படத்தில் தஞ்சை ராமையாதாஸ் அவர்கள் எழுதிய பாடலை மு.கருணாநிதி அவர்களுக்கு சமர்ப்பிக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  3. இங்கு எல்லோரும் திரு என்ற வார்த்தையை மரியாதைக்குரிய வார்த்தையாக வைத்துள்ளார்கள். எனக்கென்னவோ( திரு)வள்ளுவர் தனபாலன் என்று மாற்றி விடலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கின்றேன்.

    பதிலளிநீக்கு
  4. திருக்குறளை இவ்வளவு ஆழமாக வாசித்து, ஒப்புநோக்கி, உதாரணங்கள் தந்து விளக்கும் விதம் அருமை. அதுவும் தற்காலத்திற்கு ஏற்றாற்போல....

    பதிலளிநீக்கு
  5. எல்லாம் இக்கரைக்கு அக்கரை பச்ச தான்

    பதிலளிநீக்கு
  6. நுண்ணறிவும் , நூல் அறிவும் உடையவர்கள் ஆட்சிக்கு வரட்டும்.
    நாடு நலம் பெறட்டும்.
    பாடல் தேர்வும், குறள் தேர்வும் அருமை.
    பாடல்கள் எல்லா காலத்திற்கும் பொருந்தும் பாடலாக இருக்கிறது.

    தினம் தினம் பிடிபடும் கோடிக்கான பணங்கள் எத்தனை எத்தனை கேள்வி கணைகளை எழுப்பி கொண்டே இருக்கிறது.

    எத்தனைக்காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே? சொந்த நாட்டிலே? நம் நாட்டிலே?
    அறத்தை பின்பற்றுபவர்கள் உயர்ந்த இடத்தை அடைவார்கள்.எழுத்தாளர் .சு. வெங்கடேசன் அவர்கள் "இயற்கை அறம்" என்று பேசிய பேச்சு நினைக்க தோன்றுகிறது. எளிய மனிதர்கள் இயற்கையை வாழ்க்கையின் மூலக்கூறாக பார்க்கிறான். வலியவர்கள் தங்கள் அடைய வேண்டிய செல்வத்தின் மூலதனமாக பார்க்கிறான்.(இங்கே தோரியம், இங்கே கிரானெட், இங்கே நிலக்கரி என்று சொத்துக்களின் மூலதனமாக பார்க்கிறார்கள்.)

    கடைசி மரமும் வெட்டுண்ட பின், கடைசி துளி நீரும் நஞ்சாகி, கடைசி மீனும் பிடிபட்ட பின் மனிதன் உணர்வான் பணத்தை சாப்பிட முடியாது என்று.
    நம்ம தாத்தாவும் இதைத்தான் சொல்வார்.
    மனிதா எதை நோக்கி ஓடுகிறாய்? எதற்கு ஓடுகிறாய்? கடைசியில் என்னாகும்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்ன சொல்வதென்றே தெரியவில்லை அம்மா... அடுத்த பதிவில் நேற்று தான் நீங்கள் சொன்ன காணொளியை இணைத்தேன்... "இதென்ன சம்பந்தமில்லாமல்" என்று ஒரு குழப்பம் இருந்ததை, இன்று "அதுவே சரி" என்று நினைக்கிறேன்... இது என்னுடைய வலைத்தள உலகில் ஒரு வியப்பிற்கு மேல் வியப்பு...! நன்றிகள் பல...

      நீக்கு
    2. எனக்கும் அந்த பேச்சு பிடித்தது. எத்தனை அறங்கள் இருந்த போதும் மனிதன் இயற்கை அறத்தை தெரிந்து கொள்ளவில்லையென்றால் மற்ற அறங்கள் அவனுக்கு உதவ முடியாது என்பது தான் இறுதியான தீர்ப்பு .
      அடுத்த பதிவில் அதை நீங்கள் இணைத்து இருப்பது அறிந்து மகிழ்ச்சி.
      நன்றி.

      நீக்கு
  7. "அண்ணாந்து பார்க்கின்ற மாளிகை கட்டி" - எம்ஜியார் படத்தின் அருமையான பொருள் பொதிந்த பாடல். எனக்கு கன்யாகுமரியில் சிலை வைத்ததாகட்டும், குஜராத்தில் சிலை வைத்ததாகட்டும், கோட்டம், மணி மண்டபம், வெற்று மனிதர்களின் சிலை என்று மக்கள் பணத்தை வீணடிப்பவர்களாகட்டும்... இவர்களெல்லாம் இந்தப் பாடலைப் படித்தறியாதவர்கள் என்றுதான் தோன்றும். எது முக்கியமோ அதைச் செய்வதைவிட்டுவிட்டு, மக்கள் பணம் வீணடிக்கப்படுவது வருத்தம் தருகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நெல்லைத்தமிழன் ஐயா... புகழ் அதிகாரம் பற்றிய பதிவுகள் எழுதும் போது, "ஒவ்வோர் குறளுக்கும் ஒரு பதிவு எழுதவும்" என்பது மாதிரி சொல்லி இருந்தீர்கள்... அதன் பின் சிறிது மாற்றினேன்... அதே சமயம் சில அதிகாரங்களை எழுதும் போது "இவ்வாறு தான் பகிர்ந்து கொள்ள வேண்டும்" என்று மறுமொழி கூறி இருந்தேன்... அப்போது சில தொழிற்நுட்பத்தையும் கையாண்டு இருந்தேன்... ஆனால், இந்த "அமைச்சு" அதிகாரம் அவ்வாறு முடியாது என்பதை புரிந்து கொண்டு இருப்பீர்கள்... நன்றி ஐயா...

      நீக்கு
  8. /ஏட்டு சுரைக்காய் ,தனக்குத்தானே சூன்யம் ...மிகவும் உண்மை ..கண்ணுமுன்னாடி தெர்மோகோல் மிதக்குற சீன வந்து போகுது அதோட Cracking காற்றாலை ,விண்ட்மில்லும் தான் .இப்படி நிறைய விஷயங்கள் சொல்லலாம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சமீபத்திய நிகழ்வுகளை (கடந்த 5 வருடமாக) சொல்லாமல் பகிர்ந்து கொள்வது என்பது சிறிது சிரமம் சகோதரி... நன்றி...

      நீக்கு
  9. தாத்தாவின் பதிலை ஆவலுடன் கேட்க காத்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  10. மனதில் தோன்றுவதைச் சொல்ல உங்களுக்கு குறளும் திரைபாடல்களும் உதவுகின்றன எனக்கென்னவோ இவற்றின் மீது உங்களுக்கு இருக்கும் ஆளுமை தெரிகிற்து சொல்ல வருவதை நேரிடையாக உங்கள் மொழியில் சொன்னால் எழுத்தின் வீச்சு அதிகரிக்கும் என்று நினைக்கிஏன்

    பதிலளிநீக்கு
  11. குறள் மீது உங்களுக்கு இருக்கும் ஆர்வத்திற்கு தலை வணங்குகிறேன்.

    அரசியல் இங்கே அனைவரும் திருடர்களாகவே இருக்கிறார்கள். யாரையும் நம்ப முடியாது. நல்லவராக இருந்தாலும் கெட்டவராகவே பார்க்க வைப்பதும் உண்டு.

    பதிலளிநீக்கு
  12. திருக்குறளுக்கான பல உரைகளையும் ஓரளவு வாசித்திருக்கிறேன். உங்களின் பார்வை புதியது. குறளின் மீதான உங்களின் அளவு கடந்த ஆர்வம் பாராட்டுக்குரியது.

    பதிலளிநீக்கு
  13. திரு வள்ளுவரை நம்புவதில் கடினம் இல்லை.
    தமிழ்த் திரைப்பாடல்கள் எல்லாம் நன்மை மிகு எதிர்காலத்தை நம்பவைத்தன.

    ஆனால் எத்தனையோ தலைமுறைகளைக் காக்கப் பணம் சேர்த்துவிட்டார்கள்.
    மக்களின் நிலைமைதான் மாறவில்லை.

    பார்க்கலாம் ஆண்டவன் ஒருவன் இருக்கின்றான் பாடலை நம்பி
    நாடு மாறுகிறதா என்று. நன்றி தனபாலன்.

    பதிலளிநீக்கு
  14. டிடி தாத்தா சொல்லுவதை ஆழ்ந்து நீங்க ஈசியா சொல்லிட்டீங்க. தாத்தாவும் ஈசியா எழுதிவைச்சுட்டுப் போயிட்டார்.

    நீங்கள் சொல்லிருக்கறதுல ஒரு ஆளாவது தேறும்னு நினைக்கறீங்களா டிடி. எனக்கு அந்த நம்பிக்கை இல்லை.

    குறள் பாடல்கள் அனைத்தும் அருமை. வழக்கம் போல

    கீதா

    பதிலளிநீக்கு
  15. அருமையான இன்றைய நிலையை அன்றே பாடல்கள் சொல்லிவிட்டது.குறள் உங்கள் நெஞ்சில் தங்கிய தாமரை ![[[

    பதிலளிநீக்கு
  16. தாத்தா என்ன சொல்வார் எனத்தெரியாது . ஆனால் தாங்கள் கேட்ட கேள்விக்கு பதில் பொருட்பாலில்‘தெரிந்து தெளிதல்’ அதிகாரத்தில் உள்ளது என நினைக்கிறேன்.

    அதில் உள்ள 504 ஆவது குறளில் ஒருவனின் குணங்களை ஆராய்ந்து, அவனிடம் இருக்கும் குற்றங்களையும் ஆராய்ந்து, இரண்டிலும் எவை அதிகமாக இருக்கின்றன என்பதையும் ஆராய்ந்து குணங்களின் மிகுதியைக் கொண்டே அவனைப் பதவிக்குத் தெரிவு செய்யவேண்டும். என்பதை அழகாக

    குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்
    மிகைநாடி மிக்க கொளல்.

    என்று அய்யன் வள்ளுவர் சொல்லியிருப்பார்.

    பதிலளிநீக்கு
  17. அரசியல் kalai கட்டி இருக்கும் நேரத்தில் திருவள்ளுவருடன் உரையாடுவதுதான் சிறப்பு

    பதிலளிநீக்கு
  18. அருமையான சிந்தனை
    நல்லெண்ணங்கள்
    உள மாற்றத்தை ஏற்படுத்தட்டும்

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென்று இடித்தற் பொருட்டு. (குறள் 784)

நட்புச் செய்துகொள்வது நண்பரோடு சிரித்து மகிழ்வதற்காக மட்டும் அல்ல. மிகுதியாகத் தவறு செய்யும்போது, அவரைக் கடிந்து திருத்துவதற்கே ஆகும்.