🏠 வணக்கம் காப்பகம் நன்றி

தேடல் 🔎



புதிய பதிவுகளை பெற ✉



தமிழன் என்றொரு இனம் உண்டு... தனியே அவர்க்கொரு குணம் உண்டு...


படங்களை ரசித்து விட்டீர்களா...? நன்றி... முந்தைய பதிவுகளை வாசிக்காதவர்கள் இணைப்பை (→ ←) சொடுக்கவும்...
இணைப்பு 1 - ஆரம்ப தேடல்
இணைப்பு 2 - 236 - குறள் விளக்கம்
இணைப்பு 3 - 231,232,233 - குறள் விளக்கம்
இணைப்பு 4 - 234,235,237 - குறள் விளக்கம்
விளக்கம் - புதிய வாசகர்களுக்காக : புகழ் எனும் சொல்லுக்கு, மனதின் ஈரம் அல்லது இரக்கம் என்கிற பொருளே சரி... நடைமுறை பேச்சு வழக்கில் புகழ் என்பதற்கு என்ன சொல்வார்கள்...? பெருமை அல்லது சிறப்பு என்பார்கள்... சரி "புகழ்தல்" என்றால் என்ன...? அனைத்து பெருமைகளையும் விளக்கமாக விரிவாகப் போற்றிச் சொல்லும் "பெருமை பேசுதல்" ஆகும்... இந்தப் பெருமை எனும் சொல் உணர்த்தும் முதல் நிலைப் பொருள் 'இரக்கம்' என்பதே... புகழ் அதிகாரத்தில், ஐந்து முறை வரும் புகழ், நான்கு முறை வரும் இசை எனும் சொற்களும், ஒரு முறை வரும் வித்து எனும் சொல்லும், இரக்கப் பொருளில் தான் திருவள்ளுவர் பயன்படுத்தியுள்ளார்... சிந்திப்போம் சிறப்படைவோம் வாங்க...
அறத்துப்பால் - இல்லற இயல் - அதிகாரம் 24. புகழ்

(1) குறள்
(2) சுருக்கமான குறள் விளக்கம்
(3) குறளின் குரல் + பாடல் வரிகளோடு மனம்
(4) குறளுக்கேற்ப பாடல்...
வசையென்ப வையத்தார்க் கெல்லாம் இசையென்னும்
எச்சம் பெறாஅ விடின் (குறள் எண் : 238)


தனக்கு பின்பும் நிலைத்து நிற்கும் இரக்கத்தை வாழும் காலத்தில் பெறாதவன், உலகத்தாரிடம் பெரும்பழியே அடைவான்...

வையத்தார் என்பதற்கு இங்கு பெரும் செல்வந்தர்கள் என்று பொருள்கொள்ள வேண்டும்... இல்லாதவர்களுக்குக் கொடுத்து நல்வழி காட்டி, அவர்களை மேம்படுத்துவது தான் அவர்கள் பெற்ற செல்வத்திற்கு மதிப்பு... அவ்வாறு நற்பெயரைச் சம்பாதித்துக் கொள்ளாமல் வாழ்ந்தால், அவர்களது வாழ்க்கை பழியுடைய ஒரு பாவ வாழ்க்கையாகவே வாழ்ந்து அழிந்து விடும்... இங்கும் இசை என்பது இரக்கமே...

"வீழ்ந்தாரைக் கண்டால் வாய்விட்டுச் சிரிக்கும்... வாழ்ந்தாரைக் கண்டால் மனதுக்குள் வெறுக்கும்...இல்லாது கேட்டால் ஏளனம் செய்யும்... இருப்பவன் கேட்டால் நடிப்பென மறுக்கும்... வாழ்ந்தாலும் ஏசும்... தாழ்ந்தாலும் ஏசும்... வையகம் இதுதானடா..." மனசாட்சி ஏசாமல் வாழ்ந்தால் போதும்.... தோற்றவர்கள் மற்றும் சோம்பேறிகள் போல் புலம்பாமல், எப்படி வாழ வேண்டும்...? இதோ பாட்டு :-
இருட்டினில் வாழும் இதயங்களே கொஞ்சம் வெளிச்சத்தில் வாருங்கள்... நல்லவர் உலகம் எப்படி இருக்கும் என்பதைப் பாருங்கள்... எத்தனை காலம் மனிதன் வாழ்ந்தான் என்பது கேள்வி இல்லை... அவன் எப்படி வாழ்ந்தான் என்பதை உணர்ந்தால் வாழ்க்கையில் தோல்வியில்லை... வாழ்க்கையில் தோல்வியில்லை...© நான் ஆணையிட்டால் வாலி M.S.விஸ்வநாதன் T.M.சௌந்தரராஜன் @ 1966 ⟫

வசையிலா வண்பயன் குன்றும் இசையிலா
யாக்கை பொறுத்த நிலம் (குறள் எண் : 239)


இரக்கமேயில்லாத மனிதர்களின் உடம்பை தாங்கிக் கொண்டிருக்கும் நிலம் கூட, மனிதருக்கு நன்மை தரும் வளங்களை சிறுசிறுக இழக்கும்...

இப்போது பல அநியாயங்களை கண்முன்னே காண்கிறோம்... மரம் வெட்டுதல், மணல் கொள்ளை, விவசாய நிலங்களை அழித்தல், நெகிழி (Plastic) பயன்பாடு, நீர் நிலைகளைத் தூர்வாராமல் இருத்தல், - மற்றவை நீங்கள் நினைப்பதெல்லாம்... வருங்காலத்தை நினைத்துப் பார்க்காமல் இப்படியே போனால் உலகம் தாங்குமா...? கிராமங்களை மேம்படுத்துவதற்குப் பதில் அக்கிரமங்களை மேம்படுத்தினால்...? காரணம் சுயநலம்... இதற்கும் இரக்கப்பண்பிற்கும் வெகுதூரம், எட்டவே முடியாது... இயற்கையை மாற்றவும், வெல்லவும் முடியாது... முயன்றால் அழிவு உறுதி...

"கொல்லும் பாம்பின் கொடும் விசத்தைச் சொல்லில் கொடுக்கத் தெரிந்து கொண்டான்... குள்ளநரி போல் தந்திரத்தால் குடியைக் கெடுக்கப் புரிந்து கொண்டான்... வெள்ளிப் பணத்தால் மற்றவரை விலைக்கு வாங்கத் தெரிந்து கொண்டான்2 மனிதனாக வாழ மட்டும் மனிதனுக்குத் தெரியவில்லை ஹோ... மனிதன் எல்லாம் தெரிந்து கொண்டான்... வாழும் வகை புரிந்து கொண்டான்... இருந்த போதும் மனிதனுக்கு ஒன்று மட்டும் தெரியவில்லை... ஹோ..." அதில் முக்கியமானது இரக்கம்... மனதில் ஈரம் குறையத் தொடங்கினால், மண்ணின் ஈரம் குறையத் தொடங்கும்... தியாகத்தின் தலை நிமிர்ந்தால்...? இதோ பாட்டு :-

தியாகத்தின் தலை நிமிர்ந்தால், இந்த தரணிக்கு லாபம் உண்டு2 தீமையின் கை உயர்ந்தால், இங்குத் தருமங்கள் வாழ்வதுண்டோ...? அரும்புகள் மலர்ந்து வந்தால், அந்த அழகினை ரசிப்பதுண்டு... பருந்துகள் திருட வந்தால், அந்த பண்பினை பொறுப்பதுண்டோ... உண்மைக்குக் காலம் வந்தால், சிலர் உயர் குணம் புரிவதுண்டு... ஊருக்கு நன்மை வந்தால், நல்ல உள்ளங்கள் மகிழ்வதுண்டு... மேகங்கள் இருண்டு வந்தால், அதை மழை எனச் சொல்வதுண்டு... மனிதர்கள் திருந்தி வந்தால், அதைப் பிழை எனக் கொள்வதுண்டோ...?© நான் ஆணையிட்டால் வாலி M.S.விஸ்வநாதன் சீர்காழி கோவிந்தராஜன், P.சுசீலா @ 1966 ⟫

வசையொழிய வாழ்வாரே வாழ்வார் இசையொழிய
வாழ்வாரே வாழா தவர் (குறள் எண் : 240)


இரக்கத்துடன் வாழ்கின்றவர் முறையாக வாழ்பவர்கள்... அவ்வாறு இல்லாமல் வாழ்பவர்கள் உயிரோடிருந்தும் உயிர் வாழாதவர்கள் ஆவர்...

விலங்குகளிடம் இருந்து மனிதனை வேறுபடுத்திக் காட்டுவது என்னவென்றால் ஆறாம் அறிவு... கோழியை பாரு காலையில் விழிக்கும், குருவியை பாரு சோம்பலைப் பழிக்கும்... காக்கையை பாரு கூடிப் பிழைக்கும், நம்மையும் பாரு நாடே சிரிக்கும்...! எத்தனை பெரிய மனிதனுக்கு எத்தனை சிறிய மனமிருக்கு... எத்தனை சிறிய பறவைக்கு எத்தனை பெரிய அறிவிருக்கு...! சக மனிதனை மனிதனாக நினைத்தால் தான், மனிதனுக்கு ஆறறிவு... அதுவே இரக்க உணர்வும்... மின்கம்பத்தில் ஒரு காகம் இறந்து விட்டால் என்ன நடக்கும் என்பது தெரியும்... அனைத்து ஜீவராசிகளுக்கும் இது உண்டு... அதே சமயம் விலங்கு இன்னொரு அல்லது தன் விலங்கைச் சாப்பிடுவதையெல்லாம், இயற்கை என்கிறோம்... ஆனால், தன் உடம்பின் மீதே இரக்கம் இல்லாமல் கெடுத்துக் கொள்ளும் மனிதன்...?

"மனம் தன் உடற்பாகத்தில் எங்கே உள்ளது" என்று - என்றுமே சொல்ல முடியாதோ, அதே போல் தான் இறை உணர்வும், இரக்க உணர்வும்... இவற்றையும் தீர்மானிப்பது அவரவர் மனமே...!

"நிலை மாறினால் குணம் மாறுவான், பொய் நீதியும் நேர்மையும் தேடுவான், தினம் ஜாதியும் பேதமும் கூறுவான், அது வேதன் விதியென்றோதுவான்... மனிதன் மாறிவிட்டான்... மதத்தில் ஏறிவிட்டான்... "இது நம்ம ஆளு...!" என்பதற்கு மட்டும் வருவதல்ல இரக்கம் என்பதை அனைவரும் அறிவர்... ஏனென்றால் :-

தமிழன் என்றொரு இனம் உண்டு2 தனியே அவர்க்கொரு குணம் உண்டு2 அமிழ்தம் அவனது மொழியாகும்... அன்பே அவனது வழியாகும்2 கலைகள் யாவினும் வல்லவனாம், கற்றவர் எவர்க்கும் நல்லவனாம்2... நிலைகொள் பற்பல அடையாளம், நின்றன இன்னும் உடையோனாம்... மானம் பெரிதென உயிர் விடுவான், மற்றவர்க்காகத் துயர் படுவான்2 தானம் வாங்கிட கூசிடுவான்2 தருவது மேலென பேசிடுவான்2© மலைக்கள்ளன் நாமக்கல் வி. இராமலிங்கம்பிள்ளை S.M.சுப்பையா நாயுடு T.M.சௌந்தரராஜன் @ 1954 ⟫

புகழ் அதிகாரம் - குறளின் குரலாக இந்தளவு பல பதிவுகளாக என்ன சிந்திக்க வைத்தது, கருத்துரையாளர்களின் ஊக்குவிப்பே... மிகவும் நன்றி... மேலும் தங்களின் விளக்கம் என்ன நண்பர்களே...?

நண்பர்களிடம் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி

புதிய பதிவுகளை பெறுதல் :


தொடர்புடைய எண்ணங்களின் வண்ணங்கள் சில :


முகநூல் மூலம் கருத்துக்களை பகிர :

கருத்துகள்

  1. கிட்டத்தட்ட "அன்பே சிவம்" கருத்தைத் தான் இங்கேயும் காண முடிகிறது. இன்றைய எங்கள் ப்ளாக் பகுதியின்
    "காதல்" பற்றிய விளக்கமும் அதற்கான பதிலும் இங்கேயும் சொல்லலாமோ! இங்கேயும் காண்பது அன்பு பற்றித் தானே. மனதில் அன்பு இருந்தால் அல்லவோ இரக்கம் சுரக்கும். வறண்ட பாலைவனத்தில் நீரில்லாமல் செடிகள் முளைக்குமா? காதல் இல்லாமல் இரக்கம் கசியுமா? இங்கே காதல் என்பது அனைத்து உயிர்களிடமும் கொள்ள வேண்டியது. மறுபடி பின்னர் வரேன்.

    பதிலளிநீக்கு
  2. மிக அருமையான தொகுப்பு டிடி சகோ. தமிழனுக்குள் இருக்கும் இரக்க குணத்தைப் பாடல்கள், திருக்குறள் வாயிலாக அழகாக விளக்கம் கொடுத்துள்ளீர்கள். என்றைக்கும் போல் இன்றைக்கும் சிறப்பு :)

    பதிலளிநீக்கு
  3. முதல் படமும் அது சொன்ன விவரங்களும் மிக அருமை.
    புகழ் விளக்கம் அருமை. இரக்கத்தோடு இருப்பது முதல் படத்தில் காட்சி வடிவாய் அற்புதம்.
    தொழில் நுடபம் வியக்க வைக்கிறது, பாடலின் காட்சி வேண்டாம் என்றால் பாடலை மட்டும் கேட்க ! அருமை அருமை.
    வாலி பாடல் நல்ல தேர்வு.

    மரங்கள் வெட்டபடுவது கண்டு வேதனை பட்டுக் கொண்டு இருக்கும் போது இயற்கையும் மரங்களை வெட்டி சாய்த்து விட்டது. இயற்கையை காக்கும் எண்ணம் மக்களிடம் வந்தால் இந்த் இயற்கை சீற்றம் இருக்காது என்பதை உணர்த்துகிறது. வருங்கால நினைவு வர நல்ல பகிர்வு.வாலி
    பாடல் பொருத்தம்.


    இறைஉணர்வும், இயற்கை உணர்வும் கண்டிப்பாய் வேண்டும் அருமை, அருமை.
    தனபாலன் மிக சிறந்த பகிர்வு.

    குறளும், பாடலின் குரலும் உங்கள் விளக்கமும் மிக அருமை.
    திரும்ப திரும்ப படிக்க வேண்டியது.
    இப்போது உள்ள கால கட்டத்திற்கு ஏற்ற பாடல் பகிர்வு.
    அன்புதான நல்ல வழி.
    அன்பு செய்து வாழ்வோம். மற்றவர் துயர் துடைக்க நம்மால் முடிந்த உதவியை செய்வோம்.

    பதிலளிநீக்கு
  4. படங்களை, வார்த்தைகளை ரசித்தேன். அதில் ஓரிரு படங்கள் (செய்தியுடன்) எங்கள் பாஸிட்டிவ் செய்திகளில் முன்னர் இடம்பெற்றுள்ளது.

    பதிலளிநீக்கு
  5. //வையத்தார் என்பதற்கு இங்கு பெரும் செல்வந்தர்கள் என்று பொருள் கொள்ளவேண்டும். //

    அனைவருமே தங்களால் முயன்ற உதவியை தம்மில் மெலியாருக்குச் செய்யலாம். மனதில் ஈரம்தான் முக்கியம். அது எல்லோருக்கும் பொதுவாக இருக்கவேண்டும்.

    பதிலளிநீக்கு
  6. ஆகா
    அருமையானத் தொகுப்பு ஐயா
    தங்களின் புது வலை நுட்ப முயற்சி வெற்றி வெற்றி வெற்றி

    பதிலளிநீக்கு
  7. முதவ் படத்தில் உள்ள வாசகங்களும், தலைப்பும் அழகாக பொருந்தி வருகிறது.

    அற்புதமான பாடல்களோடு குறள்களை இணைத்து தந்தது வழக்கம் போல் அருமை ஜி.

    டாஷ்போர்டில் தொடக்கத்திலேயே கண்டு பலமுறையும் திறக்கவில்லை, யாதார்த்தமாக வாட்ஸ்அப்பில் கண்டு திறந்தால் பலரின் கருத்துரை.

    பதிலளிநீக்கு
  8. அன்பின் ஸ்ரீராம் அவர்கள் சொல்லியதைப் போல
    மனதில் இருக்க வேண்டும் - ஈரம்..
    அது இல்லாத மனம் கிடக்கும்
    வாழ்க்கை எனும் சாலையின் ஓரம்!...

    பதிலளிநீக்கு
  9. தமிழன் என்றோர் இனமுண்டு...
    தனியேய் அவருக்கோர் குணமுண்டு...ன்னு சொல்வாங்க. தமிழனின் தனிப்பட்ட குணாசியத்தில் முதன்மையானது இரக்கம்... இதை உலக அரங்கில் பலமுறை நிரூபிச்சிருக்கோம். இப்ப கஜா புயலின் மூலமாவும் நிரூபிச்சுக்கிட்டிருக்கோம்.

    அருமையான தொகுப்பு... நன்றிண்ணே

    பதிலளிநீக்கு
  10. உங்கள் முயற்சிகள் பிரமிப்பாய் உள்ளது. வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  11. உங்கள் கருத்துகளை விளக்குவதற்குத் தக்க பாடல்களைத் தேர்ந்து அழகாகச் சேர்த்து வெளியிட்டிருக்கிறீர்கள் . இதற்கு மிகுந்த உழைப்பு தேவைப்பட்டிருக்கும் . பாராட்டுகிறேன் .இரக்கம் முக்கியமான குணந்தான் . யாரும் மறுக்கமாட்டார்கள் .நீங்கள் குறளுக்குப் புது விளக்கம் தருவது தவறல்ல .புதிய கோணத்தில் பழைய நூலை ஆராய்வது வரவேற்கத்தக்கதே . ஆனால் வள்ளுவர் புகழ் , இசை என்று இரக்கத்தைத்தான் சொல்கிறார் என்பது வலிந்து பொருள் கொள்வதுதான் .அவர் காலத்தில் இரக்கம் என்பது அளி எனப்பட்டது ;அவர் ஒருமுறைகூட இச் சொல்லைப் பயன்படுத்தாதது ஏன் ? உங்களோடு நான் முரண்படுவதை மன்னியுங்கள் ..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்னைப்பொறுத்தவரை, இசை என்பது எவ்வாறு 'இரக்கம்' என்பதை அறிந்து தெரிந்து புரிந்து கொண்டேன் என்பதைப் பற்றி ஒரு பதிவு எழுதுகிறேன் ஐயா...

      நீக்கு
  12. டிடி நல்ல தொகுப்பு. நல்ல விளக்கங்கள்.

    ஈரம், இரக்கம் இப்பண்புகள் அன்பு என்பது இருந்தால்தானே வரும் இல்லையா ...நீங்கள் கூட மிக அழகான விளக்கங்கள் எபி யில் கொடுத்திருந்தீங்களே....அதை இங்கு பொருத்த முடியும் என்றே தோன்றுகிறது.... அன்பே சிவம் படத்தில் வரும் கருத்துக்ள் இதை ஒட்டித்தான் இல்லையா...

    கீதா

    பதிலளிநீக்கு
  13. மிக அருமையான தொகுப்பு! வழக்கம் போல நீங்கள் தேர்ந்தெடுத்த குறள்களும் அவற்றிற்கேற்ற திரை இசைப்பாடல்களும் சிறப்பு. தொழில்நுட்ப செயல்பாடுகள் வாவ் போட வைத்தது. நீண்ட நாட்களுக்கு பிறகு உங்கள் தளம் வந்தேன். மகிழ்வுற்றேன். வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  14. உங்கள் தளத்திலும் கருத்துரைகள் குறைவாக இருப்பதை பார்க்கையில் வலைப்பூ எழுதுபவர்கள் குறைந்து விட்டார்களோ என்று தோன்றுகிறது. என்னாலும் முன்பு போல எழுத முடிவதில்லை! பத்திரிக்கைகளில் எழுத முயல்வதாலும் மின்னிதழ் உருவாக்கத்தில் இருப்பதாலும் வலைப்பூவில் கவனம் செலுத்த முடிவதில்லை! எனது படைப்புத்திறனும் சற்று பாதித்து வருகிறது. மீண்டும் உற்சாகமாக அடுத்த ஆண்டில் களம் புக வேண்டும். நன்றி!

    பதிலளிநீக்கு
  15. இடுகை பார்த்தேன் இனிய வாழ்த்துகள் டிடி.
    https://kovaikkothai.wordpress.com/

    பதிலளிநீக்கு
  16. இரக்கம் மனிதனை அழகாக மாற்றுகின்றது சரிதான். அந்த இரக்கம இதை எழுதும் மனிதருக்க்குள் இருந்தால் இந்த நேரத்திலும் இப்படி குறள் விளக்கம் சொல்ல மாட்டான் தானே ஐயா? ஒருபக்கம் தமிழன் அழிந்து கொண்டுள்ளான். இன்னொரு பக்கம் தமிழன் குணம் குறித்த பதிவு. தமிழனால் மட்டும் தான் முடியும்.

    பதிலளிநீக்கு
  17. திண்டுக்கல் தனபாலன் என்றே புதிய உத்தி, தொழில்நுட்பம்தானே? அதனை நாங்கள் அறிவோமே. உங்களுடைய தொழில்நுட்ப அறிவும் இலக்கிய ஆர்வமும் எங்களை அசர வைத்துவிடுகிறது. உங்களை ஓர் ஆசானாக, தொழில்நுட்பாளராக, ஆய்வாளராக, தமிழ் ஆர்வலராக பல கோணங்களில் நோக்குகிறேன். உங்களின் முயற்சி வெல்ல மனம்ம நிறைந்த வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களைப் போன்றவர்களின் ஆசிர்வாதம் தான் ஐயா... வணங்குகிறேன்... மிக்க மிக்க நன்றி...

      நீக்கு
  18. பிஸியான சுய தொழில் செய்தாலும் தமிழ் செய்யுள் களை மேற்கோள் காட்டி அதுவும் தொழில் நுட்பத்துடன் ..........அதுவே தனிச் சிறப்பு

    பதிலளிநீக்கு
  19. அருமையான பதிவு. பாடல்களின் தேர்வும் உயிர்ப்பான படங்களும் அவை சொல்லிய கருத்துக்களும் மிக அருமை!

    பதிலளிநீக்கு
  20. தொழில் நுட்பம் கொண்டுவித்தியாசமான முறையில் குறள் விளக்கம் தருவதில் DD க்கு இணை யாரும் இல்லை

    பதிலளிநீக்கு
  21. வணக்கம் நண்பர்களே!, தங்கள் அருமையான பதிவுகளை TamilBM (https://bookmarking.tamilbm.com/register/) திரட்டியிலும் இணையுங்கள்.

    பதிலளிநீக்கு
  22. என்னைப் போன்றவர்களுக்கு கொஞ்சம் புதியபாடல்களில் ஏதும் இருந்தால் தேடுங்கள் அங்கிள்..( இப்ப தமிழ்ல பாட்டா எழுதுறாங்க...இசைக்கருவிகள் கத்தி...இசையை அலறி...பாதி ஆங்கில வார்த்தைகள் என்று நீங்கள் என்னைத் திட்டினாலும்..)
    விளக்கம் நன்று...
    படித்ததும் புரிகிறது....

    பதிலளிநீக்கு
  23. இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் ஜி
    வாழ்க வளமுடன்.

    பதிலளிநீக்கு
  24. மனம் நிறைந்த பிறந்த நாள் நல்வாழ்த்துகள் தனபாலன். இன்று போல் என்றும் இனிதாக அமைந்திடட்டும்.

    பதிலளிநீக்கு
  25. தங்களுக்கும் தங்கள் குடுமபத்தாருக்கும்
    இனிய பொங்கல் நல்வாழ்துக்கள்

    பதிலளிநீக்கு
  26. இருக்கிற குணமும் தனி அடையாமும் மேம்படவேண்டும்/

    பதிலளிநீக்கு
  27. மனம் நிறைந்த பிறந்த தின வாழ்த்துக்கள்/

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென்று இடித்தற் பொருட்டு. (குறள் 784)

நட்புச் செய்துகொள்வது நண்பரோடு சிரித்து மகிழ்வதற்காக மட்டும் அல்ல. மிகுதியாகத் தவறு செய்யும்போது, அவரைக் கடிந்து திருத்துவதற்கே ஆகும்.