திங்கள், 13 மார்ச், 2017

பூட்டு

அடக்கமில்லாமே சபையிலே ஏறி அளந்து கொட்டும் - அண்ணன்களுக்கு வாயிலே பூட்டு... அடுத்தவர் பையில் இருப்பதை கையில் அள்ளிக் கொள்ளும் - திருடருக்கு கையிலே பூட்டு... புத்தி கெட்டு, சக்தி கெட்டு, பொழைப்பை எல்லாம் விட்டுவிட்டு - சுற்றி வரும் சோம்பேறிக்கு காலிலே பூட்டு(2) பலப்பல பலப்பல பல ரகமா இருக்குது பூட்டு... அது பல விதமா மனிதர்களை பூட்டுது போட்டு... கல கலவெனும் பகுத்தறிவு சாவிய போட்டு... நான் கச்சிதமா திறந்து வைப்பேன் இதயத்தை காட்டு...! மங்கையர் பின்னாலே லைசென்சு இல்லாமே - வளைய வரும் காமுகர்க்கு கண்ணிலே பூட்டு... அங்குமில்லாமே இங்குமில்லாமே - அலைந்து வரும் மூடருக்கு மனசுல பூட்டு.. உறக்கம் கெட்டு, வழக்கம் கெட்டு, ஊரு வம்ப கேட்டுக்கிட்டு - உள்ளம் கெட்ட மனுசருக்கு காதிலே பூட்டு... (திரைப்படம் : ஆனந்தஜோதி / பாடல் வரிகள் : கவிஞர் கண்ணதாசன்)ஆனா இந்த வலைப்பூட்டுக்கு சாவியில்லைன்னு இனிய நண்பர் திரு. ராஜாராம் →(நீச்சல்காரன் வலைத்தளம்)← அவர்கள் சொல்கிறார்... இந்தப் பதிவிற்கு காரணமான அவருக்கு முதலில் நன்றி... அவரின் பூட்டு செயலியை கீழே இணைத்துள்ளேன்... பயன்படுத்தும் முறையை வாசித்து விட்டு, இந்த செயலியை நீங்கள் பயன்படுத்தி விட்டால், உங்கள் பதிவை யாரும் திருடவே முடியாது என்று பொய் சொல்ல மாட்டேன்... அன்பர்கள் உங்கள் எழுத்துக்களை தட்டச்சு செய்து திருட முடியும் (!) என்கிற உண்மையையும் சொல்லிக் கொள்கிறேன்... இதோ விளக்கமாக :

செவ்வாய், 7 மார்ச், 2017

மயக்கம் தரும் இந்தக் காதல் போதுமே...!
மின்னல் ஒளியென கண்ணை பறித்திடும் அழகோ தேவதையோ...? (2) அங்கம் ஒரு தங்க குடம் அழகினில்... மங்கை ஒரு கங்கை நதி உலகினில்... துள்ளும் இதழ் தேன் தான்... அள்ளும் கரம் நான் தான்... மஞ்சம் அதில் வஞ்சிக்கொடி வருவாள்... சுகமே... வருவாள் சுகமே தருவாள் மகிழ்வேன்... கண் காவியம் பண் பாடிடும் பெண்ணோவியம் செந்தாமரையே... மாஞ்சோலை கிளி தானோ மான் தானோ...? வேப்பந்தோப்பு குயிலும் நீ தானோ...? இவள் ஆவாரம் பூ தானோ...? நடை தேர் தானோ...? சலங்கைகள் தரும் இசை தேன் தானோ... ? (படம் : கிழக்கே போகும் ரயில்)

புதன், 1 மார்ச், 2017

நாற்காலி பேசினால்...?

பதவி வரும்போது பணிவு வர வேண்டும், துணிவும் வரவேண்டும் தோழா... பாதை தவறாமல் பண்பு குறையாமல் பழகி வரவேண்டும் தோழா... (2) அன்பே உன் அன்னை... அறிவே உன் தந்தை... உலகே உன் கோவில்... ஒன்றே உன் தேவன்...! (படம் : தெய்வத்தாய்)