புதன், 28 டிசம்பர், 2016

வலைப்பதிவருக்கான வாட்ஸ்-அப் திரட்டி...!


வணக்கம் வலைப்பதிவு நண்பர்களே... திரு.முத்துநிலவன் அய்யா அவர்களும், திரு.மீரா செல்வகுமார் அவர்களும் புதிதாக "தமிழ் வலைப்பதிவகம்" எனும் குழுவை, கட்செவி அஞ்சலில் (WhatsApp) 25/12/2016 அன்று தொடங்கி உள்ளார்கள்... அதில் என்னையும் ஒரு நிர்வாகியாக நியமித்து உள்ளார்கள்... அவர்களுக்கு ஒரு நன்றியுடன் தொடர்கிறேன்...

இணையத் தமிழ்ப்பயிற்சி - புதுக்கோட்டை - 18/12/2016

திங்கள், 12 டிசம்பர், 2016

நீங்க வந்தா மட்டும் போதும்...!


வணக்கம்... தொழிற்நுட்ப நண்பர்களுக்கு நன்றி... இங்கு சொல்லப்பட்டவை எல்லாம் வலைத்தள ஆரம்பத்தில் எனக்கும் நேர்ந்தவைகளே... இப்போதும் பல பதிவர்களுக்கும், அடிக்கடி ஏற்படும் சிறு சிறு சிக்கல்கள்... அதனால் கற்றுக் கொண்ட சிறுசிறு தொழிற்நுட்ப விசயங்களை இப்பதிவில் இரண்டாவது தொகுப்பாகப் பகிர்ந்து உள்ளேன்... இல்லை உங்களிடம் பேசியுள்ளேன்...! முதல் தொகுப்பு → இங்கே சொடுக்கவும்

↑ 18.05.2014 ↑- மீண்டும் வரும் 18/12/2016 அன்று புதுக்கோட்டையில்...


வியாழன், 1 டிசம்பர், 2016

இந்த உலகம் உணர்த்தும் ஒரு பாடம்...!


வணக்கம் நண்பர்களே... "எதை வைச்சி என்னை நினைப்பாங்க...?"-ன்னு நம்ம அய்யன் எங்காவது கேள்வி கேட்டுள்ளாரா...? என்பதை அறிய, இதன் முந்தைய பதிவை வாசிக்காதவர்கள் →இங்கே← சொடுக்கி வாசித்து வந்தால் தான், அதற்கு நம்ம அய்யன் சொன்ன தீர்வை இந்த அதிகாரத்தின் முடிவில் உள்ள குறளில் அறிய முடியும்...

இரவல் தந்தவன் கேட்கின்றான் அதை இல்லை என்றால் அவன் விடுவானா...? உறவைச் சொல்லி அழுவதனாலே - உயிரை மீண்டும் தருவானா...? கூக்குரலாலே கிடைக்காது - இது கோர்ட்டுக்குப் போனால் ஜெயிக்காது - அந்தக் கோட்டையில் நுழைந்தால் திரும்பாது... போனால் போகட்டும் போடா...! (2) இந்த பூமியில் நிலையாய் வாழ்ந்தவர் யாரடா...? போனால் போகட்டும் போடா...! (படம் : பாலும் பழமும்) இன்றைய நாட்டு நிலையில் சிலர் பாடும் பாடல் இதுவாக இருக்குமோ...? அதற்காக இப்பதிவில் உள்ள குறள் விளக்கமும், குறள்களுக்கேற்ப திரைப்பட பாடல் வரிகளும் "அவர்களுக்காக" என்று வாசிக்க வேண்டாம்...

கறுப்புப்பணம் மட்டுமல்ல... அளவிற்கு அதிகமாக பொன், பொருள் வைத்திருப்பவர்களுக்காக அன்றே நம்ம அய்யன் என்ன சொல்லியுள்ளார் என்பதை பார்ப்போம்... வாங்க...

பாடல் வரிகளை கேட்க, பாடலின் ஆரம்பத்தில் உள்ள பிளேரை இருமுறை சொடுக்கவும்... நன்றி... இதுவரை சந்தித்த, வாழ்ந்த, வாழ்கிற மனிதர்களைப் பற்றிய எனது அனுபவத்தில்... குறளின் குரலாக:- வாசிக்க.. ரசிக்க.. கேட்க..!