புதன், 28 ஜனவரி, 2015

கை வந்த கலை...


ஏன் என்ற கேள்வி - இங்கு கேட்காமல் வாழ்க்கை இல்லை... நான் என்ற எண்ணம் - கொண்ட மனிதன் வாழ்ந்ததில்லை... பகுத்தறிவு பிறந்ததெல்லாம் கேள்விகள் கேட்டதனாலே (2) உரிமைகளை பெறுவதெல்லாம் - உணர்ச்சிகள் உள்ளதனாலே (2) (படம் : ஆயிரத்தில் ஒருவன்) கேள்வியை தேடி அறிகிற அறிவாளி... கேள்வியோட மட்டுமே திரியுற முட்டாள்... இந்த இரண்டு பேருலே யாரு சந்தோசமா இருப்பாங்க...? என்னைக் கேட்டா எந்தக் கஷ்டமும் படாம கேள்வியை மட்டும் கேட்கிற முட்டாள் தான் சந்தோசமா இருப்பான்னு தோணுது... உனக்கு எப்படி தோணுது...?

வெள்ளி, 16 ஜனவரி, 2015

முக்கால் அடியில்...


மானம் பொழியுது பூமி விளையுது தம்பி பயலே... நாம வாடி வதங்கி வளப்படுதுறோம் வயலே (2) ஆனால் தானிய மெல்லாம் வலுத்தவருடைய கையிலே... (2) இது தகாது இன்னு எடுத்து சொல்லியும் புரியலே... // தரைய பார்த்து நிக்குது நல்ல கதிரு... தன் குறைய மறந்து மேலே பார்க்குது பதரு (2) அது போல் அறிவு உள்ளது அடங்கி கிடக்குது வீட்டிலே - அறிவு உள்ளது அடங்கி கிடக்குது வீட்டிலே... எதுக்கும் ஆகாத சிலது ஆர்ப்பாட்டம் செய்யுது வெளியிலே... அதாலே மனுசன மனுஷன் சாப்பிடுராண்டா தம்பி பயலே - இது மாறுவதெப்போ தீருவதெப்போ நம்ம கவலே... ஆணவதுக்கு அடி பணியாதே தம்பி பயலே... எதுக்கும் ஆமாம் சாமி போட்டு விடாதே தம்பி பயலே (2) பூனையும் புலியாய் எண்ணி விடாதே தம்பி பயலே (2) உண்மை புரிஞ்சிக்காமலே நடுங்காதேடா தம்பி பயலே... (படம்:தாய்க்கு பின் தாரம்) அனைவருக்கும் உழவர் மற்றும் திருவள்ளுவர் தின நல்வாழ்த்துக்கள்...