🏠 வணக்கம் காப்பகம் நன்றி

தேடல் 🔎



புதிய பதிவுகளை பெற ✉



சிறு துரும்பும்…

வணக்கம் நண்பர்களே... புதிய பதிவர்களுக்குப் பலருக்கும் திரட்டிகள் + கேட்ஜெட்கள் என இணைத்துக் கொடுத்துள்ளேன்... அவைகளில் பல இப்போது வேலை செய்வதில்லை... சிலது இல்லவும் இல்லை... முன்பு பகிர்ந்துள்ள தொழினுட்ப பதிவுகளில் ஏற்படும் சின்ன சின்ன சிக்கலுக்கான தீர்வும் (Solution), சில எளிய குறிப்புகளின் (Tips) முதல் தொகுப்பு இப்பதிவு... கேள்விகளை முயற்சியாகவும், பதில்களை பயிற்சியாகவும், தீர்வை வெற்றியாகவும் சொல்லியுள்ளேன்... இல்லை உங்களை எனது மனசாட்சியாக நினைத்து உங்களிடம் பேசியுள்ளேன்...! வாங்கப் பேசுவோம்...!



(1) சொர்க்கம் என்பது நமக்குச் சுத்தம் உள்ள ___?

முயற்சி : இது இருக்கட்டும்... அது இருக்கட்டும்... இப்படிப் பல வீடுகளிலும் பார்த்து பார்த்து, சேர்த்துச் சேர்த்து பரணிலே தூக்கிப் போட்டாச்சி... வர்ற போகிக்குத் தேவையில்லாத பொருட்களோடு முதல்லே மனசை சுத்தப்படுத்தணும்...! க்கும்... அங்கே தான் அப்படின்னா இங்கேயும்...! என் தளத்திலே இன்ட்லி, தமிழ்மணம் நடுவிலே இருந்த தமிழ்10 ஓட்டுப்பட்டையை காக்கா தூக்கிட்டு போயிருச்சி...! அதே போல தமிழ் வெளி கேட்ஜெட் - இருக்கு ஆனா இல்லே... அதாவது கீழே இருக்கிற மாதிரி... இப்போ தாங்க பார்க்கிறேன் என் தளத்திலே இது மாதிரி கட்டம் கட்டமா பல இடத்திலே இருக்கு...! என்னங்க பண்றது...?
                                                                       

பயிற்சி : முதல்லே இடதுபுறத்திலே Layout போயிட்டு, அங்கங்கே சிதறிக் கிடக்கிற கேட்ஜெட்களை எல்லாம், அதுக்கு மேலே சுட்டியைக் கொண்டு போய் அழுத்தி, இழுத்து, வரிசையா வச்சிட்டு மேலே "Save arrangement"-யை சொடுக்குங்க... இப்போ "View blog" சொடுக்கி உங்க தளத்தை பாருங்க... இந்த செயல்படாத திரட்டிகள் / கேட்ஜெட்களாலே, உங்க தளம் திறக்கும் திறக்கும் திறந்து கொண்டே இருக்கும்...! வர்றவங்க ஓடிப் போறதை நிப்பாட்டிடலாமா...? சரி, எந்தந்த Gadget வேணாமோ, அந்தந்த Gadget-க்கு கீழே இருக்கிற Edit-யை சொடுக்கி, Remove-வை சொடுக்கினா போயிந்தே...! It's gone...! அப்பாடா...! சுத்தமாச்சி...! ஆமா, மறுபடியும் அதே Gadget தேவைப்பட்டா ஆ ? அஆஇஈ...?

வெற்றி : தளத்திலே இருக்கணும் ஆனா இருக்கக்கூடாது...! சரியா...? தேவை ! ஆமாங்க ஆச்சரியக்குறி தான் தேவை... செயல்படாத ஓட்டுப்பட்டை அப்புறம் கேட்ஜெட்களை செயல்படாம வைக்க முடியும்... மீண்டும் மீட்கவும் முடியும்... எந்தந்த Gadget வேணாமோ, அந்தந்த Gadget-க்கு கீழே இருக்கிற Edit-யை சொடுக்கி, ஆரம்பத்தில் <!-- இவ்வாறும், Gadget script முடிவில் --> இவ்வாறும் இட்டு விடுங்கள்... அவ்வளவு தான்... அவை வேலை செய்யாது...! செஞ்ச பிறகு "சுத்தம் என்பதை மறந்தால் வலைத்தளமும் குப்பைமேடு தான்...!" அட...! நல்லா பாடறீங்க... நன்றி... இவ்வளவு சொல்லியும் சுத்தம் செய்யலேன்னா நாம மாறி விடுவோம்... அதற்கான வழி அடுத்த பகுதியிலே வெற்றியில் இருக்குங்க...!
(2) கண்களைப் பாதுகாத்து நேரத்தை மிச்சப்படுத்துதல்

முயற்சி : சட்டை சின்னதா போச்சி, பேன்ட் இடுப்பளவு சுருங்கிப் போச்சின்னா நாம என்ன செய்றது...? நாம குண்டாயிட்டோம்ன்னு சொல்லமாட்டோமில்லே... சரி நம்ம கண்ணைப் பாதுகாப்போம்...! எழுத்து ரொம்பச் சின்னதா இருக்கு... வாசிக்கச் சிரமமா இருக்கு... நாம வாசிக்கும் தளங்கள்லே சொல்றேன்...! // க்கும்... நீங்க மட்டும்...? இது பொதுவான அளவுங்க... இல்லே... // விவாதத்தை அப்புறம் வச்சிக்கலாமா...? உண்மையிலேயே சில பல தளங்களில் எழுத்துரு சிறியதாக அல்லது சிறிய'தாக்கி' இருக்கலாம்...! என்ன செய்யலாம்...?

பயிற்சி : (Ctrl-key) கண்ட்ரோல் கீயை இடது கை சுண்டு விரலில் அழுத்திக்கொண்டே, வலது கை ஏதோ ஒரு விரல்லே (plus-key) பிளஸ் கீயை ஒருமுறை தட்டுங்க... "இன்னும் சரியாத் தெரியலே... " இன்னொருவாட்டி பிளஸ் கீயை தட்டுங்க... "இன்னும் கொஞ்சம்..." ரைட்டு... மறுபடியும் பிளஸ் கீயை தட்டுங்க... "ம்ஹீம்..." எதுக்கும் கண்ணைப் பரிசோதனை செய்வது நல்லது... சிரித்ததற்கு நன்றி... குறிப்பு : இப்படி வாசிக்கும் எந்தத் தளத்தின் பதிவையும் மறுமுறை திறக்கும் போது, இதே போல் செய்யவேண்டியதில்லை...!

வெற்றி : எளிதான கண்ட்ரோல் பிளஸ் டெக்னிக்குடன் ?m=1 டெக்னிக்கும் தெரிந்து கொண்டால்...? அதாவது எந்த gadget-ம் இல்லாம, சும்மா 'டக்'ன்னு எந்த தளமும் திறந்தால்... அது தான் ?m=1 டெக்னிக்...! கண் டாக்டர்கிட்டே போறதை தள்ளிப் போடலாம்...! விளக்கமா... அட முதல் பகுதியிலே கொடுத்த அதே பதிவோட இணைப்பு தாங்க... சொடுக்கலையாக்கும்... அப்போ இங்கே →சொடுக்குங்க←
(3) நமக்கான அடையாளத்தை உருவாக்குதல்

முயற்சி : இன்ப துன்ப இரண்டையும் அதனதன் போக்கிலே ஏற்றுக் கொள்வது தான் முன்னேறுவதற்கான வழியெல்லாம் சரி தான்... குறிக்கோள் இல்லாத வாழ்க்கை என்னங்க ஆகும்...? வெவ்வேறு பாதையில் அலைய வைத்து விடும்... தளத்திற்குத் தமிழ்லே ஒரு பெயர் வைச்சிட்டோம்... ஆங்கிலத்திலே தள முகவரி (blog url) வேற இருக்கு... இருந்துட்டுப் போகட்டும்... இப்போ என்ன அதுக்கு...? இந்தத் தளத்தின் குறிக்கோள், அதாங்க தள விளக்கம் ஒன்று இருக்கே... Blog Description... யோசிக்கலாமா...? இணைய உலகில் தள விளக்கத்தைத் தேடினா, நம்ம தளம் எப்படிங்க முதல்லே வர வைக்கிறது...?

பயிற்சி : என்னங்க நல்லா யோசனை பண்ணி Blog Description-னை உங்க தளத்திலே மாத்திட்டீங்களா...? சரி அந்த வரியை அப்படியே copy செஞ்சி உங்கள் browser-லே, ஒரு tab-பிலே அடிச்சி என்டர் (↵) தட்டி பாருங்க... ஐ... உங்கள் தளம் முதல்லே வருதா...? உங்க தளத்தோட விளக்கத்தைத் தீர்மானிச்சிட்டீங்க... நல்லது... ஒவ்வொரு பதிவுக்கும் இப்படி இருந்தா நல்லாயிருக்கும்ன்னு தோணுதில்லே... அதாவது உங்க பதிவுலே ஏதாவது ஒரு முக்கியமான வரியை எந்த தேடியந்திரங்கள்லேயும் தேடினா, அந்தப் பதிவை முதல்லே வர வைக்க முடியுமா...? அதுக்கு முன்னாடி ம்... வெற்றியை சொடுக்குங்க...

வெற்றி : என்னது கொஞ்ச நாள் கழிச்சி பார்த்தா, உங்கள் தள விளக்கம் போலவே இன்னொருத்தரும் ஆரம்பிச்சிட்டாரா...? நல்லது ஒரே சிந்தனை...(?) ! நல்லா பாருங்க... உங்கள் பதிவுகளையும் அலேக்கா தூக்கி அவரு தளத்திலே Copy & Paste...! என்ன செய்யலாம்...? ஒன்னும் செய்ய முடியாது, அது தான் உண்மை... எனக்கும் இப்படி தாங்க ஒரு அதிர்ச்சி அனுபவம்... நான் என்ன செஞ்சேன்னா, "நன்றி மட்டுமாவது சொல்லுப்பா"ன்னு நண்பராக்கிட்டேன்... மதுவிலக்கு வந்தா குடிகாரன் திருந்திடுவானா...? ஹேஹே... 'குடி'ங்கிற மனநோயும், திருட்டும்... "திருடனா பார்த்துத் திருந்தாவிட்டால்" நீங்க பாட்றது எனக்கு கேட்குது...! திருட்டை தடுக்க முடியாதுங்கிறதை யோசிப்பதை விட, முதல்லே Search Description-யை தளத்திற்கும், ஒவ்வோர் பதிவுக்கும் எப்படி செய்யணும்கிறதை யோசிப்போமா...? இங்கே →சொடுக்குங்க...←
இப்போ முக்கியமான விசயம் என்னான்னா :- வலைப்பதிவர் கையேட்டில் வலைத்தளம் தொடங்குவது முதல் பற்பல எளிதான குறிப்புகளையும் சேர்க்கலாம் என்று புதுக்கோட்டை வலைப்பதிவர் நிர்வாகக்குழு முடிவு செய்துள்ளது... அதனால் ஒவ்வொரு வலைப்பதிவரும், தங்களுக்குத் தெரிந்த, தினமும் செயல்படுத்துகிற, எளிதான சிறிய சிறிய குறிப்புகளையும், எழுதிய தொழினுட்ப பதிவின் இணைப்பையும் அல்லது தனக்கு உதவின தொழினுட்ப பதிவரின் இணைப்பையும் பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்...

மேலும் சந்தேகம் இருந்தால் தயக்கமின்றி எப்போதும் தொடர்பு கொள்ள :-
dindiguldhanabalan@yahoo.com

நண்பர்களிடம் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி

புதிய பதிவுகளை பெறுதல் :


தொடர்புடைய எண்ணங்களின் வண்ணங்கள் சில :


முகநூல் மூலம் கருத்துக்களை பகிர :

கருத்துகள்


  1. உங்களுக்கு தெரியாத குறிப்புகளா மற்றவர்கள் சொல்லப் போகிறார்கள் அதனால் அதை நீங்களே செய்துவிட வேண்டியதுதானே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Avargal Unmaigal அவர்களுக்கு : ஒவ்வொரு வலைப்பதிவரும் சில முக்கிய தொழிற்நுட்ப பதிவுகளை bookmark செய்து அல்லது சேமித்து வைத்திருப்பார்கள்... அவைகளும் வலைப்பதிவர் கையேட்டில் இருந்தால், பலருக்கும் பயன்படும்... நண்பர் "எனது தளத்தில் பதிவிற்கு கீழே தொடர்புடைய பதிவுகள் (Linked within) வேண்டும்" என்று கேட்டால், வந்தேமாதரம் சசி அவர்களின் பதிவின் படி செய்ய எளிதாக இருக்கும்... இன்னும் ப்ளாக்கர் நண்பன் அப்துல் பாசித் அவர்கள், கற்போம் பிரபு அவர்கள், தமிழ்வாசி பிரகாஷ் அவர்கள், மூங்கில் காற்று முரளிதரன் அவர்கள் என்டர் ப்ளஸ் + Stalin Wesley அவர்கள், தங்கம் பழனி அவர்கள்... இன்னும் பல பேர்களின் பயன்தரும் பதிவுகள் உள்ளன...

      நீக்கு
  2. தங்களின் ஒவ்வொரு பதிவும் எங்களுக்கு சிந்தனையைத் தூண்டுகின்றன. மென்மேலும் கற்றுக்கொண்டு மேம்படுத்திக்கொள்ள உதவுகின்றன. நன்றி.

    பதிலளிநீக்கு
  3. தங்களின் கருத்து அருமையானதே இது பலருக்கும் பயனாகும் 80 உண்மையே... ஜி

    பதிலளிநீக்கு
  4. வணக்கம்
    அண்ணா.

    அறிய வேண்டிய விடயத்தை தெளிவாசொல்லியுள்ளீர்கள் வாழ்த்துக்கு நன்றி.த.ம7

    பதிலளிநீக்கு
  5. மேலும் பல விஷயங்களை அறிந்து கொள்ள தாங்கள் - மனம் உவந்து வழிகாட்டுகின்றீர்கள்..மகிழ்ச்சி.. நன்றி..

    பதிலளிநீக்கு
  6. மரியாதைக்குரிய ஐயா,
    வணக்கம். தங்களது சமூகப்பணிகளுக்கு வாழ்த்த போதிய அறிவு இல்லை!..சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.. http://konguthendral.blogspot.com
    என அன்புடன்,
    C.பரமேஸ்வரன்,
    சத்தியமங்கலம்-638402

    பதிலளிநீக்கு
  7. பயனுள்ள பகிர்வு அண்ணா...
    இதெயெல்லாம் வலைப்பதிவர் கையேட்டில் சேர்க்கும் போது அது எல்லாருக்கும் பயன்படும்விதமாக அமையும்...
    அருமையான முயற்சி.... வாழ்த்துக்கள் அண்ணா...

    பதிலளிநீக்கு
  8. வலை பற்றிய குறிப்புகள் என்று ஒரு நூல் தாங்கள் வெளியிட்டாலும் மகிழ்ச்சி தான்.

    பதிலளிநீக்கு
  9. டிடி என்றாலே டிமான்ட் ட்ராஃப்ட்தான்....ஸோ கலக்குங்க ராஜா!! அருமை! கற்றுக் கொள்கின்றோம்...

    பதிலளிநீக்கு
  10. பயனுள்ள தகவல்கள் ......சிறப்பான திட்டம்.......வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  11. வலைத்தளத்தை சுத்தமாக வைத்து பாதுகாப்பது எப்படி? என்ற நோக்கில் எழுதிவைகள் மிக நன்று. வலைத்தளம் வைத்திருக்கும் அனைவருக்கும் நீர் ஒரு முதுகெலும்பாக இருக்கிறீர்கள் என்றால் அது மிகையானதல்ல.

    God Bless You

    பதிலளிநீக்கு
  12. இன்றைய செய்தி என்னவேன்றால்
    தமிழ்மணம் திரட்டி
    எனது புதிய தளத்தை http://www.ypvnpubs.com/
    இணைக்கவில்லை.
    தேன்கூடு, தமிழ்க்களஞ்சியம், இன்ட்லி, நம்குரல், தமிழ்பிஎம் ஆகிய
    திரட்டிகளிலே தான் எனது பதிவுகளை இணைக்கின்றேன்.
    ஏனைய திரட்டிகளுக்கு என்ன நடந்தது?
    எனக்கும் தெரியவில்லையே!

    பதிலளிநீக்கு
  13. எத்தனை தொழில் நுட்பம்!
    நாளுக்குகு நாள் மெருகேறிக்கிட்டே போகுது சகோதரரே!

    அத்தனையும் மிகப் பயனுடையவை!
    மிக்க நன்றியுடன் வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  14. வணக்கம் டிடி சார், அருமை,
    வாழ்த்துக்கள், பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  15. முயற்சி+பயிற்சி=வெற்றி.
    இதைப் பயன்படுத்திக்கொள்ள அனுமதியுங்கள்.

    பதிலளிநீக்கு
  16. “பலருக்கு பயன் படச்செய்வோமே.”..--. சிந்தனைக்கும் செயலுக்கும் நன்றி!! நன்றி!!!

    பதிலளிநீக்கு
  17. அசத்தல் அய்யா
    சாத்தியமிருப்பின் தங்கள் பதிவுகளை புத்தகங்களாக வெளியிட்டால் சிறப்பாக இருக்கும். புதியவர்களுக்கு விளக்காக இருந்து வழிகாட்டும்.

    பதிலளிநீக்கு
  18. முயற்சி பயிற்சிவெற்றி எதைச் சொடுக்கினாலும் எதுவும் வரவில்லையே. இல்லை எனக்குத்தான் சொடுக்கத் தெரியவில்லையோ

    பதிலளிநீக்கு
  19. தொழில்நுட்பம் அறியாத என்போன்ற பலருக்கும் டிடிதான் கலங்கரை விளக்கம்! அருமையான விளக்கம்!

    பதிலளிநீக்கு
  20. இது போன்ற பதிவுகளைச் சேமித்து வைத்துப் பயன் பெறுவோம்

    பதிலளிநீக்கு
  21. அன்புள்ள வலைச்சித்தருக்கு,

    பல பயனுள்ள தகவல்களைத் தந்து இருக்கீறீர்கள். மிக்க நன்றி.

    எல்லாவற்றையும் விட மிகுந்த பயனுள்ள தகவலாக நான் கருதுவது என்னவென்றால்... கடைசியில் கொடுத்திருக்கக் கூடியதுதான்.... சந்தேகம் இருந்தால் தயக்கமின்றி தொடர்புகொள்ள தங்களின் மெயில் முகவரியும் & அலைபேசி எண்ணும்.

    பல நேரங்களில் பேசி சந்தேகங்கள் கேட்டு...தொந்தரவு கொடுப்பார்கள்
    என்றாலும்கூட... அது சுகவேதனைதான் என்றாலும் அந்தப் பாரச்சிலுவையைச் சுமக்க சித்தமாயிருக்கிறீர்கள் என்று எண்ணுகிற பொழுது... உங்களை உங்கள் மனதை எண்ணி எண்ணி வியப்பில் ஆழ்ந்து போகிறேன்.

    எந்தப் பிரதிபலனும்...கைமாறும் கருதாமல் எந்த உதவி என்று கேட்டாலும் முகம் சுழிக்காமல்... நேரத்தைச் செலவழித்து... அவர்களுக்காக உழைப்பைச் செலவு செய்யும் தங்களுக்கு ‘நன்றி’
    என்பதைத் தவிர சொல்ல வேறு வார்த்தையில்லை. இவ்வாறு உழைப்பதற்கு தங்களின் குடும்பத்தாரும் இடம் கொடுப்பதை எண்ணி அவர்களுக்கும் ‘நெஞ்சார்ந்த நன்றி’.

    தாங்கள் சம்பாதித்து இருப்பது என்னவென்றால் உலகத்தில் உள்ள தமிழ் வலைப்பதிவர் மனங்களை என்றால் அது மிகையில்லை.

    நன்றி.
    த.ம. 14.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை. உங்கள் கருத்தை நான் வழி மொழிகிறேன் மணவை அவர்களே

      நீக்கு
  22. அன்புள்ள டிடி, தொழில் நுட்பம் என்னும் பெயரில் என்னென்னவோ செய்கிறீர்கள். அதையெல்லாம் செய்து பார்ப்பதை விட பேசாமல் உங்களிடமே அந்தப் பிரச்சனைகளை தீர்க்கக் கேட்டுக் கொள்ளலாம் போலிருக்கிறது. என்னைப் போல் ( தவறு . எனக்கு ) நீங்கள் சொல்வதையெல்லாம் படித்துப் புரிந்து கொள்ளும் அறிவு போதாது. உங்கள் முயற்சி பயிற்சி வெற்றிக்கு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  23. உங்கள் நல்ல மனம் வாழ்க !நாடு போற்ற வாழ்க !!
    தமிழ் மணம் திரட்டியை என் தளத்தில் இணைத்துக் கொடுத்ததையும் ,தேவைப் படும் போதுசெய்யும் உதவிகளையும் என்றும் மறக்க மாட்டேன் !

    பதிலளிநீக்கு
  24. சிலரின் வலைப்பூவில் இந்த பாலோயர் விட்ஜெட் (google friend connect வசதியை கூகிள் நீக்கிய சமயத்தில்) காணாமல் போய் விட்டது.

    Follower widget பாலோயர் விட்ஜெட் உங்கள் வலைப்பூவில் நிறுவுவது எப்படி?
    http://www.tamilvaasi.com/2013/07/add-follower-widget-in-tamil-blogs.html

    பதிலளிநீக்கு
  25. எங்களுக்கு கிடைத்த பரிசு தாங்கள் - பாரட்ட வார்த்தைகள் இல்லை

    பதிலளிநீக்கு
  26. ப்ளாக்கில் திரட்டிகளின் ஒட்டுபட்டைகள், சமூக தள இணைப்புகளை அழகாக இணைக்க - vote buttons version 2
    http://www.tamilvaasi.com/2012/05/vote-buttons-version-2.html

    பதிலளிநீக்கு
  27. திருடுபவர்களை ஒண்ணும் செய்ய முடியாது..."நன்றி மட்டுமாவது சொல்லுப்பா"ன்னு நண்பராக்கிட்டேன்!" ஹா... ஹா.... ஹா... யாருங்க அது? என் காதுல மட்டும் சொல்லுங்க!

    'எங்களை'த் திருடுபவர்கள் யாராவது இருக்கிறார்களா என்று தெரியவில்லை!

    'எங்களு'க்கு உதவிய தொழில் நுட்பப் பதிவர் நீங்கதான்!


    பதிலளிநீக்கு
  28. உங்கள் தொழில் நுட்பப் பதிவுகளைத் தனிப் புத்தகமாகக் கொண்டு வரலாம் என்பது என் கருத்து.

    முயற்சி + பயிற்சி + வெற்றி -- நல்ல முயற்சி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அறிஞர் ஸ்ரீராம் அவர்களின் கருத்தை நானும் முன்மொழிகின்றேன்.
      அச்சேற்றிய நூலாகாவிட்டாலும் மின்னூலாக ஆவது
      தங்கள் தொழில் நுட்பப் பதிவுகளை வெளியிடலாமே!

      நீக்கு
  29. பயனுள்ள பதிவு! வெற்றி அடைவதற்கு முயற்சி பண்ண வேண்டும். மிக்க நன்றி சகோதரா!

    பதிலளிநீக்கு
  30. முத்து முத்தான பதிவுகள் தானே எப்போதும் இடுவீர்கள். அப்புறம் என்ன. இதுவும் அவ்வண்ணமே மிளிரும் பதிவு அசத்தல் சகோ தங்கள் எண்ணங்களும் செயல்களும் கண்டு பெருமை கொள்கிறேன் தலை சாய்kகிறேன் சகோ ! பதிவுக்கு நன்றி !

    பதிலளிநீக்கு
  31. மிகவும் உபயோகமான தகவல்கள்! அனைவருக்கும் பயன்படும்! எளிமையாக உங்கள் பாணியில் சொன்னவிதம் சிறப்பு! விநாயகர் சதுர்த்தி வேலைகளில் பிசியாக இருப்பதால் உடனே வர முடியவில்லை! இதற்கடுத்த பதிவும் படித்துவிட்டேன்! வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  32. இதுபோல ப்ளாக்கர் டிப்ஸ்களை சுவையாக வழங்க டிடியால் மட்டுமே முடியும்

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென்று இடித்தற் பொருட்டு. (குறள் 784)

நட்புச் செய்துகொள்வது நண்பரோடு சிரித்து மகிழ்வதற்காக மட்டும் அல்ல. மிகுதியாகத் தவறு செய்யும்போது, அவரைக் கடிந்து திருத்துவதற்கே ஆகும்.