🏠 வணக்கம் காப்பகம் நன்றி

தேடல் 🔎



புதிய பதிவுகளை பெற ✉



ஒரு கனவு கண்டால்... அதை தினம் முயன்றால்...

வணக்கம் நண்பர்களே... டாக்டர் ஆ.ப.ஜெ.அப்துல் கலாம் அவர்களின் பொன்மொழிகளுடன் பாடல்கள்... வாசிக்க... ரசிக்க... கேட்க...

பல குறள்களை மேற்கோளாக சொல்லும் கலாம் அவர்களிடம், "உங்களுக்கு பிடித்த குறள் என்ன...?" என்று கேட்ட போது, அவர் கூறின குறள் :

இடும்பைக்கு இடும்பை படுப்பர் இடும்பைக்கு
இடும்பை படாஅ தவர் (623)

பொருள் : எத்தகைய இடையூறுகள் வந்தாலும், அதற்காக வருந்தாமல் மனத் தெளிவுடன், துன்பத்திற்கே துன்பம் உண்டாக்கி அதனைப் போக்கி விடுபவர்களே, எதிலும் வல்லமை படைத்த சாதனையாளர்கள்...
ஒவ்வொரு கட்டத்திற்கு அருகே (▶) சுட்டியைக் கொண்டு சென்றால், கலாம் அவர்களின் பொன்மொழிகளையும், அதற்கேற்ப என் மனம் பாடிய பாடல் வரியையும் காணலாம்... சொடுக்கினால் காணும் பாடல் வரிகள் மட்டுமே பாடும்...! கைபேசியில் வாசிப்பவர்களும் சொடுக்கி ரசிக்கலாம்... புதுப்பித்த நாள் : 31/12/2019

நமது பிறப்பு ஒரு சம்பவமாக இருக்கலாம்; ஆனால் இறப்பு ஒரு சரித்திரமாக இருக்க வேண்டும்...
வாழ்ந்தவர் கோடி, மறைந்தவர் கோடி, மக்களின் மனதில் நிற்பவர் யார்...? மாபெரும் வீரர், மானம் காப்போர், சரித்திரம் தனிலே நிற்கின்றார்...! (மன்னாதி மன்னன்)

நீங்கள் உறங்கும்போது வருவதல்ல கனவு; உங்களை உறங்கவிடாமல் செய்வதே கனவு...!
ஒரு கனவு கண்டால்... அதை தினம் முயன்றால்... ஒரு நாளில் நிஜமாகும்...! மனமே ஓ மனமே நீ மாறிவிடு... மலையோ... அது பனியோ.. நீ மோதிவிடு...! (ஆட்டோகிராப்)

உங்களிடம் கேளுங்கள்; நீங்கள் எதற்காக நினைவுகூறப்பட விரும்புகிறீர்கள்...?
அள்ளிக்கொடுத்து வாழ்பவன் நெஞ்சம், ஆனந்த பூந்தோப்பு... வாழ்வில் நல்லவர் என்றும் கெடுவதில்லை... இது நான்குமறை தீர்ப்பு... (தர்மம் தலை காக்கும்)

ஒருபக்கம் இருநூறு முன்னூறு ஹீரோக்கள்; மறுபக்கம் பின்னுக்குத் தள்ளப்பட்டிருக்கும் நூறு கோடி மக்கள்...! இது மாற்றப்படவேண்டிய நிலவரம்; ஒவ்வொரு இந்தியனுக்குள்ளும் உறைந்து கிடக்கும் அக்னிக் குஞ்சுகள் சிறகு முளைத்து பறக்கட்டும்...!
நாடு காக்க வேண்டும் முடிந்தால் - நன்மை செய்ய வேண்டும்... கேடு செய்யும் மனதை - கண்டால் கிள்ளி வீச வேண்டும்... தமிழும் வாழ வேண்டும் - மனிதன் தரமும் வாழ வேண்டும்... அமைதி என்றும் வேண்டும் - ஆசை அளவு காண வேண்டும்... வாழ்ந்து பார்க்க வேண்டும் - அறிவில் மனிதனாக வேண்டும்... வாசல் தேடி உலகம் - உன்னை வாழ்த்தி பாட வேண்டும்... (சாந்தி)
எளிமை நேர்மை உண்மை - ஆகியவை இல்லாமல் எந்தக் காலத்திலும் உயர்வு இல்லை...
ஊருக்கென்று வாழ்ந்த நெஞ்சம் சிலைகளாகலாம்... உறவுக்கென்று விரிந்த உள்ளம் மலர்களாகலாம்... யாருக்கென்று அழதபோதும் தலைவனாகலாம்... மனம் மனம் அது கோவிலாகலாம்... மனிதன் என்பவன் தெய்வமாகலாம்... (சுமை தாங்கி)


தவறான காரியங்களை ஒரு போதும் செய்யக்கூடாது; இலக்கை நோக்கி செல்ல பலவழிகள் இருந்தாலும் நேர்மையான வழியே மிகச்சிறந்த வழி என்பதுடன், அது மட்டுமே வழியாக இருக்க வேண்டும்...
செல்லும் வழியெங்கெங்கும் பள்ளம் வரலாம்; உள்ளம் எதிர்பாராமல் வெள்ளம் வரலாம்; நேர்மை அது மாறாமல், தர்மம் அதை மீறாமல், நாளும் நடை போடுங்கள் - ஞானம் பெறலாம்... சத்தியத்தை நீங்கள் காத்திருந்தால் - சத்தியம் உங்களைக் காத்திருக்கும்... (படிக்காதவன்)
  
வாழ்க்கையில் முன்னேற மிகப்பெரிய வாய்ப்புகள் கிடைக்கும் என காத்திருக்கக்கூடாது; தற்போது என்ன இருக்கிறதோ அதை வைத்து வெற்றி பயணத்தை தொடங்க வேண்டும்...
எத்தனையோ மேடு பள்ளம் வழியிலே - உன்னை இடர வைத்து தள்ளப் பார்க்கும் குழியிலே... அத்தனையும் தாண்டி காலை முன்வையடா2... நீ அஞ்சாமல் கடமையிலே கண்வையடா... சத்தியமே லட்சியமாய் கொள்ளடா... செல்லடா... (நீலமலைத் திருடன்)

நீங்கள் சூரியனைப் போலப் பிரகாசிக்க வேண்டுமானால் - முதலில் சூரியனைப் போல எரிய வேண்டும்...
வெற்றி வேண்டுமா...? போட்டுப் பாரடா எதிர்நீச்சல்... "சர்தான் போடா தலைவிதி" என்பது வெறுங்கூச்சல்... எண்ணித்துணிந்தால் இங்கு என்ன நடக்காதது - கொஞ்சம் முயன்றால் இங்கு எது கிடைக்காதது...? (எதிர்நீச்சல்)
என்னால் முடியும்; நம்மால் முடியும்; இந்தியாவால் முடியும் - இந்த வாசகத்தை எப்போதும் நினைவில் கொள்ளுங்கள்...
நாளைய நாட்டின் தலைவனும் நீயே - நம்பிக்கை கொண்டு வருவாயே... உனக்கென ஓர் சரித்திரமே எழுதும் காலம் உண்டு - உன்னால் முடியும் - அட உன்னால் முடியும்... ஆஹா உன்னால் முடியும் தம்பி தம்பி - அட உனக்குள் இருக்கும் உன்னை நம்பி... (உன்னால் முடியும் தம்பி)


தங்களுடைய தொழிலில் சிகரத்தை எட்ட விரும்புகிறவர்களுக்குத் தேவையான அடிப்படைத் தகுதி முழுமையான பொறுப்புணர்வு... தன்னால் முடிந்த மட்டும் தனது சக்தி முழுவதையும் பயன்படுத்திப் பாடுபடும் ஆசை வந்துவிட்ட ஒருவரிடம், வேறு எந்த ஆசைக்கும் இடமிருக்காது...!
உழைக்குற நோக்கம் உறுதியாயிட்டா - கெடுக்குற நோக்கம் வளராது2... மனம் கீழும் மேலும் புரளாது... திருடாதே பாப்பா திருடாதே... வறுமை நிலைக்கு பயந்துவிடாதே - திறமை இருக்கு மறந்து விடாதே... (திருடாதே)

நீ நட்சத்திரமாக ஜொலிக்க விரும்பினால் - நீ யார் என்பது முக்கியமல்ல... உனது மனது எதை விரும்புகிறதோ - அது நிச்சயம் உன்னை வந்து சேரும்...!
திருந்தாத உள்ளங்கள் இருந்தென்ன லாபம்...? வருந்தாத உருவங்கள் பிறந்தென்ன லாபம்...? இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்...! இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்2... கண் போன போக்கிலே கால் போகலாமா...? கால் போன போக்கிலே மனம் போகலாமா...? (பணம் படைத்தவன்)
  சரியான காரியத்தை செய்ய எளிமையான வழி என்ன...?" என என்னிடம் கேட்டார்கள்... தாயின் முகத்தில் புன்னகை அரும்ப செய்யும் காரியத்தை செய்யுங்கள்... அதனை நேர்மையாகவும், கடின உழைப்புடனும் செய்யுங்கள்...
பதவி வரும்போது பணிவு வர வேண்டும், துணிவும் வரவேண்டும் தோழா... பாதை தவறாமல் பண்பு குறையாமல், பழகி வரவேண்டும் தோழா... அன்பே உன் அன்னை; அறிவே உன் தந்தை; உலகே உன் கோவில்; ஒன்றே உன் தேவன்... (தெய்வத்தாய்)

சுயசிந்தனை, ஆற்றலும் தன்னம்பிக்கையும், தன்னைத்தானே அறிந்துக் கொள்ளும் திறனும், நிறைந்த மக்களைக் கொண்டிருக்கும் தேசத்தை... எந்த தேசவிரோத அல்லது சுயநல சக்தியாலும் ஆட்டிப் படைக்க முடியாது...!
பட்டத்திலே பதவி, உயர்வதிலே இன்பம் - கிட்டுவதே இல்லை என் தோழா2... உனை ஈன்ற தாய் நாடு, உயர்வதிலே இன்பம் - உண்டாகும் என்றே சொல் என் தோழா2... (நாடோடி மன்னன்)

ஆண்டவன் சோதிப்பது எல்லோரையும் அல்ல... உன்னைப் போல சாதிக்கத் துடிக்கும் புத்திசாலிகளை மட்டுமே...!
உண்டு உண்டு என்று நம்பி காலை எடு... இங்கு உன்னைவிட்டால் பூமி ஏது கவலைவிடு... இரண்டில் ஒன்று பார்ப்பதற்கு தோளை நிமிர்த்து2... அதில் நீதி வரவில்லை எனில் வாளை நிமிர்த்து... நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா... நேரம் வரும் காத்திருந்து பாரு ராஜா... (என் அண்ணன்)


கனவு காணுங்கள்... கனவுகளிலிருந்து சிந்தனைகள் பிறக்கும்... சிந்தனைகள் செயல்களாகும்... கனவு காண்பவர்கள் அனைவரும் தோற்பதில்லை... கனவு மட்டும் காண்பவர்கள் தான் தோற்கிறார்கள்...!
கனவு மெய்ப்பட வேண்டும்; கைவசமாவது விரைவில் வேண்டும்; தனமும் இன்பமும் வேண்டும்; தரணியிலே பெருமை வேண்டும்; மனதில் உறுதி வேண்டும்... கண் திறந்திட வேண்டும்; காரியத்தில் உறுதி வேண்டும்; பெண் விடுதலை வேண்டும்; பெரிய கடவுள் காக்க வேண்டும்; மண் பயனுற வேண்டும்2... வானகமிங்கு தென்பட வேண்டும்; உண்மை நின்றிட வேண்டும்... (சிந்து பைரவி)


உன் கைரேகையைப் பார்த்து எதிர்காலத்தை நிர்ணயித்து விடாதே... ஏனென்றால்... கையே இல்லாதவனுக்கு கூட எதிர்க்காலம் உண்டு...!
ஏழை மனதை மாளிகை ஆக்கி, இரவும் பகலும் காவியம் பாடு... நாளை பொழுதை இறைவனுக்கு அளித்து, நடக்கும் வாழ்வில் அமைதியை தேடு2... உனக்கும் கீழே உள்ளவர் கோடி - நினைத்து பார்த்து நிம்மதி நாடு... (சுமை தாங்கி)
  
வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருப்பதற்கு ஒரு வழி :- அடுத்தவர்களின் வெற்றியை உங்களுடைய வெற்றியைப் போலக் கொண்டாட கற்றுக் கொள்ளுங்கள்...!
கூடும் உறவு கூட்டுறவென்று ஒன்றாய் வாழுங்கள்; கூடிய பிறகு குற்றம் காணும் கொள்கை தள்ளுங்கள்... என்றும் ஒன்றே செய்யுங்கள் - ஒன்றை நன்றே செய்யுங்கள் - நன்றும் இன்றே செய்யுங்கள்; நீங்கள் எதிலும் வெல்லுங்கள்... வீரனின் வாழ்விலே - வெற்றி மேல் வெற்றியே... தங்கங்களே; நாளை தலைவர்களே - நம் தாயும் மொழியும் கண்கள்... சிங்கங்களே; வாழும் தெய்வங்களே - நம் தேசம் காப்பவர் நீங்கள்... (என்னைப் போல் ஒருவன்)

நேர்மையாய், துணிவாய், உண்மையாய், உழைக்கிறவன் கரங்களே அழகிய கரங்கள்...! கடவுள் உறுதியளித்திருப்பது ஒவ்வொரு நாளுக்குமான சக்தியை...! உழைப்பிற்கான ஒய்வை...!! பாதைக்கான ஒளியை...!!!
தனக்கொரு கொள்கை - அதற்கொரு தலைவன்... தனக்கொரு பாதை - அதற்கொரு பயணம்2... உனக்கென வேண்டும் உணர்ந்திடு தம்பி2... உழைத்திட வேண்டும் கைகளை நம்பி... (ஆசைமுகம்)
ஒரு தேசம் ஊழலில்லாமலும், அறிவாளிகளின் தேசமாகவும் இருக்க மூன்று பேரால் மட்டுமே மாற்றத்தை ஏற்படுத்த முடியும்... தந்தை, தாய், ஆசிரியர்தான் அந்த மூன்று பேர்...
பாலூட்டும் அன்னை அவள் நடமாடும் தெய்வம்; அறிவூட்டும் தந்தை நல் வழி காட்டும் தலைவன் - துணையாகக் கொண்டு நீ நடை போடு இன்று2... உருவாகும் நல்ல எதிர்காலம் ஒன்று2... நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே - நம் நாடு என்னும் தோட்டத்திலே நாளை மலரும் முல்லைகளே... நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே... (நம் நாடு)


அறிவியலுக்கு பயம் தெரியாது; வித்தியாசமாக சிந்திக்க உங்களுக்கு துணிவிருந்தால் - அறியப்படாத விசயங்களுக்கு சவால் விடும் ஆற்றலும் உங்களுக்கு இருக்கிறது...!
ஆத்திரம் கண்ணை மறைத்திடும் போது அறிவுக்கு வேலை கொடு... உன்னை அழித்திட வந்த பகைவன் என்றாலும் - அன்புக்கு பாதை விடு2... கத்தியைத் தீட்டாதே - உந்தன் புத்தியைத் தீட்டு... கண்ணியம் தவறாதே - அதிலே திறமையைக் காட்டு... (விளக்கேற்றியவள்)

எந்த அளவிற்கு உங்களைடைய அறிவுத்திறனால் தற்போதைய நிலவரம் வரைத் தெரிந்து வைத்து இருக்கிறீர்களோ - அந்த அளவிற்குத்தான் நீங்கள் சுதந்திர மனிதர்...!
மனிதனாக வாழ்ந்திட வேணும் மனதில் வையடா - தம்பி மனதில் வையடா... வளர்ந்து வரும் உலகத்துக்கே நீ வலது கையடா - நீ வலது கையடா2... தனியுடமைக் கொடுமைகள் தீரத் தொண்டு செய்யடா - நீ தொண்டு செய்யடா2... தானா எல்லாம் மாறும் என்பது பழைய பொய்யடா - எல்லாம் பழைய பொய்யடா... (அரசிளங்குமரி)
   வானத்தைப் பாருங்கள்... நாம் தனித்து இல்லை; இந்தப் பிரபஞ்சம் முழுவதும் நம்மிடம் நட்பாக உள்ளது - கனவு காண்பவர்களுக்கும், உழைப்பவர்களுக்கும் மட்டுமே அது சிறந்தவற்றை வழங்குகிறது...!
சத்தியத்தை நாடு, சாதனையை தேடு... எத்திசையும் அதைப் பாடு...! கத்தும் கடல் கண்ணயற ஓய்வு கேட்குமா...? அந்த காட்சியை கண்ட போதிலே - மனம் கண்கள் தூங்குமா...? நெஞ்சே உன் ஆசை என்ன...? நீ நினைத்தால் ஆகாததென்ன...? இந்த பூமி... அந்த வானம்... இடி மின்னலை தாங்குவதென்ன...? (நான் போட்ட சவால்)

வேலைநாட்களில் அன்றாட கூச்சல், குழப்பம் சந்தடியெல்லாம் அடங்கியதும்; ஆற அமர சிந்தித்து; அடுத்து வரப்போகும் புத்தம் புது நாளை எதிர்கொள்வதற்கு; உன்னை நீ செம்மையாகத் தயார் செய்து கொண்டால் - எதிர்காலத்தில் நீ வெற்றிகரமான தலைவர் தான்...!
கருணை இருந்தால் வள்ளல் ஆகலாம்... கடமை இருந்தால் வீரன் ஆகலாம்... பொறுமை இருந்தால் மனிதன் ஆகலாம்... மூன்றும் இருந்தால் தலைவன் ஆகலாம் - இந்த மூன்றும் இருந்தால் தலைவன் ஆகலாம்... நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி - இந்த நாடே இருக்குது தம்பி... (பெற்றால் தான் பிள்ளையா)

வெட்டித்தனமாக இருப்பதிலும், சில்லரைத்தனமான விசயங்களிலும், மனதை அலைபாய விடக்கூடாது என்பதில் - விடாப்பிடியாக இரு...அதிகமான உணர்வதலில், ஏராளமாகக் கற்றுக் கொள்வதில், நிறைய வெளிப்படுத்துவதில் - ஆசை கொண்டிரு...
பத்துத் திங்கள் சுமந்தாளே - அவள் பெருமைப் படவேண்டும்; உன்னைப் பெற்றதனால் அவள் - மற்றவராலே போற்றப்பட வேண்டும்... கற்றவர் சபையில் உனக்காக - தனி இடமும் தர வேண்டும்; உன் கண்ணில் ஒரு துளி நீர் வந்தாலும் - உலகம் அழ வேண்டும்... நான் ஏன் பிறந்தேன் ? - நாட்டுக்கு நலம் என்ன புரிந்தேன் ? - என்று நாளும் பொழுதும் வாழும் வரையில் - நினைத்திடு என் தோழா - நினைத்து செயல்படு என் தோழா - உடனே செயல்படு என் தோழா... (நினைத்ததை முடிப்பவன்)
எல்லாப் பறவைகளும் மழைக் காலங்களில் கூடுகளில் அடையும்; ஆனால், கழுகு, மழையைத் தவிர்க்க மேகத்துக்கு மேலாகப் பறக்கும்...!
இருட்டினில் வாழும் இதயங்களே - கொஞ்சம் வெளிச்சத்தில் வாருங்கள்... "நல்லவர் உலகம் எப்படி இருக்கும்...?" - என்பதை பாருங்கள்... "எத்தனை காலம் மனிதன் வாழ்ந்தான்....?" - என்பது கேள்வி இல்லை2... "அவன் எப்படி வாழ்ந்தான்...? - என்பதை உணர்ந்தால் வாழ்க்கையில் தோல்வியில்லை2... (நான் ஆணையிட்டால்)

கடின உழைப்பு, நேர்மைக்கு மாற்று எதுவும் இல்லை... நிச்சயமாக எதுவும் இல்லை...
கால்கள் இருக்க, கைகள் இருக்க - கவலைகள் நம்மை என்ன செய்யும் ? உழைப்பது ஒன்றே செயல் என கொண்டால்2 - நடப்பது நலமாய் நடந்துவிடும்2... எங்கே போய்விடும் காலம் ? - அது என்னையும் வாழ வைக்கும்...! நீ இதயத்தை திறந்து வைத்தால் - அது உன்னையும் வாழவைக்கும்...! (தாழம்பூ)

புதிய விஷயங்களை படைக்க வேண்டும் என இலட்சியம் உள்ளவர்களுக்கு - அவர்களது வேட்கையே ஊக்கமாக அமையும்... மற்றவர்களை தோற்கடிக்க வேண்டும் என்ற எண்ணம் தேவையில்லை...!
பொதுவுடைமைக் கொள்கை திசையெட்டும் சேர்ப்போம் - புனிதமோடு அதை எங்கள் உயிரென்று காப்போம்... இதயமெல்லாம் அன்பு நதியினில் நனைப்போம்2 - இது எனது என்னுமோர் கொடுமையை தவிர்ப்போம்2... புதியதோர் உலகம் செய்வோம் - கெட்ட போரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம்... (பல்லாண்டு வாழ்க)

ஒரு கனவு கண்டால்.... அதை தினம் முயன்றால்...?
ஒரு நாளில் நிஜமாகும்...!

வாசித்த... ரசித்த... கேட்ட... அனைவருக்கும் நன்றிகள்...

புதிய பதிவுகளை பெறுதல் :


தொடர்புடைய எண்ணங்களின் வண்ணங்கள் சில :


முகநூல் மூலம் கருத்துக்களை பகிர :

கருத்துகள்

  1. DD... கலாம் மொழிகளை விட, உங்கள் தொழில் நுட்பம்தான் கண்ணில் நிற்கிறது. மனதில் நிற்கிறது. பொருத்தமான பாடல் தேர்வும் டாப்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஸ்ரீராம் சார் அவர்களுக்கு : மூன்றாம் சுழி அப்பாதுரை ஐயா அவர்களின் "TMS" பதிவு ஞாபகம் இருக்கும் என்று நினைக்கிறேன்... அப்பதிவும் ஒரு தூண்டுதல்... கூடுதலாக இணைத்தது, வழக்கம் போல் பாடல் வரிகள் தெரியுமாறு தொழிற்நுட்பம்...!

      27 பாடல்களின் வரிகளில் "KALAM" Play Button பதில் 27 நட்சத்திரங்கள் மின்னுவது போல செய்யலாம் என்றிருந்தேன்... இருந்தாலும் பாடல் வரிகள் கேட்பதில் இருக்கும் உற்சாகத்தால் இதுவே திருப்தி...! இதுவரை வெளியிட்ட பதிவுகளிலே அதிக முறை "Preview" பார்த்தது இந்த பதிவு தான்... சிரமம் அதை விட... பதிவில் கொடுத்துள்ள குறளே துணை....! நன்றி...

      நீக்கு
  2. வாசித்து, ரசித்து, கேட்டு மகிழ்ந்தேன் ! நன்றி !!

    பதிலளிநீக்கு
  3. திண்டுக்கல்லார் வழி தனி வழி
    கலாம் பற்றி உங்கள் புகழுரைகள்
    எல்லாம் அருமை அருமை அருமை
    புதுமை புதுமை. பாராட்டுகள்

    ஒரு சிறு திருத்தம்- நூறு கோடி என்று இருக்க வேண்டும். ஒரு பாடலில் ஆனால் "நாறு "என்று உள்ளது அதை சரி செய்யவும்


    எனினும் உண்மையை மறைக்க முடியுமா?

    அது உங்கள் பாடலில் வெளிப்பட்டுவிட்டது

    நம் நாடு நாறிக் கொண்டு தானே இருக்கிறது

    அயோக்கியர்கள் கையிலும் நேர்மையற்ற அரசியல் வாதிகள் கையிலும் சிக்கி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Pattabi Raman ஐயா அவர்களுக்கு : கவனிக்கவே இல்லை... திருத்தி விட்டேன்... நன்றி ஐயா...

      நீக்கு
  4. அருமையான தொகுப்பு. வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  5. இக் குறள் ஒன்று போதும்
    கலாம்அவர்களின் வெற்றிப் பாதையை
    நமக்குச் சுட்டிக்காட்ட
    தங்களின் பாணியில்
    கலாம் நினைவுகள் அருமை ஐயா
    நன்றி
    தம +1

    பதிலளிநீக்கு
  6. தொழில்நுட்பமே உன் பெயர்தான் திண்டுக்கல் தனபாலனா? உங்களுக்கு நிகர் நீங்களே. அதற்குத் தகுந்தாற்போல நல்ல பொருண்மையைத்தேர்ந்தெடுத்துள்ளீர்கள். நன்றி.

    பதிலளிநீக்கு
  7. fantastic.
    really a u r a true heir to Abdul Kalam Sir.

    subbu thatha.
    tamil software does not work.

    பதிலளிநீக்கு
  8. கலாம் என்ற பெயரிலேயே அவரது பொன் மொழிகள் அதற்கேற்ற பாடல்கள்.. அருமை டிடி! சுமைதாங்கி பாடலில் "கலாம்" ...

    அவருக்குப் பிடித்த இந்தத் திருக்குறளைத்தான் குழந்தைகளைக் காணும் போதேலாம் அதன் அர்த்தத்தைச் சொல்லி வந்தார்....துன்பங்களைத் தகர்த்தெறிந்து சாதனை செய்வதைத்தான் அறிவுறுத்தி வந்தார்...கனவு மெய்ப்பட நம்மால் இயன்ற சிறிதளவேனும் மெய்ப்பட வைப்போம்...

    உங்கள் பதிவு அருமை டிடி...உங்கள் தொழில்நுட்பம் மேலோங்கிப் பளிச்சிடுகின்றது இதில்...

    பதிலளிநீக்கு
  9. பிரமிக்க வைக்கிறது உங்கள் உழைப்பு..... வாழ்த்துகள்.

    சிறப்பான அஞ்சலி.

    பதிலளிநீக்கு
  10. வணக்கம் நண்பரே புதுமையாக இருந்தது பதிவின் முறை என்ன சிறியதாக இருக்கிறதே என்று நினைத்தேன் பிறகுதான் தெரிந்தது

    எனக்கு சுட்டியைக் கொண்டு போனால் பொன்.தனபாலனின் பொன் மொழிகள் தெரியவில்லையே ? பாடல் கேட்டேன் அருமை நண்பரே
    கலாமுக்கு பிடித்த குறள் அவர் அடிக்கடி மேடைகளில் பேதும்பொழுது குறிப்பிடபவார்

    பச்சை வர்ணத்தில் KALAM அருமை

    பதிலளிநீக்கு
  11. கலாம் அவர்களின் பொன்மொழிகளும், அதற்கேற்ற பாடல்களும் அருமை. கலாம் அவர்களுக்கு பிடித்த குறள் அருமை.
    தொழில் நுட்பம் வியக்க வைக்கிறது. வாழ்த்துக்கள்.
    கலாம் அவர்களுக்கு நல்ல அஞ்சலி.

    பதிலளிநீக்கு
  12. ஒரு காலத்தில் DD என்றால் (சில வருடங்களுக்கு முன்) தேசிய தொலைக்காட்சி மட்டுமே என அறிந்திருந்த பாமரன் நான்.

    இன்று DD என்றால் தூர் தர்சன் மட்டுமல்ல

    (கட்டை விரலை அல்ல, நன்றி எனும் சொல்லை கூட எதிர் நோக்காத) நவீன துரோனாச்சாரியார் தான் DD.

    அய்யா கலாம் அவர்களுக்கு தங்கள் மொழியில் நன்றி சொல்லியுள்ளீர்கள்.

    நான் என் மொழியில் சொல்ல முயல்கிறேன்.....

    கண்களில் நீர்... அடைத்ததால்
    ஒன்றும் தோன்றவில்லை

    இருப்பினும்
    கண்களில் நீர்... அடைந்ததால்
    மனம் நெகிழ்ந்தது

    நீர்... அடைந்த கண்களுடனும்

    சொல்கிறேன்

    நன்றி

    நீர்... எதிர்பார்க்காத போதும்..

    பதிலளிநீக்கு
  13. மிகப் பபனுள்ள, மிகவும் அழகான அமைப்புள்ள, பொருத்தமான பாடல்கள் அமைந்துள்ள அழகான பதிவு. இந்த வரலாற்றுப் பதிவுக்கு என் ஆத்மார்த்தமான வாழ்த்துகளும் நன்றிகளும்.

    பதிலளிநீக்கு
  14. எத்தனை அருமையான அழகான பதிவு!..

    பிரமிப்பாக இருக்கின்றது.. நல்வாழ்த்துக்கள்!..

    பதிலளிநீக்கு
  15. தங்கள் பதிவென்றாலே இன்றென்ன புதுமை என்று ஆவலுடன் வருகிறோம் தொடருங்கள் சகோ. வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  16. அருமையான தொழில் நுடபத்தோடு கூடிய இனிய பதிவு. வியக்கவைக்கும் பதிவுகள். நன்றி ! வாழ்த்துக்கள் ...!

    பதிலளிநீக்கு
  17. வணக்கம் டிடி சார்,
    பிரமாண்டம் சில நபர்களின் திரைப்படம் உருவகிக்கப்படும், அதுபோல் வலையில் தங்கள் தளம் பிரமாண்டம்,,,,,,,,,,,
    அருமையான குறள் விளக்கம்,
    அதனினும் தங்கள் தொகுப்பும் அருமை,
    வாழ்த்துக்கள் டிடி.
    நன்றி.

    பதிலளிநீக்கு
  18. அன்புள்ள டிடிக்கு பிரமித்துப் போய்விட்டேன் கணினியை சரியாகக் கூட உபயோகிக்கக்கூடத் தெரியாத என் போன்றோர் வேறு எப்படி ரியாக்ட் செய்யமுடியும்.? வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  19. மறைந்த மாமேதை கலாம் என்றே வருமாறு அப்பவே பாடல் இயற்றிவிட்டார்களே!...
    “மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...” நீங்கள் அதைத்தேடி இணைப்பிலிட்டுள்ளதைக் கண்டு கண்கள் பனித்தன சகோ!..

    தேர்ந்தெடுத்த பாடல்களும் அதனோடு தொடர்புபட்ட வரிகளும்
    மேலோங்கிய தொழில் நுட்பமும் அற்புதம் சகோ!

    போற்றப் பட வேண்டியவர் நீங்கள்!
    உளமார்ந்த வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  20. ஒவ்வொரு பொன்மொழியும் வைரம்! அதற்கேற்ற பாடல் தேர்வும்! தொழில்நுட்ப அழகூட்டலும் உங்களின் உழைப்பில் வைரத்தை விட உயர்வாய் மினுமினுக்கிறது. ஒவ்வொரு பதிவையும் எழுத தாங்கள் நிறைய உழைப்பதும் புரிகின்றது! அருமையான எக்காலத்திலும் நினைவில் நிற்கக் கூடிய பதிவு! நன்றி! வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  21. தொழில் நுட்பம் சிந்தனைக்கு வாழ்த்துகள்
    மிக மிக நன்று.

    பதிலளிநீக்கு
  22. அன்பின் தி.தனபாலன் அவர்கட்கு,

    தங்களிடமிருந்து 'கலாம் அய்யாவிற்கு அஞ்சலியாக' இப்படியொரு பதிவை எதிர்பார்த்திருந்தேன்.
    அவரது பொன்மொழி முத்துக்களை அவரது பெயரிலேயே கோர்த்து அத்தோடு இணைத்து 'தத்துவ முத்துக்களையும்' சேர்த்து மாலையாக சமர்ப்பித்திருப்பது உன்னத மனிதருக்கான ஒப்பற்ற அர்ப்பணம்.
    கலாம் ஐயா அவர்களது படச்சட்டம் கூட புதுமையாக இருக்கிறது.
    தங்களது இந்த அஞ்சலி தனித்துவமானது. தன்னிகரற்றது.

    அன்புடன்
    ஜெயஸ்ரீ ஷங்கர்.

    பதிலளிநீக்கு
  23. சிறந்த பதிவு. வாழ்த்துகள் சார்..!

    பதிலளிநீக்கு
  24. மிகவும் வித்தியாசமாக சிந்தித்து செயல்படுகின்றீர்கள். அருமை. மேலும் சிறக்க வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  25. அருமையான குறளும் பாடலும் தொழில்நுட்பம் வியக்க வைக்கின்றது.மனிதன் என்பவன் தெய்வமாக பாடல் ரசித்தேன்

    பதிலளிநீக்கு
  26. வணக்கம்.

    உங்களின் தொழில் நுட்ப அறிவும் வாசிப்பும் ஒரு சேர வியப்பூட்டுகின்றன.

    ஒவ்வொரு முறையும்,

    “கற்றதெலாம் எற்றே இவர்க்கு முன் என்று” என்று கருத்தழிந்துதான் போகிறேன்.

    நன்றி.

    பதிலளிநீக்கு
  27. தங்களின் தொழில் நுட்பம் வாயிலான இப்பதிவு கலாம் அவர்களுக்கான சிறந்நததோர் அஞ்சலி!

    பதிலளிநீக்கு
  28. தங்களின் தொழில்நுட்ப அறிவை அழகாகவும் அர்த்தத்துடனும் வெளிப்படுத்தியிருக்கிறீர்கள். அதுவும் மனிதன் என்பவன் தெய்வமாகலாம் - என்ற பாடலில் கலாம் கலாம் என்று கண்ணதாசன் அன்றே எழுதியிருக்கிறார் என்பது ஒரு அரிய கண்டுபிடிப்பு. இதனைக் கொஞ்ச காலத்திற்கு முன்பே கண்டுபிடித்துச் சொல்லியிருந்தால் எப்படியும் கலாமின் பார்வைக்கே கொண்டுசென்றிருக்கலாம். நிச்சயம் ஒரு சின்னக் குழந்தையைப் போல் குதூகலித்திருப்பார் அந்த உயர்ந்த மனிதர்.
    நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி இந்த நாடே இருக்குது தம்பி- அறுபதுகளின் மத்தியில் வந்த எம்ஜிஆர் படத்துப் பாடல். தவறாக மகாதேவி படத்தின் பாடல் என்று வந்திருக்கிறது. மகாதேவி கண்ணதாசன் எழுதியது என்று நினைக்கிறேன். மேற்கண்ட பாடல் வாலி எழுதியது. கொஞ்சம் பார்த்துத் திருத்திவிடுங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Amudhavan ஐயா அவர்களுக்கு : திருத்தி விட்டேன்... படம் : பெற்றால் தான் பிள்ளையா... நன்றி...

      நீக்கு
  29. கர்சாரை கொண்டு செல்லும் போது நீங்கள் குறிப்பிட்டபடி எழுத்துக்கள் (பழமொழிகள்) தெரியவில்லையே..

    ஒரு வேளை எனது கம்ப்யூட்டரில் கோளாரோ?

    அனைவராலும் உங்களது இந்தப் பதிவை ரசிக்க முடிகிறதோ..? வழக்கமாக ஒன்றிப்போய் படிப்பேன். ஆனால் இப்போது தொழில் நுட்பத்தை மட்டுமே உணர முடிகிகிறது.

    வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. System + Browser-யை சுத்தம் செய்து பாருங்களேன்... (1) Go to http://www.filehippo.com (இங்கேயும் சொடுக்கலாம்), (2) Click CCleaner under POPULAR heading, (3) Click Download Latest Version, (4) Run CCleaner

      Download செய்ய இங்கேயும் நேரடியாக செல்லலாம் : http://www.piriform.com/ccleaner/download/standard (இங்கேயும் சொடுக்கலாம்)

      வாரம் அல்லது மாதம் ஒருமுறையாவது செய்வது கணினிக்கு நல்லது... நன்றி...

      நீக்கு
  30. எப்படித்தான் இப்படித்தேடிப்பிடித்துத் தொகுக்கிறீர்களோ! அருமையிலும் அருமை

    பதிலளிநீக்கு
  31. வலையுலக மந்திரவாதி டிடியின் தொழில் நுட்ப மாயா ஜாலம் கலக்கல்

    பதிலளிநீக்கு
  32. கலாமின் பொன்மொழிகள் அதற்கேற்ற பாடல்கள் எனப் புதுவிதமாய்த் புதுவித தொழில்நுட்பத்துடன் தொகுத்துக் கொடுத்துள்ளீர்கள். பிரமிப்பாய் இருக்கிறது. பாராட்டுக்கள் தனபாலன் சார்!

    பதிலளிநீக்கு
  33. நல்ல பாடல்கள் மூலம் திரு கலாமின் அறிவுரைகளை நினைவு கொள்ளும் படியாக ஒரு பதிவு. டிடி யின் அப்துல் கலாம் ஸ்பெஷல்! எல்லாப் பாடல்களும் கேட்க கேட்க அலுக்காதவை. சொற்சுவை, பொருட்சுவை பொதிந்தவை. பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  34. கலாம் அவர்களுக்கு பாடல் அஞ்சலி அருமை

    பதிலளிநீக்கு

  35. அன்புள்ள வலைச்சித்தர் அவர்களுக்கு,
    வணக்கம்.
    ‘ஒரு கனவு கண்டால்...’
    மறைந்த மாமேதை அப்துல் கலாம் அய்யா அவர்களின் அறிவுரைகளான பொன்மொழிகளை...அறியச் செய்த்தோடு மட்டுமல்லாமல்... அவற்றிற்கு மிகவும் பொருந்தும் படியாக அழகாகப் பாடி நடித்த நடிகர்கள் எம்.ஜி.ஆர்., சிவாஜி, ஜெமினி, கமல், ரஜினி, நாகேஷ், சிவக்குமார், ஆதித்யன், சேரன் போன்றவர்களின் திரைப்படத்தின் பாடல் வரிகளை மேற்கோள் காட்டி...பாடலைப் பாடியதை இசையுடன் இனிமையாய்க் கேட்டு அனைவரையும் இரசிக்க வைத்ததை பாராட்ட வார்த்தைகள் இல்லை!
    மெய் மறந்து ஒன்றிப்போனோம்.
    ‘ஒரு கனவு கண்டால்... அதை தினம் முயன்றால்...’ தங்களின் வலைத்தளத்தில் பூத்த குறிஞ்சி மலர்.
    அருமையிலும் அருமை! வலைச்சித்தரின் இந்தப் பெருமை
    வானம் உள்ளவரை பேசப்படும்!!
    கலாம் காலமாவதற்கு முன்னால் இதைச்செய்து... அவரைப் பார்க்க வைத்திருந்தால் மிகவும் உள்ளம் மகிழ்ந்திருப்பார்.
    தங்களை உச்சிமுகர்ந்து மெச்சி போற்றி வாழ்த்தி இருப்பார் என்பதில் சந்தேகமில்லை.
    அன்னாருக்குத் தங்களின் இதயப்பூர்வமான அஞ்சலி...!
    அவரது ஆத்மா கேட்டு மகிழும்...!
    மிக்க நன்றி.
    த.ம.21.
    -மாறாத அன்புடன்,
    மணவை ஜேம்ஸ்.


    பதிலளிநீக்கு
  36. கலாம் அவர்களின் ஒவ்வொரு பொன் மொழிக்கும் பொருத்தமான ஏற்கனவே தமிழ் மக்களின் நெஞ்சங்களில் நிறைந்திருக்கும் சினிமா பாடல்களை போட்டு அசத்தியிருக்கிறீர்கள் . பிரமாதம். ஒரு திருத்தம் . ' இருட்டினில் வாழும் மனிதர்களே .. கொஞ்சம் வெளிச்சத்தில் வாருங்கள் ' என்ற பாடல் ' நான் ஆணையிட்டால் ' என்ற திரைபடத்தில் இடம் பெற்ற பாடல் . ' நான் ஏன் பிறந்தேன் ' அல்ல.

    பதிலளிநீக்கு
  37. சித்து வேலைகளை வியந்து பார்த்து வாசித்து மகிழ்ந்தேன் :)

    பதிலளிநீக்கு
  38. I was expecting your post about Kalam sir. Superb lines with nice work!! Thank you Balan sir!

    பதிலளிநீக்கு
  39. ஆஹா... அண்ணா...
    பிளே பட்டனில் 'கலாம்'
    கலாம் வரிகள்... உங்கள் விளக்கம் எப்பவும் போல் பாடலாய்...
    ரசிக்க... கேட்க... இனித்தது பகிர்வு.
    ரொம்பப் பொறுமை அண்ணா...
    தொழில் நுட்பத்தில் கலக்கிட்டீங்க...
    இன்னொன்னு சொல்ல மறந்துட்டேன்...
    கலாம் அவர்களின் வரிகளுக்கு பொருத்தமான பாடல்கள் தேர்வு.
    அருமை... அருமை அண்ணா....

    பதிலளிநீக்கு
  40. மலைததேன்.. விளித்தேன்...என்ன சொல்வதென்று திகைத்தேன்

    பதிலளிநீக்கு
  41. அட்டகாசம்...கலாம் அவர்களின் பொன்மொழிகளோடு பாடல்வரிகளும் மனம் அமர்ந்துகொண்டன. பாராட்டுகளும் நன்றியும் தனபாலன்.

    பதிலளிநீக்கு
  42. உங்க பாணியிலே சிறப்பா சொல்லி இருக்கீங்க நண்பரே

    பதிலளிநீக்கு
  43. திரு கலாம் அவர்களின் பொன் மொழிக்கு எடுத்துக்காட்டாக இத்தனை பாடல்களா? மிக மிக அருமை. அதிலும் 15 பாடல்கள் திரு T.M.S அவர்கள் திரு எம்.ஜி‌.ஆர் அவர்களுடைய படங்களுக்கு பாடிய பாடல்களாய் இருந்தது ஆச்சரியம். வாழ்த்துக்களும் பாராட்டுகளும்.

    பதிலளிநீக்கு
  44. பொன்மொழிகளை, உங்களது தொழில்நுட்ப மொழியுடன் ரசித்தோம். பிரமித்துப்போனோம்.நன்றி.

    பதிலளிநீக்கு
  45. தொழில் நுட்பம் , பொருளடக்கம் இரண்டுமே சூப்பர் .
    என்னை மாதிரி தொழில் நுட்பவிவரம் தெரியாதவர்களுக்கு கிளாசே எடுக்கலாம்.

    பதிலளிநீக்கு
  46. 'சுமைதாங்கி' படத்தின் பாடல்வரிகள் பொன்மொழிக்குப் பொருத்தமானதோடு மட்டும் இல்லாமல், "கலாம்" என முடிவதையும் பார்த்தபோது மிகவும் ரசித்தேன் ! அருமை !

    பதிலளிநீக்கு
  47. வணக்கம்
    அண்ணா
    சொல்லிய விதம் சிறப்பாக உள்ளது பகிர்வுக்கு நன்றி

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  48. வணக்கம் சகோதரரே.

    திரு. கலாம் அவர்களின் பொன்மொழிகளையும், தங்களது உழைப்பின் மகத்துவத்தையும் கண்டு பிரமித்தேன். பதிவுக்கு பதிவு தங்களது புதுமைகள் ஆச்சரியமளிக்கின்றன.அருமையான பதிவு.தங்களது புதுமையான உழைப்புகளுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்.
    பகிர்வுக்கு நன்றி.

    தங்களுக்கு என் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்.

    நன்றியுடன்,
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  49. அருமையான மனிதருக்கு பொருத்தமான பாடல்கள்.
    புதுமையான முறையில் அதை பதிவிட்டுள்ளீர்கள். பாராட்டுகள்.--

    பதிலளிநீக்கு
  50. எனக்கு அதிகமாக சினிமா பாடல்கள் தெரியாது. ஆனால் அவரின் பொன்மொழிக்கேற்ப பாடல்கள் மனதைவிட்டு அகல மறுக்கிறது. எவ்வளவு அழகாக. தேர்வுசெய்து பொருத்தம் அமைத்து ஆச்சரியமாக இருக்கிறது. நல்ல வரம் வாங்கிக்கொண்டு வந்துள்ளீர்கள். அதனால்தான் முடிகிறது. அன்புப் பாராட்டுகள். அன்புடன்

    பதிலளிநீக்கு
  51. அசந்துட்டேன் பார்த்துட்டு. பொறுமையாக நேரம் எடுத்துக் கொண்டு அருமையான தொழில் நுட்பத்துடன் பதிந்திருப்பதற்கு வாழ்த்துகள். பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  52. மாமனிதருக்கு மரியாதை செலுத்தும் மிகச்சிறந்த பதிவு சகோதரா... அருமை.

    பதிலளிநீக்கு
  53. மேதகு அப்துல்கலாம் அவர்களின் பொன்மொழிகளை அவற்றிற்கேற்ற திரைஇசைப் பாடல் வரிகளுடன் தொகுத்து வழங்கிய தங்களின் கலைநயம் தோய்ந்த தொழில்நுட்பத் திறன்களுக்கு நெஞ்சம் நிறைந்த பாராட்டுகள். பல மேடைப் பேச்சு வல்லார்க்கு இது மிகப்பயனுள்ளதாக இருக்கும் .

    பதிலளிநீக்கு
  54. எப்படி உங்களால் இப்படிப் பொருத்தமான பாடல்களை நினைவு படுத்திப் பதிவில் இணைக்க முடிகிறதோ!! பிரமாதம் அண்ணா..
    பழம்பாடல்களும் புதியநுட்பமும் என்று கலக்குங்கள்.. :)

    பதிலளிநீக்கு
  55. பாடல்களை மீண்டும் கேட்டேன் ஜி அருமை.

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென்று இடித்தற் பொருட்டு. (குறள் 784)

நட்புச் செய்துகொள்வது நண்பரோடு சிரித்து மகிழ்வதற்காக மட்டும் அல்ல. மிகுதியாகத் தவறு செய்யும்போது, அவரைக் கடிந்து திருத்துவதற்கே ஆகும்.