🏠 வணக்கம் காப்பகம் நன்றி

தேடல் 🔎



புதிய பதிவுகளை பெற ✉



சாதாரணமானவர்களால் தான் சாதனையே...!

பூப்பூவா பூத்திருக்கு பூமியிலே ஆயிரம் பூ... பூவிலே சிறந்த பூ என்ன பூ...?

© குலவிளக்கு கண்ணதாசன் K.V.மகாதேவன் 🎤 P.சுசீலா @ 1969 ⟫

அன்பு தான்... வேறென்ன...? "நம்மையும் வாட விடாமல், தானும் வாடாமல் வட்டியின் மூலம் வளரும் பூ + முதுமையிலும் உதவும் சிறந்த பூ - சேமிப்பு" அப்படின்னு கலைவாணர் சொன்னது...! நீ என்னப்பு சொல்றே...?


நீ இதழ்கள் என்றால் நான் முத்தமா ? புன்னகையா ? ஆஆ... நீ அழகு என்றால் நான் கவியா ? ஓவியனா ? உன் சமையலறையில் - நான் உப்பா ? சர்க்கரையா ? நீ படிக்கும் அறையில் நான் கண்களா ? புத்தகமா ? உப்பினால் விளையும் நன்மைகள் என்ன...?

© தில் கபிலன் வித்யாசாகர் 🎤 P.உன்னி கிருஷ்ணன், சுஜாதா மோகன் @ 2001 ⟫

மனசாட்சி, இன்னைக்கு என்ன உப்பு சப்பில்லாத கேள்வியோடு வந்திருக்கே...! எதுவானாலும் அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சுகிறதை நம்ம ஐயன் உப்பு மூலமே சொல்லிட்டார் தெரியுமா...? உப்பமைந் தற்றாற் புலவி அதுசிறிது மிக்கற்றால் நீள விடல் (1302)

அவ்வளவு தான்...! பதிவு முடிஞ்சி போச்சி...! அளவறிந்து வாழாதான் வாழ்க்கை உளபோல இல்லாகித் தோன்றாக் கெடும்... (479) என்ன நண்பர்களே, சரி தானே...? தங்களின் கருத்து என்ன...? அடேய்... நானென்ன உப்பினால் விளையும் தீமைகளா கேட்டேன்...? சரி... இந்த கோபம் வந்தா "உப்பு போட்டுத் தானே சாப்பிடறே...?" "ஏன் இப்படி மழுமட்டையான கேள்வி எல்லாம் கேட்கிறே...?" அப்படின்னு சொல்றாங்க ஏன்...? அவங்க உப்பும் உரப்பும் கொஞ்சம் ஜாஸ்தியா சேர்த்துகுவாங்களோ...?

இதுவும் சின்ன எரிச்சலால் வர்ற ம.ம கேள்வியாத்தான் தோணுது...! ஹா... ஹா... நாக்கு செத்து போச்சின்னா இப்படித்தான் கேள்விகள் பிறக்கும்...!

சரி தான்...! உப்பைத் தின்னவன் தண்ணீர் குடிப்பான் சரி தான்...! சிலர் உப்பு போட்டு சாப்பிடுறாங்க... சிலர் போடாம... ஏதாவது வித்தியாசம் இருக்கா...?

அது இளமையில் ருசிக்கும் அளவு பொறுத்து...! ம்... ஒரு நாளைக்கு ஒருத்தருக்கு 10 கிராம் உப்பு மட்டுமே தேவையாம்...! முடியுமா...?

உப்பே சாப்பிடாதவர்களுக்கு வெயிலும் மழையும் பனியும் குளிரும் - எதுவுமே உடலுக்கு இதம் தானாம்...! இது முடியுமா...? அதனாலே "மிகினும் குறையினும் நோயே" என்கிறேன்... அதாவது அளவுக்கு அதிகமான பொருளும் சொத்தும் செய்கிற வேலைப் போலத்தான் உப்பு...

வேணாம்... வேறு சிந்தனையைக் கிளப்பாதே...! உப்பு என்பது கடலில் விளையும் ஒரு சுவை பொருள்... அதை அளவோடு எந்த உணவோடு சேர்த்தாலும் சுவை கூடும்... சேர்க்காவிட்டால் சுவை குன்றும்... உணவில் உப்பு சேர்க்கும் பழக்கம் நம்மிடையே தொன்று தொட்டு இருந்து வரும் பழக்கம்... உப்பை வண்டிகளில் ஏற்றி ஊர் ஊராக விநியோகம் + விற்பனை செய்வதைச் சங்க இலக்கியங்களில் காண முடியும்... உப்பை 'கடல்விளை அமுதம்' என்கிறார் ஒரு சங்கப் புலவர்... அப்புறம் இன்னொரு புலவர்...

நிறுத்து ஐயா நிறுத்து...! நான் உப்பின் வரலாற்றையா கேட்டேன்...? உப்பு போட்டு சாப்பிட்டாத்தான் மனிசனுக்குச் சூடு சொரணை இருக்கும்ன்னு சொல்றாங்களே... ஏன் சர்க்கரையைப் போட்டுச் சாப்பிட்டா சூடு சொரணை வராதா...?

வருமே, உப்பின தொப்பையும் வருமே...! உப்பு என்றால் கடலில் விளையும் பொருள் என்று நாம் நினைக்கிறோம்... ஆனால் உப்பு என்றால் சுவை என்று ஓர் அர்த்தம் இருக்கு..! எல்லாவகைச் சுவைகளுமே நாம் உப்பைச் சேர்த்துத் தான் தமிழில் கூறுகிறோம் என்பது தெரியுமா...? இனிப்பு, கசப்பு, துவர்ப்பு, உவர்ப்பு, உரப்பு - இப்படிப் பல சுவைகளில் உப்பு சேர்ந்திருப்பதைக் காணலாம்...! சுவை பொருட்கள் பல என்றாலும் உப்பிற்கென்று தனிச் சிறப்பு உண்டு... உப்பு சேர்க்கப்படாத உணவுப் பொருட்களே இல்லை என்றே சொல்லலாம்... அதை அளவோடு உணவில் சேர்த்தால் எந்தச் சுவையும் கூடும்... அளவுக்கு மீறி உப்பு சேர்க்கப்பட்டாலோ அல்லது உப்பே சேர்க்கப்படாமல் இருந்தாலோ, அந்தப் பொருள் உண்பதற்குத் தகுதியற்ற பொருள் என்பதை, உவப்பான கதை ஒன்னு சொல்றேன் கேளு...! உலகின் எத்தனை சுவைகள் இருந்தாலும் உப்பு சுவைக்கு ஈடுயிணை கிடையாது என்பதையும் தெரிஞ்சிக்கலாம்...!

ஓர் அரசனுக்கு 3 பிள்ளைகள்... தன்னுடைய மகன்கள் தன்னை எந்தளவு நேசிக்கிறார்கள் என்பதை அறிய விரும்பி, தன் முதல் மகனை அழைத்து, "நீ எந்தளவு நேசிக்கிறாய்...? என்று கேட்க, "இந்த உலகிலுள்ள எல்லாப் பொருட்களையும் விட அதிகமாக நேசிக்கிறேன்" என்றான்... அக மகிழ்ந்தார் அரசன்... "இந்த உலகிலுள்ள பொருட்கள், உயிரினங்கள், அனைத்தையும் விட அதிகமாக நேசிக்கிறேன்" என்றான் இரண்டாவது மகன்... அதற்கும் மகிழ்ந்த அரசன், "இந்த உலகிலுள்ள உப்பை விட அதிகமாக நேசிக்கிறேன்" என்று மூன்றாவது மகன் சொன்னதைக் கேட்டு அதிர்ந்தார்... இருமகன்களும் விலை மதிக்க முடியாத பொருட்கள், உயிரினங்களை விட என்று சொல்லும் போது, இவன் சாதாரண உப்பைக் காட்டிலும் என்று சொல்கிறானே எனக் கோபப்பட்ட அரசன், இளைய மகனைச் சிறையிலடைக்கச் சொன்னான்...

இளைய இளவரசன் மீது அன்பு அதிகம் கொண்ட தலைமை சமையல்காரன் சிறையில் சென்று வருத்தம் தெரிவித்தான்... "கவலைப்படாதே... நான் சிறையிலிருந்து வெளியில் வருவது உன் கையில் தான் இருக்கிறது... இன்றிலிருந்து மூன்று நாளைக்கு எந்தச் சமையிலிலும் உப்பு சேர்க்காதே... பிறகு என்ன நடக்கிறது பார்..." என்று கூறி அனுப்பினான்...

அரசன் உட்பட அரண்மனையிலுள்ள அனைவரும் உப்பில்லா உணவைச் சாப்பிட்டு, உணவில் ஏதோ குறைகிறதே என்று பரபரப்பாகி விட்டார்கள்... இறுதியில் சமையல்காரன், "இந்த உணவில் எல்லா சுவைகளும் சரியாகச் சேர்க்கப்பட்டுள்ளன... ஆனால் உப்பு மட்டும் சேர்க்கப்படவில்லை... எல்லா சுவைகளும் இருந்தாலும் உப்பு சேர்க்கப்படாததால், உணவு எந்த வித பயன்பாடும் இல்லாதது போல் ஆகி விட்டது" என்றான்... அப்போது தான் உப்பின் சிறப்பை உணர்ந்த அரசன், மகனை விடுவித்துப் பாராட்டினான்...!

நன்றி = உப்பிட்டவரை உள்ளளவும் நினை... இன்றைய மனிதனுக்கு வேண்டிய உப்பு எது...? - பதிவின் தலைப்பும் சரி தானே மனசாட்சி...?

வேண்டிய உப்பு சிரிப்பு தான்... ஆனா, தலைப்பை மாத்து...! உப்புசப்பில்லாமல் முடிக்கக் கூடாது...! உப்பு-சாதாரணப் பொருள் தான்... பல வேளைகளில் / பல வேலைகளில் வாழ்க்கையில் சாதாரணமானவர்களால் தான் பல உன்னதங்கள் நடக்குதுன்னு சொல்லு...



© சாமுராய் வைரமுத்து ஹாரிஸ் ஜயராஜ் ஹரிஹரன், திப்பு @ 2002 ⟫

உப்புக் கடலோடு மேகம் உற்பத்தி ஆனாலும் - உப்புத் தண்ணீரை மேகம் ஒரு போதும் சிந்தாது... மலையில் விழுந்தாலும் சூரியன் மரித்துப் போவதில்லை... நிலவுக்கு ஒளியூட்டி தன்னை நீட்டித்துக் கொள்கிறதே...! மேகமாய் நானும் மாறேனோ...? அதன் மேன்மை குணங்கள் காண்பேனோ...? சூரியன் போலவே மாறேனோ...? என் ஜோதியில் உலகை ஆள்வேனோ...? ஜனனம் மரணம் அறியா வண்ணம் - நானும் மழைத் துளி ஆவேனோ...?

தங்களின் கருத்து என்ன நண்பர்களே...?

புதிய பதிவுகளை பெறுதல் :


தொடர்புடைய எண்ணங்களின் வண்ணங்கள் சில :


முகநூல் மூலம் கருத்துக்களை பகிர :

கருத்துகள்

  1. உப்பைப் பற்றிய உப்பான கருத்துகளை அறிந்தோம்.

    பதிலளிநீக்கு
  2. வணக்கம்
    அண்ணா.
    நல்ல தலைப்பு அண்ணா.. ஆனால் எல்லோரிம் இந்த வரியை உச்சரிப்பார்கள் என்றால் எவ்வளவு பிரச்சினைகள் குறையும் அருமையாக விளக்கியுள்ளீர்கள் பகிர்வுக்கு நன்றி த.ம2
    என்பக்கம் கவிதையாக வாருங்கள் அன்புடன்ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: ஜீவநதி இதழ்லே:
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  3. எப்பவுமே உங்கள் பதிவு உபொபு சப்பில்லாமல் இருக்காதே டிடி! இது மட்டும் எப்படி மிஸ்ஸாகும்!

    'உப்பில்லாப் பண்டம் குப்பையிலே, உப்புள்ள பண்டம் தொப்பையிலே' என்று வி கே ஆரின் பொன்மொழி நினைவுக்கு வருகிறது!

    வழக்கம்போல அருமை.

    பதிலளிநீக்கு
  4. உப்பின் சிறப்பை உவப்பாக உரைத்தீர்கள்...

    பதிலளிநீக்கு
  5. அளவான உப்போடு கூடிய பதிவு. அதே சமயம் நல்ல தத்துவக் கருத்துக்களும் உங்களது பாணியில் வழக்கம் போல் அருமை.

    பதிலளிநீக்கு
  6. அருமை டிடி
    பள்ளிக் காலங்களில் மாங்காய்த் துண்டு வாங்கி உப்பு தொட்டுக்கொண்டு ருசித்த நினைவு வந்து விட்டது,
    உப்பிட்டவரை மட்டுமல்ல உப்பு பதிவிட்டவரையும் மறக்கமாட்டோம்

    பதிலளிநீக்கு
  7. ‘உப்பிட்டவரை உள்ளலவும் நினை.’ என்பது பழமொழி. உப்பு பற்றி பதிவிட்ட உங்களை என்றும் மறவோம். வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  8. உலகிற்கு உப்பை இரு என்றார் ஏசுபிரான் .. உப்பை பற்றிய அருமையான பதிவு. உப்பின் மிக பெரிய குணம் சுவையாக இருந்தாலும் அதன் மற்ற குணமான மற்ற உணவு பொருட்களை கெடாமல் பாதுக்காக்கும் தன்மையும் கொண்டது அல்லவா...

    பதிலளிநீக்கு
  9. எல்லா சுவைகளிலும் உப்பு இருக்கு என்பது புதிய சிந்தனை. மேலும் உப்பு எந்த அளவுக்கு முக்கியம் என்பதை அழகாகக் குறிப்பிட்டுள்ளீர்கள்.

    பதிலளிநீக்கு
  10. உப்பைப் பற்றியதோர் உப்பலான பதிவு ....

    படிக்க மனம் உவகை கொள்கிறது.

    ’சாதாரணமானவர்களால்தான் சாதனையே’
    என்ற தலைப்பு அழகு ! :)

    சாதாரணமானவர்களை, மிகச்சாதாரணமாக அனைவரும் நினைத்து வரும் உப்புடன் ஒப்பிட்டுள்ளது பெருமை + உண்மை.

    சிறுகதையும், வழக்கம்போல ஆங்காங்கே அளித்துள்ள திரைப்படப்பாடல்களும் பதிவுக்கு சரியான அளவில் உப்பு இட்ட சமையல்போல விறுவிறுப்பினை அளித்துள்ளது.

    பாராட்டுக்கள் + வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  11. இந்தக் கதையை படிக்கும் போது சிறுநீரக கோளாறினால் வாரந்தோறும் டயாலிஸ் செய்து கொள்ளும் நண்பர் நினைவுக்கு வந்தார். உப்பே எதிலும் சேர்த்துக் கொள்ளக்கூடாது என்றார். திகைத்துப் போயிட்டேன். கொஞ்சம் ருசி குறைந்தால் நாக்கு நர்த்தனமாடும். இதில் உப்பில்லா பண்டம் என்றால் குப்பை தானே என்ற எண்ணத்தை உருவாக்கியத்திற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  12. அன்புள்ள அய்யா,

    ‘ உப்பைப் குறைத்துக் கொள்ளுங்கள்... இரத்த அழுத்தத்தால் பாதிப்பு உண்டாகும்’ என்று மருத்துவர் ஆலோசனை கூறுகிறார்.

    ஒரு நாளைக்கு 10 கிராம் உப்பு தேவை... எதையும் அளவோடு இரசிப்பவன்... சாரி... அளவோடு ருசிப்பவன்....

    எதுவும் அளவுக்கு மீறினால் அமுதமும் நஞ்சு...!

    உப்பிட்டவரை மறக்க மாட்டோம்.

    -நன்றி.
    த.ம. 9.

    பதிலளிநீக்கு
  13. நான் ஒன்னுமே சொல்ல..லப்பூ....உப்புவின் அருமையும் தங்கள் வலைப்பூவின் பதிவும் அருமையோ அருமை..

    பதிலளிநீக்கு
  14. உப்புபைக் குறித்து அழகாய் விளக்கி விட்டீர்கள். சுவைகளில் உப்புசேர்ந்து முடிகிறதை நீங்கள் சொல்லித் தான் கவனித்தேன். உப்பு அளவு கோளாய் இருக்கிறது. கூடினாலும் சரி, குறைந்தாலும் சரி , சரியாக இருத்தலே...சரி. டிடி அசத்திவிட்டீர்கள்.

    தம +1

    பதிலளிநீக்கு
  15. எதையும் அளவோடு பயன்படுத்தினால் ஆபத்து இல்லை தான் . வழக்கம் போல சிறப்பான பகிர்வு.

    பதிலளிநீக்கு
  16. உங்க வலைப்பூவிலே உப்பு அதிகமாய் இருக்கு.
    நல்லா யோசிக்கிறீங்க தனபாலன்

    பதிலளிநீக்கு
  17. டிடி அருமை! உப்பில்லா பண்டம் குப்பையிலே! உப்பில்லா பண்டம் மட்டுமல்ல, வாழ்க்கையே உப்பு (சுவை என்ற பொருள்பட) சப்பில்லாம இருக்கு என்று சலித்துக் கொள்ளும் அளவு உப்பு இன்றையமையாதது என்று ஒரு வாழ்க்கைத் தத்துவத்தையே அந்த அழகான கதையின் மூலம் எடுத்துரைத்துவிட்டீர்கள்! வழக்கமான ஐயனைக் காணவில்லை?!!!! அவர் உரைக்காத வாழ்க்கையா?!!!! பிரிக்க முடியாதது எது ? ஐயனும், டிடியும்!!!!

    பதிலளிநீக்கு
  18. எல்லா சுவைகளிலும் உப்பு இருக்கிறது ... ரசித்தேன்

    பதிலளிநீக்கு
  19. உ்ப்பின் அருமையை உணர்த்தும் பதிவு அருமை

    பதிலளிநீக்கு
  20. உப்பைப் பற்றி அருமையான விளக்கமும் அதற்கு ஏற்ற கதையும் அசத்தல்!
    த ம 17

    பதிலளிநீக்கு
  21. உப்பை பற்றிய கருத்துகளை தங்கள் பதிவின் மூலம் தெரிந்து கொண்டேன். மிக அருமை.

    பதிலளிநீக்கு
  22. கருத்தான கதையுடன் உப்பின் உயர்வை அன்பின் வெளிப்பாடாக விளக்கிய அழகான பதிவு !

    உப்பின் உயர்வை விளக்கி, சாதாரண மனிதனை உப்பிடன் ஒப்பிட்டு, அன்பையும் மனசாட்சியையும் விளக்கி,மிக அருமையாக முடித்துள்ளீர்கள்.

    வாழ்க்கைக்கு தேவையான பதிவு.

    நன்றி
    சாமானியன்
    saamaaniyan.blogspot.fr

    பதிலளிநீக்கு
  23. அருமையான விளக்கங்கள் - அழகான கதை!..

    உப்புக்கு மகுடம் சூட்டியாகி விட்டது!..

    பதிலளிநீக்கு
  24. உப்பிட்டவரை உள்ளளவும் நினை, உப்பு பற்றிய பதிவிட்டவரையும் உள்ளளவும் நினை,,,,,,,,,,, அவ்வளவே ப்பூ,,,,,,,,,,,. நன்றி.

    பதிலளிநீக்கு
  25. நல்ல உவப்பான பதிவு. டிடி. எல்லா சுவையிலும் உப்பு இருப்பதை அறிந்து ஆச்சர்யப்பட்டேன்.

    காந்திஜி உப்பு யாத்திரை ( தண்டி ) போனது இந்த மாதமா. சரியான அளவோடு உப்பிடப்பட்ட பதிவு. நன்றி :)

    பதிலளிநீக்கு
  26. அருமை நண்பரே உப்பைப்பற்றிய உயர்வான சிந்தனை தோன்றிற்று
    மன்னர் கதை மிகவும் பொருத்தமானதே.
    உப்பு இல்லாத இடமே இல்லையென.....
    வலைப்பூவிவில் சொன்ன விதம் சிறப்பு.
    தொடக்கமே வந்தது சிரிப்பு.
    பதிவின் பாடல்கள் வனப்பு.
    மொத்தமாக இருந்தது இனிப்பு.
    யாராவது சொல்ல முடியுமா ? மறுப்பு

    பதிலளிநீக்கு
  27. உங்கள் மனச் சாட்சியை ரொம்பவே மதிக்கிறேன். வழமை போல் உங்கள் பாணியில் அசத்தல் பதிவு அப்பன் செத்தால் தெரியும் அப்பன் அருமை உப்பு சமைந்தால் தெரியும் உப்பின் அருமை என்று சும்மாவா சொன்னார்கள். இனிப்பும் சில சமயங்களில் உப்பு சேர்ந்தால் தான் சுவைக்கும். அருமை அருமை அனைத்தும். தொடர வாழ்த்துக்கள் ...!

    பதிலளிநீக்கு
  28. மிக அருமை.. உப்பு குறைவாக இருந்தாலும் கஷ்டம், அதிகமானாலும் கஷ்டம். அளவோட இருந்தால் சுவை..

    பதிலளிநீக்கு
  29. எங்கும் எதிலும் எப்போதும்
    உப்புக்கும் பங்குண்டு - அதை
    வெளிப்படுத்திய அழகு நடையிருக்கே - அதை
    ஆக்கிய தங்களின் பதிவை - நான்
    பாராட்டுகின்றேன்!
    தொடருங்கள்!

    பதிலளிநீக்கு
  30. சேமியா பாயசம் செய்து முடிக்கும் நேரத்தில் அதில் ஒரு நுனி விரல் தொட்டால் வரும் அளவுக்கு உப்பு சேர்த்து பாருங்கள்.

    அடடா !! என்ன சுவை !! என்ன சுவை !!

    சுப்பு தாத்தா.

    பதிலளிநீக்கு
  31. உப்பின் சாரத்தைப் பற்றி பைபிளில் கூட சொல்லியிருக்கிறார்கள் என நினைக்கிறேன்.

    எல்லாவற்றிற்கும் சுவையளிப்பது தனது சாரத்தினால் ஆனால் அந்த உப்புக்கு மற்றவை சுவையளிக்க முடியாது என்பர்.

    அளவறிந்து வாழாதான் வாழ்க்கை... அற்புதமான குறளை தகுந்த இடத்தில் பயன்படுத்தியிருக்கிறீர்கள்.

    நன்று.

    God Bless You

    பதிலளிநீக்கு
  32. அருமையான பதிவு!

    உப்பும் சரி, அன்பும் சரி அளவுக்கு மீறினால் விஷமாகி விடுகிறது. அதுவே உப்பில்லாத உணவும் அன்பு இல்லாத வாழ்க்கையும் ருசியற்று அர்த்தமற்று போகிறது!

    பதிலளிநீக்கு
  33. உப்பென்று சொன்னதற்கு மறியல் என்றதும்
    நான் ஊகித்து விட்டேன் உப்பில்லாமல்
    சாப்பாடு கொடுத்து விடுதலையாவார் என்று.
    மிக நல்ல சிநதனையும் உண்மையும் டிடி.

    பதிலளிநீக்கு
  34. உப்பு பற்றி சுவாரசியங்கள் அறிந்து கொண்டேன்.

    பதிலளிநீக்கு
  35. உப்பு அதிகமானாலும் பிரச்சனை! குறைவா இருந்தாலும் சுவை இருக்காது! அளவோடு இருந்தால் அமிர்தம்! இதை அழகாக விளக்கிய பதிவு உப்பாய்( உவப்பாய்) திகழ்ந்தது! அருமை! நன்றி!

    பதிலளிநீக்கு
  36. உப்பு பதிவிலும் சுவை கூட்டிவிட்டதே.. :) கதை அருமை!

    பதிலளிநீக்கு
  37. மிகவும் அருமையான பதிவு சகோதரா...

    பதிலளிநீக்கு
  38. உப்புப்பதிவிட்டவரை உள்ளளவும் நினைப்பேங்க....

    பதிலளிநீக்கு
  39. உப்பை பற்றிய ஒப்பிலா பதிவு அருமை

    பதிலளிநீக்கு
  40. வணக்கம் சகோதரரே!

    ஆறு சுவைகளில் உப்பை பற்றி அழகாக எழுதி, ஐந்து சுவைகளுடனும் உப்பு இறுதியில் அதனுடன் சார்ந்திருப்பதை சுவைபட எழுதியுள்ளீர்கள். எதுவுமே அளவுக்கு அதிகமானல் உடலுக்கு தீமைதான் என விளக்கமாக தங்கள் பாணியில் உரைத்ததும் சிறப்பு. அரசன் கதையும் அருமை. அதன் மூலம் உப்பின் பெருமையை உணர வைத்ததும் ரசிக்க வைத்தது. மொத்தத்தில் ருசியான பதிவுதான். உப்பிட்டவரை எந்நாளும் மறக்காதே என்பது முதுமொழி அல்லவா ? பகிர்ந்தமைக்கு நன்றி..

    தாமத வருகை தந்து படித்து கருத்திட்டமைக்கு மன்னிக்கவும்.
    வீட்டில் விஷேடங்களினால், இணையம் பக்கமே வர இயலவில்லை.

    நன்றியுடன்,
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  41. உப்பின் சிறப்பை அருமையான பதிவாக கொடுத்திருக்கீங்க !

    பதிலளிநீக்கு
  42. உப்பில்லா பண்டம் குப்பையிலே என்று சொல்வார்களே.... அளவோடு சேர்த்துக் கொண்டால் எதுவுமே கெடுதல் இல்லை...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ப்பூ... இந்த உப்பை வைத்தே இப்படி நீண்ட பதிவா. உங்களுக்கென தனிச் சிறப்பான பதிவு தருவதில் நீங்கள் வல்லவர். உப்பில்லாப் பண்டம். குப்பையிலேதான். உப்புள்ள பதிவு மன மெத்தையிலே தான்.

      நீக்கு
  43. 'மிகினும் குறையினும் நோய் செய்யும்' என்பதை மேலும் மெருகேற்றி நீங்க வைத்த பொடி உப்பு நன்றாக உரைக்க வேண்டும் நமக்கு! மேய்ச்சல் தேடி ஆட்டை விடும் இடையனின் அக்கறை தங்கள் பதிவுகளில்.

    பதிலளிநீக்கு
  44. உப்பின் சிறப்பைப் பற்றிய கதை அருமை.. தம.

    பதிலளிநீக்கு
  45. உப்பின் சிறப்பை உணர்த்திய கதை நன்றாக இருந்தது ...
    நல்ல பதிவு...

    வாழ்க வளமுடன்...

    பதிலளிநீக்கு
  46. அருமை அருமை தனபாலன் சார். தங்களுக்கும், குடும்பத்தாருக்கும் இனிய தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  47. தங்களுக்கும், தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
  48. உப்பு நல்லதுதான்

    உப்பு சாரமற்றுப்போனால் எதினால் சாரமாக்கப்படும்?

    புத்தாண்டு வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
  49. வணக்கம் சகோதரரே.!

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தமிழ்ப் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.

    நன்றியுடன்.
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  50. அன்பு நண்பரே!

    வணக்கம்!
    மன்மத ஆண்டில் மகுடம் சூடி மகிழ்வு பெறுக!
    இனிய தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துகள்
    நட்புடன்,
    புதுவை வேலு
    www.kuzhalinnisai.blogspot.com

    சித்திரைத் திருநாளே!
    சிறப்புடன் வருக!

    நித்திரையில் கண்ட கனவு
    சித்திரையில் பலிக்க வேண்டும்!
    முத்திரைபெறும் முழு ஆற்றல்
    முழு நிலவாய் ஒளிர வேண்டும்!


    மன்மத ஆண்டு மனதில்
    மகிழ்ச்சியை ஊட்ட வேண்டும்!
    மங்கலத் திருநாள் வாழ்வில்!
    மாண்பினை சூட வேண்டும்!

    தொல்லை தரும் இன்னல்கள்
    தொலைதூரம் செல்ல வேண்டும்
    நிலையான செல்வம் யாவும்
    கலையாக செழித்தல் வேண்டும்!

    பொங்குக தமிழ் ஓசை
    தங்குக தரணி எங்கும்!
    சீர்மிகு சித்திரைத் திருநாளே!
    சிறப்புடன் வருக! வருகவே!

    புதுவை வேலு

    பதிலளிநீக்கு
  51. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    இனிய சித்திரைத் திருநாள் வாழ்த்துகள் தனபாலன் சகோ :)

    பதிலளிநீக்கு
  52. அருமையான பதிவு அண்ணா...
    வாழ்த்துக்கள் தொடருங்கள்
    த ம +

    பதிலளிநீக்கு
  53. வாருங்கள் நண்பரே! பதிவினை காண்பதற்கு!
    "பாரிசில் பட்டிமன்ற தர்பார் "
    http://kuzhalinnisai.blogspot.com/2015/04/blog-post_20.html
    வாக்கோடு வருகை தர வேண்டுகிறேன்.
    நட்புடன்,
    புதுவை வேலு

    பதிலளிநீக்கு
  54. ஆஹா ! அருமை ...உப்பு இல்லாம சாப்ப்பிட பழகனும் அனைவரும் ..அதுவே உடலுக்கு நல்லது

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென்று இடித்தற் பொருட்டு. (குறள் 784)

நட்புச் செய்துகொள்வது நண்பரோடு சிரித்து மகிழ்வதற்காக மட்டும் அல்ல. மிகுதியாகத் தவறு செய்யும்போது, அவரைக் கடிந்து திருத்துவதற்கே ஆகும்.