புதன், 25 பிப்ரவரி, 2015

கலைகின்ற வேடம்...


ஆசை ஒரு நீரோட்டம் நில்லாம ஓடும்... உள்ளுக்குள்ளே ஏதேதோ சங்கீதம் பாடும்... ஒன்னாக கலந்த உறவுதான்... எந்நாளும் இன்பம் வரவுதான்... இது காதல் என்கிற கனவு... தினம் காண எண்ணுற மனசு... இது சேர துடிக்குற வயசுதான்... வாழ்க்கையே கொஞ்ச காலம்தான்... இந்த வாழ்க்கையில வாலிபம் கொஞ்ச நேரம்தான்... (படம் : பாலைவன ரோஜாக்கள்)

புதன், 18 பிப்ரவரி, 2015

துறவியாகப் போகிறேன்...!


வணக்கம் நண்பர்களே... இந்த "நம்முடைய" நினைப்பாலே தான் கூட்டுக் குடும்பம் இல்லையோ...? முறைக்காதே...! அடுத்த பதிவுக்கு அச்சாரம்ன்னு வைச்சிக்கோ... அந்த அச்சாரம் தான் இப்பதிவு... அந்தப் பதிவை வாசிக்க சுயநலம் தேவை...! →இங்கே சொடுக்குகஎறும்புத் தோலை உரித்துப் பார்க்க யானை வந்ததடா...! நான் இதயத் தோலை உரித்துப் பார்க்க ஞானம் வந்ததடா... பிறக்கும் முன்னே இருந்த உள்ளம் இன்று வந்ததடா... இறந்த பின்னே வரும் அமைதி வந்து விட்டதடா... சட்டி சுட்டதடா... கை விட்டதடா... புத்தி கெட்டதடா... நெஞ்சைத் தொட்டதடா... நாலும் நடந்து முடிந்த பின்னால் - நல்லது கெட்டது தெரிந்ததடா... (படம் : ஆலயமணி)

புதன், 11 பிப்ரவரி, 2015

கருத்துக்கணிப்பு தேவையா...?


ஹலோ DD, கில்லர்ஜி பேசுறேன்... என் பதிவுலே mp3 சேர்க்கணும்... எப்படி...?

என் தளத்தின் முகப்பிலே →வலைத்தள நுட்பம்-ன்னு← ஒரு label-லை சொடுக்குங்க... ஒரு பத்து பதிவு வரும்... அதிலே →"நேயர் விருப்பம்"← பதிவை சொடுக்கினா உங்கள் விருப்பம் நிறைவேறும்...!

புதன், 4 பிப்ரவரி, 2015

புத்தக வாசிப்பு என்பது...


"களவும் கற்று மற" என்று சொல்கிறார்களே... திருட்டைக் கூட கற்றுக்கொண்டு பிறகு மறந்து விடு என்று அர்த்தமா...? இது ரொம்ப தவறாச்...சே...! "களவும் கற்க மற" என்று இருக்க வேண்டுமோ...? தவறு என்பது தவறிச் செய்வது, தப்பு என்பது தெரிந்து செய்வது (2) தவறு செய்தவன் திருந்தப் பார்க்கணும், தப்புச் செய்தவன் வருந்தியாகணும் ! நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி - இந்த நாடே இருக்குது தம்பி... (படம் : பெற்றால் தான் பிள்ளையா) முன்னோர்கள் சொன்னதில் தவறா...? தப்பா...?

மனச்சாட்சி தம்பி, பெரியோர்கள் சரியாத்தான் சொல்லியிருக்காங்க... நாம எடுத்துக் கொண்டது தான் தவறு... இல்லை இல்லை தப்பு...! பிறருக்குச் சொந்தமான பொருளை "சூது" முறையில் ஏமாற்றி எடுத்துக் கொண்டாலும் அதுவும் திருட்டு தான்... நம்ம வள்ளுவர் "சூது"ங்கிற அதிகாரத்திலே :