இடுகைகள்

2015 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது
🏠 வணக்கம் காப்பகம் நன்றி

தேடல் 🔎



புதிய பதிவுகளை பெற ✉



அனைவரும் இங்கு சரிசமமென உணர்த்திடும் மழையே...!

படம்
(படம் : என் சுவாசக் காற்றே) ஒரு துளி விழுது, ஒரு துளி விழுது... 2 ஒரு துளி... இரு துளி... சிறு துளி... பல துளி... பட பட தட தட தட தட... சட சட சிதறுது...

10 கடவுளைக் கண்டேன்...!

படம்
பதிவுலகம் சுறுசுறுப்படைய அவ்வப்போது நம்ம தேவகோட்டை கில்லர்ஜி (அபுதாபி) கனவு காண்பார்... இப்போது 10 ஆசைகளைக் கடவுளிடம் முன் வைக்கச் சொல்கிறார்... வாழ்கிற, வாழ்ந்த 10 ஆசை மனங்களைப் பற்றி சொல்கிறேன்... "ஏற்கனவே 18 பாடல்களோடு "அளவோடு அடக்குவதே வெற்றியின் குணம்" பதிவு இருக்கிறதே ஜி..." என்றேன்... (வாசிக்காதவர்கள் இங்கே சொடுக்கவும்) "பாட்டுக் கேசட்டுகளை தூசி தட்டி எடுத்து விடுங்க"ன்னு வேறு சொல்லிட்டார், எதைத் தட்டினேன் என்பது முடிவில்...!

மனம்தனில் கறையில்லையே - குறையில்லையே...

படம்
வெள்ளைப் பூக்கள் உலகம் எங்கும் மலர்கவே...! விடியும் பூமி அமைதிக்காக விடிகவே...! மண்மேல் மஞ்சள் வெளிச்சம் விழுகவே...! மலரே சோம்பல் முறித்து எழுகவே...! குழந்தை விழிக்கட்டுமே - தாயின் கதகதப்பில்... உலகம் விடியட்டுமே - பிள்ளையின் சிறுமுகச் சிரிப்பில்... வெள்ளைப் பூக்கள் உலகம் எங்கும் மலர்கவே...! ⟪ © கன்னத்தில் முத்தமிட்டால் ✍ வைரமுத்து ♫ A.R.ரகுமான் 🎤 A.R.ரகுமான் @ 2002 ⟫ வலையுலக உறவுகள் அனைவருக்கும் இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துகள்... எப்படியிருக்கு நம்ம வெள்ளை வேட்டி...! வெள்ளை சட்டை...!

நீங்க மட்டும் மனசு வச்சா...

படம்
வலைத்தள உறவுகளுக்கு வணக்கம்... திரு. முத்துநிலவன் ஐயா அவர்களின் ஒரு பதிவில் "ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே..." பாடலை வலைப்பூ சம்பந்தமாக மாற்றி கருத்துரை இட்டு இருந்தேன்... அதைப் பலரும் தங்களின் தளத்தில் பகிர்ந்து கொண்டு என்னை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தி விட்டார்கள்... அவர்களுக்கும், அங்குக் கருத்துரையிட்ட அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகளோடு அவர்களின் இணைப்புகள் :- திருமிகு 1. மதுரைத்தமிழன் சிந்திக்க மட்டுமல்ல நம்பிக்கையைத் தூண்டும் பாடல் 2. தேன்மதுரத்தமிழ் கிரேஸ் லட்சம் பதிவுகள் கண்ணோடு 3. S.P.செந்தில்குமார் நான் அறியாத டிடி 4. கரந்தை ஜெயக்குமார் புதுமைகள் படைக்கும் புதுகை 5. சுப்பு தாத்தாவின் குரலில் தமிழ்ப்பதிவர் மாநாடு எழுச்சி பாடல் 6. யாழ்பாவணன் ஒவ்வொரு வலைப்பதிவர்களும் படிக்கலாமே! இந்த உற்சாகத்தில்... இப்போது ஜாலியாக... திண்டுக்கல் வலைச்சித்தருக்கு நினைவுப் பரிசு தரும் "புதுக்கோட்டை வலைச்சித்தர் ஸ்ரீ மலையப்பன் "

அணில் உதவியதை போல்...

படம்
வலைத்தள உறவுகள் அனைவருக்கும் வணக்கம்... புதுக்கோட்டையில் சிறப்பாக நடந்து முடிந்த பதிவர் சந்திப்பை பற்றி பலரும் அருமையாக எழுதி விட்டார்கள்... அவர்கள் அனைவருக்கும் நன்றிகள்... மேலும்...

புதுக்கோட்டை வலைப்பதிவர் திருவிழா நேரடி ஒளிபரப்பு

படம்
புதுக்கோட்டை வலைப்பதிவர் திருவிழா நேரடி ஒளிபரப்பு

மின்-தமிழ் இலக்கியப் போட்டி முடிவுகள்

படம்
வகை (1) கணினியில் தமிழ் மற்றும் அறிவியல் போலும் பிறதுறை வளர்ச்சி குறித்த கட்டுரைகள்

இவர்கள் தான் பரிசு பெறுவார்கள்...!

படம்
ரூபாய் 10,000 பரிசு பெற வலைப்பக்கம் இருக்க வேண்டிய அவசியமில்லை

5 போட்டிகள் - 50,000 ரூபாய் பரிசுகள்

படம்
தமிழ் வலைப் பதிவுலகத்திற்கு வணக்கம்... தமிழ் வலைப்பதிவர்கள் சந்திப்பு திருவிழாவும், தமிழ்நாடு அரசு – தமிழ் இணையக் கல்விக்கழகமும் இணைந்து நடத்தும் உலகளாவிய மின்-தமிழ் இலக்கியப் போட்டிகள் பற்றிய விவரங்கள்...

சிறு துரும்பும்…

படம்
வணக்கம் நண்பர்களே... புதிய பதிவர்களுக்குப் பலருக்கும் திரட்டிகள் + கேட்ஜெட்கள் என இணைத்துக் கொடுத்துள்ளேன்... அவைகளில் பல இப்போது வேலை செய்வதில்லை... சிலது இல்லவும் இல்லை... முன்பு பகிர்ந்துள்ள தொழினுட்ப பதிவுகளில் ஏற்படும் சின்ன சின்ன சிக்கலுக்கான தீர்வும் (Solution), சில எளிய குறிப்புகளின் (Tips) முதல் தொகுப்பு இப்பதிவு... கேள்விகளை முயற்சி யாகவும், பதில்களை பயிற்சி யாகவும், தீர்வை வெற்றி யாகவும் சொல்லியுள்ளேன்... இல்லை உங்களை எனது மனசாட்சியாக நினைத்து உங்களிடம் பேசியுள்ளேன்...! வாங்கப் பேசுவோம்...!

தமிழ் வலைப்பதிவர் கையேடு - 2015

படம்
வலையுலக உறவுகளுக்கு வணக்கம்... புதுக்கோட்டை வரும் அனைவருக்கும் இலவசமாக ரூ. 150 மதிப்புள்ள ஒரு நூலை வழங்கப் புதுக்கோட்டை விழாக்குழுவினர் முடிவு செய்து உள்ளார்கள்... அந்த நூல் :-

புதுக்கோட்டை வலைப்பதிவர் திருவிழா வருகைப் பட்டியல்...!

படம்
உலகத் தமிழ் வலைப் பதிவுலக நண்பர்களுக்கு வணக்கம்... வருகிற அக்டோபர் மாதம் 11-ம் நாளன்று புதுக்கோட்டையில் வலைப்பதிவர் திருவிழாவில் கலந்து கொள்ள தங்களின் வருகையை உறுதி செய்துள்ள பதிவர்களின் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது...

வலைப்பதிவர் சந்திப்பு திருவிழா - புதுக்கோட்டை

படம்
தமிழ்ப் பதிவுலக நண்பர்களுக்கு வணக்கம்... கடந்த வருடம் 2012 ஆகஸ்டு மாதம் 26 மற்றும் 2013 செப்டம்பர் 1 அன்றும் சென்னையிலும், 2014 அக்டோபர் மாதம் 26 அன்று மதுரையிலும், நடந்த மாபெரும் பதிவர் சந்திப்பை, அவ்வளவு எளிதில் யாரும் மறந்திருக்க முடியாது. அதே போல்.....

ஒரு கனவு கண்டால்... அதை தினம் முயன்றால்...

படம்
வணக்கம் நண்பர்களே... டாக்டர் ஆ.ப.ஜெ.அப்துல் கலாம் அவர்களின் பொன்மொழிகளுடன் பாடல்கள்... வாசிக்க... ரசிக்க... கேட்க...

உயிரே உயிரே...

படம்
என் சுவாசக் காற்று வரும் பாதை பார்த்து - உயிர் தாங்கி நானிருப்பேன்... மலர்கொண்ட பெண்மை வாராமல் போனால் - மலை மீது தீக்குளிப்பேன்... என் உயிர் போகும் போனாலும் துயரில்லை கண்ணே - அதற்காகவா பாடினேன்...? வரும் எதிர்காலம் உன் மீது பழி போடும் பெண்ணே - அதற்காகத்தான் வாடினேன்...! முதலா...? முடிவா...? அதை உன் கையில் கொடுத்துவிட்டேன்...! ⟪ © பம்பாய் ✍ வைரமுத்து ♫ ☊ ஹரிஹரன், K.S.சித்ரா @ 1995 ⟫

தமிழை இன்னும் தமிழ்ப்படுத்த வேண்டும்...!

படம்
முந்தைய பதிவான இதயமே இதயமே பதிவில் கண் சிமிட்டும் கண்களும், கண்ணீர்த் துளிகளும் சரிவர வருமா...? என்கிற சின்ன சந்தேகம் இருந்தது... பாராட்டிப் பரவசப்பட்ட அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி... எல்லாப் புகழும் வள்ளுவருக்கே...! அதன் அடுத்த பகுதி விரைவில்...

இதயமே இதயமே...

படம்
பனியாக உருகி நதியாக மாறி - அலை வீசி விளையாடி இருந்தேன்... தனியாக இருந்தும் உன் நினைவோடு வாழ்ந்து - உயிர் காதல் உறவாடிக் கலந்தே நின்றேன்... இது எந்தன் வாழ்வில் நீ போட்ட கோலம்... 2 கோலம் கலைந்ததே புது சோகம் பிறந்ததே... நீயில்லாத வாழ்வு இங்கு கானல்தான்... இதயமே இதயமே... உன் மௌனம் என்னைக் கொல்லுதே... இதயமே இதயமே... ⟪ © இதயம் ✍ வாலி ♫ இளையராஜா ☊ S.P.பாலசுப்பிரமணியம் @ 1991 ⟫

கல கல கலவெனச் சிரி... கண்ணில் நீர் வர சிரி...

படம்
இரவின் கண்ணீர் பனித்துளி என்பார்... முகிலின் கண்ணீர் மழையெனச் சொல்வார்... இயற்கை அழுதால் உலகம் செழிக்கும்... மனிதன் அழுதால் இயற்கை சிரிக்கும்… இயற்கை சிரிக்கும்... பிறக்கும் போதும் அழுகின்றாய்... இறக்கும் போதும் அழுகின்றாய்... ஒருநாளேனும் கவலை இல்லாமல் சிரிக்க மறந்தாய் மானிடனே... (படம் : கவலை இல்லாத மனிதன்) இருக்கும் வரை சந்தோசமா இருக்கணும்... சாகும் போது கூட சிரிச்சுக்கிட்டே சாகணும்ன்னு பல பேரும் சொல்றாங்களே, இது சாத்தியமா...?

சொல்லாத சொல்லுக்கு விலையேதும் இல்லை...

படம்
உலகத்திலே பயங்கரமான ஆயுதம் எது...? கத்தி - இல்லே; கோடாரி - இல்லே; ஈட்டி ம்ஹூம்; கடப்பாரை - இல்லே; அதுவுமில்லையா...? அப்புறம் பயங்கரமான ஆயுதம் ஆறறிவாகுமோ...? - அது ஆயுதம் இல்லையே; அட தெரிய மாட்டேங்குதே, நீயே சொல்லப்பா...! உலகத்திலே பயங்கரமான ஆயுதம் எது...? நிலைக்கெட்டு போன நயவஞ்சகரின் நாக்கு தான் அது...!

விதியென்பது அனைவருக்குமே பொதுவானது...!

படம்
⟪ © அவன் தான் மனிதன் ✍ கண்ணதாசன் ♫ M.S.விஸ்வநாதன் 🎤 T.M.சௌந்தரராஜன் @ 1975 ⟫ விதியின் ரதங்களிலே நாம் விரைந்து பயணம் செய்தால்... மதியும் மயங்குதடா - சிறு மனதும் கலங்குதடா...! கொடுக்க எதுவுமில்லை - என் குழப்பம் முடிந்ததடா...! கணக்கை முடித்து விட்டேன் ஒரு கவலை முடிந்ததடா...! மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்குமென்று...! இறைவன் நினைப்பதுண்டு பாவம் மனிதனென்று...! ஆமா, விதியைப் பத்தி என்ன நினைக்கிறாய்...? ISO உட்படப் பலவற்றிலும் உள்ளதைப் படிக்க மட்டும் தானா...? விதிகளை மதித்துச் செயல்பட்டால் மனிதன் மகிழ்ச்சியாக இருக்கலாம் அல்லவா...?

நன்றி மறவாத நல்ல மனம் போதும்...

படம்
குறள் எழுதி விட்டுப் பதிவு எழுதுகிறாயா...? இல்லை பதிவுக்கேற்ற குறள் சொல்லுகிறாயா...?" இந்த பலரின் சந்தேகத்தைப் பல பதிவுகளில் கருத்துரையில் தெரிவிக்கிறார்கள்... உனது பதில் என்ன...? இரண்டும் தான் மனமே... வேண்டுமானால் குறள் தெரியாமல் இப்பதிவை எழுதி விடுகிறேன்... குறள் எனது வாழ்க்கைக்கு வழிகாட்டி... வாழ்வில் பல சமயங்களில் அதை அனுபவித்து இருக்கிறேன்... உணர்ந்து இருக்கிறேன்... திருந்தியும் இருக்கிறேன்... சந்தித்த ஒவ்வொரு மனிதரிடம் ஏதாவது ஒன்றை கற்றுக் கொண்டு மறக்காமல் இருக்கின்றேன்... அவைகள் என்னவென்றால்... ஒவ்வொன்றாகச் சொல்கிறேன்... ஆனால் ஒன்று தான்...!

உண்மையா...? பொய்யா...?

படம்
நண்பர்கள் பகைவர்கள் யாரென்றும்... நல்லவர் கெட்டவர் யாரென்றும்... 2 பழகும் போதும் தெரிவதில்லை - பாழாய்ப் போன இந்தப் பூமியிலே... முகத்துக்கு நேரே சிரிப்பவர் கண்கள் முதுகுக்குப் பின்னால் சீரும்... முகஸ்துதி பேசும், வளையும், குழையும்... காரியமானதும் மாறும்... ம்... காரியமானதும் மாறும்... (படம் : நாடோடி) ஏம்பா இப்படி இருக்காங்க...?

நடையைக் கட்டுங்கள், எதுவும் சொல்ல வேண்டாம்...

படம்
வணக்கம் நண்பர்களே... ஒரு பாடல் கேட்போமா...?

வாருங்கள்... வாழ்த்துவோம்...

படம்
வணக்கம் நண்பர்களே... கடந்த வருடம் மதுரையில் நடந்த பதிவர் சந்திப்பு திருவிழாவில் கலந்து கொள்பவர்களின் எண்ணிக்கை அறிய "Google Forms" என்பதை வலைத்தளத்தில் பயன்படுத்தினோம்... மதிய உணவு ஏற்பாடு, நினைவுப் பரிசு என எங்களுக்குப் பலவிதங்களில் திட்டமிட்டு செயல்கள் புரிய உதவியது... வாங்க, அதை எவ்வாறு செய்வது என்பதை அறிவோம்...

காதல் தானும் கடலினும் பெரிதே...!

படம்
அழகிய திமிருடன் இருவிழி புயல் என்னைத் தாக்குதே... ஒஹ்ஹ் ஹோ ..வ்ஹொஅ whoa whoa... ஒருமுனை கொளுத்திய சரவெடி உயிருக்குள் கேட்குதே... ஓ ஏய்ஏய்ஏய்... உடைபட்ட அணை விட்டு நுரை முட்ட புது வெள்ளம் பாயுதே...ஏஏ நெரிசலின் நடுவினில் கவிதையின் தரிசனம் நீளுதே ! ⟪ © ரன் ✍ விவேகா ♫ வித்யாசாகர் 🎤 வித்யாசாகர், சாதனா சர்கம், ஜாக் ஸ்மெல்லி @ 2002 ⟫ என்னடா ஆச்சி...? புயல் தாக்கி பல வருசமாச்சே...! ஹா... ஹா... இல்லே, இது காதல் குரு அடிக்கடி பாடுற பாட்டு....!

மறக்க முடியுமா...?

படம்
யார் யாரோ நண்பன் என்று... ஏமாந்த நெஞ்சம் உண்டு 2 பூ என்று முள்ளைக் கண்டு புரியாமல் நின்றேன் இன்று... பால் போலக் கள்ளும் உண்டு... நிறத்தாலே இரண்டும் ஒன்று 2 நான் என்ன கள்ளா...? பாலா...? நீ சொல்லு நந்தலாலா.... உனக்கென்ன மேலே நின்றாய்... ஓ நந்தலாலா... உனதாணை பாடுகின்றேன்... நான் ரொம்ப நாளா... (படம் : சிம்லா ஸ்பெஷல்)

நான் யார்...?

படம்
உறவார் பகையார்... உண்மையை உணரார்... உனக்கே நீ யாரோ...? வருவார் இருப்பார் போவார் - நிலையாய் வாழ்வார் யார் யாரோ...? நான் யார்...? நான் யார்...? நீ யார்...? நாலும் தெரிந்தவர் யார் யார்...? நான் யார்...? நான் யார்...? நீ யார்...? (படம் : குடியிருந்த கோவில்) பாட்டிலே கேள்வியை ஆரம்பிச்சுட்டியா மனசாட்சி...?

ஆயுள் தண்டனையும்... மரண தண்டனையும்...

படம்
இளமையெல்லாம் வெறும் கனவு மயம் - இதில் மறைந்தது சில காலம்... தெளிவும் அறியாமல் முடிவும் தெரியாமல்... மயங்குது எதிர் காலம்... மயங்குது எதிர் காலம் ஆஆஆஆஆ... ⟪ © பாக்யலக்ஷ்மி ✍ கண்ணதாசன் ♫ விஸ்வநாதன்-ராமமூர்த்தி 🎤 P.சுசீலா @ 1961 ⟫

சாதாரணமானவர்களால் தான் சாதனையே...!

படம்
பூப்பூவா பூத்திருக்கு பூமியிலே ஆயிரம் பூ... பூவிலே சிறந்த பூ என்ன பூ...? ⟪ © குலவிளக்கு ✍ கண்ணதாசன் ♫ K.V.மகாதேவன் 🎤 P.சுசீலா @ 1969 ⟫ அன்பு தான்... வேறென்ன...? "நம்மையும் வாட விடாமல், தானும் வாடாமல் வட்டியின் மூலம் வளரும் பூ + முதுமையிலும் உதவும் சிறந்த பூ - சேமிப்பு" அப்படின்னு கலைவாணர் சொன்னது...! நீ என்னப்பு சொல்றே...?

அடுத்து என்ன...?

படம்
அடுத்த வீட்டில் தீப்பிடிக்க நினைப்பவன் மனிதனா...? அந்த நேரம் ஓடிவந்து அணைப்பவன் மனிதனா...? கொடுமை கண்டும் கண்ணை மூடி கிடப்பவன் மனிதனா...? கோபம் கொண்டு நியாயம் கேட்டுக் கொதிப்பவன் மனிதனா...? மனிதன் மனிதன்... எவன் தான் மனிதன்...? வாழும் போதும் செத்துச் செத்து பிழைப்பவன் மனிதனா...? வாழ்ந்த பின்னும் பேரை நாட்டி நிலைப்பவன் மனிதனா...? பிறருக்காகக் கண்ணீரும்... பிறருக்காகச் செந்நீரும்... சிந்தும் மனிதன் எவனோ - அவனே மனிதன் மனிதன் மனிதன்... ⟪ © மனிதன் ✍ வைரமுத்து ♫ சந்திரபோஸ் 🎤 மலேசியா வாசுதேவன் @ 1987 ⟫ மனசாட்சி... எந்தச் சூழ்நிலையிலும் எவன் ஒருவன் தன் மனத்தை இதமாக வைத்துக் கொள்கிறானோ அவன் தாண்டா மனிதன் ! பிறகு தான் மற்றவை...

அடப்போங்கப்பா...! நீங்களும் உங்க பதிவும்...!

படம்
செல்லம்... அண்ணன்களையும் கூப்பிடு... இதோ 100 ரூபாய் நோட்டு... யாருக்குப் பிடிக்கும்...? எல்லோருக்கும் கை தூக்கிட்டீங்க... ம்... இப்போ ரூபாய் நோட்டை நல்லா மடிச்சி கசக்கிட்டேன்... இப்போ பிடிக்குமா...? மறுபடியும் கை தூக்கிட்டீங்க... சரி இப்போ ரூபாய் நோட்டை நல்லா மிதிச்சி அழுக்காக்கிட்டேன்...! இப்போ பிடிக்குமா...? என்னப்பா... கை தூக்குற பயிற்சியா சொல்லிக் கொடுக்குறீங்க...? நோட்டைக் கசக்கினாலும், மிதிச்சி அழுக்கானாலும் அதோட மதிப்பு குறையுமா...? அது சுக்குநூறாகி கிழிச்சாத் தான் குறையும்... முதல்லே காலை கழுவிட்டு வாங்க...

சூழ்ச்சியில் மாட்டிக்கிட்டேன்...!

படம்
நான் வளர்த்த பூங்குருவி வேறிடம் தேடி - செல்ல நினைத்தவுடன் அமைந்ததம்மா அதற்கொரு ஜோடி... நிழற்படமாய் ஓடுது என் நினைவுகள் கோடி... அந்த நினைவுகளால் வாழுகிறேன் காவியம் பாடி...! (படம் : மோகனப் புன்னகை) போன வாரம் நண்பரோட மகளின் கல்யாணத்திற்குப் போயிருந்தப்போ, நண்பர் இந்தப் பாடல் பாடுவதாக மனசிலே தோணிச்சி...! அன்பை உரைத்திட வாயில்லாத அழகுச் சிலை இவள்... கொண்ட பசியையும் கூறிடாத குழந்தை போன்றவள்... உன் வசத்தில் இந்த ஊமைக்குயில்... இவள் இன்பதுன்பம் என்றும் உந்தன் கையில்... காவல் நின்று காத்திடுக கண் போலவே... பொன் போலவே... (படம் : நீதிபதி) எதிர்ப்பாட்டு நான் பாடலே... வாசிக்கிற + பெண்ணை பெற்ற பெற்றோர்கள் எல்லோரும் பாடியிருப்பாங்க...!

மூடன்... அறிவாளி... ஏமாளி...

படம்
ஆசை ஒரு நீரோட்டம் நில்லாம ஓடும்... உள்ளுக்குள்ளே ஏதேதோ சங்கீதம் பாடும்... ஒன்னாக கலந்த உறவுதான்... எந்நாளும் இன்பம் வரவுதான்... இது காதல் என்கிற கனவு... தினம் காண எண்ணுற மனசு... இது சேர துடிக்குற வயசுதான்... வாழ்க்கையே கொஞ்சக் காலம்தான்... இந்த வாழ்க்கையில வாலிபம் கொஞ்ச நேரம்தான்... ⟪ © பாலைவன ரோஜாக்கள் ✍ கங்கை அமரன் ♫ இளையராஜா 🎤 இளையராஜா @ 1986 ⟫

துறவியாகப் போகிறேன்...!

படம்
வணக்கம் நண்பர்களே... இந்த "நம்முடைய" நினைப்பாலே தான் கூட்டுக் குடும்பம் இல்லையோ...? முறைக்காதே...! அடுத்த பதிவுக்கு அச்சாரம்ன்னு வைச்சிக்கோ... அந்த அச்சாரம் தான் இப்பதிவு... அந்தப் பதிவை வாசிக்கச் சுயநலம் தேவை...! எறும்புத் தோலை உரித்துப் பார்க்க யானை வந்ததடா...! நான் இதயத் தோலை உரித்துப் பார்க்க ஞானம் வந்ததடா... பிறக்கும் முன்னே இருந்த உள்ளம் இன்று வந்ததடா... இறந்த பின்னே வரும் அமைதி வந்து விட்டதடா... சட்டி சுட்டதடா... கை விட்டதடா... புத்தி கெட்டதடா... நெஞ்சைத் தொட்டதடா... நாலும் நடந்து முடிந்த பின்னால் - நல்லது கெட்டது தெரிந்ததடா... (படம் : ஆலயமணி)

கருத்துக்கணிப்பு தேவையா...?

படம்
ஹலோ DD, கில்லர்ஜி பேசுறேன்... என் பதிவுலே mp3 சேர்க்கணும்... எப்படி...? இதோ நேயர் விருப்பம் ← பதிவை சொடுக்கினா உங்கள் விருப்பம் நிறைவேறும்...!

புத்தக வாசிப்பு என்பது...

படம்
"களவும் கற்று மற" என்று சொல்கிறார்களே... திருட்டைக் கூட கற்றுக்கொண்டு பிறகு மறந்து விடு என்று அர்த்தமா...? இது ரொம்ப தவறாச்...சே...! "களவும் கற்க மற" என்று இருக்க வேண்டுமோ...? தவறு என்பது தவறிச் செய்வது, தப்பு என்பது தெரிந்து செய்வது 2 தவறு செய்தவன் திருந்தப் பார்க்கணும், தப்பு செய்தவன் வருந்தியாகணும் ! நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி - இந்த நாடே இருக்குது தம்பி... (படம் : பெற்றால் தான் பிள்ளையா) முன்னோர்கள் சொன்னதில் தவறா...? தப்பா...? மனசாட்சி தம்பி, பெரியோர்கள் சரியாகத்தான் சொல்லியிருக்காங்க... நாம எடுத்துக் கொண்டது தான் தவறு... இல்லை இல்லை தப்பு...! பிறருக்குச் சொந்தமான பொருளை "சூது" முறையில் ஏமாற்றி எடுத்துக் கொண்டாலும் அதுவும் திருட்டு தான்... நம்ம வள்ளுவர் "சூது"ங்கிற அதிகாரத்திலே :

கை வந்த கலை...

படம்
ஏன் என்ற கேள்வி - இங்கு கேட்காமல் வாழ்க்கை இல்லை... நான் என்ற எண்ணம் - கொண்ட மனிதன் வாழ்ந்ததில்லை... பகுத்தறிவு பிறந்ததெல்லாம் கேள்விகள் கேட்டதனாலே 2 உரிமைகளைப் பெறுவதெல்லாம் - உணர்ச்சிகள் உள்ளதனாலே 2 (படம் : ஆயிரத்தில் ஒருவன்) கேள்வியைத் தேடி அறிகிற அறிவாளி... கேள்வியோடு மட்டுமே திரிகிற முட்டாள்... இந்த இரண்டு பேருலே யாரு சந்தோசமா இருப்பாங்க...? என்னைக் கேட்டா எந்தக் கஷ்டமும் படாம கேள்வியை மட்டும் கேட்கிற முட்டாள் தான் சந்தோசமா இருப்பான்னு தோணுது... உனக்கு எப்படி தோணுது...?

எது அறிவு...? (பகுதி 2)

படம்
தரைய பார்த்து நிக்குது நல்ல கதிரு... தன் குறைய மறந்து மேலே பார்க்குது பதரு... அது போல் - அறிவு உள்ளது அடங்கி கிடக்குது வீட்டிலே 2 எதுக்கும் ஆகாத சிலது ஆர்ப்பாட்டம் செய்யுது வெளியிலே... அதாலே மனுசன மனுஷன் சாப்பிடுராண்டா தம்பி பயலே - இது மாறுவதெப்போ தீருவதெப்போ நம்ம கவலே... ⟪ © தாய்க்குப் பின் தாரம் ✍ அ.மருதகாசி ♫ K.V.மகாதேவன் ☊ T.M.சௌந்தரராஜன் @ 1956 ⟫ அனைவருக்கும் உழவர் மற்றும் திருவள்ளுவர் தின நல்வாழ்த்துக்கள்...