🏠 வணக்கம் காப்பகம் நன்றி

தேடல் 🔎



புதிய பதிவுகளை பெற ✉



தைப்பொங்கல் சிறப்புக் கட்டுரைப் போட்டி

வணக்கம் நண்பர்களே... இலங்கையில் திருகோணமலை மாவட்டத்தைத் தாய்வீடாகக் கொண்ட எனது இனிய நண்பர், தற்சமயம் மலேசியாவில் வசிக்கும் திரு. த.தவரூபன்(ரூபன்) அவர்களும், திண்டுக்கல் மணப்பாறையைச் சேர்ந்த தமிழாசிரியர் திரு. அ.பாண்டியன் அவர்களும் இணைந்து நடத்தும், தைப்பொங்கலை முன்னிட்டு மாபெரும் சிறப்புக் கட்டுரைப் போட்டியில் கலந்து கொள்ள அழைக்கிறேன் நட்பு உள்ளங்களே...


போட்டிக்கான தலைப்பு :

1. இணையத்தின் சமூகப் பயன்பாடு.

2. இன்றைய சினிமாவின் போக்கும் சமூக பாதிப்புகளும்.

3. தற்காலத் தமிழின் போக்கும் அதன் எதிர்கால நிலையும்.

4. போதைப் பழக்கமும் அடுத்த தலைமுறையின் முன்னேற்றமும்.

5. உழைப்புக்கான வழியினைச் சீர் செய்ய எண்ணாது அரசு இலவசங்களிலும் வியாபாரத்திலும் முனைவது சரியா…?

போட்டியின் விதிமுறைகள் :

1. இரண்டாயிரம் வார்த்தைகளுக்கு மிகாமலிருந்தால் நல்லது.

2. ஒருவரே எல்லாத் தலைப்புகளிலும் கட்டுரையை தங்களின் தளத்தில் பதிவிடலாம். ஒரு சிறப்பான கட்டுரை மட்டுமே போட்டியில் ஏற்கப்படும். பதிவர் அல்லாதவர்களும் எதிர்காலத்தில் வலைத்தளத்தைத் தொடங்க ஊக்கம் பெறலாம் என்பதால் அனைவரும் இப்போட்டியில் கலந்துகொள்ளலாம். கட்டுரைகளைப் படமாக (jpg) எடுத்து அனுப்பாமல் ஒருங்குறி தமிழ் லதா (Unicode Tamil Font) எழுத்துருவில் அனுப்ப வேண்டும்.

3. கட்டுரையை தங்கள் தளத்தில் 21/02/2014 இரவு 12 மணிக்குள் (இந்திய நேரம்) பதிவிடப் பட்டிருக்கவேண்டும்.

4. நடுவர்களின் தீர்ப்பே முடிவானதாக இருக்கும்

5. உங்களின் தளத்தில் கட்டுரையை வெளியிட்ட பின் அனுப்பவேண்டிய மின்னஞ்சல் முகவரி : dindiguldhanabalan@yahoo.com

புகைப்படங்களை அல்லது பெயர்களைச் சொடுக்கினால் அவரவர் தளங்களுக்குச் செல்லலாம்... இந்த யோசனையைக் கூறிய திரு. முத்து நிலவன் ஐயாவிற்கு நன்றி...

நடுவர்கள் குழு :

1
2
3
(1)கவிஞர் திரு.நா.முத்துநிலவன்(2)கவிஞர் திரு.வித்யாசாகர்(3)கவிஞர் திரு.இராய.செல்லப்பா

நிர்வாகக் குழு :

1
2
3
4

(1)கவிஞர் திரு.ரமணி(2)திரு.பொன்.தனபாலன்
(3)திரு.ரூபன்(4)திரு.அ.பாண்டியன்

பரிசுகள் விபரம் (சுட்டியைக் கீழுள்ள கட்டத்தில் கொண்டு வரவும்)

முதல் மூன்று பேர்களுக்கு : பதக்கம்+சான்றிதழ்
ஆறுதல் பரிசு ஏழு பேர்களுக்கு : சான்றிதழ்
புத்தகப் பரிசு : நடுவர் குழு தேர்ந்தெடுக்கும் முதல் 3 கட்டுரைக்கு
ஏற்றவாறு, ஒவ்வொரு பதிவரின் கட்டுரையில் சிறப்பாக
பின்னூட்டம் இடும் 3 பேர்களுக்கும், அவர்கள் விரும்பும்
புத்தகத்தைக் கவிஞர் திரு. நா. முத்துநிலவன் ஐயா அனுப்புவார்கள்.
நன்றி...

வலைத்தளம் இல்லாதவர்களின் கட்டுரையை நண்பர் திரு.ரூபன் அவர்களின் புதிய (Blogspot) வலைப்பூவில் வெளியிடப்படும். பெருவாரியான எண்ணிக்கையில் பங்கெடுத்துக்கொண்டு தமிழ் வளர்க்க வாரீர் வாரீர் என்று வரவேற்கிறோம்...! மேற்கொண்டு விளக்கம் தேவையெனில் தயங்காது மேலே குறிப்பிட்டுள்ள மின்னஞ்சல் முகவரிக்குத் தொடர்பு கொள்ளுங்கள்... கலந்து கொள்ளும் அன்பர்கள் தங்களின் பெயர், மின்னஞ்சல் மற்றும் வலைத்தள முகவரியைப் பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்... வலைப்பதிவர் நண்பர்களே... உங்களின் வலைப்பக்கத்தில் இந்த அறிவிப்பை வெளியிட்டு உதவும்படி கேட்டுக் கொள்கிறோம்... நன்றி...

கீழே கருத்திட்ட நண்பர் கேட்டுக் கொண்டதற்கிணங்க, போட்டியின் அறிவிப்புக்கான LOGO Script-யை உங்களின் தளத்திலும் இணைக்கவும்... விளக்கம் :

Layout → Add a Gadget → (popup window open - Select →) HTML/JavaScript → (copy the following script) → Save

நண்பர்களிடம் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி

புதிய பதிவுகளை பெறுதல் :


தொடர்புடைய எண்ணங்களின் வண்ணங்கள் சில :


முகநூல் மூலம் கருத்துக்களை பகிர :

கருத்துகள்

  1. போட்டியின்னு வந்துவிட்டா சிங்கம் என்று பாட ஆசை... முயற்சிப்போம்..

    பதிலளிநீக்கு
  2. கலந்துகொள்ளப்போகும் அனைவருக்கும் 'எங்கள்' வாழ்த்துகளும்.

    பதிலளிநீக்கு
  3. ரூபன், மற்றும் பாண்டியனின் முயற்சிக்கு பாராட்டுக்கள். சிறந்த நடுவர்கள். கட்டுரைப் போட்டியால் களைகட்டட்டும் புத்தாண்டும் பொங்கலும். வாழ்த்துகளும் ஆதரவும் என்றும் உண்டு. நன்றி

    பதிலளிநீக்கு
  4. தங்களின் இப்போட்டி சிறப்பாக வெற்றிபெறவும் தமிழ்ப் பணி சிறக்கவும் தங்களுக்கும் குழுவினருக்கும் நடுவர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  5. தாங்கள் இது போன்ற நல்ல விஷயங்களைச் செய்வதைப் பாராட்ட வார்த்தைகள் இல்லை. தாங்களும் தங்கள் நண்பர்களும் -திரு ரமணி, திரு பாண்டியன், திரு ரூபன், எலோரும் சேர்ந்து, தமிழை வளர்க்கவும், தமிழில் ஆர்வத்தை இனி வரும் தலைமுறையையும் தூண்டும் வகையில், நல்ல உள்ளத்துடன் இணைந்து, ஒருவருக்கொருவர் உதவி, நடத்தும் போட்டிக்கு உங்கள் எல்லோருக்கும் எங்கள் மனப்பூர்வமான வாழ்த்துக்கள்! பாராட்டுக்கள்!!. நடுவர்களுக்கும் வாழ்த்துக்கள்!! தொடருங்கள்! போட்டி இனிதே ஆரம்பமாகட்டும்!!

    துளசிதரன், கீதா

    பதிலளிநீக்கு
  6. அன்பு சகோதரருக்கு வணக்கம்
    போட்டிக் குறித்த அறிவிப்பை மிக அழகாக தங்கள் பாணியில் தந்து அசத்தி விட்டீர்கள். தங்கள் தளத்தில் அறிவிப்பைப் பார்க்கும் போது கூடுதல் மகிழ்ச்சி பிறக்கிறது. போட்டிக் குறித்து பிள்ளையார் சுழி போட்டதலிருந்து தங்கள் ஆலோசனைகள், செயல்பாடு தான் எங்களுக்கு உற்சாகம் அளிக்கிறது. உண்மையில் போட்டியை நீங்கள் தான் நடத்துகிறீர்கள் என்று சொன்னால் அது மிகையல்ல. நடுவர்களுக்கும் நிர்வாக குழுவிற்கும் போட்டியில் கலந்து அனைத்து உள்ளங்களுக்கும் வாழ்த்துகளும் நன்றிகளும். போட்டியை வெகு சிறப்பாக நடத்தி விடலாம் சகோதரர். தாங்கள் இருக்க எங்களுக்கு கவலையேது பயமேது. பகிர்வுக்கு மிக்க நன்றிகள். அனைத்திலும் இணைந்திருப்போம் சகோதரர். நன்றி..

    பதிலளிநீக்கு
  7. போட்டி சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  8. இப் போட்டி சிறக்கவும் வெற்றி பெறவும் எனது வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  9. போட்டியில் பங்கு பெற இருக்கும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்!போட்டியை நடத்தும் திரு ரூபன் அவர்களுக்கும் திரு அ.பாண்டியன் அவர்களுக்கும் சிறப்பு வாழ்த்துக்கள்! நடுவர்கள் பணி சிறக்கவும் வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  10. போட்டி அறிவிப்பை மிக அழகாக வடிவமைத்து வெளியிட்டுள்ளீர்கள். எனது யோசனையை ஏற்றுச் செயல்படுத்தியமைக்கும் நன்றி.
    போட்டியில் கலந்துகொள் எழுதிக் கொண்டிருப்போர்க்கு இப்போதே என் இனிய இதய வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  11. நல்லதொரு முயற்சி. வாழ்த்துகள். வாய்ப்பு இருந்தால் கலந்து கொள்கின்றேன்.

    பதிலளிநீக்கு
  12. நல்ல சேவை .வாழ்த்துகள்
    எங்கள் வலைபக்கத்தில் வெளியிட உங்கள் அறிவிப்பை எடுக்க முடியாது வைத்துள்ளீர்கள் பின்பு எப்படி வெளியிடுவது!

    பதிலளிநீக்கு
  13. தைப்பொங்கலை முன்னிட்டு மாபெரும் சிறப்புக் கட்டுரைப் போட்டிக்கு இனிய வாழ்த்துகள்..!

    பதிலளிநீக்கு
  14. போட்டிக்கான தலைப்புகள் அருமை !
    நடுவர் மற்றும் நிர்வாகக் குழுவினருக்கும் பாராட்டுகள் !
    த.ம +1

    பதிலளிநீக்கு
  15. அன்பின் திரு.ரூபன், மற்றும் திரு.பாண்டியன் ஆகியோரின் சீரிய முயற்சிக்குப் பாராட்டுக்கள்.
    கட்டுரைப் போட்டி சிறப்புடன் நிகழ நல்வாழ்த்துகள்!..

    பதிலளிநீக்கு
  16. இனியதோர் தகவலுக்கு இனிய நல்வாழ்த்துகள்.

    போட்டியில் பங்குபெறப்போகும் அனைவருக்கும் பாராட்டுக்கள் + நல்வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  17. போட்டி சிடப்பாக நடைபெற வாழ்த்து!

    பதிலளிநீக்கு
  18. நல்லது..

    இந்த போட்டி சிறப்பாக நடக்க வாழ்த்துக்கள்...

    கலந்துக்கொள்ளும் அனைவருக்கும் முன்னதாகவே வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்...

    நல்லதொரு தலைப்புகள்...

    பதிலளிநீக்கு
  19. போட்டியில் பங்குப்பெரும் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள். மேலும் நடுவர்கள் அனைவருக்கும் என்னுடைய மானாமர்ந்த பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  20. அருமையான விஷயம் நிச்சயம் பகிர்கிறேன் மற்றும் கலந்து கொள்கிறேன்

    பதிலளிநீக்கு
  21. நல்ல முயற்ச்சி... கலந்து கொள்ள இருக்கும் அனைவருக்கும் வாழ்துக்கள்...

    பதிலளிநீக்கு
  22. நல்ல தகவலுக்கு வாழ்த்துக்கள். கலந்து கலக்கவிருப்போருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  23. இப் போட்டி சிறக்கவும் வெற்றி பெறவும் எனது வாழ்த்துக்கள்
    Vetha.Elangathilakam.

    பதிலளிநீக்கு
  24. அருமையான முயற்சி . :) வாழ்த்துக்கள் சகோ :)

    பதிலளிநீக்கு
  25. நல்ல முயற்சி. குழுவினருக்குப் பாராட்டுக்கள். போட்டி சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  26. நல்ல தகவல் நணப்ரே போட்டியில் கலந்து கொள்கிறேன்

    பதிலளிநீக்கு
  27. பங்குபெற போகும் அன்பர்களுக்கு வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
  28. மலைக்க வைக்கும் மகத்தான சேவை!
    வலையுலகில் சீரிய சிந்தனைகளுடன்
    தமிழ்மொழி ஆற்றலையும் வளர்க்க முன்னெடுக்கப்பட்டுள்ள
    கட்டுரைப் போட்டி சிறப்பாக நடைபெற வாழ்த்துகிறேன்!

    பங்கு கொள்ளும் அனவருக்கும் வாழ்த்துக்களுடன்,

    அழகிய அசத்தல் தொழில் நுட்பமுடன்
    இங்கு பதிவிட்ட சகோதரர் தனபாலனுக்கும்
    போட்டி நடுவர்கள், நிர்வாகக் குழுவினர் யாவருக்கும்
    எனது உளமார்ந்த நல்வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  29. போட்டியில் பங்கேற்கும் அனைவருக்கும்
    என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
    தேர்ந்தெடுக்கப்பட்ட சிறந்த நடுவர்களுக்கு
    நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.
    போட்டி நடத்தும் நண்பர்களுக்கு
    இதயம் கனிந்த நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  30. தலைப்புக்கள் அருமை.சகோ.கலந்து கொள்ள முயற்சிக்கிறேன்.நன்றி பகிர்வுக்கு.

    பதிலளிநீக்கு
  31. சிறந்த முயற்சி !

    பங்களிப்பாளர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு

  32. கட்டுரைப் போட்டி சிறப்பாக நடக்க வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  33. தமிழர் பெருநாளை தைத்திங்கள் திருநாளை ஆதி மொழியாம் எம் அன்னை மொழி கொண்டு தித்திக்கும் செங்கரும்பென தீந்தமிழில் கட்டுரைப் போட்டி வைத்திருக்கின்றீர்..பழையன கழிந்து புதியன பிறக்கட்டும், தமிழர் வாழ்வு அறிவில் சிறக்கட்டும்.. தமிழ் புத்தாண்டாம் தை 1 தமிழர்கென தனிநாடு உருவாக லட்சியம் கொள்ளட்டும்..வாழ்த்துக்கள் நண்பரே..

    பதிலளிநீக்கு
  34. கலந்துகொள்ளப்போகும் அனைவருக்கும் எனது அன்பான வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  35. அன்பினிய திரு தனபாலன்,

    அனைத்து தலைப்புகளும் ஆக்கப்பூர்வமானவை. கலந்துகொள்ள முயல்வேன். நன்றி.

    அன்புடன்
    பவள சங்கரி

    பதிலளிநீக்கு
  36. வணக்கம்
    தனபால்(அண்ணா)

    கட்டுரைப்போட்டிக்கான விளம்பர அறிவிப்பு மிக அழகாக உள்ளது. இந்த போட்டியை நடத்துவதற்கு பல வலையுலக உறவுகளின் ஒத்தாசை இருப்பதை பின்னூட்டம் வாயில் அறிய முடிகிறது.
    -------------------------------
    இப்படியான போட்டியை நடாத்த வேண்டும் என்று கவிஞர்.ரமணி ஐயாவிடமும் தனபால் அண்ணாவிடமும் கேட்டேன் அதற்கு அவர்கள் சொன்ன பதில் எனக்கு மிகவும் பிடித்திருந்தது.அதை இந்த நேரத்தில் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

    ரூபன் உங்களின் சிறுவயதில் இந்த மகத்தான பணியை செய்ய முன்வரும் உங்களுக்கு எங்களின் உதவி எப்போதும் இருக்கும் என்று சொன்னார்கள். அதன் பின்பு அன்புச்சகோதரன் பாண்டியன் அவர்கள் இடமும் இது சம்மந்தமாக பேசியபோது.என்பேச்சுக்கு மறுப்பு கூறாமல் உடனடியாக சிறப்பாக செய்வோ என்று கூறினார்.
    -------------------------------
    அதன் பின்பு நடுவர்கள் கவிஞர்.நா.முத்து நிலவன் ஐயா. கவிஞர்.குவைத் வித்யாசாகர்.(அண்ணா)கவிஞர்.இராய.செல்லப்பா ஐயா
    ஆகியோரிடம் நான் பேசிய போது எந்த வித மறுப்பும் இல்லாமல் சிறப்பாக செய்வோம் என்று கூறினார்கள்..
    -------------------------------
    இந்தப் போட்டியை நடத்துவதில் என்னுடைய பங்கு ஒருபக்கம் இருந்தாலும்.
    திரு.கவிஞர்.ரமணி ஐயா.
    திரு.தனபாலன்(அண்ணா)அன்புச்சகோதரன்.திரு.பாண்டியன் இவர்கள் மூவரின் உதவி எனக்கு100%வீதம் பக்கபலமாக உள்ளது என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
    --------------------------------
    போட்டி சிறப்பாக நடைபெற வலையுலக உறவுகளின் ஒத்தாசை எப்போதும் இருக்கட்டும்
    ----------------------------------

    -நன்றி-
    -அன்புடன்
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  37. நன்றி தனபாலன் அய்யா. என் வலைப்பக்கததில் ஏற்றிவிட்டேன்.

    பதிலளிநீக்கு
  38. வணக்கம்
    தனபாலன்(அண்ணா)

    இன்று என்னுடைய உடல் நிலை சரிஇல்லாத காரணத்தால் என்னுடைய கருத்து
    மிகத்தாமதமாக வந்துள்ளது..

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  39. போட்டியில் பங்கேற்கும் அனைவருக்கும் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்!!. இம்மாதிரியான போட்டியை நடத்துவது என்னைப் பொறுத்தவரை ஒரு சிறந்த சேவை!!.. தங்களுக்கும் மனமார்ந்த பாராட்டுக்கள்!!!!!..(இது வரை எந்தப் போட்டியிலும் கலந்து கொண்டதில்லை. தலைப்புகள் ரொம்ப அருமையாக இருக்கின்றன. ஆகவே,இம்முறை யோசனை பலமாக இருக்கிறது!!!!).

    பதிலளிநீக்கு
  40. கலந்துக் கொள்ள முயற்சி செய்கிறேன் சகோ..போட்டி சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்!!

    பதிலளிநீக்கு
  41. கலந்துகொள்ளப்போகும் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  42. போட்டியில் பங்கு பெற இருக்கும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்!போட்டியை நடத்தும் திரு ரூபன் அவர்களுக்கும் திரு அ.பாண்டியன் அவர்களுக்கும் சிறப்பு வாழ்த்துக்கள்! நடுவர்கள் பணி சிறக்கவும் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  43. வணக்கம் தங்கள் மற்றும் தங்கள் இல்லத்தில் அனைவரின் நலனை அறிய ஆவல் . எனது கணினி பழுது காரணமாக இணையம் பக்கம் வர இயலவில்லை . இணைய உறவுகள் அனைவரின் நலனையும் அறிய ஆவல் . அனைவரையும் கேட்டதாக கூறவும் .

    பதிலளிநீக்கு
  44. போட்டி அறிவிப்பத்தில் போட்டி வைத்தால் நீங்க வின் பண்ணுவிங்க DDஅண்ணா .கலக்குறிங்க

    பதிலளிநீக்கு
  45. சமூகத்திற்கு நன்மை பயக்கும் தலைப்புகளாயுள்ளன.
    நடத்துனர்களுக்கு நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  46. எனது இரு வலைப்பூக்களில் தங்கள் விட்ஜட்டை இணைத்திருக்கிறேன். போட்டி வெற்றி பெறவும் போட்டியில் பங்கெடுப்போருக்கும் எனது வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  47. புதிய ஆன்ட்ராய்ட் போன் வாங்கியிருப்பதாக குருவி சொல்லிற்று. நான் விண்டோஸ் போன் வாங்கியிருக்கிறேன். இந்த மாதிரி போன்களில் தமிழ் எழுத்துகளை நிறுவ முடியுமா?

    பதிலளிநீக்கு
  48. கலந்து கொள்ளும் அனைவருக்கும் வாழ்த்துகள்..

    பதிலளிநீக்கு
  49. வணக்கம் ஐயா எழுச்சியான தங்கள் முயர்ச்சிக்கு பாராட்டுக்கள் மீண்டும் ஒரு திருவிழா கலைகட்ட தொடங்கிவிட்டது வாழ்த்துக்கள் ஐயா

    பதிலளிநீக்கு
  50. அழகான அறிவிப்பு..நடத்துபவர்களுக்கும், நடுவர்களுக்கும் நன்றி! கலந்துகொள்ளப் போகும் அனைவருக்கும் வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
  51. உங்கள் பணி சிறக்கட்டும்...
    வாழ்த்துக்கள்...
    முயற்சிக்கிறேன்...

    பதிலளிநீக்கு
  52. கலந்து கொள்ளப் போகும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
    போட்டியை நடத்தும் ரீபன் அவர்களுக்கும் பாண்டியன் அவர்களுக்கும் தேர்ந்து எடுக்க போகும் நடுவர்களுக்கும் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  53. வணக்கம் சகோதரா
    அன்றே நான் இட்ட கருத்தை காணவில்லை.
    இனியகவிதை என்ற பெயரில் என்பதில் குழப்பம் என்று நினைக்கிறன். அதனால் இப்பொழுது இடுகிறேன்.
    நடுவர்களுக்கும், பங்கு பற்றுபவர்களுக்கும், இதை நடத்தும் ரூபன் பாண்டியன் அவர்களுக்கும் தங்களுக்கும் நன்றியும் பாராட்டும் உரித்தாகட்டும். இவை சிறப்பாக நடக்க என் மனமார்ந்த வாழ்த்துக்கள்....!
    புதிய கவிதை இட்டிருக்கிறேன் பாருங்கள் சகோதரா.

    பதிலளிநீக்கு
  54. நல்ல முயற்சி. குழுவினருக்குப் பாராட்டுக்கள். போட்டி சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்
    kalakarthik(karthik amma)

    பதிலளிநீக்கு
  55. கதை, கவிதை ன்னா ஒக்கே.. கட்டுரை எல்லாம் கொஞ்சம் தூரம் பாஸு.. நம்ம உயரம் நமக்கு தெரியுமே.. ஹிஹிஹி..

    கலந்துக்குற எல்லாருக்கும் என் வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
  56. போட்டியின் தலைப்புகளே சொல்கின்றன, இன்றைய காலகட்டத்தின் தேவைகளை. கலந்துகொள்ளவிருக்கும் அனைவருக்கும் வாழ்த்துக்கள். இப்படியொரு போட்டியைத் திறம்பட நடத்த முன்வந்துள்ள நண்பர்களுக்குப் பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  57. கலந்துகொள்ளப்போகும் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்.

    enaku 4 line kavithai elutharthukullavye nakku velila vanthuduthu ithula kathai enga irunthu elutharthu .

    anney kathai eluthuvathu eppadinu oru pathivu podunga puniyama pokumga anna

    பதிலளிநீக்கு
  58. பிறக்கப் போகும் புத்தாண்டில் எல்லா நலனும் வளமும் பெற்று
    வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றேன் சகோதரா தங்களின்
    சிறந்த படைப்பாற்றலுக்கும்
    சேர்த்து .........

    பதிலளிநீக்கு
  59. போட்டி சிறப்பாக அமைய வாழ்த்துக்கள். இணையத்தில் எழுதுவது, மற்றும் பின்னூட்டங்கள் இடுவது என்ற இரண்டையும் தாண்டி நிறைய செயல்பாடுகளை இணையத்தில் செய்துவருகின்றீர்கள். அதில் இவையெல்லாம் அடக்கம். தவிர நீங்கள் சொல்லித்தான் வலைச்சரம் சென்று என்னுடைய பதிவும் அங்கே இடம் பெற்றிருப்பதையும் பார்த்தேன். இணையத்தில் நிறையப் பேருக்கு உதவும் விதமாக உங்களின் பல்வேறு செயல்பாடுகள் இருக்கின்றன. இதற்காகவும் என்னுடைய பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  60. அருமையான முயற்சி. இது தமிழர்களிடையே தமிழ் பற்றை வளர்க்க உந்துகோலாக இருக்கும். என்னுடைய தளத்தில் இணைப்பு கொடுத்துவிட்டேன். முகநூல் பக்கத்திலும் இணைத்துவிட்டேன்.
    கண்டிப்பாக கலந்தும்கொள்வேன்.

    என் தளத்தில் புதிதாக பீட்ஸா-3; நேரம் இருந்தால் படித்து தங்கள் ஆசீரை வழங்குங்கள்.

    பதிலளிநீக்கு
  61. நல்ல முயற்சி! தமிழையும், திறமையையும் ஊக்குவிக்கும் நல்ல முயற்சி!!
    வாழ்த்டுக்கள்!!

    பதிலளிநீக்கு
  62. போட்டி சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்.

    உங்களுக்கும் குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
  63. தங்களுக்கும், தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் !

    நீங்கள் நினைத்த காரியம் வெற்றி பெற வாழ்த்துகிறேன்..... ஆரோக்கியமும், வளமும் பெருகட்டும் இந்த ஆண்டில் !!

    பதிலளிநீக்கு
  64. கலந்து கொள்ளும் அனைவருக்கும் வாழ்த்துகள். போட்டி சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்! நன்றி...

    பதிலளிநீக்கு
  65. தங்களுக்கும் தங்களின் அன்பான குடும்பத்தினர், நண்பர்களுக்கும் என் இனிய உழவர் திருநாள் மற்றும் தமிழர் திருநாள் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென்று இடித்தற் பொருட்டு. (குறள் 784)

நட்புச் செய்துகொள்வது நண்பரோடு சிரித்து மகிழ்வதற்காக மட்டும் அல்ல. மிகுதியாகத் தவறு செய்யும்போது, அவரைக் கடிந்து திருத்துவதற்கே ஆகும்.