🏠 வணக்கம் காப்பகம் நன்றி

தேடல் 🔎



புதிய பதிவுகளை பெற ✉



வாழும் காலத்திலேயே சொர்க்கம்...!

வணக்கம்... அனைவருக்கும் இனிய தீபத் திருநாள் நல்வாழ்த்துக்கள் :- நம் சந்தோசங்கள் யாவும் வெங்காயம் உட்படக் காய்கறிகளின் விலை போலத் தினமும் உயரட்டும்... நம் துன்பங்கள் யாவும் மரம் வளர்க்காததால் மழை இல்லாத காலம் போலச் சுத்தமாக இல்லாமல் போகட்டும்-வாழ்க வளமுடன்!?

நேத்து கோவில் வாசல்லே இருக்கிற பிச்சைகாரங்களுக்கெல்லாம் 10 ரூபாய் பிச்சை போட்டா, அதிலே ஒருத்தர் "தம்பி... பிச்சைன்னா ஓர் ரூபா இரண்டு ரூபா போடணும்... இப்படி ஊதாரித்தனமா 10 ரூபாய் பிச்சையா போடக் கூடாது" அப்படிங்கிறார்... நானும் "என்னய்யா... 10 ரூபாயைப் பார்த்ததும் 'நல்லாயிரு மகராசா'-ன்னு வாழ்த்துவேன்னு பார்த்தா, எனக்கே அறிவுரை சொல்றே...!" அதுக்கு அவர் "தம்பி, நீ மகராசனா இருக்கணும், என்னிக்குமே இருக்கணும் அப்படிங்கிற காரணத்துக்காக தான் சொல்றேன்... உன்னை மாதிரி இளைஞனா இருக்கும் போது, உன்னைமாதிரி தர்மம் செஞ்சி தான் இப்போ இந்த நிலைமையிலே இருக்கேன்... காசு விசயத்திலே மட்டும் கவனமா தர்மம் பண்ணுப்பா..." அப்படிச் சொன்னார்...

ஹாஹா... மனமே இது நகைச்சுவை... ஆசைகளே இல்லாதவங்களும், தேவைகளைப் பற்றி கவலைப்படாதவங்க தான் தருமவான்களாக, வள்ளல்களாக இருக்க முடியும்...

அடப் போப்பா...! தனக்கு எது தேவை...? எதுவரை தேவை...? எவ்வளவு தேவை...? என்று எப்படி மனிதர்கள் முடிவு செய்வது ? மனித ஆசைக்கும் தேவைக்கும் எல்லை உண்டா ?

எல்லையைத் தான் மனிதனின் மகிழ்ச்சிக்குத் தேவையான மூன்று முத்துக்கள் என்ன? பதிவிலே சொல்லியாச்சி...! நீ சொல்றது அளவற்ற ஆசைகளும் தேவைகளும் உள்ளவங்க... அவங்க கஞ்சன்களாக மட்டுமே இருக்க முடியும்... ஆனால் உண்மையான தானமும் தர்மமும் எது தெரியுமா...? உடல், பொருள், ஆவி எதையும் தனக்கென கருதாமல் அடுத்தவர்களுக்குத் தந்து விடுவது... அது மட்டுமில்லாமல் வறியார்க்குஒன்று ஈவதே ஈகை என்று நம்ம ஐயன் சொல்லியுள்ளார்... (படம் : படகோட்டி) இல்லை என்போர் இருக்கையிலே; இருப்பவர்கள் இல்லை என்பார்... மடி நிறையப் பொருள் இருக்கும்; மனம் நிறைய இருள் இருக்கும்... எது வந்த போதும் பொதுவென்று வைத்து வாழ்கின்ற பேரை வாழ்த்திடுவோம்...

ஒரு கதையைக் கேள் : (வாசிப்பவர்களுக்கு : வலைத்தளத்தில் இதுவும் (scrolling text) ஒரு பரிசோதனை... கதையை அறிந்தவர்கள் கீழே தாவலாம்... மற்றவர்கள் scroll செய்து வாசிக்கலாம்...)
புரியுதா மனமே...? பாத்திரம் அறிந்து பிச்சை போடு, தனக்கு மிஞ்சி தான் தானமும் தர்மமும் என்பதெல்லாம் தோற்றவர்களின் / சோம்பேறிகளின் புலம்பல்கள்... கொடுக்கும் குணம் வந்தால், கெடுக்கும் நிலையே வராது... விதைத்தால் - தானே பல மடங்கு விளையவும் செய்யும்... (படம் : நம்மவர்) சொர்க்கம் என்பது நமக்குச் சுத்தம் உள்ள மனசு (வீடு) தான்...! சுத்தம் என்பதை மறந்தால் நாடும் குப்பைமேடு தான்...!


மனம் சுத்தமானால்... உழைக்கிற நோக்கம் உறுதி ஆகிட்டா கெடுக்கிற நோக்கம் வளராதுன்னு பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்கள் அன்றைக்கே சொல்லி வச்சாரு... பாட்டு அப்புறம் பாடுறேன்... ஐ...! வாப்பா... சொர்க்கத்திற்குப் போய் வருவோமா...?

வா... நரகத்திற்கும் போயிட்டு வரலாம்... இப்போ இரண்டு இடத்திலும் ஒரு பெரிய அண்டா நிறைய அறுசுவை உணவை வைத்தாயிற்று... நிபந்தனை என்ன தெரியுமா...? உண்பவர்கள் யாராக இருந்தாலும் கைகளை மடக்காமல் உணவை எடுத்து கைகளை மடக்காமல் உண்ண வேண்டும்...

ஐயோ...! கைகளை மடக்காமல் எப்படி...? என்ன கொடுமை DD...?

ஹா... ஹா... வா நேரமாகி விட்டது, இரண்டு இடத்திலும் சென்று பார்த்து விட்டு வரலாம்... // நரகவாசிகள் பக்கம்: அங்கங்கே உணவு சிதறிக் கிடந்தது... பாத்திரத்தில் முக்கால்வாசி உணவு அப்படியே இருந்தது... நரகவாசிகள் உணவை உண்டதாகத் தெரியவில்லை... சொர்க்க வாசிகள் பக்கம்: அங்கே ஒரு பருக்கை கூட சிந்தாமல், அண்டாவிலிருந்த உணவும் காலியாக்கப்பட்டிருந்தது... // எப்படி என்று கேட்போமா...?

சொர்க்கத்திலிருந்த ஒருவர் சொன்னார், "இதற்காக நாங்கள் அதிக நேரம் யோசிக்கவில்லை... கைகளை மடக்காமல் தானே உண்ண வேண்டும்...? கைகளை மடக்காமல் அண்டாவில் உள்ள உணவை எடுத்து எதிரில் உள்ள நண்பருக்கு ஊட்டினேன்... அவர் எனக்கு ஊட்டினார்... இப்படி மாறி மாறி ஒவ்வொருக்கொருவர் ஊட்டிக் கொண்டோம்... அண்டா உணவு காலி...!"

பார்த்தாயா மனமே... நகரத்தில் உள்ளவர்கள் ← இப்படியும் சொல்லலாம் → நரகத்தில் உள்ளவர்கள் சுயநலவாதிகள்... அதனால் அவர்களால் உண்ண முடியவில்லை... சொர்க்கத்தில் வாழ்பவர்கள் பொதுநலவாதிகள்... அதனால் தாமும் உண்டு, அடுத்தவர் உண்ண வழிவகையும் ஏற்பட்டது...
!


நண்பர்களே... ஈத்துவக்கும் இன்பம் என்று நம்ம ஐயன் இதைத்தான் குறிப்பிட்டார்... வாழும் காலத்திலேயே சொர்க்கத்தை அனுபவிக்க வேண்டுமா...? அடுத்தவர்களுக்கு நம்மால் முடிந்தவற்றை மனதார கொடுப்பதன் மூலமும், சந்தோசப்படுத்துவதன் மூலமும் நாமும் பெறலாம்... சொர்க்கமும், நரகமும், உணவு என்பதும் ஒரு எடுத்துக்காட்டுக்காக இங்கே சொல்லப்பட்டதென்பது உங்களுக்குத் தெரியும் !

தீபத்திருநாளில் உறவினர்கள் வீட்டிற்குச் சென்று கொண்டாடினால் அதுவும் சொர்க்கம் தான்... வாழ்த்துகள்... நன்றி நண்பர்களே...!

தீபங்கள் கோடி நம் வீட்டில் ஏற்றி கோவிலைப் போல மாற்றிடுவோம்; அன்னைக்குப் பணிவிடை செய்திடவே - ஜென்மங்கள் வாங்கி வந்தோம்; நம் ஜென்மங்கள் மாறிடும் நேரத்திலும் - சொந்தங்கள் சேர்ந்திருப்போம்; அனைவரின் அன்பில் ஆயுள் கூடிடுமே...! ஆசை ஆசையாய் இருக்கிறதே - இதுபோல் வாழ்ந்திடவே…! பாச பூ மழை பொழிகிறதே -இதயங்கள் நனைந்திடவே…! நம்மைக் காணுகிற கண்கள் - நம்மோடு சேர கெஞ்சும்…! சேர்ந்து வாழுகிற இன்பம் - அந்த சொர்க்கம் தன்னை மிஞ்சும்… ஒரு நாள் கூட இங்கு வரமாகும் - உயிர் எங்கள் வீடாகும்... சுகமாய் என்றும் இங்கு விளையாடும் - நிரந்தர ஆனந்தம்...

© ஆனந்தம் கலைகுமார் S.A.ராஜ்குமார் 🎤 >K.J.யேசுதாஸ் @ 2001 ⟫

புதிய பதிவுகளை பெறுதல் :


தொடர்புடைய எண்ணங்களின் வண்ணங்கள் சில :


முகநூல் மூலம் கருத்துக்களை பகிர :

கருத்துகள்

  1. பின்னூட்டப் புயலே.. உங்களுக்கு தீபாவளி வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  2. அருமையானதோர் பதிவு அய்யா.

    பிறரது மகிழ்ச்சியில், நம் உள்ளத்தின் மகிழ்வு இருக்கிறது என்பதை அழகாக உணர்த்துகிறது சொர்க்கம்-நரகம் கதை.

    பகிர்ந்தமைக்கு நன்றிகள் அய்யா.

    பதிலளிநீக்கு
  3. சகோதரருக்கு வணக்கம்ம்
    அழகாக, ஆழமான கருத்துக்களை எந்த வித ஆர்பாட்டமும் இல்லாமல் தங்கள் பாணியில் நிறைய தொழில்நுட்பங்களைக் கையாண்டு வழக்கம் போல் வெற்றியும் பெற்று அசத்தியுருக்கிறீர்கள். தானும் மகிழ்ந்து மற்றவர்களையும் மகிழ்விக்கவே விழாக்கள் என்பதை நேர்த்தியாக படைப்பாகத் தந்தமைக்கு நன்றி. சொர்க்கத்துக்கே அழைத்து சென்று விட்டீர்களே! தங்களுக்கும் தங்கள் இல்லத்தார்க்கும் இந்த அன்பு சகோதரரின் தித்திக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்..

    பதிலளிநீக்கு
  4. அன்பின் தனபாலன் - இது தான் முதல் மறுமொழியா - அது சரி. வாழும் காலத்திலேயே சொர்க்கத்தை அனுபவிக்கும் வழி காட்டியதற்கு நன்றி - அடுத்தவர்களுக்கு நம்மால் முடிந்தவற்றை மனதார மகிழ்ச்சியுடன் கொடுப்பதன் மூலம் நாமும் பெறலாம். சொர்க்கம் நரகம் உணவு விதிமுறை - அருமை அருமை. நல்வாழ்த்துகள் -நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு
  5. வணக்கம்
    தனபால்(அண்ணா)

    நல்ல கருத்துக்கள் அனைவர் மனதிலும் எளிதில் விளங்கும் வகையில் உள்ளது பதிவு அருமை வாழ்த்துக்கள்

    இனியதீபாவளி வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  6. சிறப்பானதொரு பகிர்வு! வாழ்த்துக்கள் அய்யா!

    பதிலளிநீக்கு
  7. வழக்கம்போல் அருமையாய் நல்ல கருத்துக்களை தந்தமைக்கு வாழ்த்துக்கள்! உங்களுக்கு எனது உளம் கனிந்த தீபாவளி நல் வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  8. வணக்கம் சகோ.. தீபாவளிக்கு பொருத்தமான அருமையான பதிவு.. அருமை.
    மனம் நிறைந்த இனிய தீபாவளி நல வாழ்த்துக்கள்.. .!

    பதிலளிநீக்கு
  9. சிறந்த வாழ்க்கை நிலையியல் தத்துவம்
    சொல்லும் பதிவு..
    இதை பிச்சை என்ற வடிவிலும் மட்டும்
    எடுத்துக்கொள்ளாமல்...
    இருக்கையில் ஊதாரியாக ஆட்டம்போட்டுவிட்டு
    கரைந்துபோகையில்
    தலையைத் தொங்கப்போட்டு பயனில்லை...
    கஞ்சத்தனம் வேண்டாம்...
    பரோபகாரியாக வும் இருக்கவேண்டாம்...
    வாழ்வின் நிதர்சனம் அறிந்து...
    நம்மை நாம் அறிந்து
    இயல்பாக வாழ்தலே வாழ்க்கையாம்...
    ஆழமான பதிவு நண்பரே.. வாழ்த்துக்கள்..

    பதிலளிநீக்கு
  10. இங்கே ஒரு வாரமாக வந்து கொண்டே இருக்கின்றார்கள். எளியவர்கள் தீபாவளி போனஸ் என்று கேட்டு வருவதை விட வசதியாக இருப்பவர்கள் உரிமையாக வந்து சற்று மிரட்டலோடு கேட்பது தான் தற்போதுள்ள நடைமுறை.

    ஆனாலும் அடித்தட்டு விளிம்பு நிலை மனிதர்களுக்கு எங்களால் முடிந்த உதவிகளை செய்து கொண்டேயிருக்கின்றோம்.

    பதிலளிநீக்கு
  11. குடும்பத்தினர் அனைவருக்கும் எங்கள் தீப ஒளி திருநாள் வாழ்த்துகள் தனபாலன்.

    பதிலளிநீக்கு
  12. பதிவைப் படிக்கும் போதே சொர்கத்திற்க்கு போன உணர்வை தந்தன ,அந்த மேகக் கூட்டம் !
    த.ம 6

    பதிலளிநீக்கு


  13. சொர்க்கத்தை தேட வேண்டாம் அதுவே நம்மைத்தேடிவரும் வழியைச்
    சொன்ன தனபலுக்கு மிக்க நன்றி!

    பதிலளிநீக்கு
  14. அருமையான கருத்துப்பதிவு... என்னுடைய தோழி ஒருவர் கூறுவார்.. நாம் மற்றவருக்கு நமக்குத் தேவையானதையும் பகிர்ந்தால் நமக்குத் தேவையானவை தானே வந்து சேரும் என்பதாய்... அது பழக்கத்தால் உண்மையாகியும் இருக்கிறது...

    பதிலளிநீக்கு
  15. மனமகிழ்ச்சியுடன் உதவினால் இருவரின் வாழ்வும் சிறக்கும் என்று சொன்னமை நன்று

    Typed with Panini Keypad

    பதிலளிநீக்கு
  16. ஒருமுறை ஒரு பிச்சைக்காரருக்கு நான் ஐந்து ருபாய் கொடுத்தேன். அவர் சொன்னார்: "தம்பி, ஐந்து ருபாய்க்கு என்ன கிடைக்கும்? ஒரு டீ ஏழு ருபாய் அல்லவா? இட்டிலி பன்னிரண்டு ரூபாய் அல்லவா? நீ கொடுப்பதில் ஒருவேளை டீயோ அல்லது இரண்டு இட்டிலியோ சாப்பிட முடிந்தால் அல்லவா நீ செய்தது தருமம் ஆகும்?" அன்று முதல், கொடுத்தால் பத்து ரூபாயாகக் கொடுத்துவிடுவேன். தீபாவளியன்று மிக நல்ல கட்டுரையைப் படிக்கக் கொடுத்தீர்கள். நன்றி மிக உரித்தாகுக தங்களுக்கு. - கவிஞர் இராய செல்லப்பா (இமயத்தலைவன்), சென்னை

    பதிலளிநீக்கு
  17. வாழும் காலத்திலேயே சொர்க்கம்

    தனக்கு மிஞ்சி தான் தான தர்மம் ...!

    அருமையான பகிர்வுகள்..பாராட்டுக்கள்..!

    பதிலளிநீக்கு
  18. நம் சந்தோசங்கள் வெங்காய விலைபோல் உயரட்டும்...சூப்பர் பஞ்ச் டயலாக் தலைவா.

    பதிலளிநீக்கு
  19. வாழும் காலத்திலேயே சொர்க்கம்

    தனக்கு மிஞ்சி தான் தான தர்மம் ...!

    அருமையான பகிர்வுகள்..பாராட்டுக்கள்..!

    பதிலளிநீக்கு
  20. சொர்க்கம் நரகம் கதை அருமை! மனம் கவர்ந்த பதிவு! பதிவுக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  21. ரசித்த்து கொண்டே பிளஸ் +1 மொய் வைத்தேன்;
    மறு மொய் எனக்கு வைக்கவேண்டும் என்று உங்களுக்கு சொல்லவும் வேண்டுமா என்ன?

    பதிலளிநீக்கு
  22. ”பாத்திரம் அறிந்து பிச்சையிடு “ என்றார்கள் என்பதற்காக, ஒவ்வொருவரைப் பற்றியும் ஆராய்ச்சி செய்து கொண்டே இருந்தால், தானதர்மம் செய்ய முடியாது என்பதனை, நன்றாகவே எடுத்துக் காட்டுகளுடன் ஆரம்பத்திலேயே சொன்னீர்கள். கொடுப்பதில் இருக்கும் மகிழ்ச்சியை கடைசியில் சொல்லி விளக்கினீர்கள். உங்கள் சிந்தனை தொடரட்டும்.
    எனது உளங் கனிந்த தீபாவளி நல் வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  23. அதிர்டசாலி உங்களுக்கு நல்ல மனசாட்சி நீங்களும் சரி நாங்களும் சரி கவனமாக செவிமடுப்போம்.
    நல்ல ஆசானாக, நண்பனாக வழி நடத்தும் அருமை...!
    பகிர்வுக்கு நன்றி...! தொடர வாழ்த்துக்கள்...!

    என் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்...!

    பதிலளிநீக்கு
  24. ஸ்க்ரோல் செய்து கதைய படிப்பது நல்லாருக்கு. எனக்கு ஒரு சந்தேகம், துறவியாகப் போகும் அரசர் தனியாக போக வேண்டியதுதானே, குடும்பத்தினரையும் அழைத்துக்கொண்டு போவது நியாயமா சொல்லுங்கள்.

    உங்களுக்கும்,உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  25. இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
    வாழ்க வளமுடன்!

    காசு விஷயத்தில் மட்டும் கவனமாக தர்மம் பண்ணுப்பா ! வித்தியாசமான பிச்சைக்க்காரர்.
    ரந்தி தேவன் கதை பகிர்வு அருமை.
    சொர்க்கம், நரகம் நல்ல பகிர்வு.
    வாழும் காலத்திலேயே சொர்க்கம் அனுபவிக்க வேண்டுமா? மிக நல்ல பகிர்வு.

    பதிலளிநீக்கு
  26. உங்களுக்கும் அனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் இனிய தீபத்திருநாள் நல்வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  27. சோதனை முயற்சி கதை சூப்பர். தீபாவளி நல்வாழ்த்துகள் அண்ணா!

    பதிலளிநீக்கு
  28. நல்ல அறிவுரையை யார் சொன்னாலும் ஏற்று கொள்ளலாம், ம்..ம்..குழந்தை சொன்னாலும்....

    பதிலளிநீக்கு
  29. அருமையான கருத்துப் பகிர்வு!!. கதையோடு சேர்ந்த கட்டுரையின் எல்லாப் பகுதிகளும் சிறப்பாக இருக்கிறது!!!.

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும், வாசகப் பெருமக்கள் அனைவருக்கும் இனிய தீப ஒளித் திருநாள் நல்வாழ்த்துக்கள்!!!

    பதிலளிநீக்கு
  30. வாழும் காலத்திலே சொர்கம்....

    மிக அருமையான பதிவு.....

    பதிலளிநீக்கு
  31. வெங்காய விலை போல, மழை இல்லாதது போல ..வித்தியாச உவமைகள்..ரசித்தேன்!
    scroll, அப்புறம் வானமும் மேகமும்...கலக்குறிங்க திரு.தனபாலன்!
    எப்பொழுதும் போலவே அருமையானதொரு பதிவு, நன்றி!
    தீபாவளித் திருநாள் வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
  32. கெடுத்து தாழும் துன்ப உலகில் கொடுத்து வாழும் இன்ப உலகின் விளக்கங்கள் அருமை

    பதிலளிநீக்கு
  33. மிகவும் ரசித்தேன் .
    வெங்காய விலை ஏற்றம்
    பிச்சைக்காரன் அறிவுரை
    மற்றும் பல் .
    ஒரு பானையில் நிறைய சோறு நிரம்பி இறந்து பலரின் பசியை ஆற்றுகின்றது .

    கட்டுரையை நீங்கள் கொடுக்கும் முறை சிறப்பு மற்றும் தனிக் கவர்ச்சி .
    கவரும் விதம் ஒரு கலை அந்த கலை அறிய நீங்கள் தனி வலை (வலைப்பூபோடலாம் .
    வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  34. பொறுத்தமான கதை, மற்றும் பொறுத்தமான குறளுடன் அருமையான பதிவு. பாராட்டுக்கள்! இனிய தீபாவளி வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  35. வாழுங் காலத்திலேயே சொர்க்கம். அதைத் தேடி நாம் போகவேண்டியதில்லை.
    செய்யும் செயலாலேயே அதுவே எமை நாடி வந்திடும்.
    அருமையான சின்னச் சின்ன உதாரணங்கள், கதைகள்,
    பாடல்வரிகள் என் அசத்திவிட்டீர்கள்!

    நவீன தொழில் நுட்பம் கண்களுக்கும் கருத்துக்கும் இதம்!
    அனைத்தும் மிக அருமை!

    உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும்
    தித்திக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  36. சொர்க்கம் நரகம் எல்லாம் மனதின் ஒப்பீடே. மண்ணில் இல்லாத சொர்க்கமும் நரகமும் வேறங்கே இருக்கப் போகிறது.நல்ல சிந்தனைகள் , சிறந்த தொழில் நுட்பப் பிரயோகம் எல்லாம் சேர்ந்து பதிவு பரிமளிக்கிறது. வாழ்த்துக்கள் DD.

    பதிலளிநீக்கு
  37. இனிய தீபத் திருநாள் வாழ்த்துக்கள் ...!


    மேகம் & ஸ்க்ரோல் ரெண்டுமே ரெம்ப புதுமை & அருமை ...!

    பதிலளிநீக்கு
  38. கொடுக்கும் மகிழ்வு எடுத்தாண்டிருந்தீர்கள் நன்று.
    பதிவு சிறப்பு.
    இனிய தீபாவளி நல்வாழ்த்து.
    வேதா. இலங்காதிலகம்.

    பதிலளிநீக்கு
  39. உங்களுக்கு எனது இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  40. பாடல்களுடன் பதிவு வழக்கம் போலவே சூப்பரு!

    பெட்டிக்குள் கதை, நகரும் மேகம்...

    DD.... எங்கேயோ போயிட்டீங்க!

    பதிலளிநீக்கு
  41. மிக அருமையான பதிவு.பிறறுக்கு தன்னால் முடிந்ததை உதவியாக செய்யும்பொது நம் மனம் மிகுந்த மகிழ்ச்சி அடையும்.நன்றி.

    பதிலளிநீக்கு
  42. பொதுநலவாதிகள் பெருக வேண்டும். . அப்படியானால் மண்ணிலேயே சொர்க்கத்தைக் காணலாம்.

    நல்ல கருத்து. நல்லா சொன்னீங்க தனபாலன் சார்.

    தீபஒளித் திருநாள் வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன். :)

    பதிலளிநீக்கு
  43. தான தர்மத்தை வலியுறுத்திய பதிவு மிக மிக நன்று.
    இருப்பினும் தானம் கொடுத்துத் தாழ்ந்து விட்டால் யாரும் தானம்
    செய்யவே அஞ்சுவர். எனவே இதனை மனத்தில் நிறுத்தி தர்மம்
    பெருக வேண்டி நாமும் சிறந்து அளவோடு சுரந்து ஈந்துவக்கும்
    இன்பம் பெறுவோம். நெஞ்சம் நிறைந்து இருக்கிறது.தீபாவளி வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
  44. மிகவும் ரசித்தேன் !

    வெங்காய விலை ஏற்றம் -பிச்சைக்காரன் அறிவுரை

    சிந்திக்க வைத்துவிட்டது.

    பதிலளிநீக்கு
  45. அருமையான பதிவு.


    இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினர்க்கும்.

    பதிலளிநீக்கு
  46. முந்தி வாழ்த்து சொல்வதில் ஒரு மகிழ்ச்சி .நன்றி

    happy deppawali bro

    பதிலளிநீக்கு
  47. இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் தனபாலன் ஐயா.

    பதிலளிநீக்கு
  48. அருமையான பதிவு
    "வாழ்வை சொர்க்கமாக்கினர்...."
    என்றீர்கள் நாசூக்காக.

    ஆம் சொர்க்கத்திற்கு அனுப்பாமல் வாழ்வை சொர்க்கமாக்கினர் என்பது அற்புதமான அருமையான சொல்லாடல்.

    பதிலளிநீக்கு
  49. மிக அருமையான பதிவு.வாழ்த்துக்கள்.
    உங்களுக்கும்,உங்க குடும்பத்தினருக்கும்
    இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  50. பிச்சைக்காரன் ஒருவன் தான் எவ்வாறு அந்தப் பிச்சைக்காரப் பதவியை அடைந்தேன் என்று சொல்லியுள்ளது ரஸிக்கும்படியாக மிகவும் நகைச்சுவையாக உள்ளது.;)

    வாழும் காலத்திலேயே சொர்க்கம்

    தனக்கு மிஞ்சி தான் தான தர்மம் ...!

    அருமையான பகிர்வுகள்..பாராட்டுக்கள்..!

    பதிலளிநீக்கு
  51. சூப்பர் பதிவு ...இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  52. பதிவும் அருமை ,பதிவுதோரும் நீங்கள் செய்யும் புதுமையும் அருமை .தீபாவளி வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  53. புதுப்புது தொழில்நுட்ப உத்திகளுடன் தர்மம் செய்தவன் தாழ மாட்டான்! தர்மம் செய்யுங்கள் என்று அழகாக உணர்த்திய சிறப்பானபதிவு! அருமை! இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  54. இனிய தீப ஒளி நிறைந்து பரவ வாழ்த்துக்கள் .வாழும் காலத்து சொர்கம் அனைவருக்கும் அமையட்டும் .

    பதிலளிநீக்கு
  55. நல்ல சிந்தனை!
    தீபாவளி வாழ்த்துக்கள் தனபாலன் அண்ணா.

    பதிலளிநீக்கு
  56. ஆகா கருத்துக்கள் அருமை

    ஸ்க்ரோலிங்க் டெக்ஸ்ட்

    மிதக்கும் மேகங்கள்

    வித்தகம்..
    நல்ல இருக்கு

    பதிலளிநீக்கு
  57. நல்ல கதைகள்...
    மற்றவர்களை சந்தோஷப்படுத்திப் பார்த்து நாமும் சந்தோஷப்படுதல் என்பது ஒரு வகை பேரின்பம்தான்.
    நல்பதிவு...

    பதிலளிநீக்கு
  58. அருமையான பதிவு!
    இனிய தீபாவளி வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  59. நகரும் சொர்க்கலோகம் அருமை.
    நகரும் வெள்ளை மேகம் நீலவானம்அழகு.
    கதை, பாடல்கள், அருமை.
    எப்போதும் ஊரில் மாமானார், மாமியாருடன் மற்றும் கணவரின் சகோதர குடுமபங்கள் சேர்ந்து தான் தீபாவளி பண்டிகை கொண்டாடுவோம்.
    இந்த முறை மகன் வீட்டில் இருக்கிறேன்.
    நினைவுகள் எல்லாம் ஊரில் தான்.
    அவர்களின் ஆசீர்வாதங்கள் எங்களுக்கு என்றும் உணடு என்ற மகிழவான நினைவுகளுடன்.
    ஸகைப்பில் நேரடி ஒளி பரப்பு வேறு பார்த்து மகிழ்வோம்.
    பேரன் இங்கு தீபாவளிக்கு யார் வருவார்கள் என்று கேட்டுக் கொண்டு இருக்கிறான்.
    இங்கு உள்ளவர்கள் நான்கு ஐந்து ந்ண்பர்கள் சேர்ந்து பண்டிகை கொண்டாடுகிறார்கள்.
    வாழும் காலத்திலேயே சொர்க்கம் அருமை.
    வாழ்க்கையை சொர்க்கமாக்குவதும், நரகம் ஆக்குவதும் நம் கையில் தானே இருக்கிறது.
    தீபாவளி வாழ்த்துக்கள் உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினர்களுக்கும்.
    வாழ்க வளமுடன்.



    பதிலளிநீக்கு
  60. அழகிய கதைகளை சொல்லி பெரிய விஷயங்களை அருமையாய் உணர்த்தியுள்ளீர்கள் தனபாலன் சார்.
    உங்களுக்கும், உங்கள குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  61. கதைகளும் கருத்துக்களும் மிக அருமை.

    தீபாவளி நல் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  62. ஹா..ஹா..ஹா.. பிச்சைக்காரரின் அறிவுரை சூப்பர்ர்:).. நினைச்சுப் பார்க்கையில் அதுவும் சரிபோலதான் தெரியுது... ஏன் தெரியுமோ.. ஏணி ஒருபோதும் மேலே ஏறுவதில்லை, எல்லோரையும் ஏத்தி விட்டுவிட்டு, தான் மட்டும் தரையிலேயே இருக்கும்.. அப்படி ஆகிடும்.. இக்காலத்தில் தானம் தர்மம் ஓவராச் செய்வோரின் நிலைமை... இப்படிக்கு மனச்சாட்சி:)

    பதிலளிநீக்கு
  63. உங்களுக்கு தெரிஞ்ச ரெக்னிக்கை எல்லாம் புளொக்கில் அள்ளி வீசி பதிவிட்டிருக்கிறீங்கபோல தெரியுது சூப்பர்.

    சொர்க்கம் நரகம்... அப்படியும் இருக்கா?:).. இதுவும் “இப்படிக்கு மனச்சாட்சி:).

    48 மணி நேர உண்ணாவிரதம்... ம்ஹூம்ம்.. இப்பவெல்லாம் 5 மணிநேரம் இருந்தாலே பெரிய சாதனையாக தெரியுதே:)... ஆனா ஒன்று இக்காலத்தில் எப்படித்தான் இருந்தாலும் என்னதான் செய்தாலும்.. தேவதைகளும் வருவதில்லை, கடவுளும் வருவதில்லையே அது ஏன்ன்???:)

    பதிலளிநீக்கு
  64. சிறப்பான பகிர்வுக்குப் பாராட்டுக்களும் என் இனிய தீபத் திருநாள்
    வாழ்த்துக்களும் சகோதரரே .

    பதிலளிநீக்கு
  65. நல்ல கருத்துக்கள்

    பதிவு அருமை


    இனிய தீபாவளி வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு

  66. ‘தனக்கு மிஞ்சி தானதருமம்’ என்றால் ‘தனக்கு போதும்’ என்று நினைக்கும் மனசு எவருக்கும் வராது. அருமையான கருத்து! தீபஒளித் திருநாள் வாழ்த்தை அழகிய பகிர்வுடன் சொன்ன நண்பா...! உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் என் இதயம் நிறைந்த தீப ஒளித் திருநாள் நல்வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
  67. சிறப்பான பகிர்வு. இனிய தீபத் திருநாள் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  68. இனிய தீப ஒளித் திருநாள் நல்வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  69. நகைச்சுவையை ரசித்தேன் ! சுயநலம் எவ்வளவு கொடியது அருமையான கதை !

    பதிலளிநீக்கு
  70. தாணமும் தருமமும் வாழவைக்கும்! அருமையான பகிர்வு உங்க்ளுக்கும் தித்திக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  71. இங்கிருந்து கொண்டே நம் வாழ்க்கையை சொர்க்கமாக்கிக் கொள்வது தான் சிறந்தது. பட்டுக்கோட்டையாரின் பாடல் வரிகளை சரியான இடத்தில் பயன்படுத்தி இருக்கிறீர்கள்.

    இனிய தீபாவளி வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  72. நல்ல பதிவு. தங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
  73. தனபாலன் உங்கள் குணம்
    உங்கள் பண்பு
    நீங்கள் ....................................................
    ரொம்ப நல்லவருங்க ................அன்புடன் பாலு

    பதிலளிநீக்கு
  74. ஆழமான கருத்துடன் கூடிய

    அற்புதமான கதையுடன் கூடிய பதிவு

    அதிகம் மனம் கவர்ந்தது

    பகிர்வுக்கும் தொடாவும் வாழ்த்துக்கள்

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார்

    அனைவருக்கும் இனிய தீபவளித்

    திரு நாள் நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு


  75. இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.

    சுப்பு தாத்தா.

    பதிலளிநீக்கு
  76. அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!..

    பதிலளிநீக்கு
  77. தங்கள் தீபாவளிப் பதிவு சிறப்பாக அமைந்திருக்கிறது.
    தங்கள் பதிவு நல்வழிகாட்டலைச் சுட்டுகிறது.
    தங்களுக்கும் தீபாவளி வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  78. சொல்லநினைத்ததை, சொல்ல வேண்டியதை மிக தெளிவாக நன்றாகப் புரியும்படி திரைப்பாடல்களின் துணையுடன் மிக அழகாக பதிவிட்டிருக்கிறீர்கள். பாராட்டுக்கள். பாராட்டுக்களும் வாழ்த்துக்களும். உங்களுக்கும் குடும்பத்தினருக்கும்தீபாவளி வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  79. வாழும் காலத்திலேயே சொர்க்கத்தைக் காட்டியதுக்கு நன்றி. உங்களுக்கும் உங்கள் குடும்பத்துக்கும் இனிய தீபாவளி வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு

  80. இனிக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்

    தூய தமிழ்மணக்க! நேய மனங்கமழ!
    ஆய கலைகள் அணிந்தொளிர! - மாயவனே!
    இன்பத் திருநாளாய் என்றும் இனித்திருக்க!
    அன்பாம் அமுதை அளி!

    கவிஞா் கி. பாரதிதாசன்
    தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

    பதிலளிநீக்கு
  81. அந்தப் பிச்சைகாரன் பத்து ரூபாய் போட்டதைப் பற்றி எழுதும்போது சந்தடி சாக்கில் 'இளைஞன் ' என்று சொல்லிட்டீங்களே DD :-)))

    குட்டிக்கதை செம...! வரவர உங்கள் பக்கத்தில் பிளாக்கர் டெக்னிக் நிறைய பயன்படுத்தி கலக்குறீங்க...

    பதிலளிநீக்கு
  82. மிக அருமை... வழக்கம்போல தாங்கள் அதைப் படைத்த விதம் மிக அருமை...
    என்னுடைய தமிழ்மண ஓட்டு+1

    பதிலளிநீக்கு
  83. தமிழ் தளங்கள் வைத்து இருப்பவர்கள் விளம்பரங்கள் மூலம் பணம் சம்பாதிக்கும் வாய்ப்பு,

    தமிழ் அட்சென்ஸ் Ad30days.in ல் இணைந்து, உங்கள் தமிழ் தலத்தில் விளம்பரங்கள் காண்பிப்பதன் மூலம் நீங்களும் பணம் சம்பாதிக்கலாம். இப்பொழுதே சேருங்கள் http://publisher.ad30days.in/publishers_account.php . பதிவுசெய்து முற்றிலும் இலவசம் .

    வாரம் ஒரு முறை உங்களின் வருமானத்தை நீங்கள் பெற்றுகொள்ளலாம்.

    பதிலளிநீக்கு
  84. சொர்க்கத்திற்கு படத்தின் மூலமும் கருத்தின் மூலமும் வழி காட்டி விட்டீர்கள்.

    பதிலளிநீக்கு
  85. ஒரு நல்ல ஆன்மீக சொற்பொழிவை கேட்ட மாதிரி இருந்தது . பாடல்களும் பொருத்தமாக கையாளப்பட்டிருந்தன.
    பாடல்களை பயன்படுத்தும்போது
    எழுதிய கவிஞர்களோடு பயன்படுத்தினால் இன்னும் சிறப்பாக இருக்கும் எனபது என் தாழ்மையான கருத்து

    பதிலளிநீக்கு
  86. உண்மைதான். கூடி வாழ்ந்தால் கோடி நன்மை சகோ. அனைவருக்கும் தீப ஒளித் திருநாள் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  87. மனதை மென்மையாக்குகின்றன உங்கள் பதிவுகள்.

    பதிலளிநீக்கு
  88. இனிய கார்த்திகைத் திருநாள வாழ்த்து.
    வேதா. இலங்காதிலகம்.

    பதிலளிநீக்கு
  89. அருமையான பதிவு. இப்பொழுது தான் தங்களின் பதிவுகளை படிக்க ஆரம்பித்திருக்கிறேன்.
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  90. படித்துவிட்டு அப்படியே மெய்மறந்து விட்டோம்! அருமையான வாழ்வியல் தத்துவத்தையும், கருத்துக்களையும் வெளிப்படுத்தும் மிக மிக அருமையான பதிவு நண்பரே!! இப்படிப்பட்ட ஒருவர், நல்ல எழுத்துக்களைப் பதியும் ஒருவர் எங்களது வலைப்பூவை தோடர்பவர், கருத்துரைப்பவர், நண்பரானவர் என்பதை நினைத்துப் பெருமை அடைகிறோம். தொடர்கிறோம்! தொடரட்டும் உங்கள் எழுத்து! வாழ்த்துக்கள் நண்பரே!!

    பதிலளிநீக்கு
  91. இருப்பவர்கள் இல்லாதவர்களுக்கு கொடுத்து வாழும் காலத்திலே சொர்க்கத்தை கண்டு கொள்வார்கள். இல்லாதவர்கள் எப்பிடி சொர்க்கத்தை காண்பது...????

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென்று இடித்தற் பொருட்டு. (குறள் 784)

நட்புச் செய்துகொள்வது நண்பரோடு சிரித்து மகிழ்வதற்காக மட்டும் அல்ல. மிகுதியாகத் தவறு செய்யும்போது, அவரைக் கடிந்து திருத்துவதற்கே ஆகும்.