🏠 வணக்கம் காப்பகம் நன்றி

தேடல் 🔎



புதிய பதிவுகளை பெற ✉



ரூபனின் தீபாவளிச் சிறப்புக் கவிதைப் போட்டி


வணக்கம் நண்பர்களே... இனிய ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்... தீபாவளித் திருவிழாவை முன்னிட்டு ரூபனின் மாபெரும் கவிதைப் போட்டிக்கு அழைக்கிறேன்... வாருங்கள்... வாருங்கள்...


இலங்கையில் திருகோணமலை மாவட்டத்தைத் தாய்வீடாகக் கொண்ட எனது இனிய நண்பர் திரு. த.தவரூபன்(ரூபன்) அவர்கள் இந்தப் போட்டியை நடத்த வேண்டும் என்று ஒரு மாதமாக மலேசியாவிலிருந்து தொடர்பு கொண்டு பல முறை பேசினார்... பதிவர் திருவிழா முடிந்தவுடன் ஆரம்பித்து விட்டோம் :

போட்டிக்கான தலைப்பு :

1. நாம் சிரிக்கும் நாளே திருநாள்
2. ஒளி காட்டும் வழி
3. நாம் சிரித்தால் தீபாவளி

போட்டியின் விதிமுறைகள் :

1. கவிதை மரபு சார்ந்தும் இருக்கலாம், வசன கவிதையாகவும் இருக்கலாம், கவிதை வரிகள் 15க்கு குறையாமலும் 25க்கு மிகாமலும் இருத்தல் நலம்.
2. ஒரு பதிவரின் ஒரு தலைப்பிலான ஒரு கவிதை மட்டுமே போட்டியில் சேர்த்துக் கொள்ளப்படும்.
3. கவிதையினை தங்கள் தளத்தில் 31/10/2013 இரவு 12 மணிக்குள் (இந்திய நேரம்) பதிவிடப் பட்டிருக்கவேண்டும்.
4. நடுவர்களின் தீர்ப்பே முடிவானதாக இருக்கும்
5. உங்களின் தளத்தில் கவிதையை வெளியிட பின் அனுப்பவேண்டிய மின்னஞ்சல் முகவரி : rupanvani@yahoo.com & dindiguldhanabalan@yahoo.com

நடுவர்கள் :

திரு. ரமணி ஐயா அவர்கள் (yaathoramani.blogspot.com)
திருமதி. ரஞ்சனி நாராயணன் அவர்கள் (ranjaninarayanan.wordpress.com)
திருமதி. தென்றல் சசிகலா அவர்கள் (veesuthendral.blogspot.com)
திரு. த.தவரூபன்(ரூபன்) அவர்கள் (2008rupan.wordpress.com)


நாம் சிரித்தால் தீபாவளி தலைப்பில் ஒரு பள்ளிக் குழந்தையின் கவிதை :

ஒளியின் நாளாம் தீபாவளித் திருநாளில் பட்டாசின் ஒலி எதற்கு ?
பண்பாடு மிக்க தமிழகத்தில் பட்டாசின் சப்தம் எதற்கு ?
பாதுகாக்கும் ஓசோனில் பாதிப்பைப் பதிய வைக்கும் பட்டாசு எதற்கு ?
பிஞ்சுக் குழந்தைகளின் கையில் வடுக்களை வழங்கும் வெடி எதற்கு ?
தூய்மையான காற்றிற்குத் துன்பத்தை உருவாக்கும் பட்டாசு எதற்கு ?
உயிர் தேசத்தை ஏற்படுத்தும் உபயோகமில்லாத பட்டாசு எதற்கு ?
உன்னதமான திருநாளை உருக்குலைக்கும் பட்டாசு எதற்கு ?
கவலையற்ற திருநாளில் காசை வீணாக்கும் பட்டாசு எதற்கு ?
நேசமுள்ள திருநாளில் நோயைப் பரப்பும் பட்டாசு எதற்கு ?
உன்னதத்தை உடைத்தெறியும் உணர்வற்ற பட்டாசு எதற்கு ?
பாரதத் திருநாட்டில் பாதிப்பை உண்டாக்கும் பட்டாசு எதற்கு ?
வசந்தமிகு தீபாவளியில் வன்முறையை வளர்க்கும் பட்டாசு எதற்கு ?
திருந்துவோம் ! திருத்துவோம் ! உணர்வோம் ! உணர்த்துவோம் !
சிரிப்பே மத்தாப்பு - அதுவே தீபாவளியின் முத்தாப்பு !

(சுட்டியைக் கீழுள்ள கட்டத்தில் கொண்டு வரவும்...) பரிசுகள் :


முதல் பரிசு : ரூ.1500 + சான்றிதழ்
இரண்டாம் பரிசு : ரூ.1000 + சான்றிதழ்
மூன்றாம் பரிசு : ரூ.500 + சான்றிதழ்
ஆறுதல் பரிசாகத் தேர்வு செய்யப்படும் ஏழு கவிஞர்களுக்கு
சிறப்புச் சான்றிதழ் வழங்கப்படும். கலந்து கொள்பவர்கள்
தங்களின் பெயர்,மின்னஞ்சல் மற்றும் வலைத்தள
முகவரிகளைப் பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்...

இனிய நண்பருக்கு தங்களின் ஊக்கமான ஆதரவுடன் தங்களின் படைப்புகளைக் காண ஆவலுடன் காத்திருக்கிறேன்...
வெல்லுங்கள்...! பரிசு அள்ளிச் செல்லுங்கள்...! வாழ்த்துக்கள்... நன்றி...


வெற்றி பெற்றவர்கள் உட்பட அனைவரின் கவிதைகளையும் வாசிக்க இங்கே சொடுக்கித் தொடரலாம். அதற்கு முன் இந்தப் பதிவைப் பற்றி தங்களின் கருத்து என்ன...?

நண்பர்களிடம் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி

புதிய பதிவுகளை பெறுதல் :


தொடர்புடைய எண்ணங்களின் வண்ணங்கள் சில :


முகநூல் மூலம் கருத்துக்களை பகிர :

கருத்துகள்

  1. சொல்லிட்டீங்க இல்லே ,கலக்கிறுவோம்!

    பதிலளிநீக்கு
  2. பள்ளிக் குழந்தையின் கவிதை அருமை..

    கவிதைதானே.. எழுதிட்டா போச்சு..!

    பதிலளிநீக்கு
  3. அசத்தல். பங்கேற்கும் அனைவருக்கும் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  4. வணக்கம்
    தனபால்(அண்ணா)

    மிக சந்தோசமாக உள்ளது வாழ்த்துக்கள் அண்ணா..மேலும் பார்வைக்கு...
    http://2008rupan.wordpress.com
    இந்த சுட்டியை அழுத்தவும்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  5. ஆசிரியர் தின வாழ்த்துக்கள். போட்டியில் பங்குபெறப்போகும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  6. பதிவர்களுக்குள் கவிதை போட்டி நடத்துவது நல்ல விஷயம். நடுவர்களாக பதிவர்களே இருப்பதை விட பள்ளி, கல்லூரி தமிழ் பேராசியர்கள் யாராவது தேர்ந்தெடுத்து கொடுத்தால் நன்றாக இருக்கும் என்பது என் கருத்து. வலைப்பக்கத்தை சார்ந்தவர் அல்லாத ஒருவர் படிக்கும் போது புதிய பார்வை கிடைக்கும். நன்றி!

    பதிலளிநீக்கு
  7. மறுபடியும் என்னை கனம் நீதிபதி ஆக்கியதற்கு நன்றி!

    பட்டாசு வேண்டாம் என்பது சரி. அந்தத் தொழிலில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு மாற்று வேலை என்ன? குழந்தைகளை ஈடுபடுத்த வேண்டாம் என்பது சரி. அவர்கள் பள்ளிக்கூடம் போக ஏற்பாடு எங்கே?

    வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பட்டாசுகளினால் அரசிற்கு வருமானம். அந்தத் தொழிலில் ஈடுபடும் லட்சக்கணக்கான மக்களின் உயிருக்கு என்ன விலை?

    வருடந்தோறும் தீபாவளி சமயத்தில் மட்டுமே இந்த கோஷம் ஒலிக்கும். பிறகு எல்லோரும் மறைந்து விடுவார்கள். என்னதான் முடிவு? என்றுதான் விடிவு?

    பதிலளிநீக்கு
  8. நல்ல ஒரு போட்டியை ஏற்பாடு செய்த ரூபன் அவர்களூக்கும் D.D உங்களுக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  9. கவிதைபோட்டியில் கலந்துகொள்ளும் அளவுக்கு நான் கவிஞனல்ல. இருப்பினும் ஒரு இரசிகனாக வெற்றிபெறும் கவிதைகளை நிச்சயம் இரசிப்பேன்.

    பதிலளிநீக்கு
  10. போட்டி சிறக்க வாழ்த்துக்கள்!
    நலமுற இல்லம் சென்றது மிக்க மகிழ்ச்சி! துணைவியின் உடல் நலம் கவனிக்க!

    பதிலளிநீக்கு
  11. ரூபன் அவர்களுக்கும் உங்களுக்கும் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  12. பங்கேற்கும் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  13. கவிஞர்களின் எழுத்தாற்றலுக்கு நல்ல ஒரு களம் ஆக இது அமையும் போட்டியை ஏற்பாடு செய்த‌ ரூபன் மற்றும் டிடி உங்களுக்கும் நன்றி

    பதிலளிநீக்கு
  14. இனிய செய்தி. இது போட்டிகளின் சீசன்
    போல் உள்ளது.உற்சாகமுடன் நானும்
    பங்கு பெறுகிறேன் DD சார். அதோடு
    உஷாவின் கருத்தினையும் இங்கு வழிமொழிகிறேன்.
    பேனலில் இருவர் பதிவர் அல்லது இருத்தல் நலம்.
    மன்னிக்க.
    ரூபன் அவர்களுக்கும் உங்களுக்கும் என் நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  15. ஆசியர்தின நல்வாழ்த்துக்கள்.
    பள்ளிக்குழந்தையின் கவிதை சிறப்பாக இருக்கு. வாழ்த்துக்கள்.நன்றி

    பதிலளிநீக்கு
  16. ஆசிரியர் தின நல் வாழ்த்துக்கள்!

    மிக மிக அருமை! கவிதைப் போட்டி சிறக்க என் வாழ்த்துக்கள்!

    இதனைப் பகிரும் உங்களுக்கும் ரூபனுக்கும்
    மனமார்ந்த இனிய நன்றிகள்!

    த ம. 11

    பதிலளிநீக்கு
  17. ஆசிரியர் தின வாழ்த்துக்கள் சகோ. ரூபன் அவர்களுக்கும் நன்றிகள். என்னுடைய வலைத்தளத்தில் சனிக்கிழமை அன்று இந்தப் போட்டி பற்றிய பகிர்வு வெளியாகும்.

    முடிந்தால் நானும் கலந்து கொள்கிறேன். நன்றி சகோ :)

    பதிலளிநீக்கு
  18. கலந்துகொள்ளப்போகும் அனைவருக்கும் அட்வான்ஸ் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  19. வாழ்த்துகள்
    வளரட்டும் உங்கள் தொண்டு
    செய்தியை அறிய வைத்தமைக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  20. வணக்கம்,

    நல்ல அறிவிப்பு. கவிதை புனைபவர்க்கு ஊக்கம் தரும் இந்த அறிவிப்பு.


    வெற்றி பெறப்போகும் மற்றும் கலந்து கொள்ளும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்...


    நட்புடன்,
    நடராஜன் வி.

    பதிலளிநீக்கு
  21. ஆசிரியர் தின வாழ்த்துக்கள்! கவிதை போட்டி அறிவிப்பு மகிழ்ச்சி தந்தது! கலந்து கொண்டு விடுவோம்! நன்றி!

    பதிலளிநீக்கு
  22. பதிவுலகில் இது போன்ற ஆரோக்கியமான முயற்சிக்கு பாராட்டுகள்,பகிர்ந்த உங்களுக்கு நன்ற.பங்கேற்கும் அனைவருக்கும் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  23. ஆகா, நல்ல செய்தி. நானும் கலந்துக்க முயற்சி செய்கிறேன். தகவலுக்கு நன்றி.

    அன்புடன்
    பவள சங்கரி

    பதிலளிநீக்கு
  24. ஆசிரியர் தின வாழ்த்துக்கள்.
    கவிதை போட்டியில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
    //சிரிப்பே மத்தாப்பு= அதுவே தீபாவளியின் முத்தாப்பு!//
    உங்கள் கவிதையும் அருமை.

    பதிலளிநீக்கு
  25. கலந்துக்கிட்டு கலக்கிட்டா போச்சு. அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  26. கலந்து கொண்டு அசத்த போகும் அனைவருக்கும் வாழ்த்துககள்

    பதிலளிநீக்கு
  27. குருவே நமஹ:..ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்!..

    பதிலளிநீக்கு
  28. பள்ளிக்குழந்தையின் பட்டாசுக் கவிதை மனத்தைக் கொள்ளை கொண்டது. இதைவிடவா இன்னும் சிறப்பான கவிதை என்னுள் உதயமாகப்போகிறது?

    பங்கேற்கும் அனைவருக்கும் அன்பான வாழ்த்துக்கள். பகிர்வுக்கு நன்றி தனபாலன். ஆர்வத்துடன் போட்டியை நடத்தும் நண்பர் ரூபனுக்குப் பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  29. கவிதை போட்டி நல்வரவு.
    இனிய ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  30. எனையும் நடுவர்களுக்கு உதவும் அணிலாக தேர்வு செய்தமைக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

    பதிலளிநீக்கு
  31. தீபாவளிக்கு பட்டாசு கொழுத்தாமல்:), கவிதை எழுதிப் போட்டியா?.. சூப்பர்ர்.. கேட்கவே சந்தோசமாக இருக்கு.

    வலையுலகில் இப்படி போட்டிகள் வைப்பதைப் பார்க்க மிகவும் மகிழ்ச்சியாக இருக்கு, இப்போதானே காதல் கடிதம் போட்டி இடம்பெற்றது.

    எனக்கு அனைத்திலும் பங்கு பற்ற விருப்பம், ஆனா ஏதோ ஒன்று தடுத்துவிடும்...

    பங்குபற்றப்போகும் அனைவருக்கும் அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  32. அதெதுக்கு.. பரிசுகள் என்னவென்பதை தொட்டால் மட்டும் விளக்கெரியுது?:)) ஹா..ஹா..ஹா.. நல்லாயிருக்கு.

    பதிலளிநீக்கு
  33. வாழ்த்துக்கள் ரூபன். சீனு அறிவித்த போட்டியின் தாக்கம் குறையும் முன் இன்னொரு போட்டி. மிக்க மகிழ்ச்சி கவிஞர்கள் கவியமுது படைக்கட்டும் ரசிக்கவும் ருசிக்கவும் காத்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  34. கலந்து கொள்ளப்போகும் கவிஞர்களுக்கு இப்போதே வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
  35. வலையுலகம் காணும் பிரமாண்டமாய் போட்டி அமைய வாழ்த்துக்கள் அய்யா. படைப்புகளைக் காண நாங்களும் காத்திருக்கிறோம்.நன்றி அய்யா.

    பதிலளிநீக்கு
  36. @Ranjani Narayananசீனுவின் போட்டி இன்னும் பல போட்டிகளுக்கு முன்னுதாரணமாக அமையும் என்று கூறி இருந்தேன். அது போலவே போட்டி அறிவித்திருப்பது மகிழ்ச்சி. பல்துறை வித்தகி மீண்டும் நடுவரானதற்கு வாழ்த்துக்கள்.
    களைகட்டட்டும் கவிதைப் போட்டி

    பதிலளிநீக்கு
  37. இனிய ஆசிரியர் தின வாழ்த்துக்கள் பாலண்ணா.

    தீபாவளிப் பட்டாசுக்கவிதை வரிக்கு வரி அருமை. படிக்கும் பள்ளிக் குழந்தைகள் வெறுத்துவிடும் இனி பட்டாசை. அரசியல் தொண்டர்களும் விளையாட்டு ரசிகர்களும் தான்... இப்பல்லாம் இறுதி ஊர்வலத்தின் வேட்டுசத்தத்தைக் களவாண்டு விட்டன சரமாரியான சரவெடிகள். திருமண அழைப்பு கூட விதிவிலக்கல்ல. கோயில் திருவிழாக்களும். எத்தனை காசு கரி! எத்தனை உழைப்பு... எத்தனை பிஞ்சுகளின் படிப்பு... இதை வாங்க தடைசெய்யும் எந்த சட்டமும் காணோம்...

    கவிதைப் போட்டி... கலந்து கொள்ளப் போகிறவர்களுக்கும் பரிசை அல்லாப் போகிறவர்களுக்கும் முன்னதாகவே எம் வாழ்த்துகள்!!

    பதிலளிநீக்கு
  38. 'பரிசை அள்ளப் போகிறவர்களுக்கும்' எனத் திருத்தி வாசித்துக் கொள்க.

    பதிலளிநீக்கு
  39. வேட்கை கொண்ட வேங்கையாக களத்தில் குதிக்க ஆவலாக உள்ளேன்.

    திரு த.தவரூபன் மற்றும் திண்டுக்கல் தனபாலன் அவர்களுக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  40. பதிவர் விழாவிற்கு வர இயலவில்லை, மன்னிக்கவும். கவிதை போட்டியில் கலந்து கொள்ளும் ஆவல் உண்டு முற்சி செய்வோம். கலக்குறீங்க.....வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  41. தகவலுக்கு நன்றி ஐயா. நிச்சயம் கலந்து கொள்கிறேன். இனிய ஆசிரியர் தின நல்வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  42. விஜயன்.துரை
    கடற்கரை(vijayandurai.blogspot.com)
    vijayandurairaj30@gmail.com

    பதிலளிநீக்கு
  43. நல்ல விஷயம் நானும் முயற்சி பன்றேன்

    பதிலளிநீக்கு
  44. நல்ல தகவல் நண்பரே... நான் கலந்துகிறேன்... கவிதை அனுப்புகிறேன்

    பதிலளிநீக்கு
  45. நண்பரே தங்கள் கவிதைப்போட்டி வெற்றியடைய வாழ்த்துக்கள் கவிதைகளைப் பொறுத்தளவில் நான் 80 களில் இருந்து எழுதுகிறேன் அதனால் பங்கு பெரும் புதுக் கவிஞர்கள் யாரேனும் வெற்றியடைய வாழ்த்துகிறேன்

    பதிலளிநீக்கு
  46. கவிதையா அதுதான் வரவே மாட்டேங்குது.. மத்த எல்லாமும் வருது..கவி-கட்டுரை வேணும்னா எழுதலாம் :)

    பதிலளிநீக்கு
  47. உங்களுக்கும் உங்கள் நண்பருக்கும் வாழ்த்துகள்! நானும் கலந்துக்கிறேன்..நன்றி!

    பதிலளிநீக்கு
  48. அருமையான போட்டி...

    போட்டியில் கலந்துக்கொண்டு பரிசுகளை வெல்லவும் நடுவர் குழுவுக்கும் மனம் நிறைந்த அன்பு வாழ்த்துகள்பா...

    தலைப்புகள் எல்லாமே சிறப்பு...

    அசத்துங்க புள்ளைகளா.... :)

    பதிலளிநீக்கு
  49. இப்படியான போட்டிகள் ஆரோக்கியமான விசயமே!
    பல கவிஞர்களுக்கு மத்தியில் இந்த கத்துகுட்டியும் போட்டிக்கு வர எண்ணுகிறது,விரைவில் கவிதையோடு நானும் வருகிறேன்..

    கவிதை எழுதி கலக்கப்போகும் அனைவருக்கும் அட்வான்ஸ் வாழ்த்துகள்..

    பதிலளிநீக்கு
  50. கவிதைப் போட்டியில் கலந்து கொள்ளும் கவிஞர்களுக்க இதயப் பூர்வ வாழ்த்துக்கள்ஐயா

    பதிலளிநீக்கு
  51. தகவலுக்கு நன்றி!நீங்கள் சென்னையில் கலந்து கொண்ட பதிவர் நிகழ்ச்சியை படங்களோடு பகிர்வீர்கள் என்று எதிர்பார்த்தேன்.

    பதிலளிநீக்கு
  52. போட்டிக் கவிதைகளை வாசிக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்.
    அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  53. போட்டியில் கலந்து கொள்ளப் போகும் அனைவருக்கும் என் உளமார்ந்த நல்வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  54. இனிய ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்

    தீபாவளிக்கான போட்டியில் கலந்துகொள்கிறோம் கண்டிப்பாக
    நன்றி வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  55. இவ்வாறான போட்டிகள்
    சிறந்த படைப்புகளை
    சிறந்த படைப்பாளர்களை
    இனம் காட்ட உதவுமே!
    போட்டி
    ஏற்பாட்டாளருக்கு
    வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
  56. தங்களை அறிமுகம் செய்ய வேண்டியதில்லை... இருந்தும் எனது ஆசைக்காக செய்தேன்... விபரம் தெரிவிக்கும் முன் வந்து வாசித்தமைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  57. இன்றைய வலைச்சர அறிமுகத்துக்குப் பாராட்டுக்கள். வாழ்த்துகள். VGK 9.9.13

    பதிலளிநீக்கு
  58. கவிதை எழுதிய அந்தக் குட்டிக் கைகளுக்கு என் பாராட்டுக்கள்.

    கவிதைப் போட்டி இனிது நடைபெற என் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  59. கவிதை எல்லாம் எனக்கு வராது சார்...... ஆனால் இந்த கவிதை போட்டியில் வெற்றி பெரும் கவிதைகளை படிக்க காத்திருக்கிறேன்.


    என்னவாயிற்று, ஏன் எந்த பதிவும் இத்தனை நாளாக இல்லை ?! பதிவை போடறீங்களா இல்லை நான் கவிதை எழுதவா.......அது !!

    பதிலளிநீக்கு
  60. கவிதைப் போட்டியை அறிய தந்தமைக்கு நன்றி.. !

    எனது கவிதைக்கும் பரிசு கிடைக்குமா?

    எதற்கும் முயற்சித்துப் பார்க்கிறேன்...

    இன்று என் வலைத்தளத்தில் இன்டர்நெட் எனும் போதை வஸ்து

    பதிலளிநீக்கு
  61. கலந்து கொள்ளப்போகும் அனைவருக்கும் வாழ்த்துகள்.. என்னையும் சேர்த்து :-))

    பதிலளிநீக்கு
  62. என்னுடைய் கவிதையை அனுப்பிவிட்டேன்... ரிஷ்வன்

    http://www.rishvan.com

    பதிலளிநீக்கு
  63. என்னுடைய கவிதையை வலைதளத்தில் பதிவிட்டுள்ளேன்..

    கவிதையை வாசிக்க கீழுள்ள சுட்டியை சொடுக்கவும்

    http://www.rishvan.com/2013/10/blog-post_3477.html

    பெயர்: சுரேஷ் சுப்பிரமணியன்
    புனைப்பெயர்: ரிஷ்வன்
    மின்னஞ்சல்: sureshteen@gmail.com
    வலைத்தளம்: http://www.rishvan.com

    கருத்துரை வழங்கிய ரூபனுக்கு என் நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  64. வணக்கம். நான் நிலவை.பார்த்திபன். எனெக்கென்று தனியாக வலைதளம் எதுவும் கிடையாது. நான் போட்டியில் கலந்து கொள்ள இயலுமா?

    - நிலவை.பார்த்திபன். (parthi28@yahoo.com)

    பதிலளிநீக்கு
  65. வணக்கம் ,

    என்னுடைய சிறு முயற்சியை வலைதளத்தில் பதிவிட்டுள்ளேன்..

    http://nallavankavithaigal.blogspot.in/2013/10/blog-post_2177.html

    அன்புடன் ,
    ஜெயராம்

    பதிலளிநீக்கு
  66. வணக்கம் சார்.நல்ல முயற்சி.உங்களை அறிமுகம் செய்த தனபாலன் சாருக்கு நன்றியை கூறிக்கொள்கிறேன் .என்னை இப்போட்டியில் கலந்து கொள்ள சொன்னார்.நானும் முயற்சிக்கிறேன்.
    கீதா.புதுகை
    mgeetha122@gmail .com
    வலைத்தளம்
    www.velunatchiyar.blogspot.com.
    thendral enum தலைப்பு

    பதிலளிநீக்கு
  67. khttp://shylajan.blogspot.com/2013/10/blog-post_4516.html

    கவிதைப்போட்டியில் என் பங்காக இந்த சுட்டியில் என் கவிதை
    நன்றி

    பதிலளிநீக்கு
  68. கவிதைப் போட்டிக்கான என்னுடைய கவிதை
    http://wordsofpriya.blogspot.com/2013/10/blog-post_30.html

    நன்றி...

    பதிலளிநீக்கு
  69. பெயர்: வி. நடராஜன்
    மின்னஞ்சல் முகவரி: pvnrkrishnan@gmail.com
    வலைத்தள முகவரி: "தொகுப்புகள் வலைப்பூ"
    http://vienarcud.blogspot.in/2013/10/blog-post_31.html

    பதிலளிநீக்கு
  70. நான் ஏற்கெனவே தீபாவளித்திருநாளைப்பற்றி ஒரு கவிதையை எழுதிவிட்டேன்.. இந்த வாரேன்..

    பதிலளிநீக்கு
  71. பெயர்: ஆ.ஜோசப் ஜெயபால் :வலைப்பூ முகவரி:ajjeyabal1982.blodspot.com

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென்று இடித்தற் பொருட்டு. (குறள் 784)

நட்புச் செய்துகொள்வது நண்பரோடு சிரித்து மகிழ்வதற்காக மட்டும் அல்ல. மிகுதியாகத் தவறு செய்யும்போது, அவரைக் கடிந்து திருத்துவதற்கே ஆகும்.