🏠 வணக்கம் காப்பகம் நன்றி

தேடல் 🔎



புதிய பதிவுகளை பெற ✉



என் வலி... தனி வழி...!

வணக்கம் நண்பர்களே... (1) படிப்பிற்கேற்ற வேலை கிடைக்கவில்லை என்பதற்காக, தெரிந்த அல்லது சொந்த தொழிலைத் தைரியமாகச் செய்பவர்களுக்கு... (2) அறிவை தந்த தந்தையின் பாரத்தையும், அன்பே அனைத்தும் எனும் தாயின் மனதையும், தன் பொறுப்புகளையும் எந்தச் சூழ்நிலையிலும் மாறாது உணர்ந்தவர்களுக்கு... (3) எப்பேர்ப்பட்ட வலிகள் இருந்தாலும், தொடர்ந்தாலும்... நல்ல எண்ணங்கள், பண்புகள், குணங்கள், மற்ற அனைத்தும் தளராத, அயராத உழைப்பின் மூலம் மட்டுமே என்று அறிந்து தெரிந்து புரிந்தவர்களுக்கு - இன்று மட்டுமல்ல... என்றும் நமக்குத் தொழிலாளர் தினம் தான்... அனைவருக்கும் வாழ்த்துக்கள்...


471 வேலைக்குப் போகணும்ன்னு நான் விரும்புறேன்... நீ சொந்தமா தொழில் செய்யணும்ன்னு உறுதியா இருக்கே... சரி... உன்னோட பலம் எனக்குத் தெரியும்... செய்யப் போற வேலை, உனக்கு உதவி செய்யப் போறேன்னு சொல்றவங்க பலமும், அதே சமயம் இந்தத் தொழிலை செய்றவங்க பற்றியும், நல்ல யோசனை பண்ணிட்டுதாம்பா தொழிலை தொடங்கணும்...
வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும்
துணைவலியும் தூக்கிச் செயல்

472 அப்பா... எல்லாத்தையும் ஆராய்ச்சி செய்து, எனக்குப் பொருத்தமான தொழில் தான்னு உறுதியான முயற்சியோடு இருக்கேன்... அதனாலே முடியாததுன்னு ஏதும் இல்லை...
ஒல்வ தறிவது அறிந்ததன் கண்தங்கிச்
செல்வார்க்குச் செல்லாதது இல்

473 உணர்ச்சி வயப்பட்டு ஒரு தொழிலை ஆரம்பிச்சிட்டு, "என் பலம் இவ்வளவு தான், நேரம் சரியில்லை... எதுவும் ஒத்து வரலே…" இப்படிச் சொல்லிட்டு, தொழிலைத் தொடர முடியாமல் இடையிலேயே விட்டுவிட்டு, கெட்டுப் போனவங்க உலகத்திலே பல பேர் இருக்காங்க...
உடைத்தம் வலியறியார் ஊக்கத்தின் ஊக்கி
இடைக்கண் முரிந்தார் பலர்

474 என்னப்பா... என் திறமை எனக்குத் தெரியாதா...? மத்தவங்களை மதிக்காம, அவங்க சொல்றதையும் கேட்காம, "எனக்கு எல்லாம் தெரியும்"ன்னு தன்னைத் தானே பெரிசா நினைக்கிறவங்கதாம்பா சீக்கிரத்தில் கெட்டுப் போவாங்க... நான் அப்படி இல்லே...
அமைந்தாங் கொழுகான் அளவறியான் தன்னை
வியந்தான் விரைந்து கெடும்

475 நல்லாவே தெரிஞ்சி வச்சிருக்கே... சந்தோசம்யா... ஆனா, அனுபவம் இல்லாத இந்த வயசுலே, இவ்வளவையும் இழுத்துப் போட்டு எப்படிச் செய்வேன்னு ஒரு சின்ன பயம்... ஏன்னா, மயிலிறகு ஏற்றின வண்டியே ஆனாலும், அளவுக்கு மீறி போச்சின்னா, வண்டியின் அச்சு முறிந்துபோகும்ன்னு சொல்வாங்க...
பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டம்
சால மிகுத்துப் பெயின்

476 அளவுக்கு மீறி ஆசைப்பற்றவங்க தான் அப்படி... ஒரு மரத்திலே நுனிக்கொம்பில் ஏறினவங்க, அதற்கு மேலேயும் போகணும்ன்னு நினைச்சா என்னப்பா ஆகும்...? அந்த மாதிரி என்னைப்பற்றி அதிகமாகக் கணக்குப் போடமாட்டேன்...
நுனிக்கொம்பர் ஏறினார் அஃதிறந் தூக்கின்
உயிர்க்கிறுதி ஆகி விடும்

477 சரிப்பா... எனக்கு இன்னும் சில வருசங்க தான் வருமானம் வரும்... உன் தங்கை பத்தாவது தான் படிக்கிறா... எல்லாத்தையும் மனசிலே வச்சி தீர்மானமா சொல்றேன், உனக்கென்னு சிறுகச் சிறுக வங்கியிலே சேர்த்து வைச்சிருக்கிறதை தர்றேன்... அதனோட மதிப்பை நீயும் உணர்ந்து, உயர்த்திக் காப்பாத்தணும்பா...
ஆற்றின் அளவறிந்து ஈக அதுபொருள்
போற்றி வழங்கு நெறி

478 1500 கடனோட வாழ்க்கையை ஆரம்பிச்சி, அக்காவையும் நல்லபடியா கல்யாணம் பண்ணிக் கொடுத்து, என்னையும் படிக்க வைக்கலையா...? உங்க அனுபவம் தான் மூலதனமே... கவலையேபடாதீங்கப்பா... எனக்கும் பொறுப்பு இருக்கு... இந்தத் தொழிலே ஆரம்பத்திலே சின்ன வருமானம் வந்தாலும் சேமிப்பு தான் செய்யப் போறேன்... கண்டமேனிக்குச் செலவு செஞ்சா, என்னென்ன கேடெல்லாம் வருமென்பது எனக்குத் தெரியும்... சேமிப்புப் பணம் ஓரளவு சேர்ந்த பின்னாடி தான், தொழிலைப் பெரிசா செய்யணும்னு எண்ணமே இருக்கு... எல்லாம் அம்மாகிட்டே கத்துக்கிட்டது...
ஆகாறு அளவிட்டி தாயினுங் கேடில்லை
போகாறு அகலாக் கடை

479 நீ இப்படித் தன்னம்பிக்கையா பேசுறது எவ்வளவு சந்தோசமா இருக்கு தெரியுமா...? நம்மகிட்டே இருக்கிறதை வச்சி, சந்தோசமா வாழ்ந்தாலே போதும்பா... இல்லேன்னா வாழ்க்கையிலே எல்லாம் இருக்கிற மாதிரி இருக்கும்... ஆனா, சீக்கிரம் நாம காணாம போயிடுவோம்...
அளவறிந்து வாழாதான் வாழ்க்கை உளபோல
இல்லாகித் தோன்றாக் கெடும்

480 சரியாச் சொன்னீங்கப்பா... மாசாமாசம் வங்கியிலே சேமிச்சது போக, மிச்ச பணத்தை அப்படியே அம்மாகிட்டே கொடுக்குறீங்க... அம்மா, அதிலேயும் எப்படியோ மிச்சம் பிடிச்சி, வீட்டுக்குத் தேவையானது மட்டும் வாங்கிப் போட்டு, வீட்டு நிர்வாகம் பண்ணலையா...? நான் கேட்கிற போதெல்லாம் நீங்க அள்ளிக் கொடுத்தா, பணத்தோட அளவும் குறைஞ்சி போகும், எனக்கும் பணத்தோட மதிப்பும் தெரியாமப் போகும்... நன்றிப்பா...
உளவரை தூக்காத ஒப்புர வாண்மை
வளவரை வல்லைக் கெடும்

நன்றி என்னும் குணம் கொண்ட, நன்மை செய்யும் மனம் கொண்ட நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம் என, பல சந்தோசமான குடும்பங்களின் திருப்தியான வாழ்க்கையைச் சிந்திக்கும் போது உதவிய, நம்ம வள்ளுவரின் அதிகாரம் (48) வலியறிதல் எனக்கு வழியறிதல்... வலிகள் இன்றி வாழ்க்கை இல்லை... வலிகளை ஏற்றுக் கொண்டால் வழிகள் பிறக்கும்...

என் வலி... தனி வழி...! (வள்ளுவரின் வலி வாழ்க்கைக்கு வழி)

© நாடோடி மன்னன் கவி லக்ஷ்மணதாஸ் S.M.சுப்பையா நாயுடு சீர்காழி கோவிந்தராஜன் @ 1958 ⟫

இதுவும் தொழிலாளர்கள் பற்றிய பகிர்வு தான்... அறிய இங்கே சொடுக்கித் தொடர்வதற்கு முன் இந்தப் பதிவைப் பற்றி... நண்பர்களே... தங்களின் கருத்து என்ன ?

புதிய பதிவுகளை பெறுதல் :


தொடர்புடைய எண்ணங்களின் வண்ணங்கள் சில :


முகநூல் மூலம் கருத்துக்களை பகிர :

கருத்துகள்

  1. சுடச் சுடச் சிறந்த செய்தி தொழிலாளர் நாளை அழகுபடுத்துகிறது.

    பதிலளிநீக்கு
  2. வாத்யார் குதிரை ஓட்டிக்கிட்டே பாடற அந்தப் பாடல் என்றென்றுமு் நினைவில் நிற்பது.இப்பவும் கேட்டு மகிழ்ந்தேன். திருக்குறள்களுக்கு எளிய தமிழில் அழகான விளக்கத்தையும் ருசித்து மகிழ்ந்தேன். டபுள் டமாக்கா D.D. நன்றி!

    பதிலளிநீக்கு
  3. மிக அருமையாக குறள்களுக்கு விளக்கம்.

    பதிலளிநீக்கு
  4. சீர்காழி கோவிந்தராஜன் அவர்களின் கணீர் குரலில் ‘உழைப்பதிலா உழைப்பைப் பெறுவதிலா இன்பம்’ என்ற பாடலை உழைப்பாளர் நாளான இன்று கேட்கும் வாய்ப்பைத் தந்தமைக்கு நன்றிகள் பல!
    வழக்கம்போல் திருக்குறளை எல்லோருக்கும் புரியும் வண்ணம் விளக்கி ‘உங்கள் வழி தனி வழி’தான் என நிரூபித்துள்ளீர்கள். வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  5. தாங்கள் குறள்களுக்குத் தரும் விளக்கங்கள் மிகவும் சுவையானவை; மனதைவிட்டு அகலாதவை.

    பதிலளிநீக்கு
  6. //
    நல்ல எண்ணங்கள், பண்புகள் குணங்கள், மற்ற அனைத்தும் தளராத அயராத உழைப்பின் மூலம் மட்டுமே என்று அறிந்து தெரிந்து புரிந்தவ்ர்களுக்கு இன்றும் ம்ட்டுமல்ல என்றும் நமக்கு தொழிலாளர்தினம் தான்./
    நல்லா சொன்னீர்கள் தனபாலன்.
    அப்பா மகனுக்கு ஆலோசனை சொல்வதை திருக்குறள் வலி அறிதல் அதிகாரத்தின் மூலம் அழகாய் விளக்கிய உங்களின் உழைப்புக்கு வாழ்த்துக்கள்.
    நாடோடி மன்னன் பாடல் பகிவுக்கு வாழ்த்துக்கள். அருமையான உழைப்பைபற்றிய பாடல்.
    அனைவருக்கும் உழைப்பாளர்தின வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  7. திருக்குறளுக்கு உங்கள் பாணியிலான எளிய விளக்கம் அருமை !போக போக திண்டுக்கல் தனபாலன் என்பது போய் திருக்குறள் தனபாலன் ஆகிவிடுவீர்கள் போலிருக்கிறதே !

    பதிலளிநீக்கு
  8. என்றும் உழைத்து நல்ல செய்திகளையும் பரப்பும் தனபாலனுக்கு உழைப்பாளிகள் தின வாழ்த்துகள். இங்கே வரும் அனைத்து நண்பர்களுக்கு வாழ்த்துகள்.நன்றி தனபாலன்.

    பதிலளிநீக்கு
  9. சிறப்புப் பதிவு வெகு சிறப்பு வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு


  10. குறள் விளக்கம் அருமை நெஞ்சில் நிற்கும்!

    பதிலளிநீக்கு
  11. உழைப்பாளர்கள் தினம் வாழ்த்துக்கள்...குறள் விளக்கம் சூப்பர்ப்...!

    பதிலளிநீக்கு
  12. நாடோடி மன்னன் படப்பாடல்...
    பட்டுக்கோட்டையாரின் வைர வரிகள்...
    கொஞ்ச நேரம் அப்படியே மெய்மறக்க செய்துவிட்டது நண்பரே...
    ===
    குறள்களும் அதன் விளக்கமும் அருமை...

    பதிலளிநீக்கு
  13. இந்த மாதிரி எங்களுக்குக் குறள் சொல்லி கொடுத்து இருந்தா பத்து குறள் என்ன மொத்த குறளையும் படிச்சிருப்பேன் :-)

    பதிலளிநீக்கு
  14. தங்கள் அருமையான பதிவுகளை TamilBM (http://tamilbm.com/ ) திரட்டியிலும் இணையுங்கள்.

    பதிலளிநீக்கு
  15. உங்கள் குறளின் குரல் பள்ளிகளில் பாடதிட்டமாய் சேர்க்கும் நாள் வெகு தூரத்தில் இல்லை
    அது நடக்க இப்போதே பாராட்டுக்கள்

    பதிலளிநீக்கு
  16. பதிவோடு பாடலை இணைத்திருப்பது மிக அருமை. சம்பவத்திற்கேற்ப திருக்குறள்கள் சூப்பர் ...

    பதிலளிநீக்கு
  17. அருமையான குறள் விளக்கங்கள், வெகு ஜன மொழியில் உள்ளதால் எளிதில் புரிகிறது. நல்ல பதிவு தொடர வாழ்த்துக்கள்....!!

    பதிலளிநீக்கு
  18. குறள் விளக்கம் அருமை.
    உழைப்பாளர்கள் தினம் வாழ்த்து!
    Nanry sakothara.
    Vetha.Elangathilakam

    பதிலளிநீக்கு
  19. குறள் விளக்கம் ரசித்தேன். பட்டுக் கோட்டை தமிழ் திரையுலகின் கொடை.

    பதிலளிநீக்கு
  20. நல்ல பல கருத்துக்களை ஒரு பதிவில் தந்துள்ளீர்கள். வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  21. குறள்வழி சிந்தனை நயமாக இருந்தது... எல்லோருக்கும் உழைப்பாளர் தின நல்வாழ்த்துக்கள்..

    பதிலளிநீக்கு
  22. தொழிலாளர் தின வாழ்த்துக்கள்.

    வலியறிதலும்
    வழியறிதலும் பகிர்வின்
    வழியறிவித்தல் அழகு ..பாராட்டுக்கள்..

    பதிலளிநீக்கு
  23. தொழிலாளர் தின இனிய நல்வாழ்த்துக்கள்.

    வலியறிதலும் ....
    வழியறிதலும் !

    பகிர்வு அருமை. பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  24. குறள்களும் அதன் விளக்கமும் சிறப்புப் பதிவு வெகு சிறப்பாய் அமைந்துள்ளது.. வாழ்த்துக்கள் சகோ..

    பதிலளிநீக்கு
  25. உங்களின் மாறுபட்ட யோசனை அருமை.உங்கள் உழைப்பால் குணத்தால் நல்ல எண்ணத்தால் உயர்ந்தால் மகிழ்ச்சியே.தை தகப்பன் பற்றிய சிந்தனை உயர்வானது இன்றும் தெளிவானது

    பதிலளிநீக்கு
  26. அருமையான பதிவு....வாழ்த்துக்கள்..

    by . 99likes

    பதிலளிநீக்கு
  27. திருக்குறளுக்கு உங்கள் பாணியிலான எளிய விளக்கம் அருமை....

    பதிலளிநீக்கு
  28. அண்ணே..!
    ஒவ்வொன்றுக்கும் திருக்குறள் போட்டு தருவதிலும்.
    பாடல் வரிகளின் நல்ல வரிகளை எடுத்து தருவதிலும் .
    அதன் வாயிலாக நான் அறிவதிலும் மிக்க மகிழ்ச்சி!

    நன்றி அண்ணே!
    நல்ல பகிர்வு..!

    பதிலளிநீக்கு
  29. பாமரனுக்கும் புரியும்படியான எளிமையான குறள் விளக்கம்..உழைப்பின் வாரா உறுதிகள் உளவோ..உழைக்கும் கைகளுக்கு வாழ்த்துக்கள்..

    பதிலளிநீக்கு
  30. தொழிலாளர் தின வாழ்த்துக்கள்! பொருத்தமான பதிவு.

    பதிலளிநீக்கு
  31. இன்றைய தினத்துக்கு பொருத்தமான பதிவு.உங்களிடம் அதிகம் பிடித்ததே திருக்குறள் பதிவுகள் தான்.பரிசாக ஒரு தமிழ்மணம் ஒட்டு

    பதிலளிநீக்கு
  32. தொழிலாளர் தின நல்வாழ்த்துக்கள்.மிகச் சரியான பகிர்வு..

    பதிலளிநீக்கு
  33. வணக்கம்
    தனபால் (அண்ணா)

    என்வலி தனி வழி என்ற தவலைப்பில் எழுதப்பட்ட படைப்பு மிக அருமையாக உள்ளது மனித வாழ்கையில் நடக்கும் யதார்த்த சம்பவங்களை குறள்பாக்களுடன் அழகாக விளக்கியுள்ளமைக்கு மிக்க நன்றியண்ணா

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  34. அருமை. குறள்களுக்கு புதுமாதிரியான பாணியில் விளக்கத்தை உங்கள் தளத்தில்தான் பார்க்கிறேன்.

    பதிலளிநீக்கு
  35. உழைப்பாளிகள் தின சிறப்புப் பதிவு அற்புதம்.
    வலி இல்லாமல் வாழ்க்கை இல்லை.நம் பலம் அறிந்து தொழில் தொடங்குவது, அதற்கு பெரியவர்களின் உதவியை நாடுவது என்று அப்பாவும் மகனும் உரையாடுவது இன்றைய தினத்துக்கு ஏற்றதாக இருக்கிறது.

    அப்பாவும் மகனும் திருக்குறளின் வழியே வாழ்க்கைப் பாடத்தை எங்களுக்கும் கற்றுக் கொடுத்திருக்கின்றனர்.

    பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  36. குறள் விளக்கப்பகிர்வு அருமை...தொழிலாளர் தின வாழ்த்துக்கள்...May day..May day...:-)

    பதிலளிநீக்கு
  37. என் வலி.. தனி வழி!!///

    ஆஆஆஆஆ ஸ்பெல்லிங் மிஸ்ரேக்கு கண்டு பிடிச்சிட்டேன்ன்ன்ன்:))... சரி அதை விடுங்க..:)

    பதிலளிநீக்கு
  38. ஆஹா ஒவ்வொரு குறளுக்கும் ஒவ்வொரு கதை. ரொம்ப அருமையாக இருக்கு. வாழ்த்துக்கள். இங்கெல்லாம் எமக்கு இன்று விடுமுறை இல்லையாம்ம்ம்ம்....

    பதிலளிநீக்கு
  39. கட்டுரையை சிறப்பாக கொடுப்பதில் உண்மையிலேயே உங்கள் வழி தனி வழிதான். நீங்கள் தருவதை காலத்திற்கு இருக்க ஒரு புத்தகமாக வெளியிடுவது சிறப்பு.
    ஆய்ந்து தரும் கட்டுரைகள் அழியாமல் தொடரட்டும்.
    குறள்களுக்கு தரும் விளக்கங்கள் அருமை. மனதைவிட்டு அகலாதவை.
    உழைப்பின் அருமை அறிந்து உழைத்து வரும் நீங்கள் உயர்வோடு வாழ வல்ல இறைவன் அருள் செய்வானாக .
    'பதிவை படித்து முடிப்பதற்குள் லோட் ஆகிவிடும் '. - உடனே லோட் ஆகி விட்டது பாடலை நிறுத்தி விட்டு கட்டுரையை முறையாக மனதில் நிற்க படித்து விட்டு பாட்டை பிறகு கேட்டேன் . கட்டுரைக்கு பொருத்தமான பாடல்களை நீங்கள் மிகவும் அக்கறையோடு தெரிவு செய்கிறீர்கள் .பாராட்டுக்கள் .வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு

  40. பதிவிடுதலில் உங்கள் வழி தனி வழி.உற்சாகமூட்டும் , உபயோகமான வரிகள். கலக்கறீங்க தனபாலன். வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  41. ஆகாறு குறள் இப்போது தான் படிக்கிறேன். அற்புதம் என்று வியந்து கொண்டிருக்கிறேன். நல்ல எடுத்துகாட்டுடனான உங்கள் விளக்கமும் அந்த வகை. பாராட்டுக்கள்.

    (சீர்காழி பாடல் மறந்து போன ஒன்று.)

    பதிலளிநீக்கு
  42. எம்ஜிஆர் படத்திலா இந்தப் பாட்டு? பாலகணேஷ் படம் பெயரைச் சொல்லக்கூடாதோ?

    பதிலளிநீக்கு
  43. குறள் விளக்கம் அருமை. இனி தங்களை திருக்குறள் தனபாலன் என்று அழைப்பதுதான் பொருத்தமாக இருக்கும் என்று எண்ணுகின்றேன்.

    பதிலளிநீக்கு
  44. வலியறிதல் வழியாக அருமையான கருத்துக்களை தந்தமைக்கு நன்றி! பாடலும் அருமை! பகிர்வுக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  45. சகோதரர் திண்டுக்கல் தனபாலன் அவர்களுக்கு ” மே தினம் “ வாழ்த்துக்கள்! திருக்குறள் விளக்கம் மற்றும் எம்ஜிஆர் பாடலோடு சிறப்பான பதிவு!

    ஒன்று எங்கள் ஜாதியே
    ஒன்று எங்கள் நீதியே
    உழைக்கும் மக்கள் யாவரும்
    ஒருவர் பெற்ற மக்களே!

    - பாடல் :கண்ணதாசன் ( படம்: பணக்கார குடும்பம்:)




    பதிலளிநீக்கு
  46. விளக்கம் அருமை.வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  47. ஒரு தமிழாசரியர் கூடஇந்த அளவுக்கு சிறப்பாக விளக்க முடியாது. ..திருக்குறளை இப்படி உரையாடல் முறையில் கற்பித்தால் நிச்சயம் மறந்து போகாது. இந்தப் பாணியை பயன் படுத்தி திருக்குறள் முழுமைக்கும் உரை எழுத முயற்சி செய்யுங்கள்..வாய்ப்பு கிடைத்தால் ஆசிரியர்களிடம் இதை தெரிவிக்கிறேன்.
    மனமார்ந்த பாராட்டுக்கள்

    பதிலளிநீக்கு
  48. அனைத்தும் சிந்தனையைத் தூண்டும் கருத்துகள்

    தொகுத்த விதம் அருமை

    தொடர வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  49. என் வாழ் நாளில் யாருமே திருக்குறளை இவ்வளவு எளிதாக விளக்கியது இல்லை. மிகவும் ரசித்தேன்.

    பதிவர் முரளி கூறியுள்ளது போல், நீங்கள் இவ்வாறே அனைத்து குரல்களுக்கும் உரை எழுதினால், நல்ல வரவேற்ப்பு கிடைக்கும்.

    பதிலளிநீக்கு
  50. குறளும் குறளுக்கான அருமையான விளக்கமும் ...சீர்காழியின் கணீர் குரலில் அமைந்த பாடலும் அருமை .
    உழைப்பாளர் தின வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  51. வணக்கம் தனபாலன் அண்ணா.

    உங்களின் “வலி அறிதல்“ வித்தியாசமான விளக்கம்.

    உங்களின் வலி... தனி வழிதான்.

    பதிலளிநீக்கு
  52. அருமையாக விசயத்தையும் அதற்கு ஏற்றார் போல குறளையும் சேர்த்து அழகானப் பதிவு. நன்றி!

    பதிலளிநீக்கு
  53. உழைப்பு பற்றிய குறள்களுக்கு நல்ல விளக்கம்.

    கூடவே நாடோடி மன்னன் படத்திலிருந்து, சீர்காழியின் குரலில் இனிமையான பாடல்....

    ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
  54. மகுடம் சூட்டியதற்கு
    வாழ்த்துக்கள் !

    பதிலளிநீக்கு
  55. அருமையான விளக்கங்கள். குறள் பாடல்களுக்கு இந்தக் காலத்துக்கு ஏற்றாற்போல் நீங்கள் கொடுக்கும் விளக்கம் வியக்க வைக்கிறது. உங்கள் பரந்த பண்பட்ட சிந்தனையும் வியக்க வைக்கிறது.

    "நான் கேட்கிற போதெல்லாம் நீங்கள் அள்ளிக் கொடுத்தா பணத்தோட மதிப்பு எனக்குத் தெரியாது."

    இந்தக் காலப் பெற்றோர்கள் புரிந்து கொள்ள வேண்டிய வரிகள்.

    உங்களுக்கும் அனைத்துத் தொழிலாளர்களுக்கும், இந்தப் பதிவுக்கு வரும் நண்பர்களுக்கும் மே தின வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  56. தொழில் துவங்கி நடத்துவது முதல் ஈட்டும் வருவாயை சேமித்து குடும்பத்தை நிர்வகிப்பது வரை தந்தைக்கும் மகனுக்குமான புரிதலுடனான உரையாடலை அழகாக குறள் கொண்டே விளக்கியவிதத்தை எவ்வளவு பாராட்டினாலும் தகும். பள்ளியில் இதுபோன்றே எளிமையாய்க் குறள்களைக் கற்றுக்கொடுத்தால் படிக்கும் பிள்ளைகளுக்கு மிகவும் பயனுள்ளதாய் இருக்கும். பகிர்வுக்கு மிக்க நன்றி தனபாலன்.

    பதிலளிநீக்கு
  57. உழைப்பாளர் தின வாழ்த்துக்கள்
    அருமையான பகிர்வு குறளும் குரலும் இணைந்த பதிவு மிகவும் வித்தியாசமாக இருந்தது நன்றி

    பதிலளிநீக்கு
  58. எளிய குறள் விளக்கம் அருமை. குழந்தைகளிடம் பகிர்கிறேன்.. மிக்க நன்றி!
    த.ம-23

    பதிலளிநீக்கு
  59. அனைத்தும் அருமை. பாடலும் சிறப்பு!
    பகிர்வுக்கு மிக்க நன்றி!வாழ்த்துக்கள்!

    த ம.25

    பதிலளிநீக்கு
  60. மே தினம் தொடங்கி குறள் தொட்டு வலியை பொருட்படுத்தாமல் வழி கட்டும் உங்கள் கட்டுரை அருமை. ஒரு ஆய்வு என்றும் சொல்லலாம். நன்றி...

    பதிலளிநீக்கு
  61. thank u sir for visiting my blog regularly. i liked all your posts. joined as a member too

    பதிலளிநீக்கு

  62. வணக்கம்!

    வள்ளுவா் காட்டும் வழியில் நடந்திடுவோம்!
    உள்ளம் ஒளிரும் உயா்ந்து!

    கவிஞா் கி. பாரதிதாசன்
    தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

    பதிலளிநீக்கு
  63. குறள்களும் அதன் விளக்கங்களும் அருமை..வாழ்த்துக்கள் தனபாலன்...

    பதிலளிநீக்கு
  64. அருமையான குறள் விளக்கம் அண்ணா என்னால் மட்டும் ஏன் உங்களைப் போல் எழுத முடியவில்லை கொஞ்சம் பொறாமை தான் இதே போல் சிறப்பான பதிவுகளை தந்து அறிவாற்றலை பெருகச் செய்யுங்கள் நன்றிகள் அண்ணா

    பதிலளிநீக்கு
  65. மிக அருமையாக குறள்களுக்கு விளக்கம்.அருமை...

    பதிலளிநீக்கு
  66. தொழிலாளர் தினத்துக்கேற்ற சிறப்பான பதிவு

    பதிலளிநீக்கு
  67. நல்லதொரு ஆக்கம் நண்பரே. மே தின வாழ்த்துக்கள்.

    அன்புடன்
    பவள சங்கரி

    பதிலளிநீக்கு
  68. அருமையான பதிவு.
    பகிர்வுக்கு நன்றி
    http://samaiyalattakaasam.blogspot.ae/2013_05_01_archive.html

    பதிலளிநீக்கு
  69. குறளை விட உங்கள் உரைநடை போன்ற வரிகள் அபாரம் . உழைப்பதில் ஒரு தனி இன்பம் உண்டு

    பதிலளிநீக்கு
  70. மிக அற்புதமான பகிர்வு தாமத வருகைக்கு மன்னிக்கவும்.

    பதிலளிநீக்கு
  71. இப்பதிவை இவ்வளவு நேரம் எப்படி பார்க்காமல் இருந்தேன் என்று தெரிய வில்லை.
    ஒவ்வொரு குறளுக்கும் அருமையான விளக்கம் தந்திருக்கிறீர்கள். (எனது பதிவை நான் எழுதுவதற்கு முன்னர் இதைப் படித்திருந்தேன் என்றால் எனது பதிவில் பொருளை இன்னும் எளிமையாக எழுதியிருப்பேன்).
    வலியறிதல் எனக்கு வழியறிதல் ... வலிகள் இன்றி வாழ்க்கை இல்லை. வலிகளை ஏற்றுக்கொண்டால் வழிகள் பிறக்கும் என்று மிகச் சரியாக சொல்லியிருக்கிறீர்கள். தேர்ந்தெடுக்கப் பட்ட பாடல்கள் அருமை.

    பதிலளிநீக்கு
  72. ஏற்கெனவே படித்திருந்தாலும் அருமையான நினைவூட்டுதலாய் இருந்தது...

    பதிலளிநீக்கு
  73. வணக்கம்


    இன்று தங்களின் வலைப்பூ வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது வாழ்த்துக்கள் பார்வையிட முகவரி இதோ.
    http://blogintamil.blogspot.com/2015/02/blog-post_15.html?showComment=1423961203036#c2363193222159569920

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  74. வாழ்த்துக்கள்.
    அருமையான பதிவு. மீண்டும் படித்தேன்.

    பதிலளிநீக்கு
  75. சிறப்பான சிறப்புப் பதிவுக்கு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  76. வணக்கம் சகோதரரே

    அருமை. மிக அருமையாக எழுதியுள்ளீர்கள். ஒரு நல்ல தகப்பனாருக்கும், நல்ல மகனுக்கும் இடையே நடை பெறும் உரையாடல்களுடன் (இந்த இடத்தில் இதை உரையாடல் என்று சொல்வதை விட அறிவு சார்ந்த அறிவுரைகள் எனலாம்) பொருள் புதைந்த குறளையும் சுட்டிக்காட்டி மிக அருமையாக சிந்தித்து எழுதியுள்ளீர்கள். உங்கள் வழி என்றுமே வலிகளை உணர்ந்த, எதுவும் நம்மை கடந்து போகும், காலம் நம் மனப்புண் ஆற்றும் என்ற உண்மையை உணர்ந்த தனி வழிதான். என் மனம் நிறைந்த வாழ்த்துகள் தங்களுக்கும், பதிவுக்கும்.. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  77. மீண்டும் படித்தேன், 2013, 2017 ம் வருடம் என் பின்னூட்டம் இருக்கிறது.
    அப்பா, மகன் உரையாடல் அருமை.
    தொழிலில் முன்னேறி அப்பாவுக்கு பெருமை சேர்த்து இருப்பீர்கள்.
    வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  78. திருக்குறளுக்கேற்ற தந்தை-மகன் உரையாடல் சிறப்பு ஜி

    பாடல் அருமையான சேர்ப்பு.

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென்று இடித்தற் பொருட்டு. (குறள் 784)

நட்புச் செய்துகொள்வது நண்பரோடு சிரித்து மகிழ்வதற்காக மட்டும் அல்ல. மிகுதியாகத் தவறு செய்யும்போது, அவரைக் கடிந்து திருத்துவதற்கே ஆகும்.