🏠 வணக்கம் காப்பகம் நன்றி

தேடல் 🔎



புதிய பதிவுகளை பெற ✉



உனக்குள் ஒருவன்... உணர்ந்தால் இறைவன்… (பகுதி 2)

வணக்கம் நண்பர்களே... ஹே நித்தம் நீதான் உழைச்சுப் பாரு-மெத்தை இல்லாம தூக்கம் வரும்... சத்தம் இன்றி உதவி செஞ்சா-வாழும் போதே சொர்க்கம் வரும்... பாரதிய படிச்சுப்புட்டா-பெண்களுக்கு வீரம் வரும்... காரல்மார்க்ஸ நெனச்சுப்புட்டா-கண்களுக்குள் நெருப்பு வரும்... பெரியார மதிச்சுப்புட்டா-பகுத்தறிவு தானா வரும்... அம்மா அப்பாவ வணங்கிப் பாரு-எல்லாருக்கும் எல்லாம் வரும்... (படம் : வில்லு) முந்தைய பதிவான பகுதி 1-யை ரசித்துப் பாராட்டிய அனைவருக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்... அம்மா அப்பா தான் தெய்வம்... இனி...


புதிதாக என் தளம் வருபவர்களுக்கு : (மற்ற நண்பர்கள் பாடல் வரிகளை ரசிக்கச் செல்லலாம்) நண்பர்களே... தெய்வம் இருப்பது எங்கே ? :- இந்தப் பதிவு எழுதும் போது, என் மனதில் பல பாடல் வரிகள் தோன்றின. அவற்றில் எனக்குப் பிடித்த பாடல் வரிகளை மிக்ஸ் செய்து (DD Mix - Dindigul Dhanabalan Mix) வெளியிட்டேன்.. அதற்கு முன்... அந்தப் பதிவைப் படிக்காதவர்கள் பதிவின் மீது சொடுக்கி, படித்து / கேட்டு விட்டு வந்து, இந்தப் பாடல் வரிகளைப் படித்தால், பாடல்களின் மகத்துவத்தை அறியலாம். நீலக்கலரில்-அருமை வரிகள், என் கருத்துக்கள் எழுதினால் பதிவு நீளமாகி விடும் என்பதால், சிவப்புக் நிறத்தில் - நான் பாட்டுக்கு எதிர்ப்பாட்டு பாடுகிறேன்...

08. படம் : ஆலயமணி, முதல் வரி : சட்டி சுட்டதடா... கை விட்டதடா...

பாதி மனதில் தெய்வம் இருந்து பார்த்துக் கொண்டதடா... மீதி மனதை மிருகம் இருந்து ஆட்டி வைத்ததடா... ஆட்டி வைத்த மிருகம் இன்று அடங்கி விட்டதடா... அமைதி தெய்வம் முழுமனதில் கோவில் கொண்டதடா...

கடவுள் பாதி, மிருகம் பாதி, கலந்து செய்த கலவை நான்... வெளியே மிருகம், உள்ளே கடவுள், விளங்க முடியாக் கவிதை நான்... மிருகம் கொன்று மிருகம் கொன்று கடவுள் வளர்க்கப் பார்க்கின்றேன்-ஆனால் கடவுள் கொன்று உணவாய் தின்று மிருகம் மட்டும் வளர்க்கிறதே... நந்தகுமாரா, நந்தகுமாரா... நாளை மிருகம் கொல்வாயா...? மிருகம் தின்ற எச்சம் கொண்டு, மீண்டும் கடவுள் செய்வாயா...? குரங்கிலிருந்து மனிதன் என்றால், மீண்டும் இறையாய் ஜனிப்பானா...? மிருக ஜாதியில் பிறந்த மனிதா... தேவஜோதியில் கலப்பாயா...? (படம் : ஆள வந்தான்)

09. படம் : ஆண்டவன் கட்டளை, முதல் வரி : ஆறு மனமே ஆறு... அந்த ஆண்டவன் கட்டளை ஆறு

ஆசை, கோபம், களவு கொள்பவன் பேசத் தெரிந்த மிருகம்...... அன்பு, நன்றி, கருணை கொண்டபவன் மனித வடிவில் தெய்வம் - இதில் மிருகம் என்பது கள்ள மனம்... உயர் தெய்வம் என்பது பிள்ளை மனம்–இந்த ஆறு கட்டளை அறிந்த மனது ஆண்டவன் வாழும் வெள்ளை மனம்...

சிரிப்பவன் கவலையை மறைக்கின்றான்... தீமைகள் செய்பவன் அழுகின்றான்... இருப்போம் என்றே நினைப்பவர் கண்களை, இறந்தவன் அல்லவோ திறக்கின்றான்... ஆடி அடங்கும் வாழ்க்கையடா... ஆறடி நிலமே சொந்தமடா... (படம் : நீர்க்குமிழி)

10. படம் : அனாதை ஆனந்தன், முதல் வரி : அழைத்தவன் குரலுக்கு வருவேன் என்றான்...

அடையாக் கதவு அவன் வீடு... அஞ்சேல் என்பது அவன் ஏடு... அடைக்கலம் தருவான்... நடப்பது நடக்கும்... அமைதியுடன் நீ நடமாடு...!

நெஞ்சுக்குத் தேவை மனசாட்சி-அது நீதி தேவனின் அரசாட்சி... அத்தனை உண்மைக்கும் அவன் சாட்சி-மக்கள் அரங்கத்தில் வராது அவன் சாட்சி... கடவுள் ஏன் கல்லானான்..? மனம் கல்லாய் போன மனிதர்களாலே... (படம் : என் அண்ணன்)

11. படம் : அவள் ஒரு தொடர் கதை, முதல் வரி : தெய்வம் தந்த வீடு, வீதியிருக்கு...

தெளிவாகத் தெரிந்தாலே சித்தாந்தம்... அது தெரியாமல் போனாலே வேதாந்தம்... மண்ணைத் தோண்டி கண்ணீர் தேடும் அன்புத் தங்கச்சி... என்னைத் தோண்டி ஞானம் கண்டேன்... இது தான் என் கட்சி... உண்மை என்ன..? பொய்மை என்ன ? இதில் தேன் என்ன..? கடிக்கும் தேள் என்ன...?

போயும் போயும் மனிதனுக்கிந்த புத்தியைக் கொடுத்தானே-இறைவன் புத்தியை கொடுத்தானே... அதில் பொய்யும் புரட்டும் திருட்டும் கலந்து பூமியைக் கெடுத்தானே-மனிதன் பூமியைக் கெடுத்தானே... (படம் : தாய் சொல்லைத் தட்டாதே)

12. படம் : முத்து, முதல் வரி : ஒருவன் ஒருவன் முதலாளி

பூமியை வெல்ல ஆயுதம் எதற்கு..? பூ பறிக்கக் கோடரி எதற்கு..? பொன்னோ... பொருளோ... போர்க்களம் எதற்கு..? ஆசை துறந்தால்... அகிலம் உனக்கு...

மண்குடிசை வாசலென்றால்... தென்றல் வர வெறுத்திடுமா..? மாலை நிலா ஏழையென்றால்... வெளிச்சம் தர மறுத்திடுமா..? உனக்காக ஒன்று, எனக்காக ஒன்று... ஒருபோதும் தெய்வம் கொடுத்ததில்லை... (படம் : படகோட்டி)

13. படம் : பாபு, முதல் வரி : இதோ எந்தன் தெய்வம் முன்னாலே...

பல நூல் படித்து நீயறியும் கல்வி... பொது நலம் நினைத்து நீ வழங்கும் செல்வம்... பிறர் உயர்வினிலே உனக்கிருக்கும் இன்பம்... இவை அனைத்திலுமே இருப்பதுதான் தெய்வம்... /// தன் வியர்வையிலும் உழைப்பினிலும் வாழ்வை... கண்டு தொழில் புரிந்து உயிர் வளர்க்கும் ஏழை... அவன் இதழ் மலரும் சிரிப்பொலியைக் கேட்டேன்... அந்தச் சிரிப்பினிலே இறைவனை நான் பார்த்தேன்... பாசமுள்ள பார்வையிலே கடவுள் வாழ்கிறான்-அவன் கருணையுள்ள நெஞ்சினிலே கோயில் கொள்கிறான்...

வாழ்க்கை என்றொரு பயணத்திலே... பலர் வருவார் போவார் பூமியிலே... வானத்து நிலவாய் சிலர் இருப்பார்... அந்த வரிசையில் முதல்வன் தொழிலாளி... ஆண்டவன் உலகத்தின் முதலாளி... அவனுக்கு நான் ஒரு தொழிலாளி... (படம் : தொழிலாளி)

14. படம் : சந்திரோதயம், முதல் வரி : காசிக்குப் போகும் சந்நியாசி... உன் குடும்பம் என்னாகும் நீ யோசி...?

இல்லறம் என்பது நல்லறம் ஆகும்... இதுவே வள்ளுவன் சொன்ன சொல்லாகும்... குடும்பத்தின் விளக்கு மனைவி என்றாகும்... கோபத்தை மறந்தால் சொர்க்கம் உண்டாகும்... பக்தியின் வடிவம் சன்னியாசம், புண்ணியவான்கள் சகவாசம், அதுவே சந்தோஷம்... சக்தியின் வடிவம் சம்சாரம்... அவளே அன்பின் அவதாரம்... வேண்டாம் வெளி வேஷம்... காசிநாதனே என் தெய்வம்... கட்டிய மனைவி குலதெய்வம்... மனைவியும் தெய்வமும் ஒன்றில்லை... மனைவி இல்லாமல் தெய்வம் இல்லை...!

வாலிபங்கள் ஓடும், வயதாகக்கூடும், ஆனாலும் அன்பு மாறாதது... மாலையிடும் சொந்தம், முடிப்போட்ட பந்தம், பிரிவென்னும் சொல்லே அறியாதது... அழகான மனைவி, அன்பான துணைவி, அமைந்தாலே பேரின்பமே... மடிமீது துயில, சரசங்கள் பயில, மோகங்கள் ஆரம்பமே,... நல்ல மனையாளின் நேசம் ஒரு கோடி, நெஞ்சமெனும் வீணை பாடுமே தோடி, சந்தோஷ சாம்ராஜ்யமே... (படம் : புதுப் புது அர்த்தங்கள்)

"ஹாய்... பகுதி 1-ல் உதடுகள் ஒட்டும் திருக்குறள் சொன்னீயே... இதில் உதடுகள் ஒட்டாத திருக்குறள் சொல்லப்போறியா...?"

பலரும் வயதான காலத்தில் அறியும் (குறள் எண் 350) அதே அதிகாரத்தில் முதல் குறள் (341)

யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன்.

பொருள் : எந்த எந்தப் பொருளின் ஆசை கொள்வதிலிருந்து ஒருவன் விடுபட்டவன் ஆகிறானோ, அந்த அந்தப் பொருளைக் குறித்து அவன் துன்பம் அடைவதில்லை...

"இந்தப் பொருள் என்பதைப் பாவம், புண்ணியம், கர்ம வினை, மறுபிறவி, etc... - இப்படி எடுத்துக் கொள்ளலாமா...? என்னப்பா... முறைக்கிறே... சரி அதை விடு... இந்த 'நோதல்' சொல்லும் போது உதட்டோரம் கொஞ்சம் ஒட்டுகிறமாதிரி இல்லே...? வேறு குறள் ஏதேனும் உண்டா...?"

"அப்படியா மனசாட்சி...? இதை முயற்சி செய்து பார்..." (குறள் எண் 489)

எய்தற்கு அரியது இயைந்தக்கால் அந்நிலையே
செய்தற்கு அரிய செயல்.

பொருள் : கிடைப்பதற்கு அருமையான காலம் வந்து வாய்த்த போது, அப்போதே நாம் செய்வதற்கு அரிதான செயல்களைச் செய்து வெற்றி பெற வேண்டும்...

"சரியாச் சொன்னே... இப்போ எல்லார் வீட்டிலும் எல்லோரும் சுறுசுறுப்பாக, வேக வேகமாக, முன்னோர்கள் பயன்படுத்தியவற்றை உபயோகித்து, இதுவரை செய்யாத வேலையெல்லாம் செய்றாங்க... செய்யலேன்னு வச்சுக்கோ, சம்சாரம் மட்டுமல்ல எல்லோரும் மின்சாரம் ஆயிடுவாங்க...!"

அடுத்த பகுதியை இங்கே சொடுக்கித் தொடர்வதற்கு முன், இந்தப் பதிவைப் பற்றி தங்களின் கருத்து என்ன...?

புதிய பதிவுகளை பெறுதல் :


தொடர்புடைய எண்ணங்களின் வண்ணங்கள் சில :


முகநூல் மூலம் கருத்துக்களை பகிர :

கருத்துகள்

  1. உதடுகள் ஒட்டாத திருக்குறள் அருமை. பாடல் வரிகளும் அதற்கான விளக்கமும் அருமை.

    பதிலளிநீக்கு
  2. பாலன் சகோ!

    நல்ல பாடல்வரிகள்!

    மேலும் திருக்குறள் விளக்கம்.
    மிக அருமை'

    நல்ல பகிர்வு..

    பதிலளிநீக்கு
  3. பிலிம் நியூஸ் ஆனந்தன் மாதிரி, பழைய பாடல் வரிகளை நினைவில் வைத்து கலக்குறிங்க. பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  4. கிடைப்பதற்கு அருமையான காலம் வந்து வாய்த்த போது, அப்போதே நாம் செய்வதற்கு அரிதான செயல்களைச் செய்து வெற்றி பெற வேண்டும்...

    அரிய பதிவுக்கு பாராட்டுக்கள்.. வாழ்த்துகள்..

    பதிலளிநீக்கு
  5. பாட்டுக்கு எதிர்பாட்டா கலக்கல் அன்பரே
    உதடு ஒட்டாத திருக்குறள் அருமை

    பதிலளிநீக்கு
  6. பாட்டுக்கு சளைக்காமல் எதிர்பாட்டு பாடி இருக்கிறீர்கள். அருமையான தொகுப்பு. வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  7. தேர்ந்தெடுக்கப் பட்ட பாடல் வரிகள் அருமை. சிந்திக்கவைக்கும் பாடல்கள் நினைவு படுத்தியமைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  8. சிந்தனையை தூண்டுற பாட்டுகளை தொகுத்து அதற்கு பொருத்தமா சிந்தனையை தூண்டுற எதிர் பாட்டுக்களை தொகுத்தது மிக அருமை..பகிர்வுக்கு நன்றி சகோ.

    பதிலளிநீக்கு

  9. இன்னார் இனியர் என எண்ணாமல் எவர் மாட்டும்(வலை) சென்று மறுமொழி பதியும் பெருந்தன்மையப் நான் பெரிதும் பாராட்டுகிறேன்

    பதிலளிநீக்கு
  10. அருமையான திரைப்படப்பாடல்கள்.
    எளிமையான தங்களின் கருத்துக்கள்.
    பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  11. எதிரொலியான பாடல்கள் ,நல்ல பாடல்களின் கருத்துகளை நினைவுபடுத்தி இருகிறீர்கள் .நல்ல பதிவு !

    பதிலளிநீக்கு
  12. "" அம்மா அப்பாவ வணங்கி பாரு - எல்லாருக்கும் எல்லாம் வரும் ""

    அருமையான வரிகள் சார் ! பகிர்வுக்கு நன்றிங்க !

    பதிலளிநீக்கு

  13. பாடல் வரிகளுக்குப் பதில் பாடல் வரிகள். வித்தியாசமாய் சிந்தித்து அசத்துகிறீர்கள். வாழ்த்துக்களும் பாராட்டுகளும் தனபாலன்.

    பதிலளிநீக்கு
  14. பாடல் திரட்டு அருமை. இறுதியில் நினைவூட்டிய குறள் இரண்டும் வலிமை

    பதிலளிநீக்கு
  15. தேர்ந்தெடுத்த பாடல் வரிகள்
    அனைத்தும் அற்புதம்
    உதடு ஒட்டா திருக்குறள்
    நச்சென மனதில் ஒட்டிக் கொண்டது
    மனம் கவர்ந்த பயனுள்ள பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  16. அனைத்தும் அற்புதமானத் தேர்வு..அருமை-tm8

    பதிலளிநீக்கு
  17. அழகான குறள்கள் ..அருமையான விளக்கங்கள்..நல்ல பதிவு....

    பதிலளிநீக்கு
  18. ஒவ்வொரு பதிவுக்கும் எவ்வளவு உழைக்கிறீர்கள் !

    பதிலளிநீக்கு
  19. அழகான பாடல்கள் அர்த்தமுள்ள வரிகளின் திரட்டு.......

    சூப்பர்

    பதிலளிநீக்கு
  20. இந்த பதிவில் வந்த அனைத்து பாடல்களும் நான் அதிகம் விரும்பி அடிக்கடி கேட்கும் பாடல்கள். ஆனால், அப்பாடல் வரிகளின் பொருளை உணர்ந்தது இன்றுதான் சகோ. பகிர்வுக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  21. ஆஹஅஹஹஹஹஹஹா அசத்தலான வரிகள்....பாடல்களை கேட்பதை விட உங்கள் எழுத்தில் அதிக கவர்ச்சி நன்றி...!

    பதிலளிநீக்கு
  22. பாடல்களுக்கு ஒரு பாடல் அழகான சிந்தனை அற்புதம் அண்ணா நானும் படித்தேன் ரசித்தேன்

    பதிலளிநீக்கு
  23. தத்துவப்பாடல்கள் தொகுப்பும் திருக்குறள் விளக்கமும் சிறப்பு! மிக்கநன்றி!

    பதிலளிநீக்கு
  24. அழகான பாடல்களுக்கு அர்த்தமுள்ள விளக்கங்கள்

    பதிலளிநீக்கு
  25. பாடல்களும் அதன் சிறப்பான தொகுப்பும் மிக நன்று...

    பதிலளிநீக்கு
  26. திரை இசைப்பாடல்களில் "டாக்டர்" பட்டம் தரலாம் தங்களுக்கு

    பதிலளிநீக்கு
  27. பழையப் பாடலுக்கு இன்றுள்ள பாடல்வரிகளை எதிர்பாடலாக....
    சூப்பர் தனபாலன் ஐயா.

    பதிலளிநீக்கு
  28. வித்தியாசமான அலசல்.. சுவையாக இருந்தது..

    பதிலளிநீக்கு
  29. வணக்கம்
    தனபால் அண்ணா

    அருமையான படைப்பு கருத்துள்ள பாடல்களையும் போதக்குறைக்கு திருக்குறளையும் எடுத்துக்காட்டி அதற்கான விளக்கத்தையும் கொடுத்த உங்களுக்கு எனது வாழத்துக்கள்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  30. அருமையான பாடல் வரிகளைத் தொகுத்தவிதம் அருமை! நல்லதொரு பகிர்விற்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  31. 12 ற்கு 'ஏழையைப் படைத்தவன் அவனென்றால் இறைவன் என்பவன் எதற்காக? பொன்னகை அணிந்த மாளிகைகள் புன்னகை மறந்த மண்குடிசை, பசிவர அங்கே மாத்திரைகள் பட்டினியால் இங்கு யாத்திரைகள்' வரிகளும் நினைவுக்கு வருகின்றன.

    //நண்பர்களே, தங்களின் கருத்து என்ன?//

    வழக்கம் போல அருமைதான்!

    பதிலளிநீக்கு
  32. அனைத்தையும் திரட்டி பதிவிட்டமை சிறப்பு..நல்லதோர் பதிவு..

    பதிலளிநீக்கு
  33. வணக்கம்
    தனபால் அண்ணா,

    உண்மையில் நல்ல சிந்தனை இப்படிப்பட்ட சிந்தனை உங்களுக்குதோன்றியதை நினைத்து மிக்க மகிழ்ச்சியாக உள்ளது
    அருமையாக உள்ளது வாழ்த்துக்கள்(அண்ணா)
    தொடரங்கள் பதிவுகளை நான் தொடருகிறேன்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  34. super anna....!
    neenta naal aasaiyin kaaranamaka naanum oru valaipathivu aarampithullen....niraiya santhekankal ullathu ... uthavi pannuveenkala anna?

    address - jeevansubbu.blogspot.in

    பதிலளிநீக்கு
  35. பழைய பாடல்களும்,எதிர் பாடல்களும் திருக்குறள் விளக்கமும் அற்புதம்.

    எளிமையான நடையில் எல்லோர் மனதையும் கவருகிறீர்கள்.சிந்திக்கவும் வைக்கிறீர்கள்.

    பாராட்டுக்கள்!



    பதிலளிநீக்கு
  36. அத்தனைப் பாடல்களும் கருத்துள்ள அருமையான பாடல்கள். சத்தம் போட்டுப் பாடிப் பார்த்தேன். பகிர்வுக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  37. அருமையான பாடல்களும் அதன் அர்த்தங்களும் இனிமை.உங்களின் இந்த புதுமையான முயற்சி பாராட்ட தக்கது.

    பதிலளிநீக்கு
  38. ரொம்ப நல்லாருக்கு அண்ணே, எல்லா பாடல்களையும் கேட்டு ரசிக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  39. அண்ணா என்றால் ஒட்டாத உதடு.தம்பி என்றால் ஒட்டும்ஃமுன்னால் ஆட்சியின்போது பேருந்தில் படித்ததுதான் நிணைவிற்கு வருகிறதுஃநண்பா!

    பதிலளிநீக்கு
  40. அருமையான பதிவு . சிறந்த பாடல்களின் தொகுப்பு . அதற்கொப்ப எளிமையான விளக்கம் .பாராட்டுக்கள்

    பதிலளிநீக்கு
  41. நிறைய நேரமெடுத்து யோசிச்சு அருமையாக பதிவாக்கிறீங்கள்.பழைய பாடல்கள்,திருக்குறள்...அருமை !

    பதிலளிநீக்கு
  42. உங்களது பதிவுகளும் வாசகரைக் கவரும் ஆற்றலும் அனைவருக்கும் கிடைப்பதில்லை அபாரம் அருமையான விளக்கம் வாழ்த்துகள் அண்ணா தொடருங்கள்

    பதிலளிநீக்கு
  43. கவிதை மற்றும் இந்த மாதிரியான தத்துவ பாடல்கள் எழுத கண்டிப்பா திறமை ஆற்றல் மற்றும் கற்பனை திறன் வேண்டும். வாழ்த்துக்கள் நண்பா..

    பதிலளிநீக்கு
  44. அருமையான பதிவு. அசரிரீ பாடல்கள் பற்றியும் இதற்கு அதிகம் குரல் கொடுத்த சீர்காழி கோவிந்தராஜன் மற்றும் மெல்லிசை மன்னரைப்ப்ற்றிய பதிவையும் தங்களிடம் இருந்து எதிர்பார்க்க்கிறேன்.

    பதிலளிநீக்கு
  45. எனது கல்லூரி நாட்களை நினைவுபடுத்தி விட்டீர்கள். அப்போது நான் அடிக்கடி கேட்ட இலங்கை வானொலி ஒலிபரப்பிய பாடல்கள். உங்கள் பதிவினைப் படிக்கும்போது பாடல்களை அசை போட்டுக் கொண்டே படித்தேன்.

    பதிலளிநீக்கு
  46. என் அம்மா அப்பாவை விட என் தெய்வமாக இருந்தது என் மகன் கார்த்தி.
    கலா கார்த்திக் [ பொன்னியின் செல்வன் அம்மா ]

    பதிலளிநீக்கு
  47. உதடு ஒட்டாத குறள் புதுத் தகவல் மிக்க நன்றி. பாடல் விளக்கங்கள் சூப்பர்.
    அதாவது சிந்தனைச் சுடர்.
    இனிய நல் வாழ்த்து.
    வேதா. இலங்காதிலகம்.

    பதிலளிநீக்கு
  48. பாடல்கள் எல்லாம் அருமை. பாடல் தேர்வு மிக அருமை.

    உதடு ஒட்டத குறள் தெரிந்து கொண்டேன்.
    நன்றி.

    பதிலளிநீக்கு
  49. எவ்வளவு நுட்பமான, ஆழமான வரிகள், அலசல்கள். இது உங்களது ரசிப்பு திறனையும், கூர்ந்து கவனிக்கும் திறனையும் சொல்கிறது, பதிவு தொடர வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  50. அன்பு தனபாலன் படிக்கும் போதே உணர்ச்சி மிகுகிறது. மகிழ்ச்சி மேலோங்குகிறது.
    அருமையான பதிவு.

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென்று இடித்தற் பொருட்டு. (குறள் 784)

நட்புச் செய்துகொள்வது நண்பரோடு சிரித்து மகிழ்வதற்காக மட்டும் அல்ல. மிகுதியாகத் தவறு செய்யும்போது, அவரைக் கடிந்து திருத்துவதற்கே ஆகும்.