🏠 வணக்கம் காப்பகம் நன்றி

தேடல் 🔎



புதிய பதிவுகளை பெற ✉



ஒரு வரம் கிடைத்தால்...

"ஆயிரம் ஆண்டுகள்... ஆயிரம் பிறவிகள்... பூமியில் பிறந்திட வேண்டுகிறேன்... அத்தனை பிறப்பிலும், இத்தனை உறவும்... அருகினில் இருந்திட வேண்டுகிறேன்..."



© அடுக்குமல்லி கண்ணதாசன் சங்கர் கணேஷ் வாணி ஜெயராம் @ 1979 ⟫


"அண்ணே... சௌக்கியமா ? நான் கலந்துக்கிற மூன்றாவது பதிவு... நண்பர்கள் சொன்னதாலே நிறையப் பாட்டுப் பதிவா எழுதுறே... எனக்கு அவ்வளவு தெரியாது... அதனாலே பதிவு முடிவிலே பாட்டு வைச்சுக்கோ..."

"வாம்மா... நலமா ? நல்ல பாட்டோடு தான் வந்திருக்கே... நீங்க மரமாகப் போறீங்க... பதிவிலும், தெய்வம் இருப்பது எங்கே ? பதிவிலும் கலந்துகிட்டே... (படிக்காதவர்கள் அந்தந்த பதிவின் மேல் சொடுக்கிப் படிக்கலாம்) ஒரு வரம் கிடைத்தால், என்ன கேட்போம் என்று அலசுவோமா, தங்கச்சி...? இது ஒரு கற்பனை பதிவு... நீ ரொம்பப் படிச்சவ... அதனாலே 'எப்படி வரம் கிடைக்கும் ?' என்றெல்லாம் யோசிக்காம பதிலைச் சொல்லு...."

"படிச்சா மட்டும் போதுமாண்ணே... நல்ல பண்புகளோடும், குணங்களோடும் இருக்க வேண்டும். அது போதுமே... என்ன படித்து என்ன செய்ய...? என் குழந்தைகளுக்குப் புரிகிற மாதிரி பாடங்கள் கற்றுத் தர, ஒரு வரம் கிடைச்சா போதும் போலிருக்கு... ...ம்... அடுத்த ஜென்மம் என்று ஒன்று இருந்தால், நம்ம அப்பா அம்மாவிற்கு மறுபடியும் குழந்தையாகப் பிறக்க வேண்டும். சின்ன சின்னச் சண்டை போட, விளையாட, அண்ணனாக நீங்க வேண்டும்..."

"கண் கலங்க வைச்சிட்டேயே தாயி... உன்னோட அன்பு எப்போதும் இருக்க வேண்டும்... போதும்மா இந்த ஜென்மமே... மக்களுக்குப் பயன் தரும் எந்த மரமாக மாறினாலும் சரி... இந்த மனிதப்பிறவி வேண்டவே வேண்டாம் சாமீ...! பிறவாத வரம் வேண்டும்..."

"அப்படியா...? நான் மழைத்துளியாக மாற வேண்டும். மாதம் மும்மாரி பெய்ய வேண்டும். இந்தப் பூமி வெப்பமடைதலைத் தடுத்து, ஓசோன் ஓட்டையை அடைப்பதற்கான ஆராய்ச்சி வேண்டும்... முதலில் இந்த மண் வளத்தைக் கெடுக்கும் பொருட்களை... முக்கியமாக நெகிழிப் பைகளை ஒழிக்க வேண்டும்... சந்தேகம் : (1) தெய்வம் பற்றிய ஆராய்ச்சி செய்பவர்களின் தாய் தந்தை யார்...? (2) உன் மதமா...? என் மதமா ? என 'மதம்' பிடித்தவர்களின் ஆராய்ச்சி ஏன்..? (3) சங்ககால இலக்கியங்களில் குறை காண்பவர்கள், அதனின் நோக்கம் என்னவென்று முழுமையாக ஆராய்ந்தார்களா...?"

"போதும் தங்கச்சி... அப்படியே இரண்டு மூன்று உலகத் தகவல்களைச் சேர்த்துக்கோ... உன்னைப் பகுத்தறிவுவாதி என்று சொல்ல ஆரம்பிச்சிருவாங்க...! இப்படி Post-Mortem ஆராய்ச்சி நிறைய நடக்குது...ம்... ஏதோ ஒரு முடிவோடு தான் வந்திருக்கே போல...! யாரும் சண்டை சச்சரவு இல்லாமல், பேராசை இல்லாமல் இருக்க வேண்டும்... ஆதரவற்றவர்களுக்கும் ஊனமுற்றவர்களுக்கும் உதவும் மனப்பான்மையும், அதற்கேற்ற செல்வமும் வரமாக வேண்டும்... அடுத்து மழை... மாதம் மும்மாரி என்ற கணக்கு எல்லாம் இப்ப கிடையாது. மழை பெய்வதும், பெய்யாததும் நமது கையில் தான் உள்ளது... அப்புறம் சுதந்திரம் கிடைத்து விட்டது... பலரிடமிருந்து, பலவற்றிலிருந்து விடுதலை பெற ஒரு மகாத்மாவோ, அன்னை தெரசாவோ வந்தால் அல்லது மாறினால் எவ்வளவு நன்றாக இருக்கும்...."

"நல்லாச் சொன்னீங்க அண்ணே... நம்ம ஐயன் கூறிய செல்வத்துள் செல்வம் செவிச் செல்வம், கேடில் விழுச்செல்வம் என்று பல இருந்தாலும், இருக்கும் வரை யாருக்கும் தொந்தரவு தராமல் ஆரோக்கியமாக இருக்க வேண்டும்... நோயற்ற வாழ்வே குறையற்ற செல்வம்..."

"அது சரி... மனிதன் தப்பு செய்றோம்கிறதை, அவனே தெரியாம இருக்கிறது தான், மிகப்பெரிய தப்பு. குடிப்பவர்களின் மனம் மாற வேண்டும். மனம் மாறினால் தான் உண்மையான மது 'விலக்கு' ... சரி... பாட்டை சொல்லு..."

அண்ணே... வீட்டில் குழந்தைகள் ஏதோ சொல்றாங்களாம்... எனக்குப் பிடித்த பாடல் வரிகளை முதல்லே சொல்லிறேன்... யுத்தம் இல்லாத பூமி-ஒரு சத்தம் இல்லாமல் வேண்டும்... பஞ்சம் பசி போக்க வேண்டும்... தேசத்தின் எல்லைக் கோடுகள்-அவை தீரட்டும்... புத்தம் புது பூமி வேண்டும் (படம் : திருடா திருடா)

மனிதர்க்கெல்லாம் ஒரு மனம் கேட்டேன்... எண்ணம் எல்லாம் உயரக் கேட்டேன்... இழிவைத் தாங்கும் இதயம் கேட்டேன்... சொன்னது கேட்கும் உள்ளம் கேட்டேன்... கயவரை அறியும் கண்கள் கேட்டேன்... காலம் கடக்கும் கால்கள் கேட்டேன்... போலி இல்லாத புன்னகை கேட்டேன்... காசே வேண்டாம் கருணை கேட்டேன்... சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்... யுத்தம் இல்லாத உலகம் கேட்டேன்... (படம் : அமர்க்களம்)

"அமர்க்களமா எடிட் செய்து சொல்லிட்டே... குழந்தைகளே... எல்லோரும் சேர்ந்து யோசித்து விட்டு வரம் கேளுங்க... அம்மா, அப்பா, (கண்டிப்பா இவர்களைப்பற்றி எதுவும் சொல்ல மாட்டாங்க... ஹிஹி) தாத்தா, பாட்டி, ஆசிரியர், கடவுள் - இவர்களைப்பற்றி எதுவும் சொல்லக்கூடாது..."

"முடிந்தளவு மரங்களை நட வேண்டும்... வீட்டையும், வீட்டுச் சுற்றுப்புறத்தையும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும்... எங்களுக்கும் சிவகாசி தகவல்கள் தெரியும்... பட்டாசே வேண்டாம்... அதுக்குப் பதிலாக ஏழைகளுக்கு உதவுங்க... உங்களுக்கு ஒரு கேள்வி : (1) இவ்வளவு திருக்குறளிலே 'தமிழ்' என்கிற சொல்லே இல்லையே... ஏன்...? (2) தமிழில் முதல் எழுத்தில் ஆரம்பித்து (அ), தமிழில் கடைசி எழுத்தில் முடியும் (ன்) ஒரு குறள் சொல்லுங்க பார்ப்போம்... திருக்குறளை எல்லோரும் படிக்கிறது மட்டுமில்லாம அது போல் வாழவும் வேண்டும்-இது தான் எங்கள் வரம் !"

பாலென அழுவோர்க்குப் பால் தருவோம் - பசுங் கூழெனத் துடிப்போர்க்கு சோறிடுவோம்... தாயகம் காப்போரின் தாள் பணிவோம் - யாவும் தனக்கென நினைப்போரை சிறையிடுவோம்... எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும் - இங்கு இல்லாமை இல்லாத நிலை வேண்டும்... வல்லான் பொருள் குவிக்கும் தனி உடைமை - நீங்கி வரவேண்டும் திருநாட்டில் பொதுவுடைமை... (படம் : கருப்புப் பணம்)

"எல்லாக் குழந்தைகளும் நல்லா சாப்பிட்டுத் தான் விளையாடுறாங்க... இப்படிப் பாட்டைப் பாடி குழந்தைகளை ஓட வைச்சிட்டீங்களே... ஹா... ஹா... இந்தப் பாட்டை நானே கேட்டதில்லே...ம்... நிறைய தெரிஞ்சிக்க வேண்டும்... சரி... குழந்தைகள் கேள்விகளுக்குப் பதில்...? சொல்லுங்கண்ணே...!"

"இதுக்குத் தான் இந்தக்காலக் குழந்தைகளிடம் நிறையத் தெரிந்து கொள்ள வேண்டும்னு சொல்றது... (1) தமிழ்-இணையத்திலும், வெளியிலும் என்ன பாடுபடுகிறது என்று அன்றைக்கே வள்ளுவருக்குத் தெரிந்து விட்டது போலே... இணையத்தில் பதிவு எழுதும் போதாவது பக்கத்து இருக்கையில் அவரவர் தாய் உட்கார்ந்து இருக்கிறார்கள் என்று நினைத்தாலே போதும்... (2) 1330 குறளும் சொல்லணும்...

அப்புறம் நம்ம நண்பர்கள் எல்லாம் இந்தப் பதிவைப் பற்றிச் சொல்லாம (1) அரிய நூல்கள் அழியாமல் காக்க வேண்டும்... (2) பல நூல்களை வாங்கிப் படிப்பதில் தவறில்லை... அதோடு மாதம் இரு மரக்கன்றுகளை வாங்கி வளர்த்தால் நன்று... (3) குழந்தை தொழிலாளர் வேலை இருக்கவே கூடாது... (4) ஆண் படித்தால் அவனுக்கு மட்டும் உதவும்... பெண் படித்தால் அந்தப் பரம்பரைக்கே உதவும்... இப்படிப் பட்ட வரங்கள் சொல்லப் போறாங்க... அம்மா தாயே... நீ கலந்துகொண்டால் பதிவு நீளமாகி விடுகிறது... என்னென்ன வரம் என்பதை ஹைலைட் செய்து பப்ளிஷ் செய்... பதிவு என்றாலும் எப்படி இருக்க வேண்டும் என்பதையும் பாட்டிலே சொல்லிறேன்..."

அனைவருக்கும் பட்டாசு இல்லாத தீபாவளி நல்வாழ்த்துக்கள்...

அறிவும் அன்பும் கலந்திடவே... அழகில் வையம் மலர்ந்திடவே... நெறியில் மனிதன் வளர்ந்திடவே... நேர்மை நெஞ்சில் நிறைந்திடவே.... உலகம் சமநிலை பெற வேண்டும்... உயர்வு தாழ்வில்லா நிலை வேண்டும்... நிறைவே காணும் மனம் வேண்டும்... இறைவா அதை நீ தர வேண்டும்... (படம் : அகத்தியர்)

"நண்பர்களே தங்களின் கருத்து என்ன...?"

" நண்பர்களே... ஒரு வரம் கிடைத்தால்... என்ன வரம் கேட்பீங்க...? "

(உள்வீட்டுப் பிரச்சனையோ, வெளிநாட்டுப் பிரச்சனையோ... இணையத்தைப் பற்றியோ, கணையத்தைப் பற்றியோ... உங்கள் மனதில் எழும் வரம் = வாழ்வின் இலக்கு, குறிக்கோள், லட்சியம், சவால் - இப்படி எதுவானாலும் சொல்லலாம்... அதுவே இப்பதிவின் நோக்கம்)

சரி, நினைத்த வரம் கிடைத்த பிறகு...? → சிறப்பான செயலுக்கு என்ன தேவை என்பதை அறிய இங்கே சொடுக்கித் தொடரலாம்...

புதிய பதிவுகளை பெறுதல் :


தொடர்புடைய எண்ணங்களின் வண்ணங்கள் சில :


முகநூல் மூலம் கருத்துக்களை பகிர :

கருத்துகள்

  1. ஒரே ஒரு வரம் கிடைத்தால்!!.., சகோ திண்டுக்கல் தனபாலன் ஆசைப்பட்ட மாதிரி உலகு அமையனும்னு வெண்டிப்பேன் சகோ...,

    பதிலளிநீக்கு
  2. நான் கேட்க நினைக்கும் வரம் மற(றை)ந்து போன மனித நேயம் திரும்பவேண்டும்’ என்பதே ஆகும். நல்ல பதிவு.வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  3. அமர்க்களமான பகிர்வுகள்.. பாராட்டுக்கள்..

    பதிலளிநீக்கு
  4. ரொம்பவும் பேராசையா இருக்கே! இருந்தாலும் உங்கள் ஆசைகள் நிறைவேறட்டும்.

    பதிலளிநீக்கு
  5. நல்ல பதிவு!
    வரம் எனக்கு-
    நானும் வாழனும்-
    முடிந்தளவு பிறருக்கு-
    உதவிடும் அளவு-
    வருமானம் வரணும்...

    பதிலளிநீக்கு
  6. இறைவனுக்கு நேவதியத்தில் வாழைப்பழம் இருக்கும் தத்துவமே மீண்டும் பிறவாமை வேண்டும் என்பதுதான். மற்ற பழங்களில் விதைகள் உண்டு. மீண்டும் விதையில் இருந்து உற்பத்தி தொடங்கும். வாழைப் பழத்தில் இருந்து வாழை உற்பத்திஆவது இல்லை.

    பதிலளிநீக்கு
  7. அன்பு வரம் நிம்மதி வரம் ஆரோக்கியவரம் மூன்று வரம் கேட்கலாமா.

    பதிலளிநீக்கு
  8. நல்ல கருத்துக்களை மட்டுமே மட்டுமே அழகான பாடல் வரிகளோடு கூறுகிறீர்கள்.மிக மிக ரசித்தேன்.
    நான் கேட்கும் வரம் எல்லோரும் இன்புற்று வாழவேண்டும் என்பதே.

    பதிலளிநீக்கு
  9. இந்தப் புதிய பதிவு புதுமையானதும்கூட.

    பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  10. எனக்கு வேண்டாம் வரம்..

    ஏனென்றால்..

    இந்தக் கதையைப் படியுங்கள் நண்பரே..

    நீங்களும் சொல்வீர்கள் வரம் எனக்கு வேண்டாம் என்று..

    http://www.gunathamizh.com/2010/02/blog-post_16.html

    பதிலளிநீக்கு
  11. தன்னைத் தானே யாரென்று அறிந்து கொள்ள முடியாத மனநிலையுடன் பிறக்கும் குழந்தைகள் நல்ல மனநலத்துடனும், உடல் நலத்துடனும் பிறக்க வேண்டும்.. வறுமை, வன்முறை இல்லா உலகம் வேண்டுமென்று விரும்புவேன்..!

    பதிலளிநீக்கு
  12. தங்களின் ஓய்வு நேரம் இருக்கும் போது...
    மின்சாரம் இருக்கும் போது...
    முக்கியமாக விருப்பம் இருக்கும் போது...

    படித்து விட்டு தங்களின் கருத்துக்களை கூறவும்.

    நாகரிகம் என்பது உங்களிடம் இருந்து தான் கற்றுக் கொள்ள வேண்டும்.

    பதிலளிநீக்கு
  13. அருமை !
    உங்களுக்கும் பட்டாசு இல்லாத
    ஆனால் பட்சணம் உடைய
    தீபாவளி நல்வாழ்த்துக்கள் !@

    பதிலளிநீக்கு
  14. சரியான நேரத்தில் சரியான வரம் கேட்கத் தெரியவும் அது உடனே கைகூடவும் வேண்டும் என்று தான் தோன்றும்.

    Atleast, வரம் கிடைக்கும் பொழுது, தனபால் போல் போன்று யாராவது பட்டியல் இடத் தெரிந்தவர் அருகில் இருக்க வேண்டும் என்றுக் கேட்க வேண்டுமோ? :-)

    பதிலளிநீக்கு
  15. ம்...
    இமாவுக்கு 'ழ' 'ள' சரியாக எழுதுவது போல் வரம் கிடைத்தால் போதும். :D

    பதிலளிநீக்கு
  16. மிகச்சிறப்பான பதிவு . நன்றிகள் ஆயிரம் பகிர்ந்தமைக்கு

    பதிலளிநீக்கு
  17. சாதி,மதம்,இனம் கடந்த சகோதர சமூகம் வேண்டும்..சண்டை,பகைமை,பிணி,சயநலம் என்றால் என்னவென்று கேட்டிடும் நிலை வேண்டும்..

    பதிலளிநீக்கு
  18. மீண்டும் பிறவாமை என்ற வரம் கேட்பேன்.

    சிறந்த பகிர்வுங்க.
    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  19. அகத்தியர் படப்பாடல் பொருத்தமாய் இருக்கிறது. உலகம் சமநிலை பெற வேண்டும்; உயர்வு தாழ்விலா நிலை வேண்டும். சமநிஅலை ஏற்படின் அவலங்களின்றி ஆனந்தமாகி விடுமே! நல்ல கருத்துக்களின் தொகுப்பு! நன்றி!

    பதிலளிநீக்கு
  20. என்ன வரம் கேட்பீங்க...? "

    எல்லோரும் இன்புற்று வாழவேண்டும்

    தனபாலன்

    பதிலளிநீக்கு
  21. அவர்களால் எனக்கு எந்த பயனும் இல்லை என்பவர்க்கு உதவும் மனமும் அதற்குத் தேவையான என் உழைப்பிலான பணமும் வேண்டும்

    பதிலளிநீக்கு
  22. கற்பனை உரையாடலுடன் பகிர்வு அருமை. ரிப்பீட்டு ராஜி கமெண்ட்.

    பதிலளிநீக்கு
  23. எனக்கு ஒரே ஒரு வாரம் மட்டும் வேண்டும் உலகில் உள்ள எல்லா நாடுகளையும் சுற்றி பார்க்கவேண்டும் என்று கேட்பேன் அண்ணா

    பதிலளிநீக்கு
  24. நான் கேட்கும் வரம் ஏழை. பணக்காரன் இல்லாத சமமான உலகம் என்பதுதான். உங்களுக்கும் என் இதயம் நிறைந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள் நண்பா.

    பதிலளிநீக்கு
  25. ஆரோக்கியம் வேண்டும். எல்லோருக்கும் இனிமையானவளாக, இயன்ற உதவிகளைச் செய்பவளாக, மனம் நிறைய மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டு வாழும் வரம் வேண்டும்!

    பதிலளிநீக்கு
  26. அமைதியான உலகம் வேண்டும்.

    தீபாவளி வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  27. அந்த ஒரு வரத்தில்
    நூறு வரம் தரும்படிக் கேட்பேன்
    அருமையான ஆழமான பதிவு
    அடுத்தவர்களின் ஒரு வரமறிய
    பதிவுக்கு அடுத்தடுத்து வருவேன்
    வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  28. சிறந்த பதிவு.

    எல்லோரும் எல்லாமும் பெறவேண்டும் -உலகில்
    இல்லாமை இல்லாத நிலை வேண்டும்.

    எனக்கென எதுவும் வேண்டாம்..:)

    எல்லோருக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  29. சீனி அண்ணா சொன்னது போன்ற ஒரு வரமே நானும் ஆசை படுகிறேன் அண்ணா.. நல்ல பகிர்வு. வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  30. இப்போதைக்கு வரம் கிடைத்தால் ஒளி படைத்த தமிழகம் வேண்டுவேன்! ஐ மீன் மின் தடை இல்லா தமிழகம்!அருமையான பதிவு! வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  31. வணக்கம் சகோதரரே
    நலமா?


    ஆழமான கருத்துமிக்க பாடல் ஒன்றுடன்
    படைக்கப்பட்ட பதிவு மிக அருமை....
    ஏற்றத்தாழ்வு இல்லா மனநிலை
    மனிதனுக்கு வேண்டும் என்பதே
    என்னுடைய வரமும்...

    பதிலளிநீக்கு
  32. நான் கேட்கும் வரம்... 'இந்தியாவுக்கு, ஏன் உலகுக்கே, தன் நலம் தள்ளி, பொது நலம் கருத்தில் கொண்டு, தொலைநோக்குப் பார்வையுடன் நல்லபல திட்டங்கள் கொண்டு வரும் ஒரு அரசு!

    இன்னொரு வரத்துக்கு அனுமதி இருந்தால்... தனபாலன் பக்கத்தில் வந்து வரம் கேட்டிருப்பவர்கள் அனைவரின் வரமும் நிறைவேற வேண்டும்! :))

    பதிலளிநீக்கு
  33. உங்க‌ளைப் போல் நேரிய‌ எண்ண‌ங்க‌ள் எங்க‌ளுள் நிறைய‌ வேண்டும்...

    பதிலளிநீக்கு
  34. விக்கி இணைய தளத்தை பார்த்தது போல இருக்கிறது.கொடிது கொடிது வறுமை கொடிது.பஞ்சமும் பிணியில்லா உலகம் கேட்போம் .பாராட்டுகள் !!!

    பதிலளிநீக்கு
  35. ஆரோக்கியம் நிம்மதியான வாழ்வு போதாதா?...
    மனிதன் மனிதனாக வாழவேண்டும்.
    நல்ல பதிவு. இனிய வாழ்த்து.
    வேதா. இலங்காதிலகம்.
    இனிய தீபாவளி நல்வாழ்த்து.

    பதிலளிநீக்கு
  36. வணக்கம் சகோதரரே அருமையான பகிர்வு .நான் உண்மையச் சொல்லி விடுகிறேன்
    இந்தப் பூமியை விட்டுப் போகும் வரைக்கும் ஆசைப்படுகிற எல்லாமே கிடைக்கிறமாதிரி ஒரே ஒரு வரம் போதுமா :)
    இனிய தீபாவளி வாழ்த்துக்கள் சகோ உங்களுக்கும் உறவினர்கள் நண்பர்கள் அனைவருக்கும் .

    பதிலளிநீக்கு
  37. அருமையான பதிவு..எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும்.

    பதிலளிநீக்கு
  38. நல்ல பகிர்வு

    நீல வரிகளைக் கொண்டே ஓராயிரம் பதிவுகளை எழுதிவிடலாம்....

    பதிலளிநீக்கு
  39. மனநிறைவுள்ள மனுஷனை காண்பது அரிது நண்பா...!!!

    யோசிக்கவைக்கும் பதிவு...!

    பதிலளிநீக்கு
  40. என்ன கேட்கலாம்....!அன்பும்,ஒற்றுமையும் நிறைந்த உலகம் வேண்டும்..!

    பதிலளிநீக்கு
  41. இன்னிக்குதான் உங்க பக்கம் வரேன் . பழய பதிவெல்லாம் வரிசையா படிச்சுட்டு வரேன் ரொம்ப நல்லா எழுதரீங்க வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  42. மீண்டும் வருகை தந்து, ஓட்டளித்திருக்கிறேன்

    பதிலளிநீக்கு
  43. அன்பு நண்பரே இன்றைய வலைச்சரத்தில் தங்கள் பதிவை நன்றியுடன் பகிர்ந்துள்ளேன்.

    நன்றி

    http://blogintamil.blogspot.in/2012/11/blog-post_9.html

    பதிலளிநீக்கு
  44. மாசுபாடு போன்ற நல்ல தகவலுடன் பாடலும் தந்துள்ளீர்கள். நன்று.

    பதிலளிநீக்கு
  45. அத்தனை உறவுகளும் தூய்மையான் மனங்களாய் இருக்கட்டும். இப்படி ஒரு வரம் அமைந்தால் உலகில் துன்பம் ஏது?

    பதிலளிநீக்கு
  46. வணக்கம்
    திண்டுக்கல் தனபால்(அண்ணா)

    குறுகிய வரிகவிதையில் ஆயிரம் அர்த்தங்கள் புதைந்து கிடக்கிறது மிகவும் அருமை வாழ்த்துக்கள்
    இன்று வலைச்சர் வலைப்பூவில் பகிரப்பட்டுள்ளது,

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  47. முதுமையிலும் சுயதேவைகளை,பூர்த்திசெய்து கொள்ளும்,திறனும்,பிறர்க்குதவும்மனமும், மனோதிடமும் வேண்டும்.

    பதிலளிநீக்கு
  48. அன்பு கலந்த தீபாவளி வாழ்த்துகள் யாவருக்கும்.

    பதிலளிநீக்கு
  49. மின்சாரம் இல்லை அதனால் உடன் கருததுரை பதியமுடிவில்லை. பதிவு அடடா..அடடா ரகம். உங்கள் சிரிப்பை போலவே ....

    பதிலளிநீக்கு
  50. IT Act sec 66 ஒழிய வேண்டும். அதனால் நம் பதிவர்கள் யாரும் பாதிக்க கூடாது.

    அது சரி

    இந்த வரம் தரும் கடவுள் யார்?

    பதிலளிநீக்கு
  51. தொடர்மின்வெட்டால்(14மணிநேரம்)வெகுவாக இயல்பு வாழ்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இணைய உலகில் நுழைய முடியவில்லை.

    அற்புதமான பதிவு,ஆழமான கருத்துக்கள் கூடிய பாடல் வரிகள். வாழ்த்துக்கள் நன்றி.

    இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  52. சமூக ஒற்றுமைக்காக அன்பு அனைவரிடத்திலும் காணப்பட வேண்டும்.

    பதிலளிநீக்கு

  53. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
    இனிய தீபாவளித் திரு நாள் நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  54. சந்தோஷமான வாழ்க்கை மட்டும் போதும்

    பதிலளிநீக்கு
  55. உங்கள் கவிதையை படிக்க ஒடொடி படையெடுத்து வந்திருக்கிரான் Ghazni Muhammed

    பதிலளிநீக்கு
  56. வாழ்வுக்குத் தேவையான அத்தனையையும் சொல்லியிருக்கிறீர்களே கிடைக்குமா...நடக்குமா.நல்லதே நடக்க முதலில் மனிதன் நல்லவனாக இருக்கவேணும் !

    அன்பான தீப ஒளி வாழ்த்துக்கள் உங்களுக்கு.அத்தோடு வலைச்சரத்தல் என்னை யார் அறிமுகப்படுத்தினாலும் நான் விடுமுறையில் நிற்கும்போதுகூட எனக்கு அறிவித்துப்போகும் உங்கள் நல்ல உள்ளத்திற்கு என் நன்றியும் மகிழச்சியும் பல் !

    பதிலளிநீக்கு
  57. அடடே, நம்ம ஊர் சினிமாப் பாட்டுகளில் இத்தனை தத்துவங்கள் அடங்கியிருக்கிறதா....!!

    நிறைய சுற்றுப்புறச் சூழல் பற்றிய சிந்தனை எல்லோரும் இதே மாதிரி சிந்தித்தால் நன்றாகயிருக்கும்!!

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  58. மிகவும் பயனுள்ள பதிவு. இன்று முதல் நானும் தங்கள் தளத்தின் வாசகன்!

    பதிலளிநீக்கு
  59. தாங்களுக்கும் தங்கள் குடும்பத்தாரும் எல்லா வளமும் பெற்று வளமோடு வாழ இத்தீபத்திருநாளில் எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன் சகோ.

    பதிலளிநீக்கு
  60. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் மனம் நிறைந்த தீப ஒளி திருநாள் நல்வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு
  61. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் எனது இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  62. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் எனது இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  63. இனிய தீபாவளித் திருநாள் நல்வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு
  64. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் மற்றும்
    உங்களது நண்பர்கள் அனைவருக்கும் எனது இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
    "தீப ஒளியினிலே தீயன மறைந்து நல்லன பிரகாசிக்கட்டும்"
    இனித்திடும் இந்த இனிய தீபாவளித் திருநாளில் உங்கள் விருப்பங்கள்
    எல்லாம் கைகூடி வந்து
    என்றென்றும் சந்தோசமாக இருக்க வாழ்த்துக்கள்..
    தித்திக்கட்டும் இனிய தீபாவளி உங்கள் வாழ்க்கையில்

    பதிலளிநீக்கு
  65. மனம் நிறைந்த தீபாவளி வாழ்த்துகள் நண்பரே.

    பதிலளிநீக்கு
  66. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
    இனிய தீப ஒளித் திருநாள் நல்வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  67. ”எல்லா உயிர்களும் இன்புற்றிருக்க நினைப்பதுவேயல்லாமல் வேறு ஒன்றும் அறியேன் பராபரமே”

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தின்ர் அனைவருக்கும் எனது தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

    நன்றி

    பதிலளிநீக்கு
  68. அருமையான கருத்துக்கள்.


    உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் எனது இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  69. உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  70. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  71. இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் நண்பரே.

    பதிலளிநீக்கு
  72. நல்ல மனம் கேட்கும் அத்தனை வரங்களும் நிச்சயம் கிடைக்கும்!
    எப்போதும் நல்லதையே எழுதும் உங்களுக்கும் மனம் விரும்புகின்ற அத்தனையும் கிடைக்க வாழ்த்துக்கள்!!
    இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!!

    பதிலளிநீக்கு
  73. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் எனது இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள், தித்திக்கட்டும் இனிய தீபாவளி உங்கள் வாழ்க்கையில் - நன்றி.

    பதிலளிநீக்கு
  74. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் எனது உளங்கனிந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  75. நல்லவை யாவும் நடத்தல் வேண்டும்.

    உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் என்னுடைய இதயம் நிறைந்த இனிய தீபாவளித் திருநாள் நல்வாழ்த்துகள் தனபாலன் ஐயா.

    பதிலளிநீக்கு
  76. வணக்கம் பாலன் உங்கள் பதிவுகள் ரொம்பவும் தரமா இருக்கு. சினமா செய்திகளை எழுதி பொழுது போக்கும் இணையதளங்களில் இருந்து மாறுபட்டு ஜோலிக்கிறீங்க மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  77. உங்கள் கனவுகள் மெய்ப்படட்டும். வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  78. உங்களுக்கும் உங்க குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  79. தங்களுக்கும் குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  80. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் எனது இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்,

    பதிலளிநீக்கு
  81. தனபாலன் சார்!

    யாரிடமிருந்து வரம் கிடைக்கும் என்று தெரியவில்லை.
    ஒருவேளை கிடைக்குமென்றால் என்னை மறுபடியும் குழந்தையாக மாற்று என்று கேட்பேன்.

    பதிலளிநீக்கு
  82. நான் நிறைய முறை தங்களின் தளத்திற்கு வந்திருக்கிறேன்.
    ஆனால் என்னால் எதையுமே முழுமையாக படிக்க முடியவில்லை (மன்னிக்கவும்.)
    தங்களின் அருமையான அனைத்து பதிவுகளுமே மிகவும் பெரியதாக இருக்கின்றன.தங்களிடமிருந்து நிறைய கற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது. நேரமின்மை மட்டுமே காரணம்.

    பதிலளிநீக்கு
  83. நன்றி தனபாலன் சார்...வலைச்சர அறிமுகத்தை என் வீடு வந்து சொன்னதற்கு...

    பதிலளிநீக்கு
  84. யுத்தம் இல்லாத உலகத்தை சிருஷ்டிப்பதும்,கலாச்சாரதை கைவிடாமல் காப்பாற்றிக்
    கொள்கிற தனமும் நமக்கு கை
    வரப்பெற வேண்டும்/

    பதிலளிநீக்கு

  85. வணக்கம்!

    கம்பன் விழா நிறைவுற்றதும்
    உங்கள் வலையைத்தான் முதலில் படித்துப் கருத்திடுகிறேன். மழைபொழிந்தாலும் வெயில் காய்ந்தாலும் நண்பா்களின் மின்வலைகளைப் பார்வையிட்டுக் கருத்திடும் உங்களை வணங்குகிறேன்! வாழ்த்துகிறேன்! தொடா்க வலைப்பணி!

    வேண்டும் வரம்!

    சிந்துசிறக்க! வண்ணம் செழித்துநடக்க! வன்பகையைப்
    பந்துபறக்கச் செய்வதுபோல் பாய்ந்தடிக்க! - செந்தமிழைத்
    தந்துசிறக்க வேண்டும்! தமிழ்க்கவியாய் எப்பிறப்பும்
    வந்துபிறக்க வேண்டும் வரம்!

    பதிலளிநீக்கு
  86. மிக அருமை. உங்கள் ஆசை வரம் எல்லாம் நிறைவேறட்டும்.

    பதிவுக்கு பதிவு வித்தியாசம் அருமை யோ அருமை .

    எனக்கு ஒரு வரம் கிடைத்தால் உலகில் யாரும் பசியோடு இருக்கக்கூடாதுன்னு வேண்டிப்பேன்

    பதிலளிநீக்கு
  87. அவைருகும் அவரவர் மனைவியை நூறு சதவீதம் புரிந்து கொள்ளும் சாமார்த்திய வரம் வேண்டும். சூப்பர் சார்.

    பதிலளிநீக்கு
  88. முழுவதும் படிக்க முடிந்தது மிகப்பொறுமையாக....

    வரம் கேட்குமுன்... அது நமக்கு மட்டும் அவசியப்படுமா? உலகுக்கே அவசியப்படுமா என்பதில் தொடங்கி... நம் சந்தோஷம் என்பது பிறரை சந்தோஷப்படுத்தி பார்ப்பதில் தான் என்று தொடர்ந்து.... மரம் நட்டு வைங்கப்பா... இயற்கையை வாழவைங்க.. இயற்கை நம்மை வாழவைக்கும் நம் சந்ததியை வாழவைக்கும் என்று மிக எளிமையாக மரம் நட்டு வைக்கச்சொல்ல சொல்லி...

    தாய்த்தந்தையர் குரு மூத்தோரை பணிந்து அடக்கமாய் இருக்கவேண்டும் என்றுச்சொல்லி...

    பிள்ளைகளின் மேல் எப்போதும் ஒரு கவனம் இருக்கவேண்டும் என்றும் சொல்லி....

    நல்லதையே செய் அதையும் இன்றே செய்....

    செய்யும் நல்லதை சொல்லிக்காட்டும் வாய்ப்பு வந்தாலும் அதை சொல்லிவிடாமல் இருக்கவும்....

    அழுத்தமான ஆணித்தரமான கருத்துச்செறிவுள்ள பொக்கிஷமாய் காக்கவேண்டிய வரிகளால் அனைவருக்கும் அன்பாய் மல்லிகைப்பூ தீண்டலாய் அறிவுரைச்சொன்னது மிக மிக அழகு....

    தீபாவளி என்றாலே பட்டாசு என்ற நினைவு வரும்போதெல்லாம் இனி குழந்தைத்தொழிலாளர்களும் அவர்களின் வலியும் மரணமும் நினைவுக்கு வரவேண்டும்... பட்டாசு வெடித்து பெறும் இன்பத்தை விட கோடி இன்பத்தைப்பெற சொன்ன உபாயம் ஏழைக்குழந்தைகளுக்கு செய்யும் உதவிகளையும்.....

    மிக அருமையான பதிவு தனபாலன்...

    அதைக்கூட எத்தனை மென்மையாக...

    எல்லோருக்கும் சமயம் இருந்து....
    மின்சாரமும் கைக்கொடுத்து....
    வந்து கருத்திட்டால் போதும்....

    போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்தாய்....

    இருப்பதைக்கொண்டு இல்லாதவருக்கு பகிர்ந்து....

    நம்மிடம் இருக்கும் நல்லவைகளை எல்லோருக்கும் பகிர்ந்து....

    நமக்கு அவசியமில்லாத விடயங்களில் நாம் கலந்துக்கொள்ளாமல்....

    யாரைப்பற்றியும் புறம் பேசாது.. கோள் மூட்டாது....

    மனிதர்களின் முன்பும் பின்பும் நல்லவைகளேயே சொல்லிச்செல்லச்சொல்லி வேண்டி....

    இனியொரு பிறவி வேண்டாம்...
    இப்பிறவியிலேயே நாம் செய்ய நினைக்கும் அத்தனை நல்லவைகளையும் செய்து இறைவனடி சேர்வோம் மகிழ்வுடன் என்றுரைத்த மிக அற்புதமான பகிர்வுக்கு என் தலைதாழ்ந்த மனம் நிறைந்த அன்புநன்றிகள் தனபாலன்....

    பதிலளிநீக்கு
  89. மிக மிக அருமையாக நல்ல பாடல்களுடன் நல்ல க்ருத்துக்களை மிக அழகாய் சொல்லி விட்டீர்கள். அடுக்குமல்லியில் வரம் கேட்கும் பாடல், அமர்க்களத்தில் யுத்தம் இல்லாத பூமி வேண்டும் பாடல், கறுப்பு மணத்தில் எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும் பாடல்,
    எல்லாம் அருமை.

    குழந்தை தொழிலளர்கள் இருக்க கூடாது அவர்களும் கல்வி கற்க வேண்டும்.
    பதிவு எழுதுபவர்கள் பக்கத்தில் தாய் இருக்கிறாள் என்றால் எல்லாமே நல்ல பதிவாய் வரும் அதில் எந்தவித சந்தேகமும் இல்லை.

    கடைசியில் நிறைமனம் வேண்டும் என்று முடித்தது மிக மிக மகிழ்ச்சி. அது தான் மிக மிக அவசியம்.

    நல்ல பதிவை அளித்த உங்களுக்கு நன்றி தனபாலன்.
    வலைச்சர செய்தி சொன்னதற்கு மிகவும் நன்றி.

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென்று இடித்தற் பொருட்டு. (குறள் 784)

நட்புச் செய்துகொள்வது நண்பரோடு சிரித்து மகிழ்வதற்காக மட்டும் அல்ல. மிகுதியாகத் தவறு செய்யும்போது, அவரைக் கடிந்து திருத்துவதற்கே ஆகும்.