🏠 வணக்கம் காப்பகம் நன்றி

தேடல் 🔎



புதிய பதிவுகளை பெற ✉



என்னைப் பற்றி ஆய்வு (SET 1) ISO - Part 4

வணக்கம் நண்பர்களே... ISO பெறும் நிறுவனங்களில், பல பேருக்குக் கொடுக்கப்படும் தகவல்களை, முந்தைய பதிவாக ஓஹோ அப்படியா...! ISO PART 3 ← கொடுத்திருந்தேன்... (படிக்காதவர்கள் பதிவின் மீது சொடுக்கிப் படிக்கவும்) முதல் இரு பதிவுகளும் நிறுவனத்திலுள்ள தொழிலாளர்களுக்குக் கொடுப்பது... இந்தப் பகிர்வு படித்த அதிகாரிகளுக்கெல்லாம் கொடுப்பது... ஒவ்வொரு கேள்விற்கும் ஆமாம் (YES) என்றால் +2 மதிப்பெண், இல்லை (NO) என்றால் -1 மதிப்பெண் போட்டுக் கொள்ளுங்கள்...



பகுதி ஒன்று

சுய மதிப்பீடு ஆய்வு : தலைமைப் பண்பு

(SELF EVALUATION TEST : LEADERSHIP)

சுருக்கமாக SET என்று வைத்துக் கொள்வோமா...?

01) Do you have self motivation ? (சுயமாக இயங்கும் திறன்)

02) Do you have goal setting for yourself ? (இலக்கு)

03) Do you make your actions perfect ? (நிறைவான செயல்கள்)

04) Do you have self awareness ? (சுய விழிப்புணர்வு)

05) Do emotions affect your work ? (மன உணர்வுகள்)

06) Do you practice self discipline ? (சுய ஒழுக்கம்)

07) Do you have the physical fitness to suit the work ? (உடல் கட்டுக்கோப்பு)

08) Do you withstand your emotions ? (தாங்கிக் கொள்ளும் ஆற்றல்)

09) Do you allow flexibility in your work ? (வளைந்து கொடுத்தல்)

10) Are you food habits affecting the work ? (உணவுப்பழக்கம்)

11) Do you have will power ? (மனோதிடம்)

12) Are your attentive when somebody talks to you ? (கவனித்தல்)

13) Do you apply left and right part of your brain ? (உபயோகித்தல்)

14) Are you using your sub-conscious mind ? (உள்மனம்)

15) Can you control the stress developed within you ? (மன அழுத்தம்)

16) Do you apply any relaxation technique ? (பதற்றக்குறைவு திறன்)

17) Can you refuse alcohol if it is offered in parties ? (மறுத்து விடுதல்)

18) Can you change your perception if valid explanation is given ? (உணரும் சக்தி)

19) Are you delegating your authority to you sub-ordinates ? (அதிகார ஒப்படைப்பு)

20) Do you have hobbies which can refresh you ? (புத்துணர்வு)

21) Are you resource person in your subject area ? (திறமை)

22) Do you give priority in your works ? (முன்னுரிமை)

23) Do you plan your work schedule everyday ? (வேலை அட்டவணை)

24) Do you use your intellectual power while decision making ? (அறிவுத்திறன்)

25) Are you taking any decision based on intuition ? (உள்ளுணர்வு)

தோழர்களே... இது ஒரு சுய பரிசோதனை... உங்களுக்கு அல்லது உங்கள் குழந்தைகளுக்கு (சில கேள்விகள் தவிர்த்து) அல்லது நண்பர்களுக்கு உதவலாம்... சரி...

15 கேள்விகள் 'YES' என்றால் (15)x(+2)=30 மதிப்பெண்கள். மீதம் 10 கேள்விகள் (10)x(-1)=-10 மதிப்பெண்கள். இந்தப் பகுதியில் மதிப்பெண்கள் = 30-10 = 20

எதற்குக் கணபதி படம் என்றால்...

To Become an outstanding Auditor
Remember GANAPATHY for
1. Big Ear - To Listen more
2. Long Nose - To Smell more
3. Big Head - To Think more
4. Small Eyes - To concentrate more
5. Closed Mouth - To talk less

MORE AMICABLE BUT VERY DISCIPLINED

இவ்வாறு Auditor's Skills பற்றி விரிவாக எழுதலாம் என்றால் மின் வெட்டு அதிகம்... அதனால் இந்த எளிய பகிர்வு... அதற்காக இப்படிக் கேள்விகளாகப் பகிர்வுகள் வராது... அதுவும் இல்லாமல் போன வருடம் இன்றைய நாள் உங்களை எல்லாம் சந்திக்க ஆரம்பித்த சந்தோசமான நாள்... அடுத்த பகிர்வு சிறந்த பத்து பதிவுகள்-நண்பர்கள் பற்றிய ஒரு சிறப்புப் பகிர்வு... நீங்கள் எதிர்பார்க்காத வகையில் கொஞ்சம் வித்தியாசமாக...!

///// படம் : குடியிருந்த கோவில் முதல் வரி : என்னைத் தெரியுமா...? நான் சிரித்துப் பழகி கருத்தைக் கவரும் ரசிகன் என்னைத் தெரியுமா...? ஆஹா ரசிகன், ஆஹா ரசிகன்...! நல்ல ரசிகன், நல்ல ரசிகன்...! உங்கள் ரசிகன், உங்கள் ரசிகன்...!

நான் புதுமையானவன்... உலகைப் புரிந்து கொண்டவன்... நல்ல அழகைத் தெரிந்து மனதைக் கொடுத்து அன்பில் வாழ்பவன்... ஆடலாம்.. பாடலாம்.. அனைவரும் கூடலாம்... வாழ்வைச் சோலையாக்கலாம்... /////

சரி... என்னைப் பற்றி ஆய்வு அடிக்கடி செய்வதுண்டு... நீங்கள் விரும்பினால் உங்களைப் பற்றி ஆய்வு செய்து எவ்வளவு மதிப்பெண்கள் என்பதை ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள்... வரும் SET பதிவுகளில் சேர்த்துக் கொள்ளலாம்... முடிவு...? முடிவில் பார்த்துக் கொள்ளலாம் நண்பர்களே...
அடுத்த பகுதியைத் தொடர இங்கே சொடுக்கித் தொடர்வதற்கு முன் இந்தப் பதிவைப் பற்றி நண்பர்களே தங்களின் கருத்து என்ன...?

புதிய பதிவுகளை பெறுதல் :


தொடர்புடைய எண்ணங்களின் வண்ணங்கள் சில :


முகநூல் மூலம் கருத்துக்களை பகிர :

கருத்துகள்


  1. கேள்வி பதிலுக்கு நான் தகுதியற்றவன்! வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  2. குழந்தைகளுக்கு, நண்பர்களுக்கு என்று அனைவருக்கும் பயனுள்ள பகிர்வுகள்.. பாராட்டுக்கள்...

    பதிலளிநீக்கு
  3. கண்பதி பற்றிய விளக்கம் புதுமை அருமை
    சுய மதிபீட்டில் மார்க
    அவ்வளவு திருப்தியாக வரவில்லை
    என்னை சரிசெய்ய வேண்டும்
    எனப் புரிந்து கொண்டேன்
    பயனுள்ள அருமையான பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  4. மிகவும் பயனுள்ள பதிவு. ஒவ்வொருவரும் தன்னைப் பரிசீலிக்க வேண்டிய கட்டாயமான பதிவு இது

    பதிலளிநீக்கு
  5. திண்டுக்கல் தனபாலன்,


    25 கேள்விகளில் 15 சரி. (15*2 = 30)

    அனைத்துத் தரப்பினருக்கும் பயன்படும் பதிவு. மின்வெட்ட எப்படிச் சமாளிக்கிறீங்க?

    ஸ்ரீ....

    பதிலளிநீக்கு
  6. வணக்கம் நண்பரே...
    கணபதி பற்றிய விளக்கம் மனத்தைக் கவர்ந்தது....
    தலைமைப் பண்புகள் மற்றும் சுய மதிப்பீடு
    நிலையில் நான் இன்னும் குறைவான நிலையிலேயே உள்ளேன்...
    மதிப்பிட வழிவகுத்து தன்னிலை ஏற்றிக்கொள்ள
    வைத்தமைக்கு நன்றிகள் பல....

    பதிலளிநீக்கு
  7. தனபாலன் எனக்கு 30 மார்க் ...
    நல்ல பதிவுசார்.சுயபரிசோதனை அவசியம் தான்.

    பதிலளிநீக்கு
  8. கணபதி....புதுசா இருக்கு....கேள்வி பதில்... ஹி ஹி ஹி அண்ணே டெஸ்ட்னாலே ஒரு அலர்ஜி....இருந்தாலும் முயற்சி பண்றேன்

    பதிலளிநீக்கு
  9. நல்ல பதிவு.....
    இருந்தும் இந்தக் கேள்விகள் எனக்கு ரொம்ப ஓவராகவே தெரியுது சார்

    பதிலளிநீக்கு
  10. கணபதியின் அங்க விளக்கம் அருமை.. சுய பரிசோதனையும் மிக அருமை..அனைவருக்கும் அவசியமான பதிவு.

    பதிலளிநீக்கு

  11. அன்பின் தனபாலன் இந்த வயதில் சுய மதிப்பீடு செய்வதே பொழுது போக்காகி விட்டது. பெரும்பாலோர் சுய மதிப்பீட்டில் தங்களை குறைவாக மதிப்பதில்லை. பெரும்பாலோர் தங்களை PERFECTION PERSONIFIED என்றே எண்ணுகிறார்கள். இருந்தாலும் இம்மாதிரியான சுய மதிப்பீடுகளுக்கு தங்களை உட்படுத்தி உண்மையான மதிப்பெண்கள் கொடுத்துப் பார்த்தால் அவர்களும் AFTER ALL ORDINARY HUMAN BEINGS என்று தெரிந்து கொள்வார்கள். கணபதியின் படம் சிறுவயதில் படித்த EAT LESS, CHEW MORE TALK LESS LISTEN MORE என்பன போன்ற வரிகளை நினைவுக்கு கொண்டு வந்தது. அது பெரிய லிஸ்ட். எல்லாம் நினைவிலில்லை. வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  12. கணபதி பற்றிய விளக்கம் அருமை.
    ஒவ்வொருவரும் தன்னைப் பரிசீலிக்க வேண்டிய கட்டாயமான பதிவு இது

    பதிலளிநீக்கு
  13. பிள்ளையாரின் படத்தை வைத்து அருமையான விசயங்களை சொல்லிவிட்டீர்கள்! பதிவுக்கு நன்றி அய்யா!

    பதிலளிநீக்கு
  14. "என்னைப்பற்றி ஆய்வு"
    உங்களிக்கு 10க்கு 10 மதிபெண்கள் தரலாம்.

    பதிலளிநீக்கு
  15. இந்தப் பதிவு வித்தியாசமாகவும்
    நன்றாகவும் இருக்கிறது தனபாலன் ஐயா.

    பதிலளிநீக்கு
  16. எனக்குக் கேள்வி கேட்பதில்தான் விருப்பம்.

    பதில் சொல்வது..............

    படு சோம்பேறிங்க நான்!!!

    நன்றி.

    பதிலளிநீக்கு
  17. நேற்று கணபதியை வைத்து ஒரு ஸ்பானிஷ் தொலைக்காட்சியில் ஜோசியம் சொல்லிக்கொண்டிருந்தார்கள்...

    இன்று ISO...நல்ல முயற்சி...

    வாழ்த்துக்கள் தனபாலன் சார்

    பதிலளிநீக்கு
  18. நம்மை நாமே அய்வு செய்ய முத்தான கேள்விகள்! அடுத்த பதிவை ஆவலுடன் எதிர்பார்கிறேன்! நன்றி!

    பதிலளிநீக்கு
  19. இரண்டு வரியிலே நினைவு வைத்துக் கொள்ளும் அளவிற்கு என் மதிப்பெண்கள் :(

    பயனுள்ள தகவலைப் பகிர்ந்தமைக்கு நன்றிகள் பற்பல

    பதிலளிநீக்கு
  20. கணபதி பற்றிய தகவல். அனைத்துத் தரப்பினருக்கும் பயன்படும் பதிவு அருமை.

    பதிலளிநீக்கு
  21. தன்னை மதிப்பிட்டுக் கொள்வதற்கான கேள்விகளைக் கொண்டு என்னை நானே மதிப்பிட முயற்சி செய்கிறேன். நல்ல பயனுள்ள பதிவு.

    பதிலளிநீக்கு
  22. மிக பயனுள்ள பகிர்வு.மிக அருமை.நன்றி.

    பதிலளிநீக்கு
  23. ”என்னைத் தெரியுமா” என்று எம்ஜிஆர் பாடும் திரைப்பட பாட்டில் வரும் “ நான் புதுமையானவன்” போன்று புதுமையானவர்தான் நீங்கள்.

    பதிலளிநீக்கு
  24. அருமையான பதிவு தனபாலன் சார்...என்னை சொதிதுகொள்ள மிக எளிமையான கேள்விகள், சிந்தனையை தூண்டியது. மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  25. அருமையான பதிவு. சுய ஆய்வு எல்லோரும் செய்ய வேண்டிய ஒன்றுதான்.

    எனக்கு ஒரு சந்தேகம். கேள்வி.5 க்கு எப்படி negative மார்க் கொடுக்க முடியும்??

    பதிலளிநீக்கு
  26. சுய பரிசோதனைக் கேள்விகள் அனைத்தும் ஒவ்வொருவரையும் தங்களை அலசி ஆராய உதவும்.

    கணபதியின் உருவத்திற்கு நல்ல விளக்கம்.

    பயனுள்ள பதிவு.

    பதிலளிநீக்கு
  27. விளக்கமான புதிய தகவல்கள்...

    நன்றி. உங்க பதிவு ப்ளாக் டஷ்போர்ட்ல வர மாட்டங்குது... அதான் தாமதம், கமெண்ட்ஸ பார்த்துதான் வர வேண்டியுள்ளது...

    பதிலளிநீக்கு
  28. என்னைப் பற்றிய ஆய்வு எனச் சொல்லிக்கொண்டு பிள்ளையார் படத்தைப் போட்டிருக்கிறீங்க:) நான் ஒரு கணம் ஆடிப்போயிட்டென்:)...

    ஆய்வு நல்லாத்தான் இருக்கு.

    பதிலளிநீக்கு
  29. நல்ல சுய ஆய்வு தான். சிறிய பதிவு.
    மகிழ்ச்சி. நல்வாழ்த்து.
    வேதா. இலங்காதிலகம்.

    பதிலளிநீக்கு
  30. எம்மைப் பற்றி நாம் புரிந்து கொண்டாலேயே இக்க்கேல்விகளுக்குப் பதிலளிக்க முடியும். நல்ல முன்னெடுப்பு.இந்த முடிவைக் கொண்டு எம்மை நாமே திருத்திக் கொள்ள முடியும் .

    பதிலளிநீக்கு
  31. முதல் வருகை...!

    சுயசோதனை கேள்விகளுக்கு மதிப்பெண் ரொம்ப கம்மியா வருதே.... :-O

    அருமையான பதிவு அண்ணா...! நன்றி !!!

    - இப்படிக்கு அனீஷ் ஜெ...

    பதிலளிநீக்கு
  32. நம்மை செதுக்கும் எண்ணத்தின் பிரதிபலிப்பு .அருமை !

    பதிலளிநீக்கு
  33. பயனுள்ள மதிப்பீட்டுத்தகவல்களுக்கு நன்றி.
    நீங்கள் ஒரு எழுத்து ரசிகன் என்பதை உங்களுடன் இணைந்து நானும் ஒத்துக்கொள்கின்றேன்.காரணம் உங்கள் வருகை இல்லாத வலைப்பூக்களே அரிது.

    உங்கள் பதிவர் பதிவுக்காய் காத்திருக்கின்றேன்.

    பதிலளிநீக்கு
  34. சுயமதிப்பீடு அனைவருக்கும் அவசியமான ஒன்று. நல்லதொரு பகிர்வுதான். நன்றி தமிழ் பதிவர்களின் கருத்து நாயகரே :)

    பதிலளிநீக்கு
  35. சுய மதிப்பீட்டில் நான் 100க்கு 100. இப்படித்தான் சொல்லுவேன். இல்லாட்டி என் இமேஜ் பாதிக்கும் சகோ. :-(

    பதிலளிநீக்கு
  36. சுய பரிசோதனைக் கேள்விகள் அனைத்தும் ஒவ்வொருவரையும் தங்களை அலசி ஆராய உதவும்.

    கணபதியின் உருவத்திற்கு நல்ல விளக்கம்.

    பயனுள்ள பதிவு.

    பதிலளிநீக்கு
  37. கடந்த மூன்று நான்கு நாட்களாக மின்வெட்டு நேரம் குறைந்திருக்கிறது என்று சொன்னார்களே.... இப்போது தேவலாமா.. கேள்விகளுக்கு பாஸ்மார்க் எடுத்து விட்டேன் என்று நினைக்கிறேன்!

    பதிலளிநீக்கு
  38. தங்கள் இந்த பதிவு பலருக்கு நல்லா முன்னேற்றத்தை தரும் அண்ணே. இதை ஒரு ஏசி அறையில் கூறிவிட்டு பணம் சம்பாரிக்கும் சில தனியார் நிறுவனங்கள் செய்வதை தாங்கள் இங்கே செய்துள்ளீர்.

    பதிலளிநீக்கு
  39. நல்ல தகவல்கள்.
    வலைச்சர அறிமுக தகவலுக்கு மிக்க நன்றி!

    பதிலளிநீக்கு
  40. விநாயகர் பற்றி விளக்கம் அருமை! சுய பரிசோதனை நம்மை பற்றி உண்மையாக தெரிந்து கொள்ள முடியும். பயனுள்ள பகிர்வுக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  41. நானும் மதிப்பிட ஆரம்பிச்சுட்டேன்.

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென்று இடித்தற் பொருட்டு. (குறள் 784)

நட்புச் செய்துகொள்வது நண்பரோடு சிரித்து மகிழ்வதற்காக மட்டும் அல்ல. மிகுதியாகத் தவறு செய்யும்போது, அவரைக் கடிந்து திருத்துவதற்கே ஆகும்.