🏠 வணக்கம் காப்பகம் நன்றி

தேடல் 🔎



புதிய பதிவுகளை பெற ✉



அட...! அவ்வளவு தானா...! ISO - PART 1

வணக்கம் நண்பர்களே... முதலில் ISO பற்றி எழுதுவதெல்லாம் ISO குரு உயர்திரு. S.R.BALASUBRAMANI அவர்களுக்குச் சமர்ப்பிக்கிறேன்... இவை ISO பெறும் நிறுவனங்களுக்குக் கொடுக்கப்படும் (xerox எடுத்து) தகவல்களில் ஒன்று... ISO - இதைப் பற்றி எனக்குத் தெரிந்த சில தகவல்கள் - ஓர் உரையாடல் மூலம் :


அண்ணே, இந்த ISO ன்னு சொல்றாங்களே, அப்படின்னா என்னாண்ணே ?

தம்பி, ISO - ன்னா, உலக அரங்கிலே தர அமைப்பு முறையை மேம்படுத்தப் பல நாடுகள் ஒன்னா சேர்ந்து ஆரம்பிச்ச ஒரு நிறுவனம். ISO - ன்னா INTERNATIONAL ORGANISATION FOR STANDARDISATION சமச் சீரான திட்ட அளவிற்கான சர்வதேச நிறுவனம்

அது எங்கே, எப்போ ஆரம்பிச்சாங்க...?

தம்பி, ISO வந்து 1947 ஆம் ஆண்டு சுவிட்சர்லாந்து நாட்டுல இந்தியா உட்பட 25 நாடுகள் ஒன்னா சேர்ந்து ஆரம்பிச்சாங்க, இப்போ இந்த சர்வதேச தர நிறுவனத்திலே 125 நாடுகளுக்கு மேலே உறுப்பினரா இருக்காங்க...

ஏண்ணே, இந்த ISI முத்திரையும் ISO-ம் ஒண்ணுதானுங்களா...?

இல்லே தம்பி, ISI முத்திரை வந்து, ஒரு தயாரிப்பு தரமானதா இருந்தா தருவாங்க (Product Quality)... ஆனா, ISO 9001 சர்டிபிகேட் வந்து, தர நிர்வாக முறைக்காக ஒரு நிறுவனத்திற்கு தருவாங்க (Quality Management System)...

ISO-விலே ஏதேதோ நம்பர் சொல்றாங்களே... அதைக் கொஞ்சம் விவரிங்க...

தம்பி, ISO-விலே 9000, 9001 மற்றும் 9004-ன்னு நம்பர்கள் இருக்கு. அதைப்போல ISO 14000, 14001 EMS (ENVIRONMENTAL MANAGEMENT SYSTEM) - சுற்றுச்சூழல் மேலாண்மை அமைப்பு - ன்னு இருக்கு... இதிலே நம்ம கம்பெனிக்கு ISO 9001 சர்டிபிகேட் தான் வாங்கப் போறாங்க...

இந்த ISO 9001-ன் இலக்குகள் என்னண்ணே...?

ISO 9001 இலக்குகள் என்னான்னா தம்பி,

(1) சீரான தரமிக்க பொருட்களை வாடிக்கையாளருக்கு வழங்குதல்.
(2) பொருட்களைக் குறித்த நேரத்தில், எதிர்பார்க்கும் விலை மற்றும் தொழில்நுட்பப்படி வழங்குதல்.
(3) வாடிக்கையாளரின் தேவையறிந்து செயல்படுதல்.
(4) விற்பனைக்குப் பின்னும் சிறந்த சேவையை வழங்குதல்.
(5) தர நிர்வாக முறையின் செயல்பாடுகளை அமுல்படுத்தி, கடைப்பிடித்தல்.

அண்ணே, இந்த ISO 9001 சர்டிபிகேட் வாங்குதறாலே, நம்ம கம்பெனிக்கும் நமக்கும் என்னண்ணே நன்மை இருக்கு...?

தம்பி. நம்ம கம்பெனியிலிருந்து ஏற்றுமதி செய்கிற தயாரிப்புகள் நல்ல தரமானதுன்னு எல்லாருக்கும் தெரியும். ஆனா, இதையே வெளிநாடுகளிலே, குறிப்பா ஐரோப்பிய நாடுகளில், நம்ம தயாரிப்பை வாங்குறவங்க, நாம் மட்டுமல்லாம கம்பெனியின் தர நிர்வாக முறையும் சிறப்பா இருக்கனும்னு எதிர்ப்பார்க்கிறாங்க...

அதாவது பொண்ணு பார்க்கிறப்போ, பொண்ணை மட்டும் பார்க்காம, அது வளர்ந்த குடும்ப சூழ்நிலையையும் பார்க்கிற மாதிரி...

சரியாச் சொன்னே தம்பி ! மேலும் ISO 9001 சர்டிபிகேட் வாங்குதறாலே கீழ்க்கண்ட நன்மைகளும் இருக்கு...

(1) எல்லோரும் நம்ம கம்பெனியப்பற்றி, உயர்வா நினைப்பாங்க. அதனாலே, நமக்கு பெருமை தானே...?

(2) தரம் என்பது தயாரிப்பில் மட்டுமல்லாமல், நம்ம செய்ற ஒவ்வொரு செயல்லேயும் வரும்போது, தரமே நம் வாழ்க்கை முறையா மாறுது...

(3) செய்ய வேலையெ மொத முறையிலேயே சரியாச் செய்யும் போது தப்பு வராம பாத்துக்கலாம். தப்பை மீண்டும் சரி செய்ற வேலை குறையும்...

(4) ஒவ்வொரு தொழிலாளிக்கும், ஊழியருக்கும் அவங்கவங்க துறையிலே நல்லா பயிற்சி கொடுக்கறாதாலே, நம்ம வேலையெ சிறப்பா, கவனமா செய்யமுடியும்...

(5) அவங்கவங்க வேலையெ அவங்கவங்க சரியாச் செய்யுறதாலே நமக்குள்ளே தன்னம்பிக்கையும், பரஸ்பரம் கூட்டு முயற்சியும் ஏற்படுது...

(6) நம்ம தயாரிப்பை வாங்குற வாடிக்கையாளர்கள் நம்ம கம்பெனி பேர்லே நம்பிக்கை வைச்சி, நம்ம தயாரிப்புக்கு முதலிடம் கொடுப்பாங்க...

ஏன்ணே... இந்த ISO 9001 வாங்கித்தான் ஆகணும்னு கட்டாயம் இருக்கா...?

வெளிநாடுகளிலே பெரும்பாலான கம்பெனிகள் வாங்கிட்டாங்க. நம்ம கம்பெனியும் உலக அளவிலே விற்பனையைப் பெருக்க, நம்ம கம்பெனியும் அவசியம் இந்த ISO 9001 சர்டிபிகேட் வாங்கியாகணும் தம்பீ !

இந்த ஐ.எஸ்.ஓ 9001 சர்டிபிகேட் தர்றவங்க என்னாண்ணே நம்ம கிட்டே இருந்து எதிர்ப்பார்கிறாங்க...?

தம்பி, ISO 9001 பத்தி சுருக்கமாச் சொல்லணும்னா,

"சொன்னதைச் செய்வோம், செய்வதைச் சொல்வோம்" அப்படீன்னு தான் சொல்லணும். அதாவது நம்ம செய்ற ஒவ்வொரு வேலையையும் விவரமாச் சொல்றோம். அப்படிச் சொன்ன வேலையைச் சரியாச் செய்றோமான்னு ISO சர்டிபிகேட் கொடுக்கிறவங்க சரி பார்ப்பாங்க. மேலும் நம் நிர்வாகம் கொடுத்திருக்கிற தரக் கொள்கை (QUALITY POLICY) மற்றும் வேலை முறைகளை (Work Instructions / Procedures) நாம் எவ்வளவு தூரம் கடைப் பிடிக்கிறோம்னு பார்ப்பாங்க...

அட... அவ்வளவு தானா...! நன்றியண்ணே...

இந்த அண்ணன் தம்பிகளின் உறவுகள் மேம்பட என்ன வேண்டும்...? அறிந்து கொள்ள இங்கே சொடுக்கித் தொடர்வதற்கு முன் இந்தப் பதிவைப் பற்றி தங்களின் கருத்து என்ன நண்பர்களே...?

புதிய பதிவுகளை பெறுதல் :


தொடர்புடைய எண்ணங்களின் வண்ணங்கள் சில :


முகநூல் மூலம் கருத்துக்களை பகிர :

கருத்துகள்

  1. உண்மையில் மிகச்சிறந்த பதிவு தனபாலன். எவ்வளவோ பேருக்கு ஐஎஸ்ஓ என்றால் பெயர் மட்டும் தெரிகிறது. அதனை விளக்கி ஒரு பதிவு போட்டுள்ளீர்கள். வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  2. அறிந்த தகவல் என்ற போதிலும், ஒரு நினைவு மீட்டல் செய்தமைக்கு மிக்க நன்றிகள் !!!

    பதிலளிநீக்கு
  3. இதுவரை நான் அறியாத பல செய்திகள் மிக்க நன்றி!

    பதிலளிநீக்கு
  4. இப்போதுதான் ஜ.எஸ்.சோ பற்றி கேள்விப்படுகிறேன்..............

    பதிலளிநீக்கு
  5. ஆவலுடன் எதிர்பார்த்த பதிவினை பகிர்ந்தமைக்கு நன்றி ஐயா!

    பதிலளிநீக்கு
  6. தனபாலன் அவர்களுக்கு உங்கள் ISO பற்றிய பதிவு படித்தேன் எல்லோருக்கும் புரியும் வண்ணம் மிக எளிமையாக எழுதி இருக்கிறீர்கள். ISO ஆரம்பித்த ஆண்டு பற்றிய தகவல் நான் படித்த வரை 1947 ஆனால் நீங்கள் 1945 என்று குறிப்பிட்டு இருக்கிறீர்கள் எது சரி என்று முடிந்தால் உறுதி படுத்தவும். நான் முன்பு படித்த தகவலின் விபரத்தை இங்கு தந்துள்ளேன் உங்களின் பார்வைக்காக..
    ISO is an International Organization for Standards that was formed by technical committees. They provide user-friendly guidelines for a wide range of organizations. Examples of these
    organizations include manufacturing, processing, servicing, printing, forestry, and electronics ISO was established in 1947, in Switzerland, with the purpose of developing intellectual, scientific, technological, and economic corporation between member countries (Bureau of Business Practice). Later in 1979 the ISO Technical Committee (ISO/TC 176) was formed to make a set of guidelines that would bring together and standardize world industries. ISO has affiliates in more than 90 countries. It is interesting to note that ISO comes from the Greek word “isos” which means “same as.” The words “same as” can be implied to mean the consumer gets what the consumer expects. In our quality assurance class we have learned that if the consumer gets what they expect, this is consider quality. Therefore, the root word ISO stands for quality.

    வாழ்த்துக்கள்...வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  7. iso பற்றி தெரியாத பல விசயங்கள் நன்றி அன்பரே

    பதிலளிநீக்கு
  8. நல்ல தகவல்கள் தனபாலன்...
    ISO போலவே IT கம்பெனிகளுக்கு CMM என்ற லெவல் வேறு உள்ளது...மொத்தம் 5 level உள்ளது...

    பதிலளிநீக்கு
  9. @Avargal Unmaigal அவர்களுக்கு, நீங்கள் குறிப்பிட்டது சரி... 1945 அல்ல... 1947 ஆண்டு, பிப்ரவரி 23 ஆம் தேதி நிறுவப்பட்டது... மாற்றி விடுகிறேன்... மிக்க நன்றி...

    பதிலளிநீக்கு
  10. ISO என்றால் உலகத் தர சான்றிதழ் என்பது ,மட்டும் தான் தெரியும். விளக்கி பதிவிட்டமைக்கு நன்றி சார்!

    பதிலளிநீக்கு
  11. அட ... அவ்வளவுதானா! நன்றி! நன்றி! உரையாடல் குழப்பம் இல்லாமல் இருந்தது.!

    பதிலளிநீக்கு
  12. எல்லோருக்கும் புரியும்படி.. எளிமையாக உரையாடல் பாணியில் ISO பற்றி விளக்கியிருக்கிறீர்கள்....

    தங்களின் வழக்கமான பதிவிலிருந்து இந்த பதிவு மாற்றாக இருக்கிறது! வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  13. அறிந்த செய்திகளை விளக்கியவிதம் மிக அருமை..

    பதிலளிநீக்கு
  14. நல்ல தகவல் அருமையான புரியும்படியான விளக்கம் சார்
    பகிர்வுக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  15. சூப்பர் திண்டுக்கல் அண்ணே.. அறிய தந்தமைக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  16. ரொம்ப பயனுள்ள பதிவு சார் ,கலக்கிட்டிங்க !உங்க மக்கள் தொலைக்காட்சி பேட்டி அருமை ! வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  17. ISO பற்றிய பல அறியாத தகவல்களை எளிமையாக பகிர்ந்தமைக்கு நன்றி!

    இன்று என் தளத்தில்!
    பாதைகள் மாறாது! சிறுகதை
    http://thalirssb.blogspot.in/2012/09/blog-post_10.html



    பதிலளிநீக்கு
  18. ISO பற்றி எளிமையான தெளிவான விளக்கம்.பகிர்வுக்கு நன்றி சகோ.

    பதிலளிநீக்கு
  19. விளக்கமாய் ஒரு பகிர்வு.
    தெரிந்து கொண்டோம் நண்பரே.

    பதிலளிநீக்கு
  20. I S O பற்றி வெரும் வார்த்தையாகத்தான் தெரியும். இப்போ உங்க பதிவு படித்தபிறகு விவரங்கள் தெரிந்து கொள்ள முடிந்தது நன்றி அதுவும் சொல்லிச்சென்றவிதம் சுவார்சியம்

    பதிலளிநீக்கு
  21. த.ம.12
    ஐ.எஸ்.ஓ வைப்பற்றி முழுவதும் அறிந்துகொண்டேன்.நன்றி

    பதிலளிநீக்கு
  22. உங்களுடைய மாறுபட்ட பதிவு நன்று.
    உங்கள் பாணியில் நல்ல விளக்கம்.

    பதிலளிநீக்கு
  23. நேரில் பேசுவதுபோல
    அழகாக தெளிவாகச் சொல்லிவிட்டீர்கள்.

    பதிலளிநீக்கு
  24. தெளிவான தரமான பதிவு...உங்கள் பதிவே ISO தரத்தில்தான் உள்ளது...

    பதிலளிநீக்கு
  25. நல்லா இருக்குங்க. பொதுவாவே நம்ம ஊர்ல தயாரிக்கும் பொருளின் தரத்தைக் நிர்ணயிப்பதாகவே இது பார்க்கப்படுகிறது.

    தர நிர்வாகத்தை பொருளின் தரத்தோடு சேர்த்து தில்லாலங்கடி வேலை செய்து விடுகிறார்கள்.

    இது தவறு.

    ISO 9000 is not a product registration standard; it in no way measures or recognizes the quality of a company's product, nor does it mean that two companies with ISO 9000 registrations are equivalent.


    http://www.qualitydigest.com/oct/iso9000.html

    பதிலளிநீக்கு
  26. துறை சார்ந்த எளிய முறையில் விளக்கும் பகிர்வுகள் மிக குறைவு. அவசியம் தொடருங்கள்

    பதிலளிநீக்கு
  27. அட... அவ்வளவு தானா.... என்ற தலைப்பே சூப்பர். உங்கள் பதிவோ சூப்பரோ சூப்பர் நன்றி நண்பரே...

    எனது தளத்தில்... தகவல் அறியும் உரிமைச் சட்டம் பற்றி ஒர் விழிப்புணர்வு.. http://yayathin.blogspot.in/2012/09/blog-post_1647.html

    பதிலளிநீக்கு
  28. எளிய உரையாடல் மூலம் விளக்கி உளீர்கள்.. நன்றி சார்

    பதிலளிநீக்கு
  29. நல்ல பகிர்வு,விபரங்கள் தெரிந்து கொண்டேன்.

    பதிலளிநீக்கு
  30. ISI ISO அருமையான விளக்கம் கொடுத்து அசத்திட்டிங்க நன்றி தோழரே

    பதிலளிநீக்கு
  31. ஒரு பொருளை வாங்கும்போது தரச்சான்றித இருக்கான்னு பார்த்து வாங்குற பழக்கமே நம்மிடம் பல பேருக்கு இல்லை. அதிலும் தரச்சான்றில இவ்வளவு விஷயம் இருக்கு என்பதும் இப்போதான் தெரியுது . பகிர்வுக்கு நன்றி சகோ

    பதிலளிநீக்கு
  32. தரம் என்றால் என்ன, அது நிரந்தரமாக இருக்க என்ன செய்யவேண்டும் என்பது குறித்த தெளிவான விளக்கம்.

    பதிலளிநீக்கு

  33. அதாவது பொண்ணு பார்க்கிறப்போ, பொண்ணை மட்டும் பார்க்காம, அது வளர்ந்த குடும்ப சூழ்நிலையையும் பார்க்கிற மாதிரி...

    அருமையான பயனுள்ள பகிர்வுகள்.. பாராட்டுக்கள்...

    பதிலளிநீக்கு
  34. அனைவருக்கும் தெரிய வேண்டிய அருமையான பதிவு. நன்றி

    பதிலளிநீக்கு
  35. "அதாவது நாம் செய்ற ஒவ்வொரு வேலையையும் விவரமாச் சொல்றோம்,
    அதை சரியா செய்யறோமானு ISO சான்றிதழ் கொடுக்குறவங்க சரி பார்ப்பாங்க "
    இங்க தான் இருக்கு விஷயமே .
    really a good post

    பதிலளிநீக்கு
  36. எவ்ளோ பெரிய மேட்டரை எவ்ளோ சிம்பிளா சொல்லிட்டீங்க..நல்ல மேட்டர்...சூப்பர் அண்ணே .நன்றியும்..வாழ்த்துகளும்..

    பதிலளிநீக்கு
  37. அண்ணே உண்மையில ஒரு அண்ணன் தன்னுடைய தம்பிக்கு அருகே உட்காரவைத்து பொறுமையா சொன்னமாதிரி இருக்கு அண்ணே உண்மையில இந்த ISO 9000 @9001 இது பற்றி எல்லாம் ஒரு துளியளவு கூட எனக்கு தெரியாது புரிய வைத்தமைக்கு பாராட்டுகள்

    பதிலளிநீக்கு
  38. வணக்கம் இந்த புதுமையான தவலுக்கு உண்மையில் நன்றி இதுவரை நான் கேள்விபடாத செய்திகள் பாராட்டுகள்

    பதிலளிநீக்கு
  39. கிட்டத்தட்ட ISI, Agmark போல இதுவும் தரத்திற்கான சான்று என்று மட்டும் தெரியும். இப்போது நீங்கள் விலாவாரியாக விளக்கி இருப்பதில் இருந்து இன்னும் நிறைய தெரிந்து கொண்டேன்.

    உரையாடல் முறை நாங்களே கேள்விகள் கேட்டுத் தெளிவது போல இருக்கிறது.

    பாராட்டுகள்!

    பதிலளிநீக்கு
  40. ISO பற்றி மறந்த பல தகவல்களை மீண்டும் நினைவுப்படுத்தியதற்கு மிக்க நன்றி. அருமையான உரையாடல் கல்வி.

    பதிலளிநீக்கு
  41. iso....முழுமையாக அறியத்தந்தமைக்கு மிக்க நன்றி.அத்தனையும் புதிய தகவல்கள் எனக்கு !

    பதிலளிநீக்கு
  42. நல்ல நடையில் ஒரு விளக்கம் அருமையாக இருந்தது ..............
    பதிவுக்கு ஒரு முத்திரை குத்தலாம்
    நன்றி பகிர்வுக்கு

    பதிலளிநீக்கு
  43. பொதுவாத் தெரியும்... இன்று விளக்கமாகத் தெரிந்து கொண்டேன்!

    பதிலளிநீக்கு
  44. நல்ல பதிவு நண்பரே.. புதிய விடயங்கள்...

    பதிலளிநீக்கு
  45. புதிய தகவல்கள். மிகவும் பயனுள்ளவை... நன்றி !

    பதிலளிநீக்கு
  46. அருமையாக உரையாடல் மூலம் iso சொன்ன பகிர்வு சிறப்பு வாத்தியாரே!

    பதிலளிநீக்கு
  47. நல்ல பயனுள்ள தகவலைப் பகிர்ந்திருக்கிறீர்கள். நானும் ஐ.எஸ்.ஓ பற்றித் தெரிந்து கொண்டேன்.
    நன்றி தனபாலன் ஐயா.

    பதிலளிநீக்கு
  48. சிறப்பான அக்கம் தொடர வாழ்த்துக்கள் சகோ.

    பதிலளிநீக்கு
  49. உங்கள் பதிவு சிறப்பான முறையில் இருக்கிறது...
    மிகவும் அருமை... தகவலுக்கு நன்றி...

    பதிலளிநீக்கு
  50. தரத்தினைப்பற்றிய இந்தத் தங்களின் பதிவினில் நல்லதொரு ‘தரம்’ உள்ளது.

    எளிமையாகவும், இனிமையாகவும், சுலபமாக அனைவரும் புரிந்து கொள்ளும் விதமாகவும் எழுதியுள்ளீர்கள். பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  51. மிக்க நன்றி சகோ...

    தரநிர்ணயம் பற்றி அறியத்தந்தமைக்கு

    பதிலளிநீக்கு
  52. தெரிந்த தகவல்கள் என்றாலும் எளிமையாக சுவைபட தந்துள்ளீர்கள். மேலும் தொடருங்கள்

    பதிலளிநீக்கு
  53. தெரியாத பலருக்கு எளிமையாய் புரிய வைத்து விட்டீர்கள்.

    பதிலளிநீக்கு
  54. அருமையான பதிவு.எளிமையாய் அனைவரும் அறியும் விதத்தில் கூறியது அருமை. பகிர்ந்தமைக்கு நன்றி. தொடருங்கள்

    பதிலளிநீக்கு
  55. (1) ஆரூர் மூனா செந்தில், (2) வே.நடனசபாபதி, (3) இக்பால் செல்வன், (4) புலவர் சா இராமாநுசம், (5) esther sabi, (6) ravi krishna, (7) Avargal Unmaigal, (8) நம்பள்கி, (9) Prem Kumar.s, (10) ராஜ்,

    (11) Gnanam Sekar, (12) கவிதை வீதி... // சௌந்தர் //, (13) Abdul Basith, (14) தி.தமிழ் இளங்கோ, (15) மாதேவி, (16) வரலாற்று சுவடுகள், (17) ஆட்டோமொபைல், (18) சி.பி.செந்தில்குமார், (19) சிட்டுக்குருவி, (20) ஹாரி பாட்டர்,

    (21) sakthi, (22) நண்டு @நொரண்டு -ஈரோடு, (23) s suresh, (24) ராதா ராணி, (25) சே. குமார், (26) Chamundeeswari Parthasarathy, (27) Lakshmi, (28) வல்லத்தான், (29) குட்டன், (30) T.N.MURALIDHARAN,

    (31) Muruganandan M.K., (32) Manimaran, (33) Uzhavan Raja, (34) 【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║, (35) மோகன் குமார், (36) YAYATHIN, (37) சீனு, (38) Asiya Omar, (39) Mohan P, (40) ராஜி,

    (41) இந்திரா, (42) சந்திர வம்சம், (43) இராஜராஜேஸ்வரி, (44) tamilpadapaadalvarigal, (45) rufina rajkumar, (46) படைப்பாளி, (47) போளூர் தயாநிதி, (48) மாலதி, (49) Ranjani Narayanan, (50) ARIVU KADAL,

    (51) ஹேமா, (52) நெற்கொழுதாசன், (53) ஸ்ரீராம்., (54) indrayavanam.blogspot.com, (55) POWER Thaz, (56) ஹிஷாலீ, (57) எம்.எஸ்.ரஜினி பிரதாப் சிங், (58) தனிமரம், (59) AROUNA SELVAME, (60) அம்பாளடியாள்,

    (61) Reena Rajini dsoza, (62) வை.கோபாலகிருஷ்ணன், (63) ♔ம.தி.சுதா♔, (64) சிவகுமாரன், (65) ரிஷபன், (66) தங்கராசா ஜீவராஜ், (67) Rasan, (68) காயத்ரி வைத்தியநாதன், (69) Jayakumar Krishnamurthy, (70) Atchaya Krishna Ravi,

    (71) mskus25, (72) Ezra Rajasekaran


    மேலே உள்ள அனைத்து அன்பு உள்ளங்களின் வருகைக்கும், பாராட்டிற்கும், வாழ்த்திற்கும், சமூக தளங்களில் பகிர்ந்து கொண்டதற்கும், வாக்கு அளித்ததற்கும், எனது மனமார்ந்த நன்றிகள் பலப்பல...

    பதிலளிநீக்கு
  56. மிகப் பயனான பதிவு வாசித்து அறிந்தேன்.
    மிக்க மிக்க நன்றி.(விடுமுறையால் பிந்தி வந்தேன்.)
    வேதா. இலங்காதிலகம்.

    பதிலளிநீக்கு
  57. அருமையாக சொல்லிவிட்டீர்கள். எல்லோருக்கும் பயன் படும் பதிவு.
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  58. எளிமையான நல்ல பதிவு நண்பரே....
    தொடரட்டும் உங்கள் இந்த உபயோகமான தகவல் தரும் பணி. வாழ்த்துகள்

    -அதியன் சௌமியா ( வீரக்குமார்)

    பதிலளிநீக்கு
  59. எளிய நல்ல பதிவு
    வாழ்த்துகள்

    -அதியன் சௌமியா (வீரக்குமார்)

    பதிலளிநீக்கு
  60. மிகச்சிறந்த பதிவு ஐஎஸ்ஓ என்றால் என்ன என்பதனை விளக்கி ஒரு பதிவு போட்டுள்ளீர்கள். அருமை..

    பதிலளிநீக்கு
  61. உண்மையில் மிகச்சிறந்த பதிவு சோ எவ்வளவோ பேருக்கு[ஏன் எனக்கும்கூட] ஐஎஸ்ஓ என்றால் பெயர் மட்டும் தெரிகிறது. அதனை விளக்கி ஒரு பதிவு போட்டுள்ளமைக்கு. பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  62. வணக்கம்
    வலைச்சர அறிமுகத்துக்கு வாழ்த்துக்கள் அண்ணா

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்

    பதிலளிநீக்கு
  63. தங்களின் ஐ.எஸ்.ஓ. தொடரை தற்போது தான் படிக்க ஆரம்பித்தேன்..அனைத்து பாகங்களையும் படித்து விடுகிறேன்...நன்றி!

    பதிலளிநீக்கு
  64. ஐ எஸ் ஓ பற்றி எழுதியதற்கு நன்றி சார்..
    உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்
    எனக்கு இந்த ISO பற்றி நிறைய சந்தேகம் இருந்தாலும் எதையும் கேட்க மாட்டேன் .. ஏன்னா நீங்கா ISO பற்றி நிறைய தொடர் பதிவு போட்டு இருக்கிங்க முதல்ல அதையெல்லா ம் படிச்சிடடு வந்து சந்தேகம் இருந்தா கேட்குறேன் அய்யா

    பதிலளிநீக்கு
  65. தெரிந்து கொண்டேன் அண்ணா அருமையாக தகவல் அனைவரும் புரிந்து கொள்ளும் படி ஓர் விளக்கம் அளித்திர்கள் மிக அருமை ~^~

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென்று இடித்தற் பொருட்டு. (குறள் 784)

நட்புச் செய்துகொள்வது நண்பரோடு சிரித்து மகிழ்வதற்காக மட்டும் அல்ல. மிகுதியாகத் தவறு செய்யும்போது, அவரைக் கடிந்து திருத்துவதற்கே ஆகும்.