🏠 வணக்கம் காப்பகம் நன்றி

தேடல் 🔎



புதிய பதிவுகளை பெற ✉



உன்னை அறிந்தால்... (பகுதி 3)

வணக்கம் நண்பர்களே... முந்தைய பதிவான இங்கே-யை படித்து ரசித்துப் பாராட்டிய அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.. இதோ அதன் தொடர்ச்சி...


புதிதாக என் தளம் வருபவர்களுக்கு : (மற்ற நண்பர்கள் பாடல் வரிகளை ரசிக்கச் செல்லலாம்) நண்பர்களே... மனிதனின் பிரச்சனைகளுக்குக் காரணமான குணம் ஏது ? - முதல் முதலாக எழுதிய இந்தப் பதிவு வெளியிடவில்லை. காரணம் பதிவின் நீளம். இதிலிருந்து வந்த சில பதிவுகள் தான் குணம் என்னும் குறிச்சொல்லில் (Labels) வந்தவை. இந்தப் பதிவு எழுதும் போது, என் மனதில் பல பாடல் வரிகள் தோன்றின. அவற்றில் எனக்குப் பிடித்த பாடல் வரிகளை மிக்ஸ் செய்து (DD Mix - Dindigul Dhanabalan Mix) வெளியிட்டேன்.. அதற்கு முன்... அந்தப் பதிவைப் படிக்காதவர்கள் இங்கே சென்று படித்து விட்டு வந்து, (அல்லது கேட்டு விட்டு) இந்தப் பாடல் வரிகளைப் படித்தால், பாடல்களின் மகத்துவத்தை அறியலாம். மனிதனின் பிரச்சனைக்குக் காரணம் பல இருந்தாலும், என்னைப் பொறுத்தவரை ஒப்பிட்டுப் பார்த்தல் - இதைப்பற்றி ஏற்கனவே அந்தப் பதிவில் அலசி விட்டோம்... இனி பாடல் வரிகளை வாசிப்போமா...? நீலக்கலரில்-அருமை வரிகள், சிவப்புக் கலரில்-என் கருத்துக்கள் " மனசாட்சி : நான் பாட்டுக்குப் பாட்டு பாடுறேன்... "

15. படம் : படையப்பா, முதல் வரி : ஒ ஒஹோ கிக்கு ஏறுதே...

தாயைத் தேர்ந்தெடுக்கும், தந்தையைத் தேர்ந்தெடுக்கும் உரிமை, உன்னிடத்தில் இல்லை... இல்லை... முகத்தைத் தேர்ந்தெடுக்கும், நிறத்தைத் தேர்ந்தெடுக்கும் உரிமை, உன்னிடத்தில் இல்லை... இல்லை... பிறப்பைத் தேர்ந்தெடுக்கும், இறப்பைத் தேர்ந்தெடுக்கும் உரிமை, உன்னிடத்தில் இல்லை... இல்லை... எண்ணிப் பார்க்கும் வேளையில்... உன் வாழ்க்கை மட்டும் உந்தன் கையில் உண்டு, அதை வென்று விடு..!

அதான் சூப்பர் ஸ்டார் சொல்லிட்டாரே... (நன்றி : கவிஞர் வைரமுத்து) நான் என்னத்த சொல்ல...? எதுவுமே நம்மகிட்டே இல்லே; அன்பைத் தவிர... யோசிக்கணுமே...

"அழுகிப் போனால் காய்கறிகூடச் சமையலுக்காகாது... அழகாய் இருக்கும் காஞ்சிரம் பழங்கள் சந்தையில் விற்காது... உரித்துப் பார்த்தால் வெங்காயத்தில் ஒன்றும் இருக்காது... உளறித் திரிபவன் வார்த்தையிலே ஒரு உருப்படி தேறாது... காலம் போனால் திரும்புவதில்லை.. காசுகள் உயிரைக் காப்பதும் இல்லை... ஓஹோஹோஹோ மனிதர்களே...! ஓடுவதெங்கே சொல்லுங்கள்...! உண்மையை வாங்கிப் பொய்களை விற்று உருப்பட வாருங்கள்..." (படம் : படித்தால் மட்டும் போதுமா ?)

16. படம் : பூம்புகார், முதல் வரி : வாழ்க்கை என்னும் ஓடம்...

வாலிபம் என்பது கலைகின்ற வேடம்-அதில் வந்தது வரட்டும் என்பவன் முழு மூடன்... வருமுன் காப்பவன் தான் அறிவாளி-புயல் வருமுன் காப்பவன் தான் அறிவாளி... அது வந்த பின்னே தவிப்பவன் தான் ஏமாளி.. வாழ்க்கை என்னும் ஓடம்.. வழங்குகின்ற பாடம்... மானிடரின் மனதினிலே மறக்கவொண்ணா வேதம்...

உள்மனத்திற்கு (மனசாட்சி) தவறு என்று தெரிந்தும், வெளிமனது (அலை பாயும் மனது) சொல்வதெல்லாம் செய்தால் எப்படி...? அலை பாயும் மனதிற்கு அடிமை ஆகிறோம்... ஆகலாமா...? யோசிக்கணுமே...

"ஒரு நீதிக்கும் நேர்மைக்கும் பயந்துவிடு... நல்ல அன்புக்கும் பண்புக்கும் வளைந்து கொடு... இன்றோடு போகட்டும் திருந்தி விடு... உந்தன் இதயத்தை நேர் வழி திருப்பிவிடு... ஏமாற்றாதே ஏமாற்றாதே... ஏமாறாதே ஏமாறாதே..." (படம் : அடிமைப்பெண்)

17. படம் : அன்புக் கரங்கள், முதல் வரி : ஒண்ணா இருக்கக் கத்துக்கணும்...

தன்னைப் போலப் பிறரை எண்ணும் தன்மை வேண்டுமே... அந்தத் தன்மை வர உள்ளத்திலே கருணை வேண்டுமே... பொன்னைப்போல மனம் படைத்தால் செல்வம் வேறில்லை... இதைப் புரிந்து கொண்ட ஒருவனைப் போல் மனிதன் வேறில்லை... ஒண்ணா இருக்கக் கத்துக்கணும்... இந்த உண்மையைச் சொன்னால் ஒத்துக்கணும்... காக்கா கூட்டத்தைப் பாருங்க... அதுக்குக் கத்துக் கொடுத்தது யாருங்க...?

தன்னை பிறர் இடத்தில் காண்பது தான் உண்மையான ஆன்மீகம்... அப்படியா...? எப்படி..? யோசிக்கணுமே...

"எதிலும் அச்சம், எதிலும் ஐயம், எடுத்ததற்கெல்லாம் வாடுகிறான் - தன் இயற்கை அறிவை, மடமையெனும் பனித் திரையாலே மூடுகிறான்... ஏதோ மனிதன் பிறந்து விட்டான் - அவன் ஏனோ மரம் போல் வளர்ந்து விட்டான்..." (படம் : பனித்திரை)

18. படம் : சுமை தாங்கி, முதல் வரி : மயக்கமா கலக்கமா..?

ஏழை மனதை மாளிகை ஆக்கி, இரவும் பகலும் காவியம் பாடு... நாளை பொழுதை இறைவனுக்கு அளித்து, நடக்கும் வாழ்வில் அமைதியைத் தேடு... நடக்கும் வாழ்வில் அமைதியைத் தேடு... உனக்கும் கீழே உள்ளவர் கோடி...! நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு...!

மனிதனின் மகிழ்ச்சிக்குத் தேவையான மூன்று முத்துக்கள் என்ன? என்னும் பதிவில் தெரிந்து கொண்டோம். திருப்தி இல்லாத வாழ்க்கை நரகத்திற்குச் சமம்... யோசிக்கணுமே...

"தரைய பார்த்து நிக்குது நல்ல கதிரு... தன் குறைய மறந்து மேலே பார்க்குது பதரு... அது போல் அறிவு உள்ளது... அடங்கிக் கிடக்குது வீட்டிலே... எதுக்கும் ஆகாத சிலது ஆர்ப்பாட்டம் செய்யுது வெளியிலே... அதாலே... மனுசன மனுஷன் சாப்பிடுராண்டா தம்பி பயலே... இது மாறுவதெப்போ தீருவதெப்போ நம்ம கவலே..." (படம் : தாய்க்குப் பின் தாரம்)

19. படம் : பலே பாண்டியா, முதல் வரி : வாழ நினைத்தால் வாழலாம்...

பார்க்கத் தெரிந்தால், பாதை தெரியும்... பார்த்து நடந்தால், பயணம் தொடரும்... பயணம் தொடர்ந்தால், கதவு திறக்கும்... கதவு திறந்தால், காட்சி கிடைக்கும்... காட்சி கிடைத்தால், கவலை தீரும்... கவலை தீர்ந்தால், வாழலாம்... வாழ நினைத்தால் வாழலாம்... வழியா இல்லை பூமியில்.. ஆழக் கடலும் சோலையாகும்.. ஆசையிருந்தால் நீந்திவா...

பிரச்சனை என்கிற கல்லைக் கண்ணிற்கு அருகில் வைத்துப் பார்த்தால், பெரியதாகத் தான் தெரியும்... தூர வைத்துப் பார்ப்பதா...? தூக்கிப் போடுவதா...? யோசிக்கணுமே...

"கடவுளே கொஞ்சம் வழிவிடு - உன் அருகிலே ஓர் இடம் கொடு... புன்னகை எங்கள் தாய்மொழி என்ற வரம் கொடு... பூமியில் சில மாறுதல்தனை வரவிடு... புத்தம் புது பூமி வேண்டும்... நித்தம் ஒரு வானம் வேண்டும்... தங்க மழை பெய்ய வேண்டும்... தமிழில் குயில் பாட வேண்டும்...." (படம் : திருடா திருடா)

20. படம் : அருணோதயம், முதல் வரி : உலகம் ஆயிரம் சொல்லட்டுமே...

உலகம் ஆயிரம் சொல்லட்டுமே... உனக்கு நீ தான் நீதிபதி... மனிதன் எதையோ பேசட்டுமே... மனசை பார்த்துக்க நல்லபடி-உன் மனசை பார்த்துக்க நல்லபடி...

நல்லா கவனிங்க... நம் மனசை கெட்டுப் போகாமல் பாத்துக்கணும்... முடியுமா இந்த நவீன உலகில்...? யோசிக்கணுமே...

"உலகத்திலே பயங்கரமான ஆயுதம் எது..? கத்தி ? இல்லே... கோடாரி ? இல்லே... ஈட்டி ? இல்லே... கடப்பாரை ? இல்லே... அதுவுமில்லையா... அப்புறம்... பயங்கரமான ஆயுதம் ஆறறிவாகுமோ... அது ஆயுதம் இல்லையே... அட.. தெரிய மாட்டேங்குதே... நீயே சொல்லப்பா...! உலகத்திலே பயங்கரமான ஆயுதம், நிலைக்கெட்டுப் போன நயவஞ்சகரின் நாக்கு தான் அது...!" (படம் : சக்கரவர்த்தித் திருமகள்)

21. படம் : வேட்டைக்காரன், முதல் வரி : உன்னை அறிந்தால்...

மானம் பெரியதென்று வாழும் மனிதர்களை, மான் என்று சொல்வதில்லையா...? தன்னைத் தானும் அறிந்து கொண்டு ஊருக்கும் சொல்பவர்கள், தலைவர்கள் ஆவதில்லையா...? உன்னை அறிந்தால்-நீ உன்னை அறிந்தால்... உலகத்தில் போராடலாம்...

உயர்ந்தாலும், தாழ்ந்தாலும், தலை வணங்காமல் நீ வாழலாம்...!

"கண் போன போக்கிலே... கால் போகலாமா...? கால் போன போக்கிலே.. மனம் போகலாமா...? மனம் போன போக்கிலே மனிதன் போகலாமா...? மனிதன் போன பாதையை மறந்து போகலாமா...? இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்லவேண்டும்... இவர் போல யாரென்று ஊர் சொல்லவேண்டும்...! " (படம் : பணம் படைத்தவன்)

மேலே குறிப்பிட்ட பதிவில் நீல நிற வரிகள் பாடல்களை, நண்பர்கள் சில பேர் கேட்டிருக்கலாம்... பாட்டுக்குப் பாட்டு எப்படி இருந்தது....? - அதில் ஹைலைட் செய்யப்பட்ட வரிகள், அதிகம் படித்த மற்றும் படிக்காத நபர்களுக்கு, அந்த (ISO) சபைகளில் சொல்லப்படுபவை... ISO பற்றி வரும் பதிவுகளில்...

நம் மனதில் பல பிரச்சனைகள் இருக்கும் போது அல்லது ஏற்படும் போது, ஏதோ ஒரு பாட்டு நம் மனதிற்கு இதமாக இருக்கும். உங்களுக்கும் ஏதோ ஒரு பாட்டு இதமாக இருந்திருக்கும் என்று நினைக்கிறேன்... மனிதனின் பிரச்சனைக்குக் காரணமான குணம் எது ? - இந்தப் பதிவிற்கேற்ற பாடல்கள் முடிந்து விட்டது...

அவ்வளவு தானா...? தெய்வீக பாடல்கள் உள்ளதா...? அறிய இங்கே சொடுக்கித் தொடர்வதற்கு முன், இந்தப் பதிவைப் பற்றி தங்களின் கருத்து என்ன நண்பர்களே...?

புதிய பதிவுகளை பெறுதல் :


தொடர்புடைய எண்ணங்களின் வண்ணங்கள் சில :


முகநூல் மூலம் கருத்துக்களை பகிர :

கருத்துகள்

  1. அருமை பாடல்களை பட்டியலிட்டு வழங்கிய விதம் ரசிக்க வைக்கிறது தனபாலன்

    பதிலளிநீக்கு
  2. தாங்க்ள் குறிப்பிட்டுள்ள பாடல்கள்
    அனைத்தும் நான் அதிகம் விரும்புபவை
    மிக அழகாக பதிவாக்கிக் கொடுத்துள்ளீர்கள்
    பகிர்வுக்கு மனமார்ந்த நன்றி
    தொடர வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  3. பல பாடல்கள் தெரிந்ததுதான் என்றாலும் தொடர்பு படுத்திப் பார்த்ததில்லை. அருமையான தலைப்புக்கேற்ற கோர்வை.
    த.ம.4

    பதிலளிநீக்கு
  4. பாடல்களின் தொகுப்பும் வர்ணனை யும் நன்று...

    பதிலளிநீக்கு
  5. பாடல்களும் , அதன் கருத்துக்களும் என்றென்றும் ஏற்றுகொள்ளக்கொடியது . நன்றி

    பதிலளிநீக்கு
  6. எனக்குப் பிடித்த பாடல்கள் அனைத்தையும் திரட்டித் தந்தமைக்கு நன்றி. இவைபோன்ற பாடல்கள் இனி வருமா என்பது சந்தேகமே.

    பதிலளிநீக்கு
  7. சார் நீங்க சொல்ற பாட்டில் எனக்கு பிடிக்காத பாட்டு ஒண்ணாவது இருக்கா என பார்ப்பேன் இம்முறை அனைத்துமே எனக்கும் பிடித்த பாடல்களே

    பதிலளிநீக்கு


  8. பல நல்ல பாடல்களைத் தொகுத்துக் கொடுத்திருக்கீங்க.நன்றி.

    பதிலளிநீக்கு
  9. அத்தனையுமே நல்ல பாடல்கள். நான் ரசித்த பாடல்கள்...

    த.ம. 6

    பதிலளிநீக்கு
  10. அனைத்து பாடல்களும் அருமையானவை வாழ்த்துக்கள் சகோ !!!

    பதிலளிநீக்கு
  11. பூம்புகார், சுமைதாங்கி, பலே பாண்டியா பாட்டுக்கள் ஜெனரேசன் கேப்பையும் மீறி எனக்கு பிடிக்கும். பகிர்வுக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  12. பயமில்லாம உங்க தளத்துல இன்றுதான் கமெண்ட் போடுறென் சகோ. த ம 7

    பதிலளிநீக்கு
  13. தலைவரின் பாடல்கள் எப்போதுமே நான் விரும்பி கேட்பவை! அதிலும் வேட்டைக்காரன் எனது அதிவிருப்ப பட்டியலில் ஒன்று!

    பதிவும் தொடர்ச்சியாக அழகாக இருந்தது!

    பதிலளிநீக்கு
  14. 250 பின்தொடர்பாளர்களை தாண்டி சென்றது சிறப்பு!

    பதிலளிநீக்கு
  15. காலத்தால் மறையாத ,, அனுபவத்தால் மெருகேரிய அற்புத பாடல்களின் பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..

    பதிலளிநீக்கு
  16. எனக்குப் பிடித்த பாடல்கள்! தொகுத்தவிதமும் அருமை!
    நன்றி ஐயா!
    -காரஞ்சன்சேஷ்)

    பதிலளிநீக்கு
  17. காலத்தால் அழியாத கருத்து மிக்க பாடல்கள்... இன்றைய இளைய தலைமுறை கண்டிப்பாக ஒரு முறையேனும் கேட்கவேண்டும்...


    இட்லி சுவைத்திட உங்களை வலைக்கு இனிதே அழைக்கிறேன், வருகவும், ருசிக்கவும், பதிவிடவும்... நன்றி

    பதிலளிநீக்கு
  18. அர்த்தமுள்ள பாடல் சரம். அருமை தொடருங்கள்.

    பதிலளிநீக்கு
  19. வித்தியாசமான பாட்டுக்கு பாட்டு நல்லாருக்கு... அருமை..

    பதிலளிநீக்கு
  20. மிக அருமையான தொகுப்பு! பாட்டுக்கு பாட்டு தேர்ந்தெடுத்து உங்கள் கருத்துக்களும் சேர்த்து அழகு படுத்தியவிதம் அருமை! நல்லதொரு பகிர்வு! நன்றி!

    இன்று என் தளத்தில்
    தளிர்ஹைக்கூ கவிதைகள்!
    http://thalirssb.blogspot.in/2012/09/blog-post_3.html

    பதிலளிநீக்கு
  21. அருமையான தொகுப்பு..சார்..பகிர்வுக்கு நன்றி..

    பதிலளிநீக்கு
  22. நீங்க பதிவிடும் ஸ்டைலே ரொம்ப வித்தியாசம்...
    சில பாடல்கள் எனக்குப் புதிது.

    TM 14

    பதிலளிநீக்கு
  23. வணதிற்குள் ஒறிந்திருக்கும் முதிர்ச்சிகளையும் இப்பாடல்;கள் இயல்பாய் சொல்கின்றன.வாழ்த்துக்கள் சொந்தமே!

    பதிலளிநீக்கு
  24. கேட்டுக் கேட்டு இனித்த பாடல்கள். மீண்டும் படிப்பதில் மனம் மகிழ்கிறது.
    மிக மிக விரும்பிக் கேட்கும் பாடல்கள்.
    உங்களுக்கு பூஜ்யத்துக்குள்ளே ஒரு ராஜ்ஜியத்தை ஆளவைத்துப் புரியாமலே இருப்பான் ஒருவன். அவனைப் புரிந்து கொண்டால் அவன்தான் இறைவன்' தெரியுமா.சிவாஜி சரோஜாதேவி படம்.அவர் ஊமையாக இருப்பாரோ.மறந்து போய்விட்டதே தனபாலன்:(

    பதிலளிநீக்கு
  25. எல்லாமே அருமையான பாடல் வரிகளின் தொகுப்பு. அதிலும் சிறந்த வரிகளை அடிக் கொடிட்டிருப்பதும் சிறப்பு.

    பதிலளிநீக்கு
  26. அன்றும் இன்றும் என்றும் மனதைத் தொன்ன வரிகள் அருமை!

    பதிலளிநீக்கு
  27. உண்மையிலையே சார்
    உங்களிடம் பிடிச்ச விஷமே இதுதான்
    பழைய தத்துவப் பாடல்களின் அழகிய கோர்வை
    எத்தனைமுறை கேட்டாலும் சலிக்காது அவ்வளவு பொருள் பொதிந்த பாடல்கள்

    உங்களின் ஒவ்வொரு பதிவுகளும் அற்புதமே

    பதிலளிநீக்கு
  28. அருமையான பாடல்களின் தொகுப்பு. பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  29. உங்களின் பாட்டுக்கு பாட்டிற்கு யார் எதிர் பாட்டு பாடப் போகிறார்கள்? மனிதனின் மனதை மட்டுமே படம் பிடிக்காமல், கொஞ்சம் வெளி உலகைப் பற்றியும் எழுதுங்கள்!

    பதிலளிநீக்கு
  30. மிக அருமையான தொகுப்பு.
    சிறந்த கருத்துப் பாடல்கள்.
    அத்தனையும் எனக்கும் பிடித்தவை.
    மிக்க நன்றி. தங்களிற்கு நல்வாழ்த்து.
    வேதா. இலங்காதிலகம்.

    பதிலளிநீக்கு
  31. பலமுறை தங்கள் தளத்துக்கு வந்தாலும் தளம் திறக்கப் பிரச்சனையாகி முடியாமல் திரும்பிவிடுவேன். இன்று எந்தப் பிரச்சனையும் இல்லாமல் அழகாய் திறந்தது. அற்புதமான பாடல் வரிகள். வாழ்வியலை அடிப்படையாய்க் கொண்டு நேர்த்தியாய்த் தொகுக்கப்பட்ட பாடல் பகிர்வுக்கு மிகவும் நன்றி தனபாலன்.

    பதிலளிநீக்கு
  32. நண்பரே அருமையான பதிவு...என்னைபொருத்தவரை...மனிதனின் பிரச்சினையான குணம் - பேராசை என்ற எண்ணமே!

    பதிலளிநீக்கு
  33. பாடல்கள் அனைத்துமே அருமையான பாடல்கள். ஜெயா தொலைக்காட்சியில் தேன் கிண்ணம் கேட்பது போல இருக்கிறது தனபாலன்.
    பாராட்டுக்கள்!

    பதிலளிநீக்கு
  34. ம்ம்ம அருமையான பாடல் தொகுப்பு பல கேள்விப்படாத காடல்கள் அருமை.....

    பதிலளிநீக்கு
  35. மொத்த பாடல்களின் சரணாலயம் உங்கள் வலைத்தளம் சார் .. அருமை நன்றி

    பதிலளிநீக்கு
  36. பாடல்களும்,இசையும் வார்த்தைகளும்,
    கைகோர்க்கிற தருணம் புதிதாய் ஒன்று பிறக்கிறதுதான்.

    பதிலளிநீக்கு
  37. அத்தனை பாடல்களையும் திரும்பக் கேட்க வேண்டும் என்ற ஆசையைத் தூண்டி விட்டீர்கள்

    பதிலளிநீக்கு
  38. வாழ்த்துக்கள் சகோ சிறப்பான ஆக்கங்களை தொடர்ந்து பதிவிட்டு வருவது கண்டு மிக்க மகிழ்ச்சியாக உள்ளது .வேலைப்பளு அதிகம் உள்ள காரணத்தால் பல நல்ல ஆக்கங்களை வாசிக்க ஆசை இருந்தும் முடியாமல் போவது மனதிற்கு வேதனையே .என் தளத்தில் ஒரு நல்ல கருத்தை தந்து விட்டு வந்துள்ளீர்கள் அதற்க்கு என் நன்றியை முதலில் தெரிவித்துக் கொள்கின்றேன் .விரைவில் தங்கள் ஆக்கங்களை வாசிக்கவும் முயற்சிக்கின்றேன் .மிக்க நன்றி சகோ பகிர்வுக்கு .

    பதிலளிநீக்கு
  39. எல்லா பாடல்களும் மனது இதமாய் இருந்தது. நீங்கள் தொகுத்து அளித்த அனைத்து பாடல்களும் எனக்கு மிகவும் பிடிக்கும்.
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  40. தேர்ந்தெடுத்த பாடல்களின் மூலம் அதன் கருத்துகளை மேலும் விளக்கி புது வகையான படைப்பு அருமை..

    பதிலளிநீக்கு
  41. கொடுத்து வச்சவருங்க நீங்க...பாட்டை ரசிச்சு பாடி அதையே எழுதி ....எனக்கு எந்த பாட்டிலேயும் ரெண்டு வரிக்கு மேல தெரியாது.ஆனா இங்க படிக்கும்போது எவ்வளவு மதிப்புள்ள வரிகளை இசைக்குள் காணாமல் செய்து விட்டு நிற்கிறேன் என்று.இனிமே பாட்டு வரிகளையும் கவனிக்கனும்.
    அனைத்துமே சிறந்த தொகுப்புகள் அண்ணா....

    பதிலளிநீக்கு
  42. ஒரு சில பாடல்கள் தவிர மற்றவை குறித்து அதிகம் தெரியாது. பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு

  43. வணக்கம்

    நல்ல நல்ல பாடல்களை
    நன்றே தொகுத்துப் படைத்துள்ளீா்!
    வல்ல வல்ல கருத்துகளை
    வடிவாய் வழங்கி மகிழ்துள்ளீா்!
    சொல்லச் சொல்ல மணக்கின்ற
    சுடரும் எழுத்தா் தனபாலன்
    மெல்ல மெல்லத் தமிழுலகில்
    மேவிப் பறக்கக் காண்கின்றேன்

    நட்புடன்
    கவிஞா் கி.பாரதிதாசன்
    தலைவா். பிரான்சு கம்பன் கழகம்
    http://bharathidasanfrance.blogspot.fr/
    kambane2007@yahoo.fr




    பதிலளிநீக்கு
  44. அத்தனையும் முத்துக்கள்.... ஹாட்ஸ் ஆப்....... தி.த (tha.ma-19)

    பதிலளிநீக்கு
  45. அருமையான தோழரே அம்மா அப்பாவை தேர்ந்தெடுக்கும் உரிமை இல்லை நம்ம வாழ்க்கை நம்ம கையில் என்று

    பதிலளிநீக்கு
  46. என்கருத்தை நீங்கள் வெளியிடவில்லை பரவாயில்ல. அந்த கருத்து உங்களுக்குத்தான் அதனால் அதை வெளியிடா விட்டாலும் பரவாயில்லை. உண்மையிலே கருத்து என்பது நல்லதை எழுதும் பொழுது ஊக்குவிப்பது போல் சில நெருடலை ஏற்படுத்தும் செய்திகளை சொல்லும்போது அதை சுட்டி காட்டுவதுமே ஆகும். உங்களது வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி. உங்களது பணி தொடர வாழ்த்துக்கள். உங்கள் மனம் புண்படும்படி எதுவும் சொல்லி விடவில்லை என்று நம்புகிறேன். நன்றி தோழரே.

    பதிலளிநீக்கு
  47. அருமையான பாடல்; தொடரட்டும்!
    வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  48. அண்ணே உங்களுக்கு போய் யாருன்னே மைனஸ் ஓட்டு போட்டது! :( :( :( :(

    பதிலளிநீக்கு
  49. வணக்கம் நண்பர் தனபாலன்,

    நிறைய ஞாபக சக்தி -
    நல்ல கற்பனை வளம் -
    வித்தியாசமான முயற்சி -
    மிகுந்த ஆர்வம் !
    இனிதே தொடர -

    -வாழ்த்துக்களுடன்,
    காவிரிமைந்தன்

    பதிலளிநீக்கு
  50. அருமையான பாடல்களைத்தான் தேர்வு செய்திருக்கிறீர்கள்! ' மயக்கமா, கல‌க்கமா' பாடல் மிகவும் அருமையான பாடல்! அழகாகத் தொகுத்து சிறப்பான பதிவாகக் கொடுத்திருக்கிறீர்கள்!!

    பதிலளிநீக்கு
  51. (1) ஆட்டோமொபைல், (2) பழனி.கந்தசாமி, (3) r.v.saravanan, (4) Ramani, (5) T.N.MURALIDHARAN, (6) கோவை நேரம், (7) Gnanam Sekar, (8) வே.நடனசபாபதி, (9) மோகன் குமார், (10) chitrasundar5,

    (11) வெங்கட் நாகராஜ், (12) கவி அழகன், (13) ராஜி, (14) வரலாற்று சுவடுகள், (15) kuttan, (16) சே. குமார், (17) Seeni, (18) இராஜராஜேஸ்வரி, (19) Seshadri e.s., (20) Ayesha Farook,

    (21) வேடந்தாங்கல் - கருண், (22) இந்திரா, (23) ARIVU KADAL, (24) நண்டு @நொரண்டு -ஈரோடு, (25) கும்மாச்சி, (26) மொக்கராசு மாமா, (27) s suresh, (28) NIZAMUDEEN, (29) Uzhavan Raja, (30) சிட்டுக்குருவி,

    (31) ஸாதிகா, (32) Athisaya, (33) வல்லிசிம்ஹன், (34) ஸ்ரீராம்., (35) ஹேமா (HVL), (36) புலவர் சா இராமாநுசம், (37) செய்தாலி, (38) எம்.எஸ்.ரஜினி பிரதாப் சிங், (39) YAYATHIN, (40) Student Drawings,

    (41) வை.கோபாலகிருஷ்ணன், (42) தி.தமிழ் இளங்கோ, (43) kovaikkavi, (44) கீதமஞ்சரி, (45) விக்கியுலகம், (46) Ranjani Narayanan, (47) esther sabi, (48) அரசன் சே, (49) விமலன், (50) Nagendra Bharathi,

    (51) அம்பாளடியாள், (52) கோமதி அரசு, (53) sathish prabu, (54) சதீஷ் செல்லதுரை, (55) sambasivam6geetha, (56) கவிஞர். கி. பாரதிதாசன், (57) ராமலக்ஷ்மி, (58) Manimaran, (59) Mohan P, (60) PUTHIYATHENRAL,

    (61) சந்திர வம்சம், (62) vimarisanam kavirimainthan, (63) மனோ சாமிநாதன், (64) Ezra Rajasekaran, (65) RRaya Durai, (66) காயத்ரி வைத்தியநாதன்



    மேலே உள்ள அனைத்து அன்பு உள்ளங்களின் வருகைக்கும், பாராட்டிற்கும், வாழ்த்திற்கும், சமூக தளங்களில் பகிர்ந்து கொண்டதற்கும், வாக்கு அளித்ததற்கும், எனது மனமார்ந்த நன்றிகள் பலப்பல...

    பதிலளிநீக்கு
  52. ரசித்து படித்தேன். பாடல்களின் பட்டியல் அருமை. பகிர்ந்தமைக்கு நன்றி.தொடருங்கள்.

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென்று இடித்தற் பொருட்டு. (குறள் 784)

நட்புச் செய்துகொள்வது நண்பரோடு சிரித்து மகிழ்வதற்காக மட்டும் அல்ல. மிகுதியாகத் தவறு செய்யும்போது, அவரைக் கடிந்து திருத்துவதற்கே ஆகும்.