🏠 வணக்கம் காப்பகம் நன்றி

தேடல் 🔎



புதிய பதிவுகளை பெற ✉



மனிதனின் மகிழ்ச்சிக்குத் தேவையான மூன்று முத்துக்கள் என்ன...?

நண்பர்களே...! இன்று நாம் அலசப் போவது வாழ்க்கைக்குத் தேவையான மிக முக்கிய மூன்று விசயங்கள் பற்றி...! முந்தைய பதிவில் மனிதனுக்கு வேண்டிய முதன்மை குணம் என்ன? என்பதைத் தெரிந்து கொண்டோம். வாசிக்காதவர்கள் பதிவின் தலைப்பின் மேல் சொடுக்கவும்... நன்றி...


மனிதனின் மகிழ்ச்சிக்குத் தேவையான மூன்று முத்துக்கள் என்ன?

இவை யாவும் என் சொந்த கருத்துக்கள்.....தவறு இருந்தால் அல்லது உங்களின் கருத்துக்கள் வேறு மாதிரி இருந்தால் பின்னூட்டத்தில் தெரிவிக்கவும். நான் என் வாழ்வில் பழகிய மற்றும் சந்தித்த நண்பர்களிடமிருந்து அறிந்து கொண்ட விசயங்கள் :

நண்பர் 1: "நான் என் குடும்பத்திற்காகச் சம்பாதிக்கிறேன். கடவுள் பக்தி நிறைய உண்டு. என்னைப் பொறுத்தவரை உழைப்பு, பணம், கடவுள் அருள் இவை தான் மனிதனின் மகிழ்ச்சிக்கு மூன்று முத்துக்கள்"

நண்பர் 2: "நான் எல்லாக் காரியத்தையும் ஜோசியம் பார்த்துத் தான் செய்வேன். எனக்கு அதிர்ஷ்டம் உள்ளது. ஜோசியர் சொன்னபடி எல்லாப் பரிகாரமும் செய்து விடுவேன். என்னைப் பொறுத்தவரை ஜோசியம், அதிர்ஷ்டம், பரிகாரம் இவை தான் மனிதனின் மகிழ்ச்சிக்கு மூன்று முத்துக்கள்"

நண்பர் 3: "நான் சம்பாதித்ததில் சிறிதளவை தானம் செய்வேன். அந்தந்த நேரத்தில் அந்தந்த வேலைகளைச் செய்ய வேண்டும். ஒழுக்கமாக இருக்க வேண்டும். என்னைப் பொறுத்தவரை நேரந்தவறாமை, ஒழுக்கம், தானம் இவை தான் மனிதனின் மகிழ்ச்சிக்கு மூன்று முத்துக்கள்"

நண்பர் 4: "நான் அவசரப்பட்டு எந்தக் காரியத்தையும் செய்ய மாட்டேன். பொய் பேச மாட்டேன். நன்றியுடன் இருப்பேன். என்னைப் பொறுத்தவரைப் பொறுமை, வாய்மை, நன்றி இவை தான் மனிதனின் மகிழ்ச்சிக்கு மூன்று முத்துக்கள்"

நண்பர் 5: "நான் என்னிடம் கஷ்டம் என்று வருகிறவருக்கு உதவி செய்வேன். பிரச்சனை என்று வந்தால் மௌனம் தான் எனது பதில். யாருக்கும் எதற்கும் பயப்பட மாட்டேன். என்னைப் பொறுத்தவரை இரக்கம், அமைதி, அஞ்சாமை இவை தான் மனிதனின் மகிழ்ச்சிக்கு மூன்று முத்துக்கள்"

நண்பர் 6: "ஆர்வம், சுறுசுறுப்பு, தைரியம் இருந்தா போதும்"

நண்பர் 7: "இது கூடத் தெரியலையா? பணம்.பணம்..பணம்...இது தாங்க எல்லாமுமே"

நண்பர் 8: "அட, பணத்தை விடுங்க... என்னைப் பொறுத்தவரை அன்பு, அடக்கம், விட்டுக்கொடுக்கும் தன்மை இருந்தால் போதுங்க"

இன்னும் நிறைய நண்பர்கள் பல்வேறு விசயங்கள் கூறினார்கள். மேலே நண்பர்கள் கூறிய அனைத்து முத்துக்களும் மனிதனுக்கு மிகவும் தேவையானது தான். ஆனால் பதிவு நீள் பதிவு ஆகி விடும் என்பதால்... ஒரு சின்ன கதை மூலம் :

சிறுவன் ஒருவன், தான் வழக்கமாகச் செல்லும் 'ஐஸ் கிரீம்' கடைக்குச் சென்றான். எப்போதும் 5 ரூபாய்க்கு ஐஸ் கிரீம் சாப்பிடுவான். அன்றைக்கு அவனிடம் 15 ரூபாய் இருந்தது. தான் வழக்கமாக அமரும் இடத்தில் உட்கார்ந்தான். ஏன் என்றால் அந்த மேசைக்கு வரும் உணவு பரிமாறுபவரை அவனுக்கு மிகவும் பிடிக்கும். அதே போல் உணவு பரிமாறுபவருக்கும் சிறுவனை மிகவும் பிடிக்கும். அவனுக்கு 15 ரூபாய் கோன் ஐஸ் கிரீம் சாப்பிட ஆசையாக இருந்ததால் அதைக் கொண்டுவரச் செய்தான். திடீரென்று என்ன நினைத்தானோ உணவு பரிமாறுபவரைக் கூப்பிட்டு, "எனக்கு வழக்கம் போல் தரும் ஐஸ்கிரீமையே இரண்டு கொண்டு வாருங்கள்" என்று கூறினான். அதைச் சாப்பிட்டு விட்டு, தன்னிடம் மீதமுள்ள 5 ரூபாயை உணவு பரிமாறுபவருக்குக் கொடுத்து விட்டுச் சென்று விட்டான். ஏன் ? யோசிங்க... இந்தக் கதை மூலம் நாம் அறிந்து கொள்வது என்ன...?

மனிதனின் மகிழ்ச்சிக்குத் தேவையான முதல் முத்து :
நம்மிடம் எது அதிகமாக உள்ளதோ அதைக் குறைத்துக் கொள்ள வேண்டும்.

மனிதனின் மகிழ்ச்சிக்குத் தேவையான இரண்டாவது முத்து :
நம்மிடம் எது குறைவாக உள்ளதோ அதை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

மனிதனின் மகிழ்ச்சிக்குத் தேவையான மூன்றாவது முத்து (முக்கியம்) :
நம்மிடம் அதிகமாக இருப்பதைக் குறைத்துக் கொண்டாலும், குறைவாக இருப்பதை வளர்த்துக் கொண்டாலும், அதில் திருப்தி கொள்ள வேண்டும்.


திருப்திப் படவே முடியவில்லையே... ஏன் ? என்பதைத் தெரிந்து கொள்ள
இங்கே சொடுக்கி அறியலாம்... அதற்கு முன் இந்தப் பதிவைப் பற்றித் தங்களின் கருத்து என்ன...?

புதிய பதிவுகளை பெறுதல் :


தொடர்புடைய எண்ணங்களின் வண்ணங்கள் சில :


முகநூல் மூலம் கருத்துக்களை பகிர :

கருத்துகள்

  1. மன நிறைவு தரும் பதிவு..

    அருமை!

    விரும்பிப் படித்தேன்..

    பதிலளிநீக்கு
  2. @முனைவர்.இரா.குணசீலன்அவர்களுக்கு மிக்க நன்றி. இது எனக்கு கிடைத்த முதல் வெகுமதி.

    பதிலளிநீக்கு
  3. திருப்தி தான் நம் வாழ்க்கைக்கு தேவையான முத்துக்களில் ஒன்று என்பதை நானும் ஏற்றுக்கொள்கிறேன். மனநிறைவு இல்லாத வாழ்க்கைதான் நரகம். மனநிறைவான வாழ்க்கையே சொர்க்கம். பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  4. நான் வாழ்க்கையில் மிகவும் விரும்பும் குணங்களை அடக்கமாக கடைசி மூன்று வரிகளில் சொல்லிவிட்டீர்கள்.... அருமையான பதிவு.

    பதிலளிநீக்கு
  5. athigam, guraivu, thirupthi agiyavrril marra erandaiyum thirupthiyal vella mudium enbathe en suthiram ramalingam canada

    பதிலளிநீக்கு
  6. வாழ்க்கைக்கு தேவையான அருமையான பகிர்வு சார். //மனிதனின் மகிழ்ச்சிக்கு தேவையான மூன்றாவது முத்து (முக்கியம்) :
    நம்மிடம் அதிகமாக இருப்பதை குறைத்துக் கொண்டாலும், குறைவாக இருப்பதை வளர்த்துக் கொண்டாலும், அதில் திருப்தி கொள்ள வேண்டும்.// மிகவும் சரி...

    பதிலளிநீக்கு
  7. நல்ல பதிவு. எவ்வளவு பெரிய விஷயத்தை மிக மிக எளிமையாகக் கூறி விட்டீர்கள் !!

    பதிலளிநீக்கு
  8. தேவையில்லாத அலங்காரங்களை நீக்கி விடுங்க.

    பதிலளிநீக்கு
  9. பெரிய கருத்தை ரொம்பவே எளிமையாக சொல்லிவிட்டீர்கள்.

    பதிலளிநீக்கு
  10. மிகவும் அழகான பதிவு.

    அற்புதமான எளிய விளக்கங்கள்.

    அதையும் ஒரு சிறுகதை மூலம் சொல்லியுள்ளது அருமையோ அருமை.

    மிகவும் ரஸித்து இருமுறை படித்து வியந்தேன்.

    தகவலுக்கும், பகிர்வுக்கும் மிக்க நன்றி, சார்.

    அன்புடன் VGK

    பதிலளிநீக்கு
  11. படித்ததும் என் மனதுக்கு முழுத்திருப்தி ஏற்பட்டது.

    நன்றியோ நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  12. அந்தப்பையன் எடுத்த முடிவு அருமையோ அருமை.

    ஐந்து ரூபாய் ஐஸ்கிரீமில் ஒன்றுக்கு இரண்டாகச் சாப்பிட்டு விட்டு, மீதி ஐந்து ரூபாயை தன் அன்புக்குரிய சர்வருக்குக் கொடுத்து மகிழ்ந்தானே!

    எவ்வளவு பேருக்கு இதுபோன்ற மனம் உண்டு ?

    நல்வாழ்த்துகள்.

    அந்தப்பையனுக்கும், பகிர்ந்த உங்களுக்கும் சேர்த்து. ;)

    பதிலளிநீக்கு
  13. உண்மையான பதிவு. வெகு அருமை. நல்ல பதிவுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  14. தங்கள் குடும்பத்தில் அனைவரும் நலம் பெற கடவுளை வேண்டுகிறேன்

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென்று இடித்தற் பொருட்டு. (குறள் 784)

நட்புச் செய்துகொள்வது நண்பரோடு சிரித்து மகிழ்வதற்காக மட்டும் அல்ல. மிகுதியாகத் தவறு செய்யும்போது, அவரைக் கடிந்து திருத்துவதற்கே ஆகும்.